Monday, November 23, 2015

அதிமுகவில் யாரும் குடிப்பதில்லை

உங்களுக்கு நான் துணை நிற்கிறேன்.யாரும் கவலைப்பட வேண்டாம் -ஜெ # மேடம்.நீங்க நிற்கறீங்க.நாங்க மிதந்துட்டும் தத்தளிச்ட்டும் இருக்கோம்


===========2 அதிமுக அரசுக்கு 'தண்ணிலதான்' கண்டம்: பாமக பாலு கணிப்பு # எதிர்க்கட்சிகளுக்கு தண்ணி காட்டப்போகுது ஆளுங்கட்சி=============3 சர்வதேச திரைப்பட விழாவில் 6 விருதுகளை அள்ளியது கமல்ஹாசனின் உத்தமவில்லன் # கம்ர்சியல் கதையிலும் கலை நுணுக்கம் கலக்கும் கலை வித்தகன்==============4 மழை வெள்ளத்தில் சிக்கியவர்களைக்காப்பாற்றக்களம் இறங்கிய விஜய் ரசிகர்கள் # பாராட்டு + வாழ்த்து.காப்பாத்தும்போது நீ அஜித் ரசிகனா?னு கேட்றாதீங்க===========5 தங்கமகன் படத்தின் முதல்நாள்


வசூல் வேதாளம் படத்தின் முதல்

நாள் வசூலை தாண்டும் - தனுஷ் ்#17 கோடியை கீழே போட்டு அதை தனுஷ் தாண்டினாத்தான் உண்டு
==============

6 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுபடி் மழை பெய்துள்ளது-சேலம்கலெக்டர் # நீங்க சேலம் ஜில்லா கலெக்டரா?குல்லா கலெக்டரா?

=================

7 சோஷியல் மீடியாவில் நடிகர்களைத் திட்டாதீர்கள். - தனுஷ் # திட்டும்படி வைக்காதீங்க.நடிகையை ஒரு பயலும் திட்டமாட்டானே? தமிழேண்டா

==============

8 முதல் காதலை மறக்க முடியாது" நடிகை நயன்தாரா பேட்டி # ஓஹோ! அப்போ 2 வது ,3 வது .4 வது காதலை ஈசியா மறந்துடலாமா?மேடம்

=============

9 மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அம்மா செல்போன் - ஜெ அறிவிப்பு # இரட்டை இலைக்கு மேட்சா டூயல் சிம்மா? "சிம்"ம ராசி மேடம்?

===============

10 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் # மறுபடி முதல்ல இருந்தா?்

=============

11 விஜய் 59 பட டைட்டில் "தாறுமாறு " என வைக்க பரிசீலனை - செய்தி # எப்போ ரிலீஸ் ஆனாலும் ஏதாவது தகறாரு.பேசாம டைட்டிலே தகராறு ன்னு வெச்ட்டா?

============

12 தமிழகத்திற்கு தற்போது தண்ணீர்

திறந்து விடமுடியாது - கர்நாடகா # தனக்கே தெரியாம இப்டி சிலர் நல்லது செஞ்சுடுவாங்க


==============

13 வரும் 21-ம் தேதி முதல் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப்பயணம் செல்கிறார்

மோடி # மாற்றம் முன்னேற்றம்.டெய்லி ஒரு நாடு ,வெளிநாடு
================

14 ஜேம்ஸ்பாண்ட் படத்தில் 'ரொமாண்டிக் சீன், லிப் கிஸ் சீன் கட்: இந்திய சென்சார் போர்டு அதிரடி # நாங்க வாட்சப் /யூ ட்யூப் ல பாக்காத சீனா?

================

15 "ஜேம்ஸ் பாண்ட், கொஞ்சம் கம்மியா முத்தம் கொடுங்க.." இப்படிக்கு இந்திய சென்சார் போர்டு # அவரு ஹாலிவுட்டின் கமல் ஹாசன் ஆச்சே?

===============

16 ஒரே நாளில் 10,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்..! # 100 விஜய் படம் புக் பண்ற மாதிரி பில்டப்

==============

17 மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி அதிக மழை பெய்துள்ளது: சேலம் கலெக்டர் # இவரு ஐ ஏ எஸ்சா? கீழ்ப்பாக்கம் லூசா?திருத்தமுடியாத கேசா?

==============

18 மாணவனோடு 80 முறை உல்லாசமாக இருந்து கர்ப்பமான ஆசிரியைக்கு 2 ஆண்டு ஜெயில் # அடடா.இன்னும் 20 டைம் விட்டிருந்தா 100 வது நாள் கொண்டாடி இருப்பாக

=================

19 தமிழகத்தில் கனமழையால் 50%மின்உற்பத்தி பாதிப்பு : அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல் # ஷாக் நியூஸ்

===================

20 அதிமுகவில் யாரும் குடிப்பதில்லை - நாஞ்சில் சம்பத் # இரட்டை இலை கட்சி சின்னம் என்பதால் 2,ரவுண்ட்டுக்கு மேல் குடிப்பதில்லை?

0 comments: