Thursday, December 10, 2015

இதோ இன்னும் ஒரு ரஜினி வர்றார் கவனி

1/மோடிக்கு எதிரானவர் ஆமிர் கான்: இல.கணேசன் பேட்டி: # ஏன்?அவர் உள்நாட்டை விட்டு ஒரு அடி கூட எடுத்து வெச்சதில்லையா?==============2/மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தலையாய பணியாக கருத வேண்டும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # கோஷ்டிப்பூசல் இல்லாமல்.அது ரொம்ப முக்கியம்============

3/சாக்கடை வேணாம்னு ஒதுங்கி இருந்தேன். பிடிச்சுத் தள்ளி விட்டாங்க. சுத்தம் செய்யலாம்னு இருக்கேன் - கமல்

# இதோ இன்னும் ஒரு ரஜினி வர்றார் கவனி

==========

4/வரிப்பணம் குறித்து கேட்கவே இல்லை.ஜெ பற்றி எதுவும் கூறவில்லை.-கமல் விளக்கம்-செய்தி

# அரசியல்ல இறங்குவார்னு பார்த்தா இப்டி இறங்கி வந்துட்டாரே?


==========

5/கடலூரில் நிவாரண பொருட்களுக்கு, ஜெ. பட ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி வற்புறுத்திய 5 திமுகவினர் கைது"# திரைக்கதைல வெச்சாங்க பாரு ட்விஸ்ட்டு

===========

6/வரிப்பணம் குறித்து கேட்கவே இல்லை.ஜெ பற்றி எதுவும் கூறவில்லை.-கமல் # தோசை க்கு பொடி வைக்கலைன்னு என் அம்மாவை திட்னேன்.நம்ம அம்மா வைனு தப்பா


==========

7/உள்ளாடையில் முதல்வர் படத்தை ஒட்டி கேலி செய்த ஜவுளிக்கடை உரிமையாளர் கைது # லாக்கப்ல வெச்சு துவைச்சுக்காயப்போட்டிருப்பாங்க

============
8/தன்னார்வலர்களை தடுக்கும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஹை கோர்ட் பாரு சிக்சரு.இனி ஒட்டுவீங்க ஸ்டிக்கரு?=====

===============

நிவாரண பணிக்கு சொந்த தொகுதியிலேயே போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் அமைச்சர்: # ஓட்டு கேட்க வரும்போது ராணுவத்தை கூட்டிட்டு வருவாகளோ?


=============

10/சென்னைக்கு கனமழை ஆபத்து இல்லை; வதந்தியை நம்ப வேண்டாம்: வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு # முன் ஜாக்கிரதையா இருப்பதில் தப்பில்லையே?


===========

11/பிஸ்கெட் பாக்கெட் மட்டும் கொடுத்து நிவாரண உதவி அளித்ததாக ரேஷன் கார்டில் சீல்.அதிமுக அராஜகம் # ஆட்சிக்கே சீல் வெச்சுடப்போறாங்க ஜாக்கிரதை


===========

12/திமுகவோ பாமகவோ ஆட்சியில் இருந்திருந்தால் இதைவிடக் கேவலமாகவே செயல்பட்டிருக்கும் - காசிநாதபாரதி, அதிமுக.# அப்போ இதுவே கேவலம்னு ஒத்துக்கறீங்க?


============

13/இன்னமும் கமல் ஆபிஸுக்கும் அதைச் சுத்தியிருக்கிற நாலு வீடுகளுக்கு மட்டும் கரன்ட் விடலை' # மின்சாரப்பூவே பெண் பூவே மக்களின் குறை கேளாய்

===========

14/குடிசைகளே இல்லாத சென்னை வேண்டும்- தமிழிசை சவுந்திரராஜன் கோரிக்கை # ஏம்மா மின்னல்.பங்களா தேஷ் லயே அது நடக்காதே?


==============

15/தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் -ஜெ நீங்க தப்பிச்சுக்குவீங்க?


===========

16/நடிகை ராணி முகர்ஜிக்கு பெண் குழந்தை! # இளவரசி பிகர் ஜி ன்னு பேர் வைங்க


============

17/அரசு வரி பணத்துல போட்டோ போடலாமா ?- ஸ்டாலின் # தப்பு தான் தலைவா! நம்ம கலைஞரும் இதைத்தானே செஞ்சாரு?


==============

18
மழையால் பாதிக்கப்பட்ட டூவிலர் ஆட்டோகளுக்கு இலவசமாக சர்வீஸ் செய்யப்படும்-ஜெ #,அரசு அதிகாரிகளை சரியா சர்வீஸ் பண்ண விடுங்க முதல்ல


=============

எங்கள் ஆட்சியில் வெள்ளம் வந்திருந்தால் வேறு விதமாக கையாண்டு இருப்போம்-கலைஞர்#நம்ம ராசிக்குத்தான் மழையே கிடையாதே தலைவா?பஞ்சம் தானே?


================

20/கொட்டிய மழையே வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட காரணம்- ஜெ #,அரசின் மெத்தனம் ,நிர்வாகம் ஸ்தம்பித்தது ,முன் ஏற்பாடுகள் செய்யாதது,ஏரிகளை ஆக்ரமித்தது

===============

0 comments: