Saturday, December 05, 2015

தோசைக்கு சரியான காம்பினேஷன் எது?

1. மேடம்.இந்த சீன் ல கிளாமரா நடிக்கனும்.


ரெகுலரா தரும் சம்பளத்தை டபுள் ஆக்கினா நான் போட்டிருக்கும் டிரஸ்சை பாதியா குறைச்சிடுவேன்.=\============

2 உங்க படத்துல நடிக்க நமீதா வையும் மந்த்ரா வையும் கேட்டிருக்கீங்களாமே ஏன்?


பெரிதினும் பெரிது கேள் னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே?


==================

3 சின்னப்பசங்களுக்குக்கூட நயன் தாரா ன்னா பிடிக்கும் போல.


எப்டி சொல்றே?

லயன் காமிக்ஸ் பெயரையே நயன் காமி க்ஸ் னு பேர் மாத்திட்டாங்களே?==================

4 ஏய் மிஸ்டர்! காதலுக்காக யாராவது லட்சியத்தை விட்டுக்கொடுப்பாங்களா?


மிஸ்! எங்களோட லட்சியமே காதல் தானே?============

5 ஷங்கர் = பாய்ஸ் படத்தை ரீ மேக்கலாம் னு இருக்கேன்


மியாவ் பாய்ஸ் ஸா? அராத்து பாய்சா?=============


6 ஒரு மழைக்கே தாங்காத ரோடு.இதுக்கு சுங்கவரி வேற வெட்கமில்லாம வாங்கறீங்க.


சரி.இனி வெட்கப்பட்டுட்டே வாங்கறோம்================


7 ஏய்.என் கிட்டே 143சொல்லிட்டு அதே போல் 4 பொண்ணுங்க கிட்டேயும் சொன்னியாமே?


உங்க கிட்டே ஒரு பேச்சு மத்தவங்க கிட்டே இன்னொரு பேச்சு கிடையாது


==============

8 டாக்டர் = நான் ஊருக்குப்போறேன்.வர்ற வரை உடம்பைப்பார்த்துக்குங்க


அய்யோ.அது தப்பு.நர்ஸ் கோவிச்சுக்க மாட்டாங்களா?

யோவ்.உன் உடம்பை,/உடல்நலனை=============

9 மேடம், நீங்க தான் +2 லயே அட்டெம்ப்ட் தானே? பேருக்கு முன்னால DR -னு போட்டிருக்கீங்க?

 டாக்டர்னு ஏன் படிக்கறே? DEAR-ன் சுருக் தான் DR


=============


10 தலைவரே! உங்களுக்கு நாட்டுப்பற்று இருக்கா?ன்னு எதிர்க்கட்சிக்காரங்க கேட்கறாங்க

 நோட்டுப்பற்று வேணா இருக்கு==================


11 நான் எந்த  வேலை செஞ்சாலும் மேனேஜர் ஏதாவது குறை கண்டுபிடிக்கறாரு 

 மிஸ்! எந்த வேலையும் செய்யாதீங்க. எதுவும் சொல்ல மாட்டாரு.


================


12 தலைவரே! தியேட்டர்ல தேசிய கீதம் ஒலிக்கும்போது நீங்க ஏன் எழுந்து நிக்கலை?அதுதான் தேசியகீதம்னு எனக்கு எப்படிதெரியும்?சொல்லி இருக்கலாமில்ல?


======================

13 மேடம், சமூக மாற்றத்துக்காக/விழிப்புணர்வுக்காக  நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? 

தோசைக்கு சரியான காம்பினேஷன் எது?ன்னு ஒரு போலிங் விட்டேனே?


===================


14 தலைவரே! சேரன் -ன் தேசிய கீதம் படDVDயை எதுக்கு பூஜை ரூம்ல வெச்சிருக்கீங்க ?  தேசியகீதத்தை மதிக்கலைனு ஒரு பயலும் என்னை சொல்லிடக்கூடாதில்ல? 


=======================


15 தமிழகத்தில் இருந்து மட்டும் அவதூறு வழக்கு அதிக அளவில் தொடரப்படுவது ஏன்?.

இங்கன தான் வக்கீலுங்க ளும்,வேலை இல்லாதவங்களும் ஜாஸ்தி


====================

16 தலைவரே! ஏற்கனவே சொன்னபடி.2016 ல் முதல்வர் ஆகிடுவீங்களா?


எல்லாருக்கும் முதல் ஆளா டைரி ,காலண்டர் கொடுத்த முதல் வர் ஆகிடுவேன்

===============

17 என்னது? கடைசில பனிமலரும் லவ் பண்ணுதா?


ஆரம்பத்துல இருந்தே லவ் பண்ணுது, இப்போதான் ஓப்பனா சொல்லி இருக்கு=================


18 கலெக்டர் னா வேலை வெட்டியே இருக்காதுன்னு எப்டி சொல்றே?

சன் டி வி வம்சம் சீரியல்ல ரம்யாகிருஷ்ணன் எல்லா நேரமும் வீட்லயே வெட்டியாதானே இருக்கு?

===============

ஸ்டாலின்.= உங்களுக்கு நைன்ட்டி ஒதுக்கிடலாம்னு தலைவர் சொல்றாரு

கேப்டன் = மினி கட்டிங் அளவு சொல்றீங்களே?ரவுண்டா.100 சீட் குடுத்துடுங்க


=====================

20/மாப்ளை.சாந்தி முகூர்த்தத்தை எங்கே வெச்சுக்கலாம்? மாப்ளை வீட்லயா?பொண்ணு வீட்லயா?

எதுக்கு குழப்பம்?இங்கே ஒருக்கா அங்கே ஒருக்கா.காசா?பணமா?


======================

0 comments: