Tuesday, December 13, 2011

குமுதம் - ரஜினி ராங்க் செண்ட்டிமெண்ட்???

http://www.lankafast.com/wp-content/uploads/2011/11/kochadaiyan-28.jpg

பாட்ஷா படம் ரிலீஸ் ஆன போதுதான் பஞ்ச் டயலாக்கின் மகத்துவம் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.. பால குமாரன் எழுதிய வசனம் என்பதையே அனைவரும் மறந்தனர். ரஜினி சொல்வது போலவே உணர்ந்தனர்..அதே வசனத்தை ரஜினியைத்தவிர வேற யாராவது பேசி இருந்தா இந்த அளவு எஃபக்ட்டா வந்திருக்குமா? 0.001 % கூட சான்ஸ் இல்லை.. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு எல்லாம் ஒரு முக ராசி வேண்டும்..


 ஆனா இப்போ பார்த்தா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்ஸ் என்ற பெயரில் கொன்னெடுக்கறாங்க..பாட்ஷா பட பிரம்மாண்ட வெற்றிக்குபிறகு குமுதம் ரிப்போர்ட்டரில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டியை நடத்தியது.. ஒரு டயலாக்- ரூ 250 பரிசு தந்தாங்க.. ஆனா எதிர் பாராத விதமாக ரஜினி அந்த படத்துக்கு வாசகர்கள் எழுதி அனுப்பிய பஞ்ச் டயலாக்ஸை படத்தில் வைத்து அதை எழுதிய வாசகர்களுக்கு ஒரு டயலாக்கிற்கு ரூ 10,000 அளித்தார்.

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka3.jpg


 ஆனால் என்ன சோகம்னா பாபா படம் ஓடலை.. பஞ்ச் டயலாக்ஸும் படத்துல வலிய திணிச்சது போல இருந்தது.. அந்த படத்துல 13 பஞ்ச் டயலாக்ஸ் வந்தது.. இப்போ கோச்சடையான் படத்துக்கும் அதே குமுதம் பஞ்ச் டயலாக்ஸ் போட்டி வெச்சிருக்கு.. அதுபோக கவுதம நீலாம்பரன் எழுதும் கோச்சடையான் எனும் வரலாற்றுத்தொடர் வருது..  பார்ப்போம் குமுதம் புக்கின் ராசியை.. நான் ஆல்ரெடி அனுப்பின பஞ்ச் டயலாக்ஸில் கொஞ்சம்.....

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/sultan.jpg.crop_display.jpg


1. என் உடம்பு தான் அரியாசனத்துல இருக்கு, மனசு யோகாசனத்துல இருக்க ஆசப்படுது

-------------------------------------

2. நாட்டு மக்களோட பார்வைல நான் சக்கரவர்த்திதான் , ஆனா அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் மெழுகுவர்த்தி தான்

-------------------------------

3. ராஜ்யத்தை ஆள ஆசைப்படற ஆளுங்க எல்லோருக்கும் அறிவு பூஜ்யமாத்தான் இருக்கு..

---------------------------------------

4. படை பலத்தை நம்பறவன் சராசரி மன்னன், மனோ பலத்தை நம்பறவன் தான் சரித்திர மன்னன்

-------------------------------------

5. அந்தப்புரத்துலயே  குடி இருக்கறவன் சரசன் னு பேர் எடுப்பான், அரியணையில் அமர்ந்திருப்பவன்தான் அரசன்னு பேர் எடுப்பான்

---------------------------------

6. மன்னர் ஆட்சியை ஒழிச்சுட்டு மக்கள் ஆட்சி வந்துட்டா  நாட்ல பாலாறும், தேனாறும் ஓடும்னு நினைக்கறது மடத்தனம்

------------------------------------

7. போர்க்காலத்தில் போர் இடுபவன் எல்லாம் அரசன் இல்லை, வாழ்க்கைல சோர்ந்து போகாம போராடுற எல்லாரும் அரசன் தான்


----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg

8. காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை இந்த நாலையும் நம்பி நான் இல்லை.. மக்கள் படை தான் என் பலம்


-------------------------------------------

9. கஜானா காலி ஆனா மகுடத்தை கழட்டிடனுமே தவிர மக்கள்ட்ட கையேந்தக்கூடாது

---------------------------------

10. சுய நல நோக்கத்துக்காக வேண்டுதல் பண்ணி முடி துறக்கறவன் திருப்பதி பக்தன் , பொது நலத்துக்காக முடி துறக்கறவன் தான் அரசனா இருந்தும் மக்கள் பக்தன்


-----------------------------------------

11. வால் நட்சத்திரங்கள் எல்லாம் துருவ நட்சத்திரம் ஆக ஆசைப்படுதுங்க.. ஆனா துருவ நட்சத்திரம் சூரியன் ஆக ஆசைப்பட்டதில்லை


------------------------------------------

12. கண்ணா! 20ம் நூற்றாண்டுல வரப்போற பைக் , கார், மாதிரி வாகனங்களுக்குதான் ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர்னு வரிசையா போடனும்.. இந்த கோச்சடையானுக்கு எடுத்ததுமே டாப் கீர் தான்

-------------------------------------

13. கண்னா! வீட்ல வாழற பொண்ணுக்கும் சரி.. நாட்டை ஆள்ற பொண்ணுக்கும் சரி அவசர புத்தி ஆகாது

----------------------------------------------------


14. நாயர் கடைல ஆத்தறதுதான் செம டீ! இந்த கோச்சடையான் சாத்துனாத்தான் அது செம அடி


--------------------------------------------

15.  சபரிமலை பிரச்சனை சரி ஆக இந்த அண்ணாமலையின் அடுத்த அவதாரம் தான் கோச்சடையான்


-----------------------------------------

http://www.filmics.com/tamil/images/stories/news/November/28-11-11/Kochadaiyaan.jpg

டிஸ்கி - அனுஷ்கா கிளிப்பச்சை கலர்ல டிரஸ் போட்டிருக்கறதுக்கும், ஆளுங்கட்சி  வி ஐ பி பசுமை விரும்பியா இருக்கறதுக்கும் சம்பந்தம் இல்லீங்கோவ்.. கோச்ச... பட ஹீரோயின்  பச்ச கலர் மேட்ச்னு எடுத்த ஸ்டில்லுங்கோவ்

16 comments:

Unknown said...

ரஜினி - ஒரு சோதி தர்மர் !

Unknown said...

அண்ணே கலக்கல் பஞ்ச் டயலாக்ஸ்!

K said...

Sema kalakkals. We all will be happy if your punch selected for movie. Advance congrats.....!

Unknown said...

CP அஸ்கா படத்துக்கு டிஸ்கி எதுவும் போடலை ?

RAMA RAVI (RAMVI) said...

நன்றாக இருக்கு.11 சூப்பர்.பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

சூப்பர்..

Sen22 said...

Sema Punch.. Vazhuthukal...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

"மனோ" பலத்தை நம்புறவந்தான் சரித்திர மன்னன்//

மிக்க நன்றி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

பஞ்ச டயலாக் ச்சே ச்சீ பஞ்ச் டயலாக் சூப்பர் அண்ணே...!!

பால கணேஷ் said...

முதல் மூணும் சூப்பரோ சூப்பர். மத்ததெல்லாமும் ஓ.கே. எழுதின செந்திலுக்கு ஒரு பெரிய பொக்கே. 12வதுல கோச்சடையான் காலத்துல கார்ல்லாம் எங்கருந்து வந்துச்சு?- எழுதின செந்திலுக்கு ஒரு குட்டு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பல 10,000-ங்கள் கிடைக்க வாழ்த்துக்கள். 12 //கார்க்குதான்// இதை 'காருக்குதான்' எனறு போடலாமே!

stalin wesley said...

பயங்கரமா இருக்கு -ன்னே

எப்டியும் செலக்ட் பண்ணிடுவாங்க -ன்னே ..

கலையன்பன் said...

"ஊருக்குள்ளே சக்கரவர்த்தி-நான் உள்ளுக்குள்ளே மெழுகுவர்த்தி" என்ற பாடலை நினைவூட்டுகின்றது
2-ஆவது ப.டயலாக்.

rajk5332 said...

ரஜினி ரசிகனை கூட பார்க்க வெறுக்கும் அவருக்கு பஜ்ச் எதற்கு

rajk5332 said...

I think rajini is selfess. I am also rajini fan. But thalaivar doing wrong. Pls anybody tell to thalaivar. I think he name begin down.