Tuesday, November 17, 2015

கமல் அங்கிள் - த்ரிஷா ஆண்ட்டி....

தூங்காவனம் படத்தில் கமலுக்கு மகனாக நடித்தவர் அமன் அப்துல்லா.  " படிச்சுருக்கீங்க அப்பறம் ஏன் பொறுக்கி மாதிரி இருக்கீங்க" இப்படி ஜெகனை கேள்விகள் கேட்டு குடைந்தெடுக்கும் கேரக்டரில் அமன் அப்துல்லாவின் அப்பாவி முகம் எல்லாருக்கும் அப்படியே பதிந்து விடும். மழையால் ஹேய் ஜாலி லீவு என வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த அமனிடம் சில கேள்விகள், 

என்ன படிக்கிறீங்க.. உங்களப் பத்திச் சொல்லுங்களேன். 

நான் 8ஆம் வகுப்பு படிக்கிறேன். பிறந்தது கேரளா. எனக்கு 1 வயசு இருக்கும் போது சென்னை வந்துட்டோம்னு அம்மா சொல்லுவாங்க. அம்மா ஹோம் மேக்கர், அப்பா பிஸினஸ் மேன். எனக்கு 3 பிரதர்ஸ். பெரிய அண்ணா இன்ஜினியர், சின்ன அண்ணா +2, நான் எய்த், தம்பி செகண்ட் க்ளாஸ். எனக்கு ஃபுட் பால்னா உயிரு. டிஸ்ட்ரிக்ட் லெவல்ல சேம்பியன். என்னோட அண்ணாக்களும் அப்படிதான். ஸ்போர்ட்ஸ் வெறியர்கள்.


தூங்காவனம் சான்ஸ் எப்படி கிடைச்சது?

நான் ஸ்கூல்ல ட்ராமால அதிகமா நடிப்பேன். அப்பதான் ஃபேஸ்புக்ல ஆடிஷன் பத்தி பார்த்தேன். போனேன். ராஜேஷ் அங்கிள் தான் ஒரு சீன் நடின்னு சொன்னாரு. ஸ்கூல்ல நடிச்ச ஒரு நாடகத்தோட சீன நடிச்சேன். அப்படியே தமிழ்ல நடின்னு சொன்னாரு. கொஞ்சம் நெர்வஸ் ஆகிட்டேன். அப்பறம் நடிச்சேன் பார்த்தா நான் செலக்ட். அம்மாவுக்கும் எனக்கும் ஒண்ணுமே புரியல. அம்மா யார் கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. டிரெய்லர், டீஸர் பார்த்துதான் ஃப்ரண்ட்ஸ் கூப்டு டேய் சொல்லவே இல்லையேன்னு கேட்டாங்க. அப்பவும் கேரக்டர் பத்தி சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால சைலண்டா இருந்தேன்.

அமனுக்கு பிடிச்ச விஷயம் என்ன.

ஸ்போர்ட்ஸ், ட்ராமா, வீடியோ கேம்ஸ். உண்மைய சொன்னா படத்துல வர்ற சோயா மில்க் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.. கஷட்ப்பட்டு குடிச்சேன். எனக்கு லீவுன்னா வீட்ல அண்ணா தம்பிங்களோட சேர்ந்து ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்கறது பிடிக்கும்.

அமன் படிப்புல எப்படி. ஸ்கூல் டைமிங் எப்படி மேனேஜ் பண்ணீங்க. 

நான் பர்ஸ்ட் கிரேடு தெரியுமா? ஷூட்டிங் அப்போ ஒரு 10 நாள் லீவு போட வேண்டியதாயிடுச்சு. ஆனாலும் லீவுலயே ஷூட்டிங் நடந்ததுனால பிரச்னை இல்ல.மொத்தமா 20 நாள் ஷூட் இருந்துச்சு. 

ஃப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ்லாம் என்ன சொல்றாங்க...அடுத்து என்ன பிளான்

முதல்ல அம்மா அப்பா, என்னோட ஆசைப்படி இன்ஜினியர் ஆகணும். அதுக்கு நல்லா படிக்கணும். அப்பறம் கேப்ல நடிக்கணும். இதுதான் பிளான். ஃப்ரண்ட்ஸ், ரிலேடிவ்ஸ் கிட்டல்லாம் செம பாராட்டு. எல்லாரும் பெருமையா இருக்குன்னு சொன்னாங்க. இப்போ நான் தான் ஸ்கூல் ஹீரோ தெரியுமா. கமல் அங்கிள் படமாச்சே.


கமல் அங்கிள் என்ன சொன்னாரு...
நிறைய பேசினாரு.  முதல்நாள்  கொஞ்சம் நெர்வஸ் ஆனேன். அவர் தான் கூப்டு உனக்கு என்ன தோணுதோ அத செய், இத இப்படி பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சேன்னா அதயே பண்ணு. யாரும் உன்ன எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு சொல்லி ரொம்ப நேரம் பேசினாரு. என்னப் பத்தி அப்பா, அம்மா பத்திலாம் கேட்டாரு. கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பயம், நெரவஸ் எல்லாம் போயி நான் சகஜமா ஆயிட்டேன். உங்களுக்குத் தெரியுமா? எனக்கு மட்டும் எடிட்டிங், டப்பிங், இப்படி எல்லா டெக்னிக்கல் ரூம்லயும் அலோவ்ட். நிறைய சினிமா பத்தி கத்துக்கிட்டேன். ஃப்ரீயா இருந்தா இங்க வான்னு அங்க எடிட் பண்ற அண்ணாலாம் சொன்னாங்க. அடுத்து நான் எடிட்டிங், சினிமா டெக்னிக்கல்லாம் படிப்போட சேர்ந்து கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு. அப்பறம் எல்லாருமே ஷூட்டிங் ஸ்பாட்ல செம ஃப்ரண்ட்லியா பேசினாங்க. த்ரிஷா ஆண்ட்டி என்னப் பாராட்டினாங்க. இப்போ நினைச்சாலும் எனக்கு ட்ரீம் மாதிரி இருக்கு.

குவஸ்டீன் அவ்ளோதானா, நான் போலாமா... எனக்கு லீவு தெரியுமா?.. மழலை மாறாமல் பேசி முடித்தார் அமன்அப்துல்லாவுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம். .. 

- ஷாலினி நியூட்டன் -

thanks vikatan

0 comments: