Skip to content

Wednesday, November 25, 2015

சூர்யாவின் '24' பட சுவாரசியங்கள்-வில்லன் உட்பட 3 கதாபாத்திரங்கள்

மூன்று கதாபாத்திரங்களில் சூர்யா, அதில் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரம் என '24' படத்தில் பல்வேறு சுவாரசியங்கள் அடங்கி இருக்கின்றன.
விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அண்ணன் - தம்பி - அண்ணனுக்கு பிறக்கும் மகன் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. அதில் கொலையாளி மற்றும் விஞ்ஞானி என இரண்டு பாத்திரங்கள் அடங்கும். வில்லனாக நடித்திருக்கும் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் ஆத்ரேயா. சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா இதுவரை நடித்ததில்லை என்கிறது படக்குழு.
விஞ்ஞானி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவர் கொலை செய்யப்படவே, அவரை பழிவாங்க டைம் மிஷின் உதவியுடன் சென்று பழிவாங்குவதே கதை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


-தஹிந்து