Friday, December 18, 2015

தங்க மகன் - சினிமா விமர்சனம்


ஹீரோ ஹீரோயினும்
 ஒரே காலனி.அதை ரொமான்டிக் காலனியா மாத்தி லவ்வோ லவ்வுன்னு லவ்வறாங்க.ஹீரோ தயங்கி தயங்கி பம்மிக்கிட்டே லிப் கிஸ் 1,தர்றாரு.ஹீரோயின் அசால்ட்டா.அஞ்சு லிப் கிஸ் தருது.ஹீரோ கூட சேர்ந்து சரக்கு அடிக்குது.அடேங்கப்பா.பாரதி கண்ட புரட்சிப்பெண் போல.


ஹீரோக்கு இந்தக்கதைல 2 ஜோடி .இப்பவெல்லாம் எந்த ஹீரோக்கும் 1 பத்த மாட்டேங்குது.அதனால திரைக்கதைல ஒரு ட்விஸ்ட்.
ஹீரோ ஹீரோயினுக்கு பைட்.பிரிஞ்சு தனித்தனியா வேற ஒரு மேரேஜ் பண்ணிக்கறாங்க.இப்போ 2 வது ஹீரோயின்ட்ட ஹீரோ முத ஹீரோயின்ட்ட என்ன எல்லாம் பண்ணா ரோ அதை ரிப்பீட்டா பன்றாரு.லிப் கிஸ் தான்.


இப்போ இடை வேளை விடனும்.2 இடை ல விளையாடியாச்சு.
ஹீரோவோட அப்பா ஆபீசுல 5 கோடி கையாடல் பண்ணதா ஒரு பொய்க்குற்றச்சாட்டால தற்கொலை செஞ்சுக்கறாரு.

அப்பாகுற்றமற்றவர்னு நிரூபிக்கறது தான் பின் பாதி கதை.


தனுஷ் வழக்கம் போல் அம்மா அப்பா ஆதரவு வசனம் பேசி கை தட்டல் வாங்கறாரு.


காமி ஜிக் ஜாக் சனுடன்  செம கில்மா.பத்தாததுக்கு ஜம் ஜம் சமந்தா வேற. கமல் ஹாசனே கடுப்பாகும் அளவு 13 லிப் கிஸ் சீன்.இது தமிழ் சினிமா ல ரெக்கார்டாம்.


நமக்குப்பின்னால வர்ற சந்ததிங்க பேசிக்குவாங்க.


காமி ஜிக் ஜிக் சன் முகம் பூரா ஓவர் மேக்கப்புடன் இலியானாக்கு தங்கச்சி போல் போசாக்கே இல்லாம வருது


காமி ஜிக் ஜிக் சன் போட்டிருக்கற சுடிதாரை அயர்ன் பண்ணி போட்டுச்சா போட்டுட்டு பின் அப்டியே வெச்சு அயர்ன் பண்ணிக்கிச்சா?ன்னு ஒரு பெஞ்ச் ரசிகன் கேட்கறான்.


சமந்தா வுக்கு ஒரு சவாலான ரோல்.முழுக்க போர்த்திட்டு குடும்பப்பொண்ணா வரனும்.பாவம்.வழக்கமா டவுசரே போட்டு ப்பழக்கப்பட்டதால  சேலை நிக்கலை.


கேஎஸ் ரவிக்குமார்  ராதிகா அப்பா அம்மாவா குட் ஆக்டிங்.
காமெடிஓரளவு  ஒர்க் அவுட் ஆகி  இருக்கு.
இசை  ஓக்கே.2பாட்டு ஹிட்டு .பிஜிஎம்  சுமார்  ரகம்.
பின் பாதி ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்.


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1/இந்த பிகர் மேட்டர் அர்விந்த் க்கு மட்டும் தெரிய வேணாம்


ஏன்?
ஏன்னா அவன் நம்ம 2 பேரை விட பர்சனாலிட்டியா இருப்பான் # த ம2/ஹேமா கசமுசாவா?
யோவ்.உன் பேர் என்ன?
தமிழ்
அப்பா பேரு இங்க்லீஷா?


3/எந்தப்பொண்ணு அழகா இருந்தாலும் இப்டித்தான் பார்ப்பியா?
அப்கோர்ஸ்.ஆனா அழகா இருக்கும் பொண்ணெல்லாம் நீ ஆகிட முடியாது # த ம ஒன்டர்புல் டயலாக்


4/எமி = என்ன பண்றே?
உமி = அய்யோ நான் எதும் பண்ணலையே.மேல பட்டுடுச்சா?
யோவ்.என்ன ஒர்க் ப.ண்றே? # த ம


5/அவ்ளோ போதையிலும் நீ சுமாராதான் இருக்கேனு எப்டி கரெக்டா சொன்னா?


6/வீக் என்ட் வீக் என்ட்மட்டும் போய்ப்பார்த்துட்டு வர எங்க அம்மா அப்பா என்ன சினிமா தியேட்டரா? # த ம


7/கதவைத்தட்றாங்க
நாளைக்குப்போய் திறந்துக்கலாம் # த ம புதுமணத்தம்பதி


8/பணம் ஒருத்தனை பணக்காரனாவும் ஆக்கும்.பைத்தியக்காரனாவும் ஆக்கும்


சொந்தக்காரங்க யாரையும் நம்பாதேடா
குழந்தைகிட்டே இப்டித்தான் பேசுவாங்க்ளா?
எனக்குத்தெரிஞ்சதைத்தானே சொல்ல முடியும் ,? # த ம


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1/தனுஷ் ன் தங்க மகன் மேட்னி ஷோ @,திருவனந்தபுரம் ஸ்ரீ குமார்


2/ஹீரோயின் ஓவர் மேக்கப் போட்டிருக்கு.சுடி போட்டிருக்கு.நகை போட்டிருக்கு.ஆனா துப்பட்டா மட்டும் போடலை #,வெரிகுட்

3/சிம்பு க்கு போட்டியா தனுஷ் ம் கெட்ட வார்த்தை பேசறாரு.வெரிகுட்.சரியான போட்டி

4/ஹீரோ ஹீரோயின் ஹீரோயின் பிரண்டு ஹீரோ பிரன்டு 4 பேரும் சரக்கு அடிக்கறாங்க.சென்சார் ல யூ சர்ட்டிபிகேட்.வெரிகுட்

5/கமலை தனுஷ் முந்திட்டார்னு எப்டி சொல்றே?


ஒரு படத்துல ஒரு ஹீரோயினுக்கு கமல் ஒரு தடவை தான் லிப் கிஸ் கொடுப்பாரு.

6/சமந்தா சேலைல புல் கவர் பண்ணிட்டு வருது.தமிழனுக்கு செம அதிர்ச்சியான காட்சி


7/எமி ஜாக்ஸனுடன் 8லிப் கிஸ் ,ஸமந்தாவுடன் 3 லிப் கிஸ் உடன் முதல் பாதி வரை படம் ஓக்கே .தங்க மகன் இடைவேளை


8/ஸார்.BGM் ல ஏன் சொதப்பீட்டீங்க?
ரெக்கார்டிங் போனப்ப எனக்கு முன்னால ஆன்ட்ரியா இருந்தது.அந்த பேக் கிரவுன்டைப்பாத்துட்டே இதில் சொதப்பிட்டேன்

மாடர்ன் பிகரான சமந்தா பேக் ஓப்பன் ஜாக்கெட் போட்டிருக்கே.இது ஓல்டு மாடலாச்சே? படத்தோட ஓப்பனிங் இதனால பாதிக்குமோ?10/தனுஷ் க்கு எப்பவுமே ஒரு ராசி உண்டு.அவரோட எல்லாப்படத்துலயும் முன் பாதி நல்லாருக்கும்.வெற்றியைத்தீர்மானிப்பது பின் பாதி தான்

11/லேடீஸ் சென்ட்டிமென்ட் டா இருக்கட்டும்னு பின் பாதில ஒரே சோக சீனா ஓட்டிட்டிருக்காங்க .சப்பா # த ம

12/தங்க மகன் படத்துலவிஜய் ஹீரோவா தோன்றி இருந்தா என்ன ஆகி இருக்கும்?
வில்லன் திருடுன அந்த 5 கோடி மேட்டர் 100 கோடி யா காட்டி இருப்பாங்க

13/தனுஷ் படத்துல வழக்கமா அவருதான் இடைவேளைக்குப்பின் சைக்கோ ஆவாரு.இதுல ட்விஸ்ட்.வில்லன் அப்டி ஆகறாரு # த ம


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 தமிழ் சினிமா வரலாற்றில் 19 கிஸ் சீன் உள்ள முதல் ப்டம்
2,சென்சாருக்கு தர வேண்டியதைத்தந்து  யூ சர்ட்டிபிகேட் வாங்கியது.
இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  அந்த 5 கோடி மேட்டர் ல ஏகப்பட்ட பூச்சுற்றல்கள்.வில்லன் மேனேஜர் தனுஷிடம் ஏன் நான் அந்த பைலை வெச்சு 50 கோடி சம்பாதிச்ட்டேன் என உண்மைசொல்லனும்?
2, ஞாபகமறதிக்காரரான அப்பா ராதிகாவிடமோ  தனுஷிடமோ ஏன் அந்த 5 கோடி மேட்டரை சொல்லலை?
3 சிபிஐ ரெய்டு திடீர்னுதான் வரும் .லெட்டர் போட்டுட்டு தகவல் சொல்லிட்டா வரும்?
4 வில்லன்  அந்த 5 கோடியை  ஏன் தன் வீட்ல வெச்சிருக்காரு.?தன் மனைவி ஹிரோவோட முன்னாள் காதலி னுதெரிஞ்சும்?

சி  பி  கமெண்ட்-தங்க மகன் =முதல் பாதி கிளு கிளு .2 ம் பாதி சோகம் .லேடீசுக்குப்பிடிக்கும்.விகடன் மார்க் =40,ரேட்டிங் .=2.5 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40குமுதம்  ரேங்க் ( கணிப்பு)=ஓக்கே ரேட்டிங்=2.5 / 50 comments: