Thursday, December 17, 2015

க்யா கூல் ஹை ஹம் - 3- இந்தியாவோட முதல் ’பலான பலான காமெடி’ படம்18+

நாலு எஸ்.ஜே. சூர்யா இயக்கி, ஏழு சிம்பு நடிச்சு, மூணு 'திரிஷா இல்லனா நயன்தாரா' வகையறா கதையின் கலவையா ஒரு படம் இந்தியில‌ வெளியாக இருக்குது.
ஏற்கெனவே படத்தோட ரெண்டு பார்ட் ரிலீஸாகி இருக்கு. இது மூணாவது. இந்தப் படத்தோட ஹைலைட்டா படக்குழு சொல்ற விஷயம், இந்தப் படம்தான் இந்தியாவோட முதல் ’பலான பலான காமெடி’ படமாம். நம்ம சிம்பு எல்லாம் பாட்டுப் பாடுறதோட இருக்காங்க. இந்திக்காரங்க வேற லெவலுக்குப் போயிட்டாங்க. படத்தோட ட்ரெய்லர், போஸ்டரை பாக்குற வயசுப் பசங்களே தானா கண்ணை மூடிக்கிற அளவுக்கு படுபயங்கரமா இருக்கு.
சென்சார் போர்டு தங்களுடைய கத்திரிக்கோலை இறுக்கமா புடிச்சாங்கன்னா, இந்தப் படம் மொத்தமே மூணு நிமிஷம்தான் ஓடும். படத்தோட டைட்டில் போட்டு முடிச்சவுடனேயே எண்ட் கார்டு வந்துடும், ஏன்னா உள்ள இருக்குற அம்புட்டு சீனையும் சென்சார் கத்திரி சாப்பிட்டிருக்கும். ட்ரெய்லரைப் பார்த்தா அப்புடித்தான் இருக்குது. நம்ம ஊர்லதான் ஒருத்தரை காரோட்டி கொன்னா தப்பில்லே, மூணும் மூணும் ஏழுன்னா தப்பில்லேன்னு எல்லாமே டிசைன் டிசைனா நடக்குதே. அந்த மாதிரி இந்தப் படமும் எந்தப் பிரச்னையும் இல்லாம ரிலீஸுக்கு தயாராகிட்டு இருக்கு.

அந்த  இந்திப் படத்தோட பேரை போட்டு ஏன் தேவை இல்லாம அவுங்களுக்கு விளம்பரத்தைத் தரணும்னு ஒரு நொடி யோசிச்சேன். ஆனா படத்தோட பேரைப் போடலைன்னா படிக்கிற நீங்க, கட்டுரையை படிச்சு முடிச்ச உடனே கூகுள்ல போய் தேடுவீங்க. உங்களுக்கு தேவை இல்லாம டேட்டா வேற குறையும். எதுக்கு வீண்செலவு? அப்புறம் சென்சார் போர்ட் பண்ணின அதே தப்பை நானும் பண்ணினமாதிரி ஆகிடும். படம் பேரு க்யா கூல் ஹை ஹம் - 3. இப்ப சந்தோஷமா?


ஸ்பெக்டர்னு ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம். அட அதாங்க, 'சார் டைம் என்னாச்சு'ன்னு யாராவது பொண்ணு கேட்டாக்கூட அந்தப் பொண்ணுகூட லிப்லாக் பண்ணிட்டு பொறுமையா டைம் சொல்வாரே ஒரு துப்பாக்கிக்காரரு. அவரு படம் இந்தியாவுல வெளியாகுறப்ப படத்துல இருந்த ஒரு முத்த சீனுக்கு கத்திப்போட்டுடுச்சு சென்சார் போர்டு. ஆனா நம்ம இந்திப்படம் இப்ப ரிலீஸுக்கு ரெடி! இப்படி ஜேம்ஸ்பாண்டுக்கு ஒரு நியாயம், உள்ளூர் கரகாட்டக் கோஷ்டிக்கு ஒரு நியாயம்கிறது எப்படி சரியா இருக்கும்? 'மேக் இன் இந்தியா' திட்டத்துல பிரதமர் மோடி  ஆர்வமா இருக்கார்னு தெரியும். ஆனா அடல்ட் சீனா இருந்தாகூட இந்தியாவுலதான் உருவாகி இருக்கணும்னு நினைக்கிற அளவுக்கு இவ்வளவு தீவிரமா இருப்பார்னு நினைக்கவே இல்லீங்க‌. நேரடி அன்னிய மு(த்)தலீடு சினிமாவுல மட்டும் கூடாதுங்கிறது என்ன மாதிரி டிசைன்?

முந்தின காங்கிரஸ் ஆட்சியிலயும் சினிமாக்காரங்க‌ இந்த மாதிரி லுச்சா வேலை எல்லாம் செஞ்சுகிட்டு இருந்தாலும்,  கலாசாரத்தை பேணிக்காக்குற டவுசர் பாய்ஸ் அரசாங்கத்துல இது கொஞ்சம் அதிகமாவே நடக்கிற மாதிரி இருக்கு. பீஃப் சாப்புடக்கூடாதுன்னு இவுங்க சொன்னா,  அதுவரைக்கும் பீஃப் சாப்பிடாதவன்கூட சாப்பிட ஆரம்பிச்சு எதிர்ப்பை காட்டுறான். ஐ திங்க், இந்த அரசாங்கம் பதவியேத்த நேரம் சரியில்லன்னு நினைக்கிறேன், பீஃப் (நன்றி பி.ஜே.பி.), பீப்(நன்றி: சிம்பு) ன்னு ஏகப்பட்ட கலவரம் சுத்தி சுத்தி அடிக்குது.

அதான் 'ஏ' சர்டிஃபிகேட் குடுக்குறோம்ல, அப்புறம் ஏன் எங்களை வையுறீங்கனு சென்சார் போர்டு அப்பாவியா கேக்குதாம். படத்துக்குத்தான் ஏ சர்டிஃபிகேட். ஆனா,  படத்தோட போஸ்டர் டிசைனைப் பார்த்தீங்களா? போஸ்டர்லாம் தெருவுக்குத் தெரு ஒட்டுவாங்க. அதுக்கெல்லாம் சென்சார் கிடையாது. ஆக, தயாரிப்பாளர் கல்லா கட்டுவாரு. 

இந்தக் கட்டுரையின் நோக்கம்... எல்லாத்தையும் அனுமதிங்கன்னோ... எல்லாத்தையும் தடை பண்ணுங்கன்னோ பிரஸ்தாபிக்கிறதில்லை. சென்சார் போர்டு அதிகாரிங்க‌ ஒரு படத்தைப் கலாச்சார காவலர் யூனிஃபார்மோடையும், இன்னொரு படத்தை பிகினி மோட்லயும் பார்க்கிறதை  நிறுத்திக்கங்கணுதான் சொல்றோம். ஏன்னா,  நீங்க கட் பண்றதைவிடவும் பலமடங்கு ஆபாசமான காட்சிகள் இணையத்துல தங்குதடையின்றி இலவசமாக் கிடைக்குது. அந்த இணைய சக்தியை எந்த அரசாங்கத்தாலயும் எதிர் கொள்ள முடியாது. ஃபோர்ன் தளங்களுக்கு தடைனு பேச்சு வந்தப்ப, நம்ம பசங்க ஒரு காட்டு காட்டினாங்க. சத்தமில்லாம அந்த உத்தரவை கிடப்பில் போட்டிருச்சு நம்ம மத்திய அரசாங்கம். 
 
அதனால, இறுதியா என்ன சொல்ல வர்றோம்ன்னா... ஒரு கண்ணுல வெண்ணையையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் தடவுற வேலையை சென்சார் போர்டு இதேமாதிரி  தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வந்தா, அப்புறம் சென்சார் போர்டே இல்லாத நாடா பார்த்து குடியேறுவ‌தைத் தவிர எங்களுக்கு வேறு வழியே இல்ல. ஆமா! 

- சீலன்

விக்ட் ன்

0 comments: