Wednesday, November 18, 2015

அனிச்ச மலர் ஆபீஸ் போகுது

ட்விட்டரில் /FB யில் காதல் தோல்வியால் அதிகமாக வருந்து(புலம்பு)வது யார்??"இன்னொரு இ வா கிடைக்கும்னு வலை வீசும் எல்லா ஆண்களும் தான்


==============

2 டாக்டர்.ஆபரேசன் பீஸ் 9,99,999 ரூபாயா?இந்தாங்க 10 லட்சம்.இந்தாங்க மீதி ஒரு ரூபா.பேஷண்ட் நெத்தில மத்தில வெச்சிடுங்க


===============

3 மழை மோகினியே! பூமி எங்கும் உன் பாய் தான்.நீங்க வருண பகவானா?,வர்ணனை பகவானா?


==============

4 டியர்.வழக்கமா வாரா வாரம் சனிக்கிழமை பீச்ல தானே மீட் டுவோம்?ப்புதுசா தியேட்டருக்கு வந்துட்டீங்க?நீ தானே வீக் என்ட் வித் வேதாளம்னே?


==================

5 டைரக்டர் சார்.ஆஷா சரத் தையும் ,த்ரிஷா வையும் போன் போட்டு வரச்சொல்லுங்க.எதுக்கு?
லிப் கிஸ் சீன் விட் டுப்போச்சு.எடுத்து இணைச்சுடுவோம்


===================

6 இன்ட்டர்வ்யூ்

சார்.நான் பார்க்கப்போறது கம்ப்யூட்டர் வேலை.நீச்சல் தெரியுமா?ன்னு ஏன் கேட்கறீங்க?
ரோடெல்லாம் வெள்ளம். எப்டி ஆபீஸ் வருவீங்க?


===============

7 சார்.உங்க படத்துல பைட் சீன்ல ரிஸ்க் எடுக்க மாட்டேங்கறீங்களே ,ஏன்?என்னை வெச்சு படம் எடுக்கறதே புரொடியூசருக்கு பெரிய ரிஸ்க் தான்


================

8 மவுண்ட் பேட்டன் பிரபு = இந்தியாவில் எல்லோரும் உங்களை நேரு மாமா்னு செல்லமா கூப்பிடுவாங்களாமே?

நேரு = உங்க சம்சாரம் கூட அப்டித்தான் கூப்டும்

==============

9 காந்தி = என் அஹிம்சைக்கு பயந்து தானே இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தீங்க?மவுன்ட்பேட்டன் பிரபு = நேரு கிட்டே இருந்து என் ஒயிபை காப்பாத்த


==============

10 ஸார்.படத்துல உங்க ரீ ஆக்சன் ரொம்ப ஓவரா இருக்காமே?ஆக்டிங்கே வராதவங்க அதைப்பத்தி பேசலாமா?


==================


11 வரலாறு மிஸ் வனஜா = சங்க காலத்தில் இருந்தே தமிழர்கள் புத்திசாலியா?
லொள்ளன் = சங்கவி காலத்துல பிறந்தவன்ட்ட சங்க காலம் பற்றிக்கேட்டா?

==============

12 தீபாவளிப்படங்கள்.2 ம் எப்டி?கமல் படத்துக்குப்போனா கதை புரியாது.அஜித் படத்துக்குப்போனா ஆரவாரக்கூச்சல்ல வசனம் புரியாது


===========

13 இந்த வருசம் 10% நட்டம் ஆனதால யாருக்கும் போனஸ் கிடையாது.


ஓஹோ.அப்போ போன வருசம் 40% லாபம் வந்தப்போ எத்தனை % கொடுத்தீங்க?


============

14 டிஜிட்டல் போட்டோகிராபி நீங்க ஏன் பண்றதில்லை?


அது டல்லா இருக்கும்னு பயம் தாம்.டிஜிட்"டல்"


=============

15 கடவுளே! வீட்ல வெள்ளம் புகுந்துடுச்சு.காப்பாத்து.


பக்தா! ஏரியில் வாய்க்கால் வழியில் ஆக்ரமித்து வீடு கட்டி குடி வந்தது யார் குற்றம்?


===============

16 பா ரா= மழையில் நடந்துசென்று இரு நாள்களுக்குக் காய்கறி வாங்கி வந்திருக்கிறேன்.


நாங்கெல்லாம் தரை ல தான் நடப்போம்


===============

17 இன்று 2 வெட்டித்தகவல்


1 அனிச்ச மலர் ஆபீஸ் போகுது
2 உயரம் 158 செமீ # உருப்படுவோம் ,ஜிகே வை வளர்த்துவோம்


=============

18 லைப்ல ஜெயிச்சா பொண்ணுங்க தேடி வரும்.


ஓஹோ.அப்போ தோத்துப்போனவங்களுக்கு ஆறுதல் சொல்லும் பொண்ணுங்க கிடைக்கவே மாட்டாங்களா?சேப்டி சைடு பொண்ணு


===========

19 எனக்கு கவர்ச்சி காட்றதுல இன்ட்ரஸ்ட் இல்லை.
மேடம்.சம்பளம் தான் தருவாங்க.அதை பேங்க்ல டெபாசிட் பண்ணா 12% இண்ட்ரஸ்ட் கிடைக்கும்்

===========

20 அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?


யோவ் மானம் கெட்ட மன்னா! அந்தப்புரத்தை விட்டு வெளில வந்துபார்!ஊரே வெள்ளத்தில் மிதக்குது

0 comments: