Friday, May 27, 2011

எத்தன் - சடன் ஆக வந்த கடன் காமெடி- சினிமா விமர்சனம்

http://www.tamilvix.com/wp-content/uploads/2011/05/Eththan.jpg
கடன் வாங்கியே காலம் தள்ளும் வடக்குப்பட்டி ராம்சாமி வகையறாக்களின் காமெடிகளை தமிழ் சினிமாவில் இதற்கு முன் இவ்வளவு டீட்டெயிலான நகைச்சுவைகளுடன் யாரும் பதிவு செய்ததில்லை என்ற அளவில் இந்தப்படம் தனித்துவம் பெறும் ஒரு சிம்ப்பிள் காமெடி லவ் ஸ்டோரி என்று பெயர் பெறுகிறது..

படத்தோட கதையைப்பற்றி முதல் 8 ரீல் வரை இயக்குநர் கவலையே படாமல் ஒரே காமெடிக்காட்சிகளாக போட்டுத்தாக்கி இருப்பதில் இருந்தே இவர் தமிழ் சினிமாவிற்கு வரவேற்கத்தக்க ஒரு புது முக இயக்குநர் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார்.

படத்தோட ஹீரோ விமல் கடன் வாங்குறதுல மன்னன். யாரா இருந்தாலும் பேசியே கவுத்து கடனை வாங்கி அல்வா குடுக்கறதுல கேடி.. இப்படிப்பட்ட ஆளுக்கு பேங்க்ல கடன் அட்டை பாக்கி வசூல் ( க்ரெடிட் கார்டு கலெக்‌ஷன்)ஏஜெண்ட் வேலை கிடைக்கிறது..இதுவரை அவரைத்துரத்திய கடன் காரர்களை எல்லாம் இப்போ அவர் துரத்துகிறார்... 
இந்த ஒன்லைனே இந்தப்படம் ஹிட் ஆவதற்குப்போதுமானது.. ஆனா இயக்குநருக்கு திடீர்னு ஒரு டவுட்.. காதல், செண்ட்டிமெண்ட், வில்லன் இல்லைன்னா தமிழ் சினிமா ஓடாதுன்னு யாரோ சொன்ன பேச்சை கேட்டுட்டு ஹீரோயின், அவளோட மாமன் மகன் (வில்லன்),அவளை அடைய நினைப்பது, ஹீரோ காப்பற்றி ஹீரோயினை அடைவது என மாமூல்  மசாலாவுக்குள் போய் தத்தளித்து, தட்டுத்தடுமாறி கரை சேர்ந்து இருக்கார். 

ஆனா அந்த கிளைக்கதை இல்லாமலேயே படம் பிக்கப் ஆகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்.. 

எந்த ஆளை பார்த்தாலும் பார்வையாலேயே ஸ்கேன் பண்ணி  அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என கணக்கு பண்ணி விடுவதில் ஹீரோ கில்லாடி.. அவர் ஊரில் கடன் வாங்காத ஆளே இல்லை.. ஊரில் தடுக்கி விழுந்தா கடன் காரன் மேல் தான் விழுவார்..

சிங்கம் புலியுடன் அவர் அடிக்கும் காமெடி கூத்துக்கள் தான் பாதிப்படம்.. 
http://4.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TUGQfS8nCqI/AAAAAAAAJKs/CZREnC1Jgmc/s1600/Actress-Sanusha-%2540-Eththan-Movie-Gallery.jpg

கலக்கலான காமெடியில் களை கட்டிய இடங்கள்

1. மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?

ம்.. இந்தா.. 

சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்.. 

அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?

கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?சரி சரி விடு.. 50,000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறூம் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?

2.  என்னது? லோன் வேணூமா?எங்க பேங்க்ல அக்கவுண்ட் இருக்கா?

சார்.. டீக்கடைல அக்கவுண்ட் இருக்கு,  மளீகைக்கடைல அக்கவுண்ட் இருக்கு,ஆனா பேங்க்ல அக்கவுண்ட் இல்லை சார்.. 

3. அடப்பாவி.. எல்லார் கிட்டேயும் கடன் வாங்கியாச்சு.. இனி யார் கிட்டே போய் கடன் கேட்க..?

அப்பா.. எம் சி வாத்தியார் வட்டிக்கடை ஆரம்பிச்சிருக்கார்ப்பா/... 

பார்த்தியா? ஒரு மணீ நேரத்துக்கு முன்னால தான் தொழிலை ஆரம்பிச்சான்.. அதைக்கூட தெரிஞ்சு வெச்சிருக்கானே?

4. நான் தெரியாம தான் கேட்கறேன்.. உலகத்துல  கடன் வாங்காத பிஸ்னெஸ் மேன் யாரு?

5. கஜினி முகம்மது 17 முறை படை எடுத்தார்னு பாடம் படிக்கறப்ப நான் கத்துக்கிட்டது என்ன தெரியுமா?தோக்கறவன் எல்லாம் கண்டிப்பா ஒரு நாள் ஜெயிப்பான் சார்.. 

6. டாட்டா,பிர்லா பார்த்து யாரும் பொறாமைப்படறதில்லை..பக்கத்து வீட்டுக்காரனைப்பார்த்துத்தான் பொறாமைப்படறாங்க.

7. ஏய்.. ஆளைப்பார்த்தா சூர்யா மாதிரியே இருக்கானில்லை..?

அடிப்போடி.. எவனைப்பார்த்தாலும் நீ இப்படித்தான் சொல்றே?

. 8.அண்ணே.. எனக்கு அவசரமா 5000 ரூபா கடன் வேணூம்..

சிங்கம்புலி- அப்படியா.. அதோ அங்கே தூரத்துல நமீதா போஸ்டர் தெரியுதே... அதை ஓடிப்போய் தொட்டுட்டு வா..

ம்.. ஓக்கே அண்ணே

சிங்கம்புலி- சாரி உனக்கு லோன் தர முடியாது.. நீ மணீக்கு 180 கி மீ வேகத்துல ஓடறே,,, கடன் வாங்கறதுக்கு முன்னேயே இந்த ஸ்பீட்ல ஓடறவன் நாளை நான் கடன் வசூல் பண்ண வர்றப்ப எவ்வளவு ஸ்பீடா ஓடுவியோ?எப்படி உன்னை நான் துரத்தி பிடிச்சு வசூல்; பண்ண? 

9. எந்த ஊர்லயாவது அப்பாவைக்கேட்காம பையன் லோன் வாங்குவானா?என்னை கேட்டுட்டா நீ கடன் வாங்குனே?

அப்பா.. என்னை பிள்ளையா பெத்துக்கறதுக்கு முன்னே என்னை கேட்டுட்டா பெத்தீங்க?

10.  ஏண்டா இப்படி இருக்கே? உன் கூட படிச்சானே கோபி.. அவன் அவங்கப்பா பார்த்த வேலையே பார்க்கலை?

அவனோட அப்பா செத்திட்டதால அவரோட வேலை அவனுக்கு கிடைச்சுது.. ஹி ஹி

http://reviews.in.88db.com/images/eththan-audio/Eththan-Movie-Audio-Launch-Stills-Pics-Gallery-10.JPG11.அடடே..வாங்கண்ணே.. படம் பார்க்கவா வந்தீங்க?எந்திரன் படம் பிரம்மாண்டமா இருக்குமே?

டேய்.. நீ காட்டாத படத்தையா அவங்க காட்டிடப்போறாங்க?

12. நாங்க ஊருக்குப்போறோம்.. வீட்டை பார்த்துக்கோ..

ஒண்ணூம் அர்ஜெண்ட் இல்லை.. மெதுவா வாங்க/...

டேய்.. வீட்டை அடமானம் வெச்சுடாதேடா..

ஆமா, பெரிய மைசூர் பேலஸ்..


13. என்னை கடன்காரன்னு சொல்லு ஆனா சோம்பேறின்னு சொல்லாத./. விடி காலைல 4 மணீக்கே எழுந்து கிளம்பிடுவேன். நைட் 12 மணீக்கு தான் வீட்டுக்கே வருவேன்..

14. மேனேஜர் சார்.. சும்மா நக்கல் பண்ணாதீங்க.. உலக வங்கில இருந்து இந்தியா எவ்வளவு கடன் வாங்கி இருக்குன்னு தெரியுமா?

தெரியலப்பா.. என் பேங்க்ல இருந்து வாங்கி இருந்தாத்தானே எனக்கு தெரியும்..?

15. என் அனுமதி இல்லாம என் பேர்ல உலக வங்கி கடன் வாங்கறப்ப, எனக்காக நான் கடன் வாங்குனது தப்பா?

16. டேய் கடன் காரா.. என்னைக்காவது செல் ஃபோனை பயம் இல்லாம அட்டெண்ட் பண்ணி இருக்கியா?

17. எந்த பிஸ்னெஸ் மேனையாவது நிம்மதியா இருக்கேன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்?

18. டேய்.. ஒருத்தன் நம்மை திட்டிட்டாலே நம்மோட செல்ஃப் கான்ஃபிடண்ட் போயிடும்..

19. மேனேஜர் சார்.. நான் மாறிட்டேன் ...

எப்படி நம்பறது?

இப்போக்கூட பாருங்க.. லோன் கேட்டு வர்லை.. வேலை கேட்டுத்தான் வந்திருக்கேன்..

20. உனக்கு கலெக்‌ஷன் ஏஜெண்ட் வேலை செட் ஆகும். எப்படின்னா ஒரு கடன்காரன் எப்படி எஸ்கேப் ஆவான்னு இன்னொரு கடன்காரனுக்குத்தான் தெரியும்..

21. நீ இது வரை லோன் வாங்காத ரெண்டே பேங்க் 1. கண் வங்கி  2 பிளட் பேங்க்

22.சிங்கம்புலி- அடப்பாவி, நம்மளை பழி வாங்கறதுக்காகவே தேடிப்பிடிச்சு இந்த வேலை வாங்கி இருக்கான் போல..

23.  சிகரெட் பிடிக்கிறியே அறிவில்லை?

இருக்கற அறிவை யூஸ் பண்ணத்தான் சிகரெட் பிடிக்கிறேன்

24. உங்கப்பன் பேர் என்ன?

சிங்கம்புலி- அவருக்கு இன்னும் பேரே வைக்கலை

25.அப்பா.. ஏன்பா வீட்டை திறந்தே வெச்சிருக்கீங்க? திருடன் வந்துட்டா?

உன்னை விடப்பெரிய திருடன் எவன் வரப்போறான்?

26. சிங்கம்புலி- ரெயில்வே ஸ்டேஷன்ல செக்யுரிட்டிக்காக செக் பண்ணூவாங்க.. அப்போ எல்லாம் எரிச்சலா இருக்கும். ஆனா பாப்பா செக் பண்றப்ப ஜாலியா இருக்கு.. ஏன் நிறுத்தீட்டே? பேண்ட் பாக்கெட்லயும் செக் பண்ணு..

27.நான் உன் கிட்டே க்டன் வாங்குனப்ப நீ என்ன வெயிட்?

90 கிலோ

இப்போ?

60 கிலோ..

அப்போ என்னால என்னை துரத்தி துரத்தி நீ வெயிட் குறைஞ்சிருக்கே.. இப்படி உடம்பை குறைக்காம இருந்திருந்தா உனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.. ஒரு லட்சம் செல்வாகி இருக்கும்/..

28. அடியே எதுக்கு அவனோட காதலை மறுத்தே?உங்களுக்கு செல் பில் கட்ட மட்டும் ஆள் வேணூம்?

29. பசங்க பொண்ணூங்க பின்னால அலையறதால தான் பொண்ணூங்க மதிப்பே கூடுது.. எவனும் கண்டுக்கலைன்னா அவ்வ்வ்வ்வ்வ்

30. சிங்கம்புலி- நானும் மதுரைல தான் இருக்கேன்.. ஹலோ.. கேட்குதா? நான் பேசறது?

நான் மதுரை மாட்டுத்தாவணில இருக்கேன்..

சிங்கம்புலி- நான் மட்டும் என்ன மாட்டுப்பாவாடைலயா இருக்கேன்? நானும் அங்கே தாண்டா இருக்கேன்


31 சிங்கம்புலி-ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

ஹலோ.. பணம் ரெடி பண்ணிட்டியா?

என்ன நான் பேசறது எனக்கே கேட்குது?ஃபோன்ல ஃபால்ட் போல..


http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/03/Eththan-Movie-3-Stills.jpg
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோ ஹீரோயினை அவர்கள் சந்திப்பை ரொம்ப எதார்த்தமாக காட்டியது.. காதல் மலர்வதை கண்ணீயமாக காட்டியது.. ஹீரோயினை டீசண்ட்டாக காட்டியது..


2. மழை உதிர்க்காலம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் நீட்..

3. லோன் கொடுக்கும் முன் பிரைவேட் பேங்கர்ஸ் கஸ்டமர்சிடம் தொங்கி விட்டு பின் லோன் வசூல் பண்ணும்போது அடாவடி செய்வதை படம் பிடித்துக்காட்டியது..

4. எல்லா லோனும் செட்டில் ஆகும்போது குணா கமல் போல சிங்கம்புலி பார்த்த விழி பார்த்த படி பூத்துக்கிடக்க பாடல் காட்சியை  கலக்கலான காமெடி ஆக்கியது..

5. படம் பூரா காமெடி வசனங்க ளை அள்ளீத்தெளித்தது.. மொத்தம் 87 ஜோக்ஸ்

இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ அவ்வளவு கடனை வாங்கி என்ன பண்றார்? என்ன தொழில் முடக்கறார்? ஏன் லாஸ் ஆகுது என காட்டாமல் விட்டது..

2. ஹீரோவின் அப்பா இடைவேளை வரை திட்டி விட்டு திடீர் என பாச மழை பொழிவது..

3. வில்லன் கேரக்டர் பல படங்களில் பார்த்து புளித்துப்போன கேரக்டர்..

4. க்ளைமாக்ஸில் தேவை இல்லாத நீளம்..

இந்தப்படம் ஏ, பி  என 2 செண்ட்டர்களிலும் 30 நாட்கள் ஓடும், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று..

33 comments:

துரைராஜ் said...

முதல் படம்

துரைராஜ் said...

படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு சார்...!!

துரைராஜ் said...

அப்போ படம் நல்லா ஓடும்னு சொல்றீங்க இல்லையா சார்..?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிபி உன்னை நம்பித்தான் படம் பார்க்க போகப் போரேன்....

அப்படி சரியில்லேன்னு வை....
அப்புறம் மனோவை விட்டு நாரடிச்சிடுசேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவுல ஒண்ணு மிஸ்ஸிங்..
படம் எங்க பார்த்தீங்கன்னு சொல்லலியோ...

எப்படி கண்டுப்பீடிச்சேன் பார்த்தீங்களா..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்டீன்னா தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு இயக்குனர் கிடைத்துவிட்டாரா?

Unknown said...

எலேய் அண்ணே மார்க்கு சொல்லிட்டாரு ஒடுங்கய்யா தேட்டருக்கு ஹிஹி!

HajasreeN said...

lanka inum kaanam

Ram said...

எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவரின் படம் என்பதால் இதற்கு ஒரு ஓட்டு தட்டுகிறேன்.. படம் தானே.!! ஒண்ணாம் தேதி போகலாம்னு இருக்கேன்.. பாத்துபுட்டு சொல்றேன்..

MANO நாஞ்சில் மனோ said...

ராஸ்கல் நீ சொல்றதாலே படம் பார்க்குறேன்....

சிசு said...

சரி... போய் சிரிச்சுட்டு வரலாம்........

டக்கால்டி said...

Ok. Paarthuduvom

டக்கால்டி said...

Eppadi avlo dialogues nyaabagam vechu ezhuthareengalo...

டக்கால்டி said...

vaazhthugal si.bi sir

டக்கால்டி said...

What a fantastic post!

டக்கால்டி said...

Super, fantastic, excellent, marvelous, wonderful, mind blowing, terrific, scincilating, furious POST by annan SI.BI

ரேவா said...

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...எனக்கு ஒரு பதிவு எழுதவே மூச்சுத் தள்ளுது...இதுல ஒரு நாளைக்கு எத்தனை பதிவு.எழுதுவேங்க சகோ ..நான் அழுவேன்....

ரேவா said...
This comment has been removed by the author.
ரேவா said...

ரேவா said...

தம்பி கூர்மதியன் said...

எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவரின் படம் என்பதால் இதற்கு ஒரு ஓட்டு தட்டுகிறேன்.. படம் தானே.!! ஒண்ணாம் தேதி போகலாம்னு இருக்கேன்.. பாத்துபுட்டு சொல்றேன்..


வெளங்கிரும்...ஒரு மனுஷன் பாவம் படத்த பத்தி விமர்சனம் எழுதுனா, பிடிச்ச பொண்ணாம் அதுக்கு ஒட்டு போடுறாங்களாம்...இரு இரு அண்ணிட்ட சொல்லுறேன்... ஹி ஹி

Jana said...

ஒகே வாறன் :)

Jana said...

கவிஞர்களே… கொஞ்சம் மரபுக்கவிதைகள் ப்ளீஸ்…
http://janavin.blogspot.com/2011/05/blog-post_27.html

NKS.ஹாஜா மைதீன் said...

எத்தன் அப்ப ஜித்தன்னு சொல்லுங்க...

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்களுக்கு மட்டும் எப்படி தான் படம் பாக்க நேரம் இருக்கோ?

Unknown said...

வந்துட்டேன்....

Unknown said...

சிங்கம் புலியுடன் கூத்தா??இதென்ன மிருகப்படமா பாஸ்??

Unknown said...

ஆமா எல்லா திரை விமர்சனத்திலும் என பொண்ணுங்க முதுகை காட்டி நிக்கிறார்கள்??

Unknown said...

ஹஹா நமீதா ஜோக் சூப்பர்!!

மூ.ராஜா said...

உங்கள் விமர்சனம் படித்து வந்த சிரிப்பை இன்னும் அடக்க முடியவில்லை.. பதிவுக்கு நன்றி..

Napoo Sounthar said...

பதிவு சூப்பரோ சூப்பர்....

செங்கோவி said...

படம் நல்லா இருக்கும் போலிருக்கே..பார்த்திடுவோம்

உணவு உலகம் said...

படம், நல்லா போட்றீங்கண்ணே!

ரிஷி said...

நேற்றுதான் படம் பார்த்தேன். முதல் பாதி படம் சரியான மொக்கை. ஓரிரு காட்சிகளைத்தவிர சிரிப்பே வரவில்லை. சிறுவர்கள் வேண்டுமானால் ரசிக்க வாய்ப்பிருக்கிறது! இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுவென போகிறது.
மற்றபடி படம் சுமார்தான். இசை சகிக்கவில்லை.

தமிழ் சினிமா செய்திகள் said...

neenga padathoda startinglaye pogaliya??
poi iruntha avar enna thozhil panrar??
yen nashtam aaguthu nu therinjurukkum..