Thursday, November 19, 2015

புயலுக்கு மோடி - மழைக்கு சிம்பு

சிவாஜி = மலர் கொடுத்தேன்.கை குலுங்க வளையல் இட்டேன்ட்விட்டர் அடிக்ட் = எந்த மலர்? கருணை மலரா? அனிச்சமலரா?இங்கன 18 மலர் இருக்கு


============

2 பொண்ணை ஒரு பாட்டு பாடச்சொல்லுங்க.மாப்ளை.பாடிடுவா.நீங்க தாங்குவீங்களா? பொண்ணு ஸ்ருதி ஹாசன் மாதிரின்னேனே அது அழகுல இல்ல.குரல்ல.


=============

3 என் லவ்வுரவரும் பிரபல டுட்டர்ன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவாய்ங்களோ2 பேரையும் ஓட்டுவாங்க


============

4 என்னது? நந்து டாக்சும் கடைசில ஒரு பிரபல ட்வீட்டரை லவ்வுதா?ஆரம்பத்துல இருந்தே லவ்வுது.இப்பதான் சொல்லுது.


============

5 நியூட்டனின் 3 ம் விதி பத்தி ஏதாவது தெரியுமா?


டீச்சர்.மோகன் - பூர்ணிமா நடிச்ச விதி பத்தி வேணா சொல்றேன்்

=============

6 டாக்டர்.மழை வந்தா ரொம்பக்குளிருது.


குளிருதுன்னா ஜக்காடு பெட்சீட் போர்த்திப்படும்மா.இதுக்கெல்லாமா ஹாஸ்பிடல் வருவாங்க?


============

7 டாக்டர்.அருவி ல அடிக்கடி குளிச்சா கூந்தல் முடி கொட்டுமா?


கூந்தல் முடி எல்லாம் கொட்டாது.சவுரி முடின்னா கழண்டு விழுந்துடும்


================

8 உங்க கண் பார்வையை செக் பண்ணனும்.போர்டு வாசகத்தைப்படிங்க.


அது தெரில டாக்டர்.2 கிமீ தூரத்துல நடந்து வரும் பொண்ணோட டிசர்ட் வாசகம் சொல்லவா?்


================

9 சார்.புயலோ ,மழையோ தமிழ் நாட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?


புயலுக்கு மோடின்னும் ,மழைக்கு சிம்பு ன்னும் பேர் வெச்சிடனும்


==============

10 சிம்ம ராசிக்காரங்களுக்கு இரு தார யோகம் உண்டு,


ஓஹோ! அப்போ டூயல் சிம் ம ராசிக்காரங்கன்னு சொல்லுங்க


==============

11 டாக்டர்! சீதா பழம் சாப்ட்டா என் கண்ணுக்குக்குளிர்ச்சி ஏற்படுமா?


லூசாய்யா நீ?சீதா ,பழம் சாப்ட்டா சீதாவோட கண்ணுக்குதானே குளிர்ச்சி?


===========

12 சார்.பேங்க் ல வாங்குன லோனை எப்போ கட்டுவீங்க?


மழை நின்னதும் கட்டிடறேங்க


===========

13 சார்.ஆபீஸ்ல டெய்லி ஏதாவது ஒரு பாடம் கத்துக்கறோம். அப்போ அதுவும் ஒரு ஸ்கூல் மாதிரிதானே?


யா.ஒய் டவுட்?
அப்போ மழை வந்தா ஏன் லீவ் விடலை?


================

14 அமைச்சரே! நம் ஆட்சி ராசியான ஆட்சி.அடிக்கடி மழை பெய்யுது.


ஆம் மன்னா! ஆனால் சரியான திட்டமிடல் ,முன்ஏற்பாடு செய்யாததால் எல்லாம் வீண் ஆகுது


===============

15 அமைச்சரே! மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கா?


தெரியலை மன்னா!இப்போதைக்கு நம் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.அதானே முக்கியம்?


=============

16 அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க?


மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரிண்ட் பண்றோம்


=============

17 ஹலோ! பயங்கர மழைல சென்னை ஏர்போர்ட் மேற்கூரைக்கு சேதம் ஆச்சா?னு பார்க்கச்சொன்னோமே?என்ன ஆச்சு?


ஏர்போர்ட்டைத்தான் தேடிட்டிருக்கோம் சார்


=================

18 டியர்.உங்களுக்கு நான் மிஸ்டு கால் கொடுத்தா ரீ சார்ஜ் பண்ணி விடுங்கன்னு அர்த்தம்.


அப்டி ரீசார்ஜ் ஆகலை்னா நான் உன் காலை கவனிக்கலைனு அர்த்தம்


===========

19 டாக்டர்.மழையால என் கணவர் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார்.


அய்யோ பாவம்.மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்லயே அவருக்கு எத்தனை சோதனை?மனைவி,மழை ன்னு்


==============

20 தலைவரே! ஏன் சோகமா இருக்கீங்க?


தீபாவளிக்கு தண்ணி (டாஸ்மாக்)மூலம் சம்பாதிச்ச காசு (381 கோடி) மழைத்தண்ணி மூலமா போய்டுச்சு( நிவாரணம்1000 கோடி)


===========

0 comments: