Tuesday, February 21, 2012

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 4

ஈகோ தான் ஒரு மனிதனின் வாழ்வில் வெற்றிக்கான முக்கியமான தடைக்கல்லாக விளங்குகிறது.. தனிமையில் இருக்கும்போதும், பெரியவர்களுடன் உரையாடும்போதும் அப்படி ஈகோ இல்லாமல் இயங்க வேண்டும் என்று தான் பெரும்பாலான மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நடை முறை வாழ்வில் நீ பெரியவனா, நான் பெரியவனா?யார் விட்டுக்கொடுப்பது? போன்ற கேள்விகள் பூதாகரமாக நம் வாழ்வில், குடும்பத்தில், அலுவலகத்தில் எனஎல்லா இடங்களிலும் வந்து நிற்கிறது..

குமுதம் ஆஃபீசுக்கு அவங்க அனுப்பின லெட்டரோட  கிளம்பினேன், மேட்டர் கேள்விப்பட்டு இரா அ தென்றல் நிலவன் , திருச்செங்கோடு, தேவி கணேஷ் குமார பாளையம் இருவரும் நாங்களும் உடன் வருவோம்னு அடமா நின்னாங்க.. இதுல தென்றல் நிலவன் பற்றி சொல்லிடறேன்.. இவர் தான் என்னை சிறு பத்திரிக்கைகள் எனப்படும் இலக்கிய இதழ்களில் எழுத வைத்தவர்.. ராஜக்கவுண்டம்பாளையத்தில் பவர் லூம் தறி போட்டிருக்கார்.. இப்போ தொழில் முறை ஃபோட்டோ கிராஃபர்.. ஹைக்கூ கவிஞர் மு முருகேஷ், மற்றும் அ வெண்ணிலா இருவருக்கும் நெருங்கிய நண்பர் ( இவங்க லவ் மேரேஜ்ல இவரது பங்கும் உண்டு.. )

தேவி கணேஷ் குமுதம் வார இதழில் ஒரு பக்க கதைகள் எழுதுவதில் மன்னனாக 2 வருடங்கள் கொடி நாட்டியவர்.. அதிக பட்சமாக ஒரே வார இதழில் 3 கதைகள் வர வைத்தவர் ( இந்த சாதனையை சேலம் செல்வராஜா போன வருடம் ஜூலையில் முறியடித்தார் - 4 கதைகள்).. அவர்கள் இருவரிடமும் நட்பு ரீதியில் குமுதம் அழைப்பை பகிர்ந்த போது அவர்களும் ஒரு ஆவலில் வர்றேன் என்றதால் தவிர்க்க முடியவில்லை.. 

அவங்க 2 பேரும் பஸ்ஸில் சென்னை வந்தாங்க.. நான் ரயிலில் சென்னை போனேன்.. எனக்கு பஸ் பயணம் ஒத்துக்காதது என்பதும் அதுதான் சார்ஜ் கம்மி என்பதும் காரணங்கள்.. 

கிட்டத்தட்ட 1992 டூ 1998 இந்த 6 வருடங்களில்  2000 ஜோக்ஸ் பிரசுரம் கண்டு விட்டதால் ( சராசரி விகிதம் டெயிலி 1) குமுதம் ஆஃபீசில் எல்லாருக்கும் என்னைத்தெரியும், எல்லாரும் ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் தெனாவெட்டாகவே ஆஃபீஸ் போனேன்.. 

குமுதம் ஆஃபீஸ் செக்யூரிட்டியிடம் விபரம் சொன்னேன்.. அவங்க அனுப்பின லெட்டர் காட்டின பிறகு அனுப்பினார்.. உள்ளே போனதும் ஆசிரியர் மற்றும் எடிட்டர் குழு எங்களை ஒரு அறையில் அமர வைத்தார்கள்..

எல்லாரும் வந்திருந்தாங்க.. இங்கே தான் நான் சொன்ன ஈகோ எல்லார் மனதிலும் எழுந்தது.. யார் முதல்ல பேசறது? எல்லாரும் தலைல ஒரு மாய மகுடத்தை அணிந்து அமர்ந்திருந்தாங்க.. எல்லார் மனசுலயும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கனும், பேசனும்னு ஆசை.. ஆனா ஈகோ தடுத்தது..

நான் தான் முதல்ல  பேச்சை ஆரம்பிச்சேன்  .. ஒவ்வொருவரா அறிமுகம் ஆகிட்டோம்.. பரஸ்பரம் ஃபோன் நெம்பர் வாங்கிக்கிட்டோம்

1. வி சாரதி டேச்சு - திருவல்லிக்கேணி - பத்திரிக்கை உலகில் ஜோக்ஸ் எழுதுவதில் கரடி குளம் ஜெயா பாரதிப்பிரியாதான் நெம்பர் ஒன் இடத்தில் இருந்தார்.. அவரை இவர்  1997-ல் ஓவர் டேக் செய்து இன்று வரை எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளார்.. தமிழ் நாட்டின் நெம்பர் ஒன் ஜோக் ரைட்டர்..  துறைமுகத்தில் ஆடிட்டராக பணி புரிகிறார்.. ஆனந்த விகடனில் ஒரே இதழில் அதிக பட்ச ஜோக்ஸ் ஆக 18 ஜோக்ஸ் வர வைத்திருக்கிறார்.. இதுவரை யாரும் முறியடிக்காத சாதனை.. (  ஹாய் மதன், சிம்பு எழுதி வந்தது கணக்கில் வராது, ஏன்னா நான் சொல்றது வாசகர் படைப்பில்) இவர் தினம் தினம் ஜோக்ஸ் எழுதி சுடச்சுட ( சுட்ட அல்ல) பத்திரிக்கை அலுவலகத்துக்கே போய் நேரில் கொடுப்பாராம்.. 60 வயசு இருக்கும்


2. அம்பை தேவா -தூத்துக்குடி  - விக்ரமசிங்கபுரம்னா நிறைய பேருக்கு தெரியாது.. ராவணன் படத்துல ஐஸ்வர்யா ராய் குளிச்சாங்களே  அந்த ஊர்.. இவர் நடிகர் சிவகுமாரின் குடும்ப நண்பர்.. பல சினிமா நடிக நடிகைகளின் பேட்டிகள், பல படைப்புகள் எழுதியவர்.. திருடன் கபாலி ஜோக் ஸ்பெஷலிஸ்ட்..  எழுத்துலகில் இன்றும் இயங்கி வரும் சீனியர்.. என் நெருங்கிய  நண்பர்.. தினமும் இவருடன் நான் அரை மணி நேரம் கடலை போடுவதை பார்த்து என் மனைவியே இவர் ஒரு பெண்ணோ என செக் செய்ததுண்டு.. அந்தளவு இருவரும் நெருக்கம்.. ( இந்த பழக்கம் எல்லாம் குமுதம் சந்திப்புக்கு பின் ஏற்பட்டது) 54 வயசு இருக்கும்


3.  எஸ் எஸ் பூங்கதிர் , திருவெண்ணெய் நல்லூர் - கே பாக்யராஜ் இன் அபிமானி, விசிறி.. பாக்யா இதழில் எதிரொலி என்ற பகுதியில் வாரா வாரம் 3 பக்கங்கள்  சன்மானம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் எழுதி வருகிறார்.. ( பாக்யாவில் எந்த படைப்புக்கும் சன்மானம் கிடையாது) ஃபோட்டூன் என்ற வலைப்பூ இயக்கி வருகிறார்


4. கொங்கணாபுரம் வே செந்தில்  - சேலம் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் ஆசிரியர்.. எழுதி சம்பாதித்தவர்கள் யாரும் இல்லை என்ற வார்த்தையை பொய் ஆக்கியவர்.. ஆனந்த விகடனில் வரும் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டே 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தவர்.. எந்த புக்ல சன்மானம் தர்றாங்களோ அந்த புக்குக்கு மட்டும் தான் எழுதுவேன் என்ற உயரிய கொள்கை படைத்தவர்.. இப்போ ஷேர் மார்க்கெட்ல அண்ணன் செம டப் பார்த்துட்டதால் எழுத்துப்பணியில் கொஞ்சம் சுணக்கம் ( பொதுவா லட்சுமி வீட்ல குடி ஏறிட்டா சரஸ்வதி அந்த வீட்டை காலி செஞ்சுடுவா )இப்போ அவர் எழுதுவது இல்லை ஜூனியர் விகடனில் டயலாக்ஸ் ஏகப்பட்டது எழுதி இருக்கார்.. வயசு 45

5. உ. ராஜாஜி - ரொம்ப  ரொம்ப சீனியர். லைப்ரரியில் பணி ஆற்றியவர்.. இப்போ இவரை பற்றி தகவல்  ஏதும் இல்லை.. 70 வயசுக்கு மேல் இருக்கும்

6. இடைப்பாடி ஜெ மாணிக்க வாசகம்  - ரொம்ப சின்ன வயசு..  சேலம் மாவட்டம். இவர் சீஸன் ஜோக்ஸ் அதிகம் எழுதுவார், அதாவது தீபாவளி, பொங்கல் , காதலர் தினம் இப்படி டைமிங்க்கா எழுதுவார்.. 34 வயசு இருக்கும்

7. சீர்காழி வி ரேவதி - இவர் தஞ்சாவூர்க்காரர்.. ஆண் தான், மனைவி பெயரில்  எழுதுகிறார்.. கொஞ்சம் ரிசர்வ் டைப்.. 45 வயசு இருக்கும்

8. பா ஜெயக்குமார் , வந்த வாசி - ஒரு காலத்துல குமுதத்துல கலக்கு கலக்குன்னு கலக்குனவர்.. இப்போ கொஞ்சம் ஸ்பீடு குறைஞ்சுடுச்சு வயசு 30 இருக்கும்

9. பாஸ்கி  - இவர் ஜெயா டிவில அரிகிரி அசெம்ப்ளி நிக்ழச்சி எல்லாம் பண்ணுனார் கடி ஜோக்ஸ் விகடன்ல  நிறைய எழுதுனார். இப்போ சினிமா, டி வில புகுந்ததால் ஜோக்ஸ் எழுதரது இல்ல.. 

 ஹாய் மதன் தான் எங்க எல்லாரையும் வரவேற்றுப்பேசுனார்.. வித்தியாசமான ஜோக்ஸ் எழுதுங்க என ஒரு லெக்சர் அடிச்சு எங்களை ஊக்குவிச்சார்.. ரூ 1850 மதிப்புள்ள ரிஸ்ட் வாட்ச் எல்லாருக்கும் பரிசாக கொடுத்தாங்க.. அப்புறம் ஒரு வேளை ஓ சி சாப்பாடு.. செம விருந்து.. குமுதம் ஆஃபீசில் சாப்பிட்டதை மறக்க முடியாது ( நாங்க எல்லாம் எங்கே ஓ சி ல சாப்பிட்டாலும் அதை மறக்கறதே இல்லை)

 பிரியா கல்யாணராமன் அங்கே பழக்கம் ஆனார்.. ரொம்ப நல்ல மனுஷன்.. எங்க எல்லாருக்கும் தனி போஸ்ட் பாக்ஸ் நெம்பர் குடுத்து சில குறிபிட்ட டாபிக்ஸ் குடுத்து எழுத சொன்னாங்க.. 

அப்புறம் போக வர டி ஏ (T. A) D.A எல்லாம் குடுத்தாங்க.. நல்ல மனுஷங்கப்பா.. 

இப்படி பாசிட்டிவ்வா போய்ட்டு இருந்த பத்திரிக்கை பயணத்துல ஒரு சறுக்கலா, எனக்கு ஒரு கெட்ட பேர் ஆகற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.. அது.. 

தொடரும் 

டிஸ்கி -1  இந்த பத்திரிக்கை உலக அனுபவங்கள் எழுத காரணமா இருந்த மாத்தி யோசி ஜீவன், நிரூபன் இருவருக்கும் நன்றி.. அவங்க தான் எழுத சொல்லி தூண்டுனாங்க.. மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கும் நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html

28 comments:

ராஜி said...

இருங்க படிச்சுட்டு வரேன்

விக்கியுலகம் said...

திரு.மெமரி பில்ஸ் பெருந்தகயே வணக்கம்..எப்படியும் நான் எந்த கமண்ட் போட்டாலும் நீங்க் என்னய திட்ட போறீங்க..அதனால வருகைப்பதிவோட கிளம்பரேன்!

மனசாட்சி said...

வணக்கம்

தொடர்கிறேன்

ராஜி said...

படா படா ஆளுங்களைலாம் சந்திச்சு இருக்கீங்க.

வினையூக்கி said...

தங்களின் இந்த பத்திரிக்கை உலக அனுபவத்தொடர் அருமையாக உள்ளது. நன்றிகளும் பாராட்டுகளும்..

ராஜ் said...

சுவாரிசியமான தொடர்.... நன்றாக உள்ளது..வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

தொடர்கிறேன்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அனுபவங்கள்ணே...... சுவராசியமா போகுது....!

எனக்கு பிடித்தவை said...

படிக்க படிக்க சுவராசியமா இருக்கு..

காங்கேயம் P.நந்தகுமார் said...

உங்களோட திறமை மெய்சிலிர்க்க வைத்தது.

வீடு K.S.சுரேஸ்குமார் said...

டீ வாங்கி கொடுத்தவனையே நாங்க காலத்துக்கும் மறக்கமாட்டோம் ஓசி சாப்பாடுன்னா...நடத்துங்க..நடத்துங்க!

DhanaSekaran .S said...

அருமை அருமை வாழ்த்துகள்

மதுமதி said...

உங்கள் அனுபவங்கள் எனக்குப் புதிதுதான்..நான் எழுத ஆரம்பித்த காலங்களில் சென்னிமலை சி.பி.செந்தில்குமார் குமாரபாளையம் தேவி கணேஷ் கொங்கணாபுரத்தார் திருச்செங்கோடு தென்றல் நிலவன் சித்தோட்டார் போன்றோர்களை சந்திக்க பேருந்து ஏறியதையும் ஓரிருவரை சந்தித்ததையும் இப்போது நினைவு கூறுகிறேன். அன்று நான் சந்திக்காமல் விட்ட சென்னிமலை சி.பி.செந்தில் குமாரை வலைப்பூ வாயிலாக தினமும் சந்திக்கிறேன்(அந்த குமுதம் தான் என்னையும் நாவலாசிரியராக மாலைமதி மூலம் அறிமுகப்படுத்தியது) தொடருங்கள் உங்கள் அனுபவத்தை நானும் தொடர்கிறேன.

RAMVI said...

பத்திரிக்கை அனுபவங்கள் பற்றிய தங்களது அனுபவ பகிர்வு அருமை.

அப்படி என்ன சறுக்கல் சம்பவம்?

முன்பனிக்காலம் said...

என்ன இப்பிடி முடிச்சிட்டீங்கள்..சஸ்பென்ஸ் தாங்கேல....!

இரவு வானம் said...

தொடர் நல்லா போகுதுன்னே

Chilled Beers said...

ஹாய்மதன்தான் எங்களை வரவேற்றுப் பேசினார் என்று குமுதம் (!) பற்றி எழுதியிருக்கிறீர்கள். இது எப்போ நடந்தது? நான்தான் குழம்பிவிட்டேனா? குழப்புகிறேனா? :(

ரெவெரி said...

அனுபவம் தொடரட்டும் சி பி ...

விக்ரமசிங்கபுரத்துல ஹாக்கி விளையாடிட்டு குளிச்சது இன்னும் நினைவு இருக்கு...

நான் குளிச்ச அதே தண்ணிலே ஐஸ் குளிச்சதன்னு நினைக்கையிலே கொஞ்சம் கூச்சமா இருக்கு...-:)

ஹாலிவுட்ரசிகன் said...

படிச்சுண்டே வரேன். தொடர்ந்து படிப்பேன்.

angelin said...

தொடருங்கள் .நாங்களும் பயணிக்கிறோம் .
ப்ரியா கல்யாணராமன் என்றவுடன் ........ஜாக்ரதை வயசு 16 தொடர்கதை நினைவுக்கு வருகிறது .அருமையான சுவாரஸ்யமான பகிர்வு .மூன்றாம் பகுதி விடுபட்டதையும் படித்து விட்டேன்

Butter_cutter said...

அனுபவம் எல்லாம் நல்லா எழுதறீங்க ,எங்களையும் மறந்துடாதீங்க !

காட்டான் said...

வணக்கம் சி பி!
அருமையான தொடர் கட்டாயம் புத்தக வடிவில் வரணும் என்று ஆசைப்படுகிறேன்..!!

sivakeerthi said...

Super CP Sir

NIZAMUDEEN said...

தொடரும்.

Ramani said...

தொடர் சிறப்பாகத் தொடர்கிறது
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 9

hotlinksin said...

பாஸ்கி சினிமா டிவில கலக்குறது இருக்கட்டும்... நீங்க எப்ப டிவி சினிமாவுல கலக்கப் போறீங்க...?

kavithai (kovaikkavi) said...

4வது பாகமும் பார்த்தாயிற்று. இதில் வந்த பெயர்கள் எல்லாம் தலை சுத்துது. பலரைத் தெரியாது. சிலரைத் தெரியும்.தொடருங்கள் வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com