Friday, May 20, 2011

FAST AND FURIOUS- 5 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKl3I5HPe8ZJANPLo7zfBL07xMfHypGu088i7y8cfjoe73wBFJ4pHCHC9MBkhTPK_bIGkLryBDGh4roGbM_-sS1EST2DEcAuIpZoMZC-sCceb7EMNPVn8YkHK6HmFfOPukKh_EBEeZFbE/s1600/fast-five-poster.jpg

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( நம்ம மம்மி அல்ல),ரன் டவுன்,ஸ்கார்பியோ கிங்க் ஹீரோ ராக் வேம் ஜான்சன் +ட்ரிபிள் எக்ஸ் ( ”அந்த” ட்ரிபிள் எக்ஸ் அல்ல) ,பாசிஃபயர்,பாபிலோன் ஏ டி ஹீரோ வின் டீசல் இருவரும் இணைந்து நடித்த (வெடித்த..!!)ஆக்‌ஷன் படம் இது.. 

இயக்குநர் மணி ரத்னம் எடுத்த ( சுட்ட !!!) திருடா திருடா படக்கதைதான். அரசாங்கம் பிரிண்ட் பண்ணுன நோட்டுக்கட்டை (கோடிக்கணக்கில் பணம்) ஒரு குரூப் 2 செம கட்டைகளோடு(செமயா இருக்கும் கட்டை = செம கட்டை) இணைந்து அபேஸ் பண்ண திட்டம் இடுவதும்,அதில் போலீஸ் கண்ணில் மண்ணை எப்படி தூவி சாதிக்கறாங்க என்பதும் தான் கதை..

இந்த மாதிரி கதைகள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதற்கு 2 காரணம்.. இதுல பர பரனு திரைக்கதை பொறி பரக்கும்.. இன்னொண்ணு எல்லா மனிதனுக்கும் உள்ளூர இன்சிடெண்ட் பணக்காரன்  ஆகிடனும்னு ஒரு ஏக்கம் இருக்கும். தன்னால செய்ய முடியாத ஒண்ணை ஹீரோ செய்யறப்ப அவன் தானே செஞ்ச மாதிரி திருப்தி அடையறான்.

பொதுவா 2 ஹீரோ சப்ஜெக்ட்னா கமல் தான் தமிழ்ல ஞாபகத்துக்கு வருவார். அவர் என்ன பண்ணுவார்னா தன் கூட இணைந்து நடிக்கும் ஹீரோவை டம்மி பண்ணிடுவார். ஆனா ஹிந்தில ஹாலிவுட்ல அப்படி இல்ல.. ஜாலியா நடிக்கறாங்க.. படத்துல 2 ஹீரோவும் ஜாலியா பேசிக்கறது நல்லாருக்கு.. 

http://www.drivingenthusiast.net/sec-blog/images/2009/04/05/fast__furious_4_photo-1.jpg
பஞ்ச் வசனங்கள்

1.   ஓக்கே.. நீ பார்க்க புத்திசாலியா இருக்கே....
ஏன்னா நான் சாதிக்கனும்னு வெறியோட இருக்கேன்.. 

2. யாரோ பெரிய ஆள்னாங்க.. கத்துக்குட்டியை கூட்டிட்டு வந்திருக்காங்க..?

உன்னையே கூப்பிட்டிருக்காங்க.. என்னை கூப்பிட மாட்டாங்களா? (வாரிக்கோ.. வாரிக்கோ மாறி மாறி வாரிக்கோ)

3.  ஆஹா.. என்னா ஃபிகர்.. பார்க்கும்போதே தூக்கறாளே..? (தாக்கறாளா? தூக்கறாளா?# டவுட்டு)

4. பொண்ணுங்க கிட்டே மொக்கை போடலைன்னா மொட்டையனுக்கு தூக்கமே வராது போல.. (ஃபிகர்ட்ட பேசுன பின்னால தூக்கம் வரும்?#டவுட்டு)

5.  ஐ ஆம் எ போலீஸ்.. 

அப்படியா?ஐ டி காட்டுங்க... ம் ஆனா ஃபோட்டோல வேற மாதிரி இருக்கீங்களே?

அது சின்ன வயசுல எடுத்தது.. அதுவும் இல்லாம நான் வெய்யில்ல கருத்துட்டேன்.. 


http://www1.pictures.gi.zimbio.com/Fast+Furious+Europe+Premiere+6CUszLZJvc5l.jpg
6. உன்னை அரெஸ்ட் பண்ணப்போறோம்.. 

சாரி.. நான் அரெஸ்ட் ஆகற மூடுல இல்ல.. (ஆ ராசா மாதிரியே பில்டப் குடுக்கறாரே?)

7. உன் கிட்டே எனக்கு பிடிச்ச அம்சமே என் கூட போட்டி போடனும்னு நினைக்கறியே அதான்.. 

8. இந்த நெக்லஸ்க்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கனும்?

அவ மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை.. நான் அவ மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு அந்த நெக்லஸ்க்கு தெரியும்.இப்போ உங்களுக்கும் தெரியும்.. (சீப் ரேட்ல பாசி மாலை வாங்கி குடுத்துப்பாருங்க.. கண்டுக்கவே மாட்டா)

9. ஜூ-ல மிருகங்களுக்கு எல்லாம் சமைச்சுப்போடனும்னு ஆள் கேட்டாங்க.. உன்னால முடியுமா?

அதான் உங்களுக்கே சமைச்சுப்போடறனே.. அப்புறம் என்ன?

10. ஏண்டா.. இங்கே இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு.. உனக்கு ஃபிகர் கேட்குதா? ( ஃபாரீன்லயும் அப்படித்தான் போல.. )

11. பணம் வந்தாலே போதும்.. உறவுகளை தக்க வெச்சுக்கலாம்.. ( அப்படிப்பட்ட சுயநல உறவுகள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?)
http://updatesforu.com/wp-content/uploads/2011/05/fast-and-furious-5-fast-five-wallpapers-8.jpg
இயக்குநர் பாராட்டப்படும் இடங்கள்

1. இரண்டு மெயின் ஹீரோக்களும் சந்திக்கும் இடங்களும் ,அவர்களுக்கிடையேயான சுவராஸ்யமான வசனங்களும்..(அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு மாதிரி)

2. பேங்க் பண ட்ரக் லாவகமாக கை மாற்றும் சீன் செம சேசிங்க் சீன்பா.. 

3.  கர்ப்பிணிப்பெண்ணிடம் கணவன் காட்டும் அன்பும், அக்கறையும் ஒரு ஹாலிவுட் கவிதை.. 

4. க்ளைமாக்ஸில்  அனைவரும் எப்படி ஜாலியாக பணத்தை செலவு பண்றாங்க என்பதை செம சுவராஸ்யமாக காட்டியது.. 

http://images2.fanpop.com/image/photos/14300000/On-set-Fast-Furious-5-the-fast-and-the-furious-movies-14316282-290-399.jpg

--
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நகரம் எங்கும் கண்காணிப்புக்கேமரா இருக்கும்போது மெயின் ரோட்டில் பண டிரங்க் கை மாறுவது போலீஸ்க்கு தெரியாம இருக்குமா?

2. பணம் உள்ள டிரங்க் & கார் சேசிங்க் செம விறு விறுப்புதான் என்றாலும் அவ்வளவு அமளி துமளி ஆன பின்பும் அந்த சங்கிலி உடையாம இருக்குமா?

3. பணத்தை ஷேர் பண்ணீக்கொண்ட பின் 2 பேர் சொந்த தொழில் தொடங்குவது போல் காட்றீங்களே..? அந்த அளவு நேர்மையும் , தொழில் ஆர்வமும் உள்ளவர்கள் கொள்ளையில் ஈடுபடுவார்களா?நோகாம நோம்பி கும்பிட்டு பழக்கமானவங்க மறுபடி உடல் நோக கஷ்டப்படுவாங்களா?

4. படம் பூரா கொள்ளை எப்படி நடக்குது.. எப்படி பிளேன் பண்றாங்க என்பதைத்தான் காட்றீங்க.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்குது.. அவங்க என்ன முயற்சி எடுக்கறாங்க அப்டின்னு தனி டிராக் ஓடுனாத்தானே செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்?

ஆனா ஆக்‌ஷன் படத்துல லாஜிக் பார்க்கக்கூடாதுங்கறதனால ( அப்போ பிட் படத்துல லாஜிக் பார்க்கலாமா?) சும்மா ஜாலியா போய் எஞ்சாய் பண்ண நல்ல ஆக்‌ஷன் படம்.. ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்..

23 comments:

Unknown said...

fast & first வடை !

Unknown said...

பசிக்குது சாப்பிட்டு வந்து படிப்போம் !
(படம் வந்து ரெண்டு வாரம் ஆச்சு !)

Anonymous said...

///பணம் வந்தாலே போதும்.. உறவுகளை தக்க வெச்சுக்கலாம்.. ( அப்படிப்பட்ட சுயநல உறவுகள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?)/// நல்லவசனம் இது...............இருந்தா என்ன இறந்தாலென்ன !!!

Speed Master said...

தல படம் வந்து பல மாசம் ஆச்சு

ஏன் இவ்வளவு லேட்டு

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

suuuuupppppeerrrrrruuuuuuu.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு...

Unknown said...

பதுங்கிய சிபி வெளியே வரவும்!

King Viswa said...

படம் இங்கே இரண்டு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது. உங்க ஊரிலே இப்போதானா?


கிங் விஸ்வா

தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

சசிகுமார் said...

இயக்குனர் பல்பு வாங்கி இடங்கள் சூப்பர்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

CP WENT TO NEXT SHOW?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

neat and comedyful vimarsanam nanpa....

rajamelaiyur said...

I agree with O.va.narayanan's statement

சக்தி கல்வி மையம் said...

வந்தேன்,படித்தேன், ரசித்தேன், வாக்களித்தேன், கிளம்புகிறேன்.
டிஸ்கி: தமிழ் மனம் வேலை செய்யவில்லை.

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

வெள்ளிக்கிழமை. திரை விமர்ச்சனம் நன்று! ஆமாண்ணே அது என்னது பல்பு வாங்குன இடம்? எலக்டிரிக் கடையா? மளிகை கடையா?

கவி அழகன் said...

supper

KARTHICK MUTHUSAMY said...

உனக்கு வேற வேலை இல்லையா... யோவ்...

உணவு உலகம் said...

என்னாது தமிழ்மணத்தில சிபிக்கு தடையா? ஏனுங்க, இணைப்பு கிடைக்கமாட்டேங்குது?

செங்கோவி said...

அதெல்லாம் சரி, தமிழ்மணம் என்ன ஆச்சு?

எல் கே said...

என்னாச்சி சிபி தமிழ்மணத்தில் இருந்து தொரத்தி விட்டுட்டான்களா??

படம் கொஞ்ச நாள் கழிச்சு பாக்கலாம்

N.H. Narasimma Prasad said...

நல்ல விமர்சனம். ஆனா இந்த படத்தை நீங்க தமிழ் டப்பிங் பார்த்திங்களா? இல்ல இங்கிலீஷ்ல பார்த்திங்களா? (ஒரு டவுட்டு).

சரியில்ல....... said...

அட... நான் கூட பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படத்துக்கு விமர்சனம் போட்டிருக்கிங்கன்னு நெனச்சு வந்தேன்... போங்க பாஸ்... இந்த படம் எங்க ஊர்ல நாலு மாசத்துக்கு முன்னாடி வந்து ... தூக்கிட்டாணுவ..