Thursday, November 19, 2015

உலுக்கும் புயல்

சென்னை: வருகின்ற 22-ம் தேதி சென்னையை புயல் உலுக்கும் என்று வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச் சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட பஞ்சாங்கம் இருவகைப்படும். முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்’. சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்’.
இதில், வாக்கிய முறை பஞ்சாங்கத்தை பல்வேறு ஜோதிடர்களும் வெளியிட்டு வருகிறார்கள்.

அவ்வாறு வெளியான ஒரு வாக்கிய பஞ்சாங்கத்தில் கடந்த 14-ம் தேதி (சனிக்கிழமை) அன்று “புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு தமிழகம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதுபோல அந்த பஞ்சாங்கத்தில் வருகின்ற 21-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி “ஒரு வாரம் மழை பெய்யும்” என்றும், 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று “புயல் பலமாக சென்னையை உலுக்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின் பிடியிலிருந்து தற்போதுதான் மக்கள் இலேசாக மீண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில், வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி மீண்டும் மழை வந்துவிடுமோ என்ற கவலை பஞ்சாங்கத்தை நம்புவர்களிடையே ஏற்பட்டுள்ளது

thanks vikatan

0 comments: