Friday, December 04, 2015

விஜய் தான் சூப்பர் ஸ்டார் - எமிஜாக்சன்!

1/தேமுதிகவுடன் இணைவதில் எங்களுக்குப் பிரச்சினையே கிடையாது.. அன்புமணி # அரசியல்னு வந்துட்டா எதுவும் இருக்காது இருக்கக்கூடாது=============2/ராம்கோபால் வர்மா -வின்‘கில்லிங் வீரப்பன்’ க்கு தடை-பெங்களூரு நீதிமன்றம் # ஆபரேஷன் வீரா-ன்னு டைட்டிலை மாத்திடுங்க, ஜட்ஜ் ஏமாந்துடுவாரு
===============
3 மதுவிலக்கு ஆதரவு கேட்டு விஜயகாந்துடன் கோவன் சந்திப்பு # விட்டா இவரு ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவு கேட்டு கலைஞர் வீட்டுக்கே போய்டுவார் போல
===============
4 இந்தியாவிலேயே தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழகம் முதலிடம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல் # வாத்தியார் வழி வந்த தலைவி ஆட்சி ஆச்சே==============
5 விஜய் தான் சூப்பர் ஸ்டார் - எமிஜாக்சன்! # மேடம்.உங்களுக்கு யார் சொன்னது?

விஜய் தான் சொல்லச்சொன்னாரு;-)


===============

6/மோடி பாரிஸ் பயணம் - செய்தி #
இந்தியா வில் மோடி இருந்தாதான் அது பரபரப்பு செய்தி.டூர் போறது வழக்கமா நடக்கறதுதானே?


================

7 விவசாயிகளுக்காக அதிக தண்ணிரை திறந்து விட தமிழக அரசு உத்தரவு- உங்களை எல்லாம் நம்பாமதான் இயற்கையே திறந்து விட்டிருக்கே?டூ லேட் ஆர்டர்


=============

8 விஜயதாரணியை காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்க வேண்டும்-49 மாவட்ட தலைவர்கள்  # குஷ்பூ , நக்மா வைத்தவிர  யாரை நீக்கினாலும் கவலைப்படமாட்டோம்


===============

நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்-காங்கிரஸ் மகளிரணி தலைவர் விஜயதாரணி ஆவேசம்# ட்விட்டர் அக்கவுண்ட் வாங்க, இங்க தான் புரட்சிவீரர்கள் அதிகம்


==================


10 எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை ஏற்று செயல்பட்டால் என்ன?: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு# இது சும்மா ராசி இல்லை, சிம்ம ராசி


====================


11 நீலகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- மத போதகர்க்கு சிறை # நீலகிரிங்கறதால ஏண்டா நீலப்பட வேலை எல்லாம் பார்க்கறீங்க ? 


====================


12 சட்டவிரோதடெலிphஎக்சேஞ்ச்வழக்கு-தயாநிதிமாறனிடம் CBIவிசாரணை#சட்டத்துக்குவிரோதமாநடந்துட்டீங்களா?நான்சட்டஅமைச்சர் இல்லையே, எப்டிசட்டம்தெரியும்


==================


13 தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: ரமணன் # 30 நாளா தொடர்ந்து பெய்ஞ்சுக்கிட்டுதாங்க இருக்கு.எப்போ வெய்யில் அடிக்கும்?


=================

14 சீதையாக நடித்த நயன்தாரா  தெலுங்குப்படத்தில் ராதையாக நடிக்கிறார் # ராதே என் ராதே வா ராதே-ன்னு 5 ஹீரோ பாடற மாதிரி சீன் இருக்குமே?


======================


15  காங்கிரசை தற்ப்போதுதான் மக்கள் திரும்பி பார்க்கின்றனர் - இளங்கோவன்  திசையில் புறமுதுகிட்டு ஓடும் காட்சியை திரும்பித்தானே பார்க்கனும்


=====================


16 மழை எதிரொலி: பூக்களின் வரத்துக் குறைவால் ஒரு முழம் மல்லி ரூ.50க்கு விற்பனை # மழையும், குளிரும் இருக்க மல்லிகை எதற்கு?ன்னு தமிழன் யோசிப்பான்===================
17 5 தொழிற்சாலைகளிலும் மேகி நூடுல்ஸ் உற்பத்தி மீண்டும் தொடக்கம் # தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், பின் சூது செம ஹிட் ஆகிடும்
===================
18 ராகுல் காந்தி குடியுரிமை பிரச்னை: வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் # ராகுலோ கேப்டனோ குடிப்பது அவங்க உரிமைன்னு கோர்ட் சொல்லிடுச்சா?
=====================
19 நாக்பூரில் குடும்பச் சண்டையால்: கணவரை குத்திக் கொலை செய்த பல் மருத்துவர் # பல் கலை வித்தகர் போல 
======================
20 காங்கிரசை தற்போதுதான் மக்கள் திரும்பி பார்க்கின்றனர் - ஈவிகேஎஸ்# குஷ்பூ ,நக்மா க்கு அடுத்து நமீதா வருதா?ன்னு எட்டிப்பாத்திருப்பான்=================

0 comments: