Friday, December 30, 2011

2012 ஓசி டைரி ரோசி ( ஜோக்ஸ்)


1.கீழ்ப்பாக்கம் GHல், டாக்டர்கள் இல்லாமல், துப்புரவுத் தொழிலாளர்கள்மூலமே, பிரேத பரிசோதனை #  ஆபரேசனே நடக்குது, போஸ்ட்மார்ட்டம் நடக்காதா?


---------------------------------

2. ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியான காசோலை # தேதியை மாத்துங்கய்யா, ஏப்ரல் ஃபூல்னு நினைச்சுடப்போறாங்க

------------------------------------

3. மு.க. அழகிரி ஆஜராக ஆட்சியர் நோட்டீஸ் # பண்ணாரிக்கே அம்மனா? அஞ்சா நெஞ்சனுக்கே சம்மனா?

---------------------------------

4. ராகவேந்திரா மண்டபம் கறுப்பு பணத்தால் கட்டப்பட்டது- இளங்கோவன் # நல்லா பாருங்கண்ணே, சுண்ணாம்பு அடிச்சுட்டோம்

-------------------------------

5. புத்தாண்டு கேளிக்கை விருந்து : அமைச்சர்களுக்கு மம்தா தடை# அப்போ டிசம்பர் 31ந்தேதி கொண்டாடிக்கலாமா மேடம்?

-------------------------------6.  அவைக்கு வராத 13 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்: காங்கிரஸ் முடிவு  # கவைக்கு உதவாது மழையில் நனைஞ்ச ரவை


---------------------------------------

/7. ஜெனிலியா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி! - தனுஷ் # மிஸஸ் ஐஸ்வர்யாதனுஷ், நோட் இட் ஹி ஹி ,அப்போ நீங்க வருத்தமான ஜோடியா?

-----------------------------------

8. என்னை வயதானவள் என்பதா? த்ரிஷா கோபம்!! # பொத்தாம்பொதுவாத்தானே சொன்னாங்க, 38 வயதானவர்னு குறிப்பா சொல்லையே கூல் டவுன் மேடம்

---------------------------------------

9. பொங்கல் அன்று வேட்டை, நண்பன் என 2 படங்கள் மட்டுமே ரிலீஸ் # தமிழன் தீபாவளி, பொங்கல் ரெண்டையும் ஒரேமாதிரி கொண்டாடறான், தீபாவளிக்கும் 2 தான்

-----------------------------------

10. அதிமுக, திமுகவால் சீரழிந்துவிட்டோம்-ராமதாஸ் கண்ணீர் # தனியா நின்னிருந்தா மட்டும் சீரும் சிறப்புமா கிழிச்சிருப்பீங்களா?

----------------------------------

11. சென்னையை அடுத்த வண்டலூரில் ரூ.27 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது# வண்டலூர் பாலத்துல எவ்வளவு சுரண்டுனாங்களோ?

----------------------------------

12. இடுக்கியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்: ராமதாஸ் # முதல்ல இந்த டாக்டர் வாயை கிடுக்கி கொண்டு பிணைக்க வேண்டும்,கொஞ்ச நாள் க்ளோஸ் ப்ளீஸ் DR

----------------------------------

13. உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா? ஆமா, ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்க்கு பண வரவு

-------------------------------------

14,.வேம்ப்பயர் (VAMPIRE)க்கு ஸ்பெல்லிங்க் ஏன் தப்பா எழுதுனே? 

சாரி டீச்சர், பயத்துல  கை ஸ்லிப் ஆகிடுச்சு

----------------------------------

15.எங்கே கூப்பிட்டாலும் வருகிறாள், திருமண மண்டபத்துக்கு கூப்பிட்டா மட்டும் எஸ் ஆகிடறா# ஓ சி சாப்பாடு பிடிக்காதாம் ரோசிக்கு

--------------------------------

16. உனக்கு டைரி எழுதற  பழக்கமே இல்லையே, ஏன் OC டைரிக்கு அலையறே?

எனக்கு புக் படிக்கற பழக்கம் கூடத்தான் இல்ல, லைப்ரரி போறேனே # 19 வயசு ஜிகிடி

------------------------------------------

17. மிஸ்,உங்க டைரியை குடுங்க படிச்சு பார்க்கறேன்.

அடுத்தவங்க டைரியை படிக்கறது தப்பு.

ஐ நோ ,நான் படிச்சுட்டா நாம 2 பேரும் க்ளோஸ் ஆகிடலாமே?

----------------------------------------

18. இந்தியாவிலேயே காங்கிரஸ் தான் அதிக கறுப்பு பணம் வைத்திருக்கின்றனர்- இல. கணேசன் # என்னதான் கூட்டணில இல்லைன்னாலும் திமுகவை மறக்கலாமா?

------------------------------------------

19. பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஜனவரி 15-ந் தேதி புதிய கட்சி தொடங்குகிறார்# கட்சிக்கு சின்னம் சேலம் சின்ன மாம்பழம்?

---------------------------------

20. விலக விலக கசப்பது காதல்

---------------------------------

12 comments:

karthick said...

first vadai,boondi,tyir sadam,I jolly,

மகேந்திரன் said...

நகைச்சுவை என்ற அத்தனை போரையும்
சும்மா வாங்கு வாங்குன்னு வாங்குறீங்க நண்பரே.

உணவு உலகம் said...

துணுக்குத் தோரணம்- துள்ளல் நடை.

ராஜி said...

ஜோக்லாம் சூப்பர்

Anonymous said...

20/20 sema nakkals

ராஜி said...

இன்னிக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே. விமர்சனம் போடலியா சிபி சார்

சரியில்ல....... said...

சோக்காக்கீது அண்ணாத்த.....

Rathnavel Natarajan said...

அருமை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னடா இன்னைக்கு விக்கியை காணோம்...?

MANO நாஞ்சில் மனோ said...

அழகிரி மேட்டர் சூப்பர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ராமதாஸை வாயை மூடச்சொல்லு அண்ணே, நெய்யார் அணை புதுசா கட்டிரப்போராறு...

MANO நாஞ்சில் மனோ said...

இருந்தாலும் இல கணேசனுக்கு ரொம்பதான் கஜினி மறதி...!!!