Friday, December 25, 2015

டியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே அது ஏன்?

1/சார்.ஹீரோயின் முகம் இவ்ளோவ் முத்தலா இருக்கு?


இந்தக்காலத்துல யார் சார் ஹீரோயின் முகத்தைப்பார்க்கறாங்க?


===============

2/சார்.2 ஹீரோயின் கூட நடிச்சப்ப எப்டி சமாளிச்சீங்க ?


எனக்கு கூச்சமாத்தான் இருந்தது.அவங்க 2 பேரும் தான் என்னை சரி செஞ்சாங்க.


===============

3/காலைல இந்த ஹீரோயினைக்கொஞ்சுவது போல் நடிச்சீங்க.மாலை அந்த ஹீரோயின்.நைட் என்ன செய்வீங்க?


வீட்டுக்குப்போய் மனைவியைக்கொஞ்சுவதுபோல் நடிக்கனும்


=======================


4/எக்சாம் ஹால் ல ஏன் மேடம் இன்னும் இருக்கீங்க?


எக்சாம் எழுதிட்டேன்.பேப்பர்சை டீச்சர்ட்ட குடுக்கலாமா?வேணாமா?னு யோசிச்ட்டு இருக்கேன்


===================

5/என் பப்ளிக் எக்சாமை கட் அடிச்ட்டு உங்க படம் FDFS பாத்தேன்


வெரிகுட்.என் அடுத்த படத்துக்கு உன் பிரன்ட்சையும் கூட்டிட்டுப்போ.உருப்ட்டுருவ


===============

6/சார்.பிரபலமான பெண் ட்வீட்டர்னா யாரு?எப்டி அடையாளம் கண்டுபிடிக்கறது?


தனி ட்வீட்ஸ் அதிகம் போடாம சாப்ட்டாச்சா?குட்மார்னிங் டைப் ட்வீட்ஸ்


===============

7/காதலுக்கு மரியாதை ரிலீஸ் ஆகி இன்னையோட 18 வருசம் ஆகுது.

ஓஹோ.மேடம்.உங்க காதல் கணவர் எங்கே காணோம்?
அந்த நாய் லேட்டாதான் வீட்டுக்கு வரும்

============

8/உனக்கு எதுக்கு Wife வேணும?

மேல கை போட்டு தூங்கனும்.
தூங்கனுமா?அதுக்கு நீ பிரம்மச்சாரியாவே தூங்கலாமே?

==============
எல்லாவற்ரையும் எல்லோரிடமும் எப்போதும்
சொல்லிக்கொண்டு இருக்க முடியாது .....!!!!"
ஓஹோ.நோட்டீஸ் போர்டில் எழுதி வெச்சிடுங்க மேடம்.
=================

10/சார்.உங்க படத்துல சோசியல் மெசேஜ் சொல்லி இருக்கீங்களாமே?

ஆமா.லவ் பண்ற பொண்ணை கழட்டி விட்டுட்டு வேற பொண்ணைக்கட்டிக்கிட்டா லைப்ல 2 ஜோடி


=================
11/சார்.அந்தப்படத்துல இன்ட்டர்வல்ல ஹீரோவோட அம்மாவை சாகடிச்சோம்.இந்தப்படத்துல அப்பாவை சாகடிக்கறோம்.

மொத்தத்துல ஆடியன்சை சாகடிக்கறீங்க


=============

12/டியர்.வரைமுறையை மீறாம பழகனும்.

"வரை"முறை தெரியாத ஓவியன்னு என்னை நினைச்சுக்கோ

===============

13/ஒரு வாய் ஊட்டி விடு என உன்னிடம் கேட்டது என் தவறுதான்;-)"

ஏன்?இன்னொரு வாய் கொடைக்கானல்ல விடவா?னு கேட்டுட்டாரா?


===============

14/லிப் கிஸ் கொடுத்துட்டு திருப்பிக் கொடு-ன்னா திருப்பிபின்னங்கழுத்தில் கிஸ் தர்றான்.


அடுத்த டைம் பொடனிலயே 1 போடுங்க.கரெக்டா லிப் கிஸ் வரும்

==================


15/தலைவரே! வழக்கு கோர்ட்க்குவந்துடுச்சு.என்ன பண்ணப்போறீங்க?

முதல் கட்டமா ஜாமீன் வாங்கனும்.அடுத்ததா நல்ல தீர்ப்பை சாதகமான தீர்ப்பை "வாங்கனும்"

==============


16/டியர்.உனக்கு ஒப்புட்டு செய்யத்தெரியுமா?

ம்ஹூம்.பக் வீட் ஆண்ட்டி புடவை பாத்து ஒப்பிட்டு பேசத்தான் தெரியும்

================
17/சார்.பீப் சாங் பத்தி பேட்டி எடுக்க வந்திருக்கோம்.

சரி.கேள்விகளைக்கேளுங்க.
நம்ம நேயர்களுக்கு ஒரு தடவை அந்த பாட்டைப்பாடிக்காட்டிடுங்க.
==============

18/மிஸ்! நீங்க சென்னைலயா இருக்கீங்க?

இல்லையே?கோவை ல. ஏன்?நீங்க சென்னைலயா?
நோ நோ.சும்மா உங்க லொக்கேசன் தெரிஞ்சுக்கக்கேட்டேன்

============

மும்பைல புடவை கட்டற பொண்ணைப்பார்ப்பது ரொம்ப ரேரா இருக்கு.
எல்லா ஊர்லயும் அப்டித்தான்.ஜன்னல் வழியா எட்டிப்பார்க்கனும்.

===============

20/டியர்.உன் இதயக்கதவை எப்பவும் மூடியே வெச்சிருக்கியே அது ஏன்?

24 மணி நேரமும் திறந்தே வெச்சிருக்க அது என்ன திராவிடக்கட்சியின் கூட்டணி ஆபீஸா?

=================

0 comments: