Wednesday, November 25, 2015

இந்தியாவை விட்டு வெளியேறலாமா?- சகிப்பின்மையும் அமீர் கான் பார்வையும்

அமீர் கான் (வலது) அவரது மனைவி கிரன் ராவ் (இடது) | கோப்புப் படம்.
அமீர் கான் (வலது) அவரது மனைவி கிரன் ராவ் (இடது) | கோப்புப் படம்.
"நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்கிறார் என் மனைவி"
டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயென்கா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கான் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
"நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.
நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறுகிறார்.
கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது.
வீட்டில் என் மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் "நாம் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?" எனக் கேட்டார். குழந்தைகள் எதிர்காலம் கருதி இவ்வாறு கேட்பதாகக் கூறினார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறக்கவே அச்சமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் பாதுகாப்பு உணர்வு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கத் துணியும் போது அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும், சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இவ்வாறு நடந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும். ஆனால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வே மிச்சமிருக்கிறது. காரணம் அரசுகள் சட்டத்தை மீறுபவர்களை தட்டிக் கேட்கவில்லை.
பெருகிவரும் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், திரைக் கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பியளித்துள்ளனர். இது சரியான முடிவே. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.
தாத்ரி சம்பவத்துக்குப் பின்னர் வெளியான சில அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் கண்டனத்துக்குரியவை. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது கண்டனத்துக்குரியதே.
ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது கேள்வியல்ல, அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. ஆனால், வன்முறை நடக்கக் கூடாது. தொலைக்காட்சி விவாதங்களில் பலர் பாஜகவை குற்றஞ்சாட்டினர். அதற்கு பாஜகவினர் 1984 சீக்கிய கலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். இது சரியான அணுகுமுறை அல்ல. அரசியல்வாதிகளிடம் இருந்து நமபிக்கையளிக்கும் அறிக்கைகளையே மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு அங்கு பல அரசியல்வாதிகள் படையெடுத்தனர். ஆனால், கர்னல் சந்தோஷ் மகாதிக் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை."
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் ஆதரவு:
நாட்டில் சகிப்பின்மை பெருகிவருவதால் மக்கள் அச்ச உணர்வில் இருப்பதாக நடிகர் அமீர் கான் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, "அமீர் கான் சொல்வதைத் தான் இந்தியா முழுமையும் சொல்கிறது, மொத்த உலகமும் சொல்கிறது. வலதுசாரி கொள்கை கொண்ட தலைவர்களும் இதையே சொல்கின்றனர்.
உண்மையை சொல்லியதற்காக அமீர் கான் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அவரை விமர்சிப்பதை தவிர்த்து அவர் கூறிய கருத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவி சாய்க்க வேண்டும்" என்றார்.
பிகே வெற்றிக்கு யார் காரணம்? - பாஜக
இந்தியாவில் சகிப்புத்தன்மை மேலோங்கி இருக்கிறது என்பதற்கு சர்ச்சைகள் நிரம்பிய ஆமீர் கானின் பிகே (PK) திரைப்படம் திரையரங்குகளில் தங்குதடையின்ற ஓடியதே நற்சான்றாகும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
அடிப்படைவாத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி பிகே திரைப்படம் வசூல் சாதனை செய்ததே? திரையரங்குகளில் அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததே?' என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

 • Swaminathan  from India
  இதற்கு முன்னர் நடந்த மும்பையில் நடந்த சம்பவங்கள் போது இவர் என்ன நினைத்தார்.இந்தியாவில்தான் பெரும்பான்மை இனத்தவர்களின் சகிப்பு தன்மை நன்றாகத்தான் உள்ளது.நிறைய இடர்பாடுகளுக்கு இடையிலும் நிரம்ப சகிப்புத்தன்மை அவர்கள் காட்டியதால் தான் மற்ற இனத்தவர் சுதந்திரமாக இந்தியாவில் இருக்கிறார்கள்.இவர் இந்த நிலை திரை உலகில் வந்ததற்கு காரணமே பெரும்பான்மையிரின் ஆதரவு தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.இம்மாதிரி ஆட்கள் இங்கிருப்பதைவிட அவர் விரும்பும் நாட்டிற்கு செல்லலாம்..ஆனால் அங்கும் சரியில்லை என்று திரும்ப வந்து விடாதீர்கள்.கிளம்புங்கள் குடும்பத்துடன் அமீர்கான்.
  175

  • E
   Elil  from India
   நாட்டில் பலர் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது... மும்பை எத்தனையோ முறை தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி உள்ளது... அப்போதெலாம் மெழுகு வத்தி பிடிக்க சொன்னவர்கள், அதற்க்கு பிறகும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று படத்தில் நடித்தவர்கள், படத்துக்கு PK பெயர் வைத்தவர்கள், இப்போது மட்டும் பொங்கி எழுகிறார்கள்.. அட கமல் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற போது இவர் போராடிய முஸ்லீம் அமைப்புகளுக்கு அறிவுரை சொன்னாரா, கமலுக்கு ஆதரவு தந்தாரா? விழித்துக் கொள்ளுங்கள் மக்களே...
   1725

   • கண்ணன்  from India
    இதுபோன்ற அனாவசிய பேச்சுக்கள் மூலம் அந்நிய நாடுகள் இந்தியாவையே கேவலமாகப் பார்க்கவே தூண்டுகிறார் (திட்டமிட்டோ எனக்கூடத் தோன்றும் ?) .இதுபோல செய்வதற்கு பதில் இதே சேவையை அமீர் தனது முன்னோர் தேசமான ஆப்கானிஸ்தானுக்குப் பொய் அங்குள்ள தாலிபான்களிடம் சகிப்புத்தனமை பற்றி பிரசாரம் செய்யலாம் அடவான்ஸ் ஆழ்ந்த அனுதாபங்கள்
    10960

    • K
     kumar  from India
     காங்கிரஸ் செய்வதே அது தான்...எதிரி நாட்டுக்கே சென்று மோடியை நீக்க வேண்டும் என்று பேசினார்களே...எதோ பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு போல மோடி தான் முட்டுக் கட்டை போடுவது போல... சென்ற வாரம் கூட பாகிஸ்தான் காஸ்மீர் பிரிவினை வாதிகளுக்கு கடிதம் எழுதுகிறார்...தீவிரவாதிகளிடம் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் மடிகிறார்கள்..ஆனால் காங்கிரஸ் மற்றும் சிலருக்கு பாகிஸ்தான் அமைதியின் தூதுவராக தெரியலாம்...
     17525

    • M
     MEYYARUVI  from India
     பாலுடன் நீர் எப்போதும் நட்புடன் தான் இருக்கும் நீர் பிரியும் போது பால் பொங்கியெழும் அப்போது நீர் சிறிது தெளித்தால் பால் பிரிந்த தோழன் கிடைத்த மகிழ்ச்சியில் அடங்கிவிடும் ஆனால் அதே பாலில் சிறிது கசப்பை சேருங்கள் உடனே பிரிந்துவிடும் நம்முள் உள்ள கசப்புணர்வை நீக்கிவிட்டால் நாடும் நலம் பெரும் நாமும் நலம் பெறுவோம்
     480

     kum · c · !!! Down Voted
     • M
      MEYYARUVI  from India
      நம் வீட்டில் குப்பை சேர்ந்தால் அதை நாம் தான் சுத்தப்படுத்தவேண்டும் குப்பை அதிகமாகிவிட்டது அதனால் தொற்று ஏற்படும் என்று யாரும் வீட்டைவிட்டு ஓடி விட மாட்டார்கள் ஊடகத்திலேயே அதிகமான பேரை சென்றடையும் திரைத்துறையில் இருந்துகொண்டு இவர் இந்த மாதிரி பேசுகிறார் பாதுகாப்பான வீடு மற்றும் எப்போதும் அடியாட்களுடனேயே சுற்றும் நீங்கள் இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது சரியில்லை வசதி இருக்கிறது சரி நீங்கள் சென்றுவிடுகிறீர்கள் இங்கு அடுத்த வேளை சோற்றுக்கே சிரமப்படும் ஏழைகளுக்கும் தலித்களுக்கும் சிறுபான்மையினருக்கும் என்ன தீர்வு அவர்கள் எங்கே செல்வார்கள் பணக்காரர்களை தான் மற்ற நாடுகளும் கூவி கூவி அழைக்கும் இவர் நினைத்தால் ஊடகம் மூலம் தன கருத்தை பரப்பலாம் மனைவி சொன்னார் என்பதை விட சொன்னதற்காக அவரை கண்டித்தேன் என்று கூறியிருந்தால் நன்றாக இருக்கும் மத சார்பின்மை வேறு மத சகிப்பு தன்மை என்பது வேறு நம் மதத்தில் இதற்க்கு இடமில்லை ஆனால் மற்ற மதத்தினர் அதை செய்யும் போது அதை சகித்து கொள்வது தான் மத சகிப்புத்தன்மை இவ்வளவு காலமாக நம் பாரதம் இப்படி தான் இருந்தது ஆனால் இப்போது நிலைமை மிக மோசமாக உள்ளது வருந்ததக்கது
      480

      • கண்ணன்  from India
       சரி கிளம்புங்க ஆமீர் .உங்களையும் கிரணையும் வரவேற்க ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் சோமாலியா, மாலி ,நைஜீரியா, சிரியா, யேமன்,சவூதி போன்ற பல சகிப்புத் தன்மையும் அமைதியும் நிறைந்த நாடுகள் காத்திருக்கின்றனவே
       10960

       • K
        Kupendran  from Bahrain
        சகிப்பின்மையை கண்டித்து குரல் கொடுத்தவர் ஒரு திரைப்பட துறையை சார்ந்தவர், என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்று எடுத்துக் கொண்டு பாயும் கருத்துக்களை கவனியுங்கள், இதைதான் நாம் சகிப்பின்மை என்கிறோம்.
        9460

        • K
         kumar  from India
         பார்க்க வேண்டியது அவர் இந்துவா-முஸ்லீமா என்பது அல்ல...செலெக்டிவ் அம்னீசியா போல இப்போது ஏன் குரல் கொடுக்கிறார் என்று தான்... அட இந்தியா மீது எத்தனை முறை தீவிரவாதத்தை ஏவி உள்ளது பாகிஸ்தான்... எத்தனை அப்பாவி இந்தியர்கள் இறந்து போயிருக்கிறார்கள்... ஒரு முறையாவது இந்த நல்லவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதுண்டா? அப்போது மட்டும் "தீவிரவாதத்துக்கு எதிராக குரல்" என்று முடித்துக் கொள்வார்கள்... அதனை ஏவியர்கள் பற்றி பேசவே மாட்டார்கள்...
        -the/hin
       • du

       0 comments: