Thursday, December 24, 2015

வேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்றாங்களா? எப்படி?

1/சார்.அர்ஜென்ட்டா விஜயா வைப்பார்க்கனும்


அப்டி யாரும் இங்கே இல்லையே?
விஜயா பேங்க் னு போர்டு மாட்டி இருக்கு?


=============

2/டியர்.விஜயா பேங்க் பக்கம் மீட் பண்ணலாமா?


கே ஆர் விஜயா பேங்க்கா? ஒய் விஜயா பேங்க்கா?


==================

3/சார்.காலை ல ஹீரோ சாப்பிட ஏன் எதுவுமே குடுக்கலை?


ஹீரோயின் உதட்டை 2 மணி நேரமா மென்னுட்டு இருந்தாரு.வாய்க்கு ரெஸ்ட் வேணாமா?


============

4/ஹீரோக்கு கிஸ் குடுக்கும்போது ஹீரோயின் கண்ணை ஏன் ரிப்பனால கட்டிக்குது?


ஹீரோ என்ன ரிப்பன் பிரபுவா? எல்லாம் பார்க்க சகிக்காமதான்


=============

5/ஸ்டிக்கர் ஒட்டுனது தப்பா போச்சு தலைவரே.

ஏன்?
ஒட்டிக்கோ! மக்களிடம் வாங்கிக்கட்டிக்கோ ன்னு கோஷம் போடறாங்க


================

6/
ஹீரோ கரெக்ட் பண்ணுன பொண்ணை ஹீரோவோட பிரன்ட் கரெக்ட் பண்ணிடறாரு.


சிம்பு= இது என் முதல் காதல் கதை மாதிரி தெரியுதே


===========


7/கமலை தனுஷ் முந்திட்டார்னு எப்டி சொல்றே?
ஒரு படத்துல ஒரு ஹீரோயினுக்கு கமல் ஒரு தடவை தான் லிப் கிஸ் கொடுப்பாரு.

===============

8/ஸார்.BGM ல ஏன் சொதப்பீட்டீங்க?


ரெக்கார்டிங் போனப்ப எனக்கு முன்னால ஆன்ட்ரியா இருந்தது.அந்த பேக் கிரவுன்டைப்பாத்துட்டே இதில் சொதப்பிட்டேன்


============
/தங்க மகன் படத்துலவிஜய் ஹீரோவா தோன்றி இருந்தா என்ன ஆகி இருக்கும்?


வில்லன் திருடுன அந்த 5 கோடி மேட்டர் 100 கோடி யா காட்டி இருப்பாங்க


==========


10/டியர்! உன் மனசில் இடம் பிடித்த" தனி ஒருவன்" நான்தானே?
நோ நோ.நீ "ஆயிரத்தில் ஒருவன்"

==============

11/இரு தரப்பு ரசிகர்கள் சண்டை போட்டா ஹீரோக்களின் சம்பளம் எகிறும்

ஓஹோ.அப்போ 2 ஹீரோவும் சண்டை போட்டா இரு தரப்பு ரசிகர்கள் சம்பளம் எகிறுமா?

=================

12/உனக்கு அறிவு இருக்கா ? என் கிட்டே ஏன் இதைக்கேட்கறே?

ஞானி ன்னு சொல்லிக்கறீங்க.ஏன் கோபப்படறீங்க.சராசரி மனுசன் போல்

=================

13/சார். சின்னத்திரையில் வரும் பெண்கள் மேல் ஒரு கண் வெச்சிருக்கீங்களாமே?

இல்லையே?2 கண்ணையும் தான் வெச்சிருக்கேன்

================

14/ஏம்மா.எக்சாம் ல எல்லாரும் 3 பக்கம் எழுதி இருக்காங்க.நீ மட்டும் 3 வரி யோட முடிச்ட்டே?

சாரி சார்.எதா இருந்தாலும் 140 லெட்ட்டர்ஸ் தான்.

==============

15/தங்கமகன் எப்படி இருக்கு? பாக்கலாமா??"செம கிளு கிளு.13 லிப் கிஸ் சீன் .நல்ல குடும்பப்படம்.தனியா போகவும்

================

16/ஜோசியரே! என் மீனராசியை மாத்தி கன்னி ராசியா என் ஜாதகத்தை திருத்த முடியாதா?

எதுக்கு?
அட்லீஸ்ட் ராசிலயாவது கன்னி இருக்கட்டும்னுதான்

==============

17/வேட்டைக்காரன் செம ஹிட் படம்னு அஜித் ரசிகர்களே சொல்றாங்களா? எப்படி?

அதாவது எம் ஜி ஆர் நடிச்ச வேட்டைக்காரன்


================

18/சார்.பேமிலி என்ட்டர்ட்டெயினர்னு கூசாம சொல்றீங்களே? உங்க பேமிலியோடவாபோனீங்க?

நோ.தயாரிப்பாளர் சொன்னபடி போட்டேன்.கவரு.நீ நகரு


=============

தாலி கட்ற முகூர்த்த டைம் நெருங்கிடுச்சு.மாப்ளை அனுஷ்கா நடிச்ச படத்தை டிவில பார்த்துட்டு இருக்காரே?
அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கனுமாம்

================

20/சார்.பேமிலி என்ட்டர்டெயின்மென்ட் பிலிம்னீங்க.மானாவாரியா முத்தம் குடுக்கற சீன் இருக்கே?

யோவ்.உங்க பேமிலி ல யாரும் முத்தமே தரமாட்டாங்களா?

================

0 comments: