Tuesday, December 29, 2015

அநாகரிகப் பேச்சு: விஜயகாந்தை சாடும் அரசியல் விமர்சகர்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் | படம்: பி.ஜோதிராமலிங்கம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் | படம்: பி.ஜோதிராமலிங்கம்
'விஜயகாந்தை அவரது தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.ஆர். என அழைக்கின்றனர். ஆனால், எம்.ஜி.ஆரிடம் இருந்த கண்ணியமும், சமநிலையும் விஜயகாந்திடம் இல்லை'
பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றாலே ஆவேசமாகப் பேசுவதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு நிறைய முன் உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம்.
புதுடெல்லியில் பிரதமரை சந்திக்க தமிழகத்திலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் சென்றனர். பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு சேனல் செய்தியாளரை விஜயகாந்த் விமர்சித்தது அங்கிருந்த மற்ற தலைவர்களை தர்ம சங்கடமான சூழலுக்குத் தள்ளியது.
இதுபோல் பல்வேறு தருணங்களிலும் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை கடுமையாக கையாண்டிருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படுவதால் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் ரத்ததான முகாம்கள் நடத்தப்படும் என்றும் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி சென்னையில் போரூர், தரமணி, வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்த தான முகாம்களை விஜயகாந்த் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தொலைக்காட்சி நிருபர் ஒருவர், "2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறதா?" எனக் கேட்டார்.
அதற்கு அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்காது என பதிலளித்த விஜயகாந்த தொடர்ந்து தனது வழக்கமான தொணியில் ஆவேசமாக பேசினார்.
அவரது அநாகரிகப் பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பலர் விஜயகாந்தை விமர்சித்து கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அரசியல் விமர்சகரும் பிபிசி முன்னாள் நிருபருமான சம்பத் குமார் 'தி இந்துவிடம்' (ஆங்கிலம்) கூறும்போது, "விஜயகாந்தை அவரது தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.ஆர். என அழைக்கின்றனர். ஆனால், எம்.ஜி.ஆரிடம் இருந்த கண்ணியமும், சமநிலையும் விஜயகாந்திடம் இல்லை. எம்.ஜி.ஆர். எப்போதுமே பத்திரிகையாளர்களை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார். ஏன், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் பத்திரிகையாளர்களை இவ்வளவு தரக்குறைவாக நடத்தியதில்லை" எனக் கூறியுள்ளார்.

 • பல தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதை விஜயகாந்த் தைரியமாக கூறுகிறார். .ஆயினும் தமிழகத்தில் மட்டும் அரசியல் தலைவர்களுக்கு சகிப்புத் தன்மை குறைவு தான் !
  11895
  about 15 hours ago
   (31) ·  (0)
   

  • K
   Kumar  
   விஜயகாந்த் பேசுவது சரியே....மீடியாகல் இடம் பொருள் பார்ப்பது இல்லை....ஒரு மனிதர் ஒரு கேள்விக்கு தன்னை ஆயத்த படுத்த அவகாசம் தேவை.. ரத்த தான முகாமில் அதை பற்றிய கேள்விகளே இருக்க வேண்டும் ....இவ்வாறு எதிர்பாரத கேள்விகளை சம்மந்தம் இல்லாத இடங்களில் கேட்பது தவறு... உதரணமாக சாவு வீட்டில் சென்று படத்துக்கு போலாமா என்று கேற்பது ....
   about 15 hours ago
    (47) ·  (2)
    

   • J
    கேப்டன் கேட்ட கேள்வியில் என்ன தப்பு இருக்கிறது??? அவர் கேட்ட பாணி வேண்டுமானால் திருதிக்கொள்ளப்பட வேண்டுமே தவிர... அந்த நிருபர் ஜெயலலிதாவிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? அந்த கேள்வியை ஜெய விடம் கேட்டு விட்டு பிறகு வந்து விஜயகாந்த் மீது குற்றம் சொல்லலாம். நமது ஊடகங்களுக்கு முதுகெலும்பு உள்ளது என்பதும் நிரூபணமாகும்.
    1020
    about 15 hours ago
     (47) ·  (1)
     

    • N
     யாகாவா ராயினும் நாகாக்க....குறிப்பாக தலைவர்கள் பொறுமை காத்தல் அவசியம்.இது அனைவருக்கும் தேவையும்கூட
     925
     about 15 hours ago
      (3) ·  (16)
      

     • விஜயகாந்த்க்கு அரசியல் தெரியாது. நல்ல அரசியல் தெரிந்த அம்மாவும் கலைஜரும் தமிழகத்திற்கு என்ன செய்துவிட்டார்கள்? படத்தில் நடித்தவர். நிஜ வாழ்கையில் நடிக்க தெரியாது. விஜஜயகாந்த் மிக உயர்ந்த மனிதர். உண்மையில் வானத்தை போல் மனது படைத்தவர் அவர். வாய்சொல்லில் வீரர்கள் நமக்கு தேவை இல்லை . ஒரு சாதாரண யாதர்த்தவாதி தான் வேண்டும்.
      2265
      about 15 hours ago
       (41) ·  (1)
       

      • A
       Alagar  
       திரு.விஜயகாந்திடம் பேட்டி கண்ட ஊடகங்கள்,அவர்கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரமுடியாதநிலையில் அவரைகுறைசொல்வதை வாடிக்கையாக்காமல் , முதல்வரிடம் சென்னை மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றிபேட்டிகண்டு அவரை அசரவையுங்கள்.
       about 16 h Up Voted
       kilikkaadu Down Voted
       • K
        பத்திரிகை யாளர் களுக்கு தேவை சுயபரிசோதணை.
       தஹிந்து

       0 comments: