Monday, November 09, 2015

உலகின் நெ 1 பருத்தி வீரன்

1/விஜயகாந்திற்கு போலீஸ் பாதுகாப்பு : ஐகோர்ட்# நியாயமாப்பாத்தா வி காந்த் கிட்டே இருந்து அடி விழாம இருக்க தொண்டர்களுக்குதான் பாதுகாப்பு தரனும்


===========
2/கேப்டனை பார்த்தால் கவலைகள் மறக்கும்-பிரேமலதா # அவர் என்ன சிரிப்பொலி சேனலா?காமெடி பீசா? மாஸ்.பக்கா மாஸ்
============3/உலகிலேயே பருத்தி உற்பத்தியில் முதலிடம் இந்தியா; அமெரிக்க விவசாயத்துறை தகவல்...# உலகின் நெ 1 பருத்தி வீரன் நாமதான் னு ஜம்பமா சொல்லிக்கலாம்
==========4/ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில்..


சிங்கப்பூருக்கு முதலிடம்

இந்தியா 103-வது இடம் # லைப்பாய் சோப் போட்டுகுளிச்சும் ?


=============

5/சாகும்வரை அதிமுகவில் இருப்பேன் -நாஞ்சில் சம்பத்
# அதுக்குப்பின் அம்மா மின் மயானத்துக்கு ஷிப்ட் ஆகிடுவீங்க?

===========

6/ஜெ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சினிமா பாட்டு கூட பாட முடியாது: சீமான் # அய்யா வந்தா அய்யப்பன் பாட்டு போடமுடியாதா?சும்மா உளறக்கூடாது

==========

7/செல்போனில் ஆபாசப்படங்கள் அனுப்பினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை # மெமரி கார்டை அனுப்பலாமா எஜமான்?

=========

8/சாதிக்கட்சியை சேர்த்துக்கொள்ள மாட்டோம் -வைகோ. # முதல்ல நம்மை யாரு சேத்திக்க ரெடியா இருக்காங்க?ன்னு யோசிக்கனும்

=============

விஜயகாந்த், ஜி.கே.வாசனுக்கு மக்கள் நலக் கூட்டணியில் சேர வைகோ அழைப்பு # வாசன் வந்தாலும் கேப்டன் வர மாட்டாரு.நீங்க வேணா அங்கே போங்க

===============

10/சபரிமலை சீசனையொட்டி சென்னை-நெல்லை இடையே ‘சுவிதா’ சிறப்பு ரெயில்; தெற்கு ரெயில்வே அறிவிப்பு...# ரிட்டர்ன் போக கீதா சிறப்பு ரயிலா?

===============11/பெரம்பலூர் -
மனைவி துடைப்பத்தால் அடித்ததால் நடுரோட்டில் கணவன் தீக்குளித்து சாவு # வீட்டுச்சாப்பாடு இருக்கும்போதே ஹோட்டல்ல சாப்ட்டுட்டானா?

============

12/திமுக வின்

தலைமை பொறுப்பிற்கு

தகுதியானவர் ஸ்டாலின்
-கலைஞர்
மாப்ளை.ஆனா நான் இருக்கும் வரை பொண்ணுக்கு தாலி கட்ட விடமாட்டேன்

===========

13/தொகுதி மக்களை சந்திக்காத MP, MLAக்களை தகுதி நீக்கம் செய்யலாம் - ஸ்டாலின்# இவர் அட்டாக்கிங் வெளிநாட்டு டூர்வாலா மோடியையா?கொடநாட்டு லேடியையா?


============

14/பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை பயன்படுத்தலாம்” : அரசுக்கு விஜயகாந்த் யோசனை # பகல் கொள்ளை அடிக்கறவங்களோட எதுக்கு பந்தில உக்காரனும்?

=============

15/ஒழுக்கத்தைப் பற்றி பேச தங்கபாலுவுக்கு யோக்கிதை இல்லை-EVKS் # குஷ்பூ ,நக்மா னு 2 பேர் சேர்ந்தபின் அடிதடி ,கோஷ்டிப்பூசல் அதிகம் ஆகிடுச்சே?


===========

16/திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் - அன்புமணி ராமதாஸ் # அவங்க 2 பேர் மாதிரி உங்களால திறமையா ஊழல் பண்ண முடியும்னு எனக்குத்தோணலை

============

17/வேதாளம்: நவம்பர் 5ல் டிரெய்லர். அன்றே முன்பதிவும் தொடக்கம் # ரிசர்வ் பண்ணின டிக்கெட்டை தெறிக்க விட்றாதீங்க..அப்ரம் படம் பாக்க முடியாது

============

18/திமுகவின் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர் மு.க.ஸ்டாலின் - கருணாநிதி. # வாசலை மறிச்சு நின்னுட்டே வழிவிடு வழிவிடுன்னு அர்ச்சகர் கத்துன மாதிரி

=============

கமலுடன் மீண்டும் இணையும் அமலா # 26 வருசமா நிம்மதியா இருந்தேன் - நாகார்ஜூன் மைன்ட் வாய்ஸ்


============

20/விஜய் பற்றி அவதூறு பரப்ப 30000 ரூபாயில் ஆட்கள்

- அஜித் பற்றி ஜூனியர் விகடன் # அஜித் பற்றி அவதூறு பரப்ப ஜூவி 3 லட்சம் ரூ வாங்கியது-நக்கீரன்

===========

0 comments: