Thursday, May 05, 2011

ஏ பி ஜே அப்துல் கலாம் பேட்டி பாகம் 2

http://www.tn.gov.in/pressrelease/archives/pr2002/pr151202/Dec15bp.jpg 

கா.வினோதினி, திண்டுக்கல்.

1. ''ஜனாதிபதி பதவிக் காலத்தில் தாய் நாட்டுக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு உங்களுக்கு இருந்திருக்கிறதா?''

''ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது, நாடு முழுவதும் இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை விதைத்தேன்.
ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சியைக்
கிராமப்புறங்கள் அடைய வேண்டி, நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற 'புரா’ திட்டத்தைப் பிரபலப்படுத்தினேன்.

இலங்கைத்தமிழர் நலனுக்காக நீங்கள் ஏதாவது குரல் கொடுத்திருக்கலாம் என பலரும் சொல்றாங்க சார்.. 
வளர்ச்சி அரசியல்தான் நாட்டுக்குத் தேவை என மக்களிடம் வலியுறுத்தினேன். அதன் பயன்பாடு இந்தியா முழுமைக்கும் இப்போது எதிரொலிக்கிறது.
இந்தியா வளர்ந்தால் என் தமிழ்நாடும் வளரும் அல்லவா!'' 


எஸ்.சிவகாமி, திருச்சி.

2.
''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.
ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

3. ''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''

கு.அருள்மொழி, காங்கேயம்.
 http://www.centralchronicle.com/uploads/26_June_kalam.jpg
4. ''நீங்கள் குழந்தைகளை அதிகம் நேசிப் பதன் காரணம் என்ன?''

''குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும். எனவேதான், அவர்கள் மனதில் விதைக்கும் ஒவ்வொரு நற்செயலும், கண்டிப்பாகப் பிற்காலத்தில் நாட்டின் மேன்மைக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அது உத்வேகமாக இருக்கும். அதனால்தான் நான் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்!''


நா.கணேசலிங்கம், லிங்கேசன்புதூர்.

5. ''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''

''அறிவியல் துறையில் நான் முன்னோடியாகக் கருதுபவர், ராக்கெட் சமன்பாட்டைக் கண்டு பிடித்த ரஷ்யாவின் கான்ஸ்ஸான்டின் டிஸ்யோல்ஸ்கி என்பவர். அவர்தான் ராக்கெட் துறையில் உள்ள அனைவருக்கும் முன்னோடி. எனது குரு விக்ரம் சாராபாய் அவர்கள்தான் என் அறிவியல் முன்னோடி!''

நம்ம நாட்டுக்காரரான ஜி டி நாயுடுவை சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தோம்.

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

6. ''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''

எஸ்.வேணுகோபால், திருநெல்வேலி.

7. ''ஜப்பானின் அணு உலைகள் வெடித்துச் சேதம் விளைவிக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்துவிட்டோம். இந்நிலையில்... கல்பாக்கம், கூடங்குளம் அணு மின் நிலையங்களை மூட வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக் கடலில் மரித்தார்கள் - கப்பல் பயணத்தையே விட்டுவிட்டோமா? வருடம்தோறும் விமான விபத்து நடக்கிறது - விமானப் பயணத்தையே தவிர்த்துவிட்டோமா? இல்லையே!

ஜப்பானில் மோசமான ஒரு சூழ்நிலையில், சுனாமியும் பூகம்பமும் ஒருங்கே நிகழ்த்திய சோகம் அது. அதை எதிர் பாராததால், மாற்று மின் சக்தியைச் சரியான நேரத்தில் கொடுக்கத் தவறியதால், உபயோகிக்கப்பட்ட எரிபொருள் குளிர்ச்சியாகாத காரணத்தால், விபத்து நேர்ந்துவிட்டது. பாதுகாப்புத் தன்மையில் அவ்வப்போது மாற்றம் செய்யாத தின் விளைவே அந்த விபத்து.

எனவே, உலகின் அனைத்து அணு உலைகளையும் மீண்டும் ஆய்வு செய்து, அவற்றுக்கு இப்படிப்பட்ட சிக்கலான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் சக்தி உள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப அணு மின் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த உலக நாடு கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன. இந்தியாவும் தனது அணு உலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மும்முரமாக இருக்கிறது.

அணு மின் சக்திதான் தூய்மையான எரிபொருள். எனவே, அணு மின்சாரம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவின் ஆராய்ச்சி யில் தோரியம் மூலம் உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், யுரேனியத்தின் அணு மின் நிலையங்களைவிட மிகவும் பாதுகாப்பானவை.

அவை சீக்கிரம் உருகாத தன்மைகொண்டவை. ஒரு மெட்ரிக் டன் தோரியத்தில் கிடைக்கும் எரிசக்தி, 200 மெட்ரிக் டன் யுரேனியத்தில் அல்லது 3.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில் கிடைக்கும் சக்திக்குச் சமம். அதை அமைக்க ஆகும் செலவும் மிகக் குறைவு. எனவே, நம்பிக்கையோடு இருங்கள்!''

இளங்.கார்த்திகேயன், மகாதேவப்பட்டணம்.
 http://www.sudhirneuro.org/gallery/full/Dr-AP-Abdul-Kalam.jpg
'8. ' 'ஃபுகுசிமா’ அனுபவத்தில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?''

''அதாவது, பாதுகாப்புக்குத் தேவையானவற்றை... வரக்கூடிய இயற்கைச் சீற்றங்களை அளவிட்டுப் பலப் படுத்த வேண்டும் என்பதுதான். உலகம் இப்போது விழித்துக்கொண்டு அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது!''

நன்றி - விகடன்

22 comments:

Unknown said...

hehe

Unknown said...

நம் நாட்டு முன்னேற்றம் என்று வரும்போது பாதி காந்தி மற்றும் பாதி போஸ் மன நிலை ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்று சொல்லும் திரு. கலாம் அவர்களின் கருத்தை வழி மொழிகிறேன்....பதிவின் பகிர்வுக்கு நன்றி திரு சிபி அவர்களே.....

சக்தி கல்வி மையம் said...

அருமையான மனிதரின் உயர்ந்த கருத்துக்கள்.. நன்றி சிபி,

டக்கால்டி said...

He He

டக்கால்டி said...

last photo la irukkura figure..He He..

டக்கால்டி said...

I am going to sleep...Bye Friends

சக்தி கல்வி மையம் said...

என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?

செங்கோவி said...

நல்லா அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்.....

ராஜி said...

நல்லதொரு பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி!
கலாம் அவர்களின் கனவு நனவாக நம்மால் முயன்றது நம் பிள்ளைகளை நல்லதொரு இளைஞர்களாக கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்பதே.

rajamelaiyur said...

நல்ல மனிதரின் பேட்டி .. உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும் நன்றி

rajamelaiyur said...

நல்ல மனிதரின் பேட்டி .. உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும் நன்றி

rajamelaiyur said...

" A joke " visit
http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_586.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு நிஜமாவே கலாமை பிடிக்கும் நண்பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அருமையான இந்தப் பேட்டியினைப் பகிர்ந்திட்ட உங்களுக்கு எனது நன்றிகள் நண்பா! ( விகடனுக்கும் தான்! )

காங்கேயம் P.நந்தகுமார் said...

விகடன் கொள்கைபரப்பு செயலாளர் சி.பி எங்கே இப்போது இருக்கிறார்? போஸ்ட் மட்டும்தான் வருது. அண்ணன் இப்போ 8 நெம்பர் கடையிலயா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தன்னம்பிக்கை தரக்கூ்டிய தலைவரின் பதிலை பார்த்து வியந்தேன்...

உணவு உலகம் said...

உயர்ந்த மனிதரின் உயரிய கருத்துக்கள்.பகிர்ந்திட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.

உணவு உலகம் said...

இன்று உணவு உலகத்தில்:
http://unavuulagam.blogspot.com/2011/05/blog-post_05.html
அதிலுள்ள டிஸ்கி பேச்சு, அவசியம் பாருங்க.

NKS.ஹாஜா மைதீன் said...

நானும் ஆஜர் தலைவரே....

மங்குனி அமைச்சர் said...

ஹா,ஹா,ஹா..................... சூப்பர் சார்

மங்குனி அமைச்சர் said...
சி.பி.செந்தில்குமார் said...
சேட்டிங்க்ல இவ்வளவு ஆபாசமா பேசிக்குவாங்க.. பேடு பாய்ஸ்.. ஹி ஹி////



ஐயா, தலைவா , முதல்வரே , தெய்வமே , செந்தில்குமார் சாமி சார் ...... காமடிக்காக எழுதியது சாமி .........டிரேக்க மாத்திவிட்டுராக சாமி ........... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.......... மக்களே இது காமடிக்கு எழுதியது மக்கா

Jayadev Das said...

ஒரு ஏணியை வச்சு மேலே ஏறிப் போக வேண்டும் என்றால் அது வழுவானதாக இருந்தால் மட்டுமே முடியும், உள்ளே கரையான் பூச்சிகள் அரித்து உலுத்துப் போனதாக இருந்தால் அதில் வழு இருக்காது, ஏற முடியாது. அதே மாதிரி, நம் நாடு முன்னேறிய நாடு என்றால், ஊழல், லஞ்ச லாவண்யம் என்ற கரையான் பூச்சிகள் ஒழிய வேண்டும், இது நடக்காமல் ஒரு போதும் முன்னேறிய நாடாக முடியாது. [நன்றி விஜய் டி.வி.] அப்துல் கலாம், நேர்மையான மனிதர், ஆனால், ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத பதிவியில் இருந்ததால், ஊழல் ஒழிய வேண்டுமென்று வெளிப்படையாக பேசத்தான் முடிந்ததே தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. நாட்டின் பணம் லட்சம் கோடிகளில் கல்லாப் பணமாக சுவிட்சர்லாந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது, யார் எவ்வளவு வைத்திருக்கிறார்கள் என்ற விவரம் கூட இன்றைய அரசின் கையில் உள்ளது. அதை வாங்கும் போதே, வெளியிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் கீழ் கொடுங்கள் என்று இவர்களாகவே சொல்லி வாங்கி, அதை இன்னமும் அந்த ஒப்பந்தத்தைக் காட்டியே ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அந்தப் பணம் நம் நாட்டிற்கு ஏதாவது ஒரு வகையில் வர வேண்டும். இல்லாவிட்டால் கனவு வேண்டுமானால் காணலாம் முன்னேற முடியாது.

Jayadev Das said...

அணு உலையால் சுற்றுச் சூழலுக்கு ஒரு கேடும் இல்லை!! ம்ம்ம்.... கல்ப்பாக்கத்தில் அணு உலை உள்ள இடத்தில் பல மைல் சுற்றளவுக்கு மீன்கள் செத்துப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் அந்த ஊரில் பிறக்கும் குழந்தைகள் தலைமட்டும் disproportionate ஆக பெரிதாக உள்ளதாம். இன்னமும் என்னென்ன மரபியல் மாற்றங்கள் மக்களுக்கு வருமோ தெரியவில்லை. ஆபத்து வராத வரை ஒன்று மில்லை, வந்து விட்டால் காரணம் தான் காட்டுவார்களே தவிர, அவர்களால் சேதத்தை தடுக்க முடியாது. தொழில் நுட்பத்தில் ஜப்பான் காரனை விட விஞ்சியவர்களா நாம்? அல்லது விபத்து நடந்து சாகட்டும் என்று ஜப்பான் காரர்கள் விட்டு விட்டார்களா? அவர்களாலேயே தடுக்க முடியாத போது நாம் எம்மாத்திரம்? தமிழகத்தில் அணு உலை என்ற பெயரில் நம் உயிருக்கு உலை வைத்து பக்கத்து மாநிலத்துக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும், ஆனால் அவனுங்க காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என்று மாத்தி மாத்தி எல்லா பக்கமும் இருந்து ரிவிட் அடிப்பானுங்க. ஏன் கேரளாவில் ஒரு அணு உலை வைக்கலாமே, இல்லை கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ வைக்கலாமே? நல்ல காந்தி பொறந்த நாடுடா சாமி. இன்னொரு விஷயம் இந்த போக்ரான் அணுகுண்டு சோதனை. அதை சென்னை Institute of Mathematical Sciences உள்ளிட்ட சில அறிவியலாளர்களே பாராட்ட வில்லை, இது தேவையற்ற போட்டியை உருவாக்கி விடும் அதனால் நமது பொருளாதாரம் முடங்கும் என்று சொன்னார்கள். அதே மாதிரி, அடுத்து பாகிஸ்தான் காரனும் சோதனை பண்ணினான், இப்போ ரெண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு வளர்ச்சிப் பணிகளுக்குப் பதிலாக ஆயுதம் செய்வதில் பணத்தை அழிக்கப் போகிறார்கள்.