Wednesday, November 11, 2015

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த 9 வயது ஒடிஸா மாநிலசிறுவன்!( ப்ரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான் ரூபன்)

பார்க்க குழந்தை போல் இருக்கும் இந்த ஒன்பது வயது சிறுவன் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றார் என்றால் நம்ப முடிகிறதா? இவர் வயது குழந்தைகள் பள்ளி செல்லும் போது இவர் செய்யும் காரியங்கள் உங்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும். 
 

இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வரும் சிறு வயது தலைமை நிர்வாக அதிகாரிதான் ரூபன் பால். கணினி ப்ரோகிராமிங் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு கேமிங் நிறுவனமான ப்ரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான் ரூபன்.

இதோடு இல்லாமல் சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், ஆப் டெவலப்பர் என பல்வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சிறப்புரை வழங்கி இந்த ஆண்டு கிரவுண்டு சீரோ சம்மிட் 2105 குழுவின் சிறப்பு தூதராக ரூபன் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

உலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கருதப்படுவது கிரவுண்டு சீரோ சம்மிட்  ஆகும். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மற்றும் சிறிய உறுப்பினர் ரூபன் பால் ஆவார்.

உங்கள் குறிக்காேள் என்ன என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தான் ஒரு சிறந்த சைபர்ஸ்பை ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் ரூபன் பால்.


thanx - vikatan
-மு.ஜெயராஜ் (மாணவ பத்திரிகையாளர்)

0 comments: