Wednesday, May 25, 2011

கோர்ட்டில் கனி, ஜெயிலில் கனி...சதியில் கனி - ஒரு ரிப்போர்ட்

'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்! 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கலைஞர் டி.வி-யின் முதன்மை நிர்வாகி சரத்குமாரும் கனிமொழியும்,
முறையே 16-வது மற்றும் 17-வது குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டனர்.

'கலைஞர் டி.வி-க்கு யாரிடமும் சட்டபூர்வமாக கடன் வாங்க உரிமை உண்டு. அதன்படி நேர்வழியில் கடன் வாங்கி உள்ளனர். அதற்காக அவரை குற்றம் புரிந்தவராகக் கருதக் கூடாது!’ என்று வாதாடினர். 

சி.பி.ஐ. தரப்பிலும் ஏராளமான எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. இப்படி இரு தரப்பிலும் வைக்கப்​பட்ட வாதங்களைக் கேட்ட பின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, நீளமான ஒரு தீர்ப்பைக் கூறினார். 2ஜி வழக்கின் இரண்டாவது குற்றப் பத்திரிகையே 100 பக்கங்களுக்கு குறைவானதுதான். ஆனால், கனிமொழி ஜாமீன் மனு மீது, நீதிபதி அளித்த தீர்ப்பு 144 பக்கங்கள்.

''நான் இப்போது வழக்கின் தன்மையைக் குறித்தோ, அல்லது அதுகுறித்து மதிப்பிடவோ செய்யவில்லை. வழக்கு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. நீதிமன்ற விசாரணையில்தான் உண்மைகள் வெளிவரும். ஆனால், குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டவை மற்றும் சாட்சியங்களின் படி, 2ஜி உரிமம் பெற்ற ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து
200 கோடி பெற்றது சரத்குமார்தான். அவர்தான் எல்லா ஆவணங்களிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். 

நிறுவனம் சார்பில் மட்டும் அல்ல, மற்ற இயக்குநர்கள் சார்பிலும் கையெழுத்துப் போட்டுள்ளார். கலைஞர் டி.வி. தொடர்பாக ஆ.ராசாவோடு அடிக்கடி தொடர்பு கொண்டு உள்ளார் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன...'' என்றார் நீதிபதி சைனி.

அடுத்ததாக, கனிமொழியைப்பற்றி குறிப்பிட்டார் நீதிபதி.

''கனிமொழி குற்றமற்றவர், அப்பாவி, ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலே தவறுதலாக சம்பந்தப்படுத்தி உள்ளனர் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசாவின் தனி உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்தோடு, கலைஞர் டி.வி-யின் நிதி மேலாளர் ஜி.ராஜேந்திரன் கூறிய சாட்சியமும் கனிமொழிக்கு எதிராக இருக்கிறது!'' என்று கூறி ஜாமீனை மறுத்தார். 'கலைஞர் டி.வி.

200 கோடியை லஞ்சமாக வாங்கவில்லை. கடனாகவும் பங்குகளாக மாற்றிக்கொள்ளவும்தான் வாங்கியது’ என்று உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே கனிமொழிக்கு எதிராக மாறி உள்ளது.

6.6.07 முதல் 20.6.07 வரை கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநராக இருந்துள்ளார். சில காரணங்​களுக்காக இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருந்​தாலும், 19.12.08-ல்,

200 கோடியை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கையெழுத்து இட்டுள்ளனர். 

13.2.2009 அன்று நடந்த இயக்குநர்கள் கூட்டத்தில் சரத்குமாரோடு கனிமொழியும் பங்கெடுத்துக்கொண்டு, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பணம் பெற சரத்குமாருக்கு அனுமதி கொடுத்துள்ளார் என்கிற தகவல்களை கலைஞர் டி.வி. நிதிப் பிரிவு பொது மேலாளர் ராஜேந்திரன் சாட்சியமாகக் கூறி இருப்பதைத்தான் நீதிபதி குறிப்பிடுகிறார்.

ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களில் மிக முக்கியமானது, கனிமொழி ஒரு பெண் என்பதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்பதாகும். ''பெண் என்கிற முறையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க முடியாது! ஏனென்றால் மிகப் பெரிய குற்றத்தின் தன்மை (Magnitude of crime)  மற்றும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டின் அடிப்படைத் தன்மை வலுவாக இருக்கிறது'' என்றார்.

இந்த ஜாமீன் மனு விவகாரத்தில் கனிமொழியின் வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், ராம் ஜெத்மலானி மற்றும் சரத்குமாரின் வழக்கறிஞர்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் அல்டாஃப் ஆகியோர், ''புலனாய்வின்போது கைது செய்யப்படாத ஒருவர், சம்மன் (சி.ஆர்.பி.சி. 88-வது பிரிவின் படி) மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கும்போது, அவரை குற்றவியல் நடைமுறைப் பிரிவு 309-வது பிரிவின் படி நீதிமன்றக் காவலில் வைக்கக் கூடாது!'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

ஆனால் நீதிபதி, ''ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றத்தின் தன்மையின் அடிப்படையில், நீதிமன்றக் காவலில் வைக்கவோ அல்லது ஜாமீனில் அனுப்பவோ அதிகாரம் உண்டு'' என்று குறிப்பிட்டார். மேலும் தீர்ப்புக் குறிப்பில், ''கனிமொழியின் கண்ணியத்தையும் நன் மதிப்பையும் என்னால் பார்க்க முடிகிறது என்றாலும், என்னால் வழக்கின் தன்மையைக் கருதி எந்தச் சலுகையும் காட்ட முடியவில்லை!'' என்று  கருத்துச் சொல்லி இருக்கிறார்.


கடந்த 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஒரே வரியில் தீர்ப்பைப் படித்தார். ''வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்!'' என்று கூறினார் சைனி.

தீர்ப்பு கூறிய அடுத்த சில நிமிடங்களில் கனிமொழியையும், சரத்குமாரையும் குற்றவாளிக் கூண்டுக்கு அருகே அழைக்கவே இருவர் முகத்திலும் பதற்றம் பரவியது. அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வந்திருந்த தி.மு.க. ஆதரவுப் பெண்கள் பலரும் கதறி அழுதனர். மயிலாப்பூர் கவுன்சிலர் துரை கதறி அழுதார். கனிமொழியின் கணவர் அரவிந்தனும் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதையும் சற்குண ​பாண்டியனும் வேதனையில் துடித்தனர்.

2ஜி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாகித் பால்வா உட்பட மற்ற குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்களும் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் பெண் போலீஸார் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் வர, நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்-அப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி.  

லாக்-அப்புக்குச் சென்ற கனிமொழி, தன் மகனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லவே, ஆதித்யன் நீதிமன்ற வளாகத்துக்கு வரவழைத்துப் பேசவைக்கப் பட்டார். கனிமொழி கைப்பையோடு லாக்-அப் செல்ல முயன்றார். அனுமதி இல்லை என்றதும் அதில் இருந்து புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். கனிமொழி, 'மை நேம் இஸ் ரெட்’ என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்.

ஆ.ராசாவுக்கு அடுத்து இப்போது, கனிமொழியும் சரத்குமாரும் திகார் ஜெயிலுக்குப் போய்விட்டார்கள். 'இத்துடன் முடியாது. இன்னும் சில தி.மு.க. அரசியல் புள்ளிகளும் உள்ளே செல்ல இருக்கிறார்கள்’ என்கிறார்கள் நீதிமன்ற வட்டாரத்தில்!


 
ராசா வீட்டுச் சாப்பாடு...

அமைச்சர் என்கிற முறையில் பல டெல்லிப் பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு நேரடியாக வர முடியாத நிலையில், டி.ஆர்.பாலுதான் அனைத்து விவகாரங்​களையும் கவனித்துக்கொள்கிறார். நெப்போலியன் வர முடியாத சூழ்நிலையில், அவரது தனிப்பட்ட உதவியாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கண்ணன் ஜெகதீசனை அனுப்பி வருகிறார். டி.கே.எஸ்.இளங்​கோவன், கே.பி.ராமலிங்கம்போன்றவர்கள் தவறாமல் நீதிமன்றத்துக்கு வருகிறார்கள். திகார் சிறை எண் 6-ல் உள்ள 8-வது வார்டில் கனிமொழி அடைக்கப்பட்டு உள்ளார். இது புதிதாகக் கட்டப்பட்டது.

'ஏ’ கிளாஸ் கைதிகளுக்கு ஆறு செல்கள் உள்ளன. சிமென்ட் மேடைதான் கட்டில். படுக்கை விரிப்புகளைத் தலையணையாக்கிக்கொண்டாராம். ஒரு சிறிய இந்தியன் டைப் டாய்லெட். முதல் நாள் கடுமையான உஷ்ணத்தை சந்தித்தார், கனி. ஆனால், திடீரென வருண பகவான் கனிவு காட்டவே, கோடை மழை வந்து உஷ்ணத்தைத் தணித்தது.  

பொதுவாக, சிறைகளில் மின் விசிறிகளுக்கு அனுமதி இல்லை. கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் சீலிங் ஃபேன் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழங்கப்​பட்ட இலவச டி.வி. மாதிரி சிறிய தொலைக்காட்சி பெட்டியில் 20-க்கும் மேற்பட்ட சேனல்கள் வரும். தினசரிகள் வழங்கப்படுகின்றன.

இரு தினங்களுக்குப் பின்னர், கனிமொழிக்கும், சரத்​குமாருக்கும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ராசாவுக்கும் அனுமதி உண்டு என்பதால், ராசா வீட்டில் இருந்தே மூவருக்கும் உணவு வருகிறது.

27 comments:

Unknown said...

சி பி ராஜ்ஜிஜம் மீள் ஆரம்பம்!!!ஜெய் !!!
ஸ்வீட் எடு கொண்டாடு!!!

Unknown said...

ஆரம்பமே அதிரடி!!

Unknown said...

இத்தருணத்தில் நண்பர் ஓட்டவடை ரஜீக்கு ஒரு சல்யூட்!!!மனிதன்!!!

பெம்மு குட்டி said...

இந்த பதிவு கனிமொழிமீது ஒரு பரிதாப உணர்ச்சியை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. (அவங்க ஏதோ தப்பே பண்ணாதமாதிரி)

இப்பமும் பாருங்க ராசாமேலயும், சரத்குமார் மேலயும் பழிய போட்டுட்டு தான் மட்டும் தப்பிக்கணும்ன்னு பார்க்கிறாங்க.

வந்தியத்தேவன் said...

நன்றி ஜூனியர் விகடன் என்பதையும் போட்டிருக்கலாம்.

Unknown said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்....!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ok..ok...சமூக பகிர்வு... ஹி..ஹி..

Unknown said...

அப்போ ஜெயிலுக்குப் போனாலும் ராசா மாதிரிச் சாப்பாடு? :-)

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே வணக்கம்ன்னே..

MANO நாஞ்சில் மனோ said...

கனிமொழி பாவம்னே விட்ற சொல்லுங்கண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

ராசாத்தி அம்மாளை உள்ளே வச்சிட்டு கனி'யை வெளியே விடசொல்லுங்கன்னே...

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடடா தமிழ்மணம்'ல நான் வச்ச சூனியத்தை சரி பண்ணிபுட்டானே....!!!!

கூடல் பாலா said...

கனி ........சதி.........சிபி ....

கூடல் பாலா said...

கனி..........சனி............சதி..........சிபி...........

Lali said...

யார் மேல தப்பு.. நிறைய கதை சொல்றாங்க எல்லாரும்.. ஒண்ணுமே புரியல உலகத்திலே :(

http://karadipommai.blogspot.com/

rajamelaiyur said...

Kani a nampinor kaividapaduvar

Unknown said...

கனி 'மை நேம் இஸ் ரெட்' என்ற ஆங்கில நாவலோடு சிறைக்குச் சென்றார்
- 'மை பாடி இஸ் பிளேக்' என்ற தலைப்போடு 5 ஆண்டுகள் கழித்து ஒரு நாவல் வெளியே வரலாம்

கார்த்தி said...

இப்பிடி சும்மா இருந்து டிவி பாத்து ஓசில சாப்பிடலாமெண்டா நானும் போயிருப்பனே!!!

Unknown said...

அண்ணே அவுங்கள உங்களுக்கு ரொம்ப புடிக்குமா

சசிகுமார் said...

thanks for sharing

Jana said...

'மகள் கனிமொழி பிறந்த அதிர்ஷ்டமே கருணாநிதியை முதல் அமைச்சராக உயர்த்தியது!’ என்று 'நாத்திகம் பேசும்’ தி.மு.க-வினரே சொல்வார்கள். இன்று அதே கனிமொழியின் துரதிர்ஷ்டம், கருணாநிதியின் 70 வருடப் பொது வாழ்க்கைக்கு ஒரு களங்கம்!
:)))

உணவு உலகம் said...

நீங்க எதோ படம் எடுக்க போறதா ,மனோ சொல்லீருக்காறே! உண்மையா?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

அருமையா எழுதி இருக்கீங்க..ஆனால் கனிமொழி மேல ஏன் இவ்வளவு சாஃப்ட் கார்னர்?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒரே பதிவை உங்கள் தளத்திலும், உண்மைத்தமிழன் தளத்திலும் படித்த மகா பாவி நான்...


அய்யா சாமி... பத்திரிக்கை செய்திகளுடன்...உங்களோட கருத்தையும் சேர்த்து எழுதுங்க...

பின்குறிப்பூ....
நாங்க...ஸ்கூல் படிக்கும்போதே... பாடபுத்தகத்தை இரண்டுமுறை படித்ததில்லை..
ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

http://truetamilans.blogspot.com/2011/05/blog-post_26.html

பூங்குழலி said...

ஊடகங்கள் தான் இந்த விஷயத்தில் வந்தார் ,சிரித்தார் அழுதார் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றன என்றால் இந்த வர்ணனை பதிவு தேவையா ?திமுகவிற்கு இது ஒன்றும் புதிதல்ல .கனிமொழிக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் .தயாளு அம்மாளின் பெயரை அல்ப காரணங்கள் சொல்லி சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள் .இதில் கடைசியில் சரத்தும் ராசாவும் பழி சுமப்பார்கள் ...இவர் தியாகியாகி விடுவார் .இப்போதே சித்தரிப்புகள் அப்படிதான் இருக்கின்றன .