Sunday, May 22, 2011

தஞ்சாவூர் - ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்-ல் டாப் ஆனது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA5tnqrE9ygbL4hZjbai5M2j1ERZ1QQ61q7XVRAFmhd5s0rAS9dLiOZLB5FncnfqbuYPlDtm3Y4rUe1wxNBJH-cBhaTfG6e8UfjUmgL2xzXLS6wL6EYaPwqIIRFqmzxU3fYf9mPdd3fhQ/s1600/3442137158_4d7aedc55f.jpg

'ரியல்' வலம்' உள்ளது உள்ளபடி!


ணிக்கவே முடியாத விஷயங் களில் ஐந்தை குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அதில் நிச்சயம் ரியல் எஸ்டேட் விலை நிலவரமும் ஒன்றாக இருக்கும்! அந்த அளவுக்கு இன்று இத்துறை கணிப்புக்கும் யதார்த்தத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்குமான வித்தியாசத்தை விடுங்கள், அடுத்தடுத்த இடத்திலேயே விலையில் அவ்வளவு வித்தியாசங்கள் இருப்பது இத்துறையில்தான்சாத்தியம்.


இந்நிலையில் வாசகர் களுக்கு மனை, வீடுகளில் முதலீடு செய்வதற்கு உதவியாக ஒவ்வொரு நகரத்துக்கும் நமது நாணயம் விகடன் டீம் சென்று அப்பகுதியை 'இஞ்ச் பை இஞ்ச்’ ஆக அலசி விசாரித்து, விலை விவரங்களில் ஆரம்பித்து, எந்தப் பகுதியில் முதலீடு செய்தால் பின்னாளில் நல்ல லாபம் தரும், எந்த பகுதிகளில் எந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதுபோன்ற பல தகவல்களை திரட்டித் தர முடிவு செய்துள்ளது

. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய பகுதி. இது முதலீடு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் முடிவுகளை நீங்கள்தான் எடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாம்விசாரித்ததன் அடிப்படையில்  தோராயமாகத்தான் நிலவரங்களைத் தந்திருக்கிறோம் என்பதையும் மனதில் கொண்டு நீங்களும் நன்றாக விசாரித்து அதன்பிறகே முடிவெடுக்கவும்.

முதற்கட்டமாக இந்த இதழில் ஆச்சரிய வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கும் தஞ்சாவூர் நகரம் இடம்பெறுகிறது!


பெயர் சொல்லும்படியாக பெரிய நிறுவனங்களில்லை, பொருளாதார மண்டலங்கள் இல்லை, ஐ.டி. கம்பெனிகள் இல்லை... ஆனாலும் தஞ்சையில் கடந்த பத்து வருடங்களில் ரியல் எஸ்டேட் பிஸினஸ்  மட்டும் அசுரத்தனமான வளர்ச்சியை எட்டிப் பிடித்திருக்கிறது.

.. இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.


தஞ்சாவூர் நகரம் எப்படி இந்தளவுக்கு வளர்கிறது என்ற மர்மம் அந்த ஊர்க்காரர் களுக்கே பிடிபடவில்லை! ஒரு மேஜிக் மாதிரி இருக்கிறது என்று ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், கூர்ந்து பார்த்தால் இந்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பது உயர்கல்வித்துறையின் பங்களிப்பு என்பது தெரியவருகிறது.

அரண்மனை, பெரியகோயில் போன்ற இடங்களில் சுற்றுலாவாசிகளாய் மட்டுமே பார்க்க நேர்ந்த வெளிநாட்டுக்காரர்களையும், மற்ற மாநிலத்துக்காரர்களையும் இப்போது மாணவர்கள் ரூபத்தில் சர்வசாதாரணமாக எங்கும் பார்க்கமுடிகிறது. 

தமிழ்ப் பல்கலைக் கழகமும், பெரியார் மணியம்மை, சாஸ்திரா, பொன்னையா ராமஜெயம் போன்ற நிகர்நிலை பல்கலைக் கழகங்களும், மருதுபாண்டியர், மாணிக்கம், பாரத், விவேகானந்தர், கிங்ஸ், அஞ்சலையம்மாள், அக்ஸிலியம் போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாடத்திட் டங்களை வழங்குவதால் தஞ்சாவூர் நகரம் உயர்கல்விக்கான நகரமாக மாறிவருகிறது.

விரிவுபடுத்தப்படும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், அரியலூர் சாலைகளை இணைக்கும் வகையில் போடப்பட்டுள்ள புறவழி சாலைகளும்  கூடுதலாக இந்த வளர்ச்சிக்குக் கை கொடுக்கிறது. 

இந்த கிடுகிடு வளர்ச்சிகளால் கடந்த மூன்று வருடங்களுக்குள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரியல் எஸ்டேட் பிஸினஸும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவதாகச் சொல்கி றார்கள் ஏரியாவாசிகள்.

''1987-ல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கட்டுமென்று இங்கு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி குடிவந்தேன். அப்போது, ஒரு சதுர அடி மூன்று ரூபாய் ஐம்பது காசு. பத்திரப் பதிவு செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தமே 9,500 ரூபாய்தான் செலவானது. ஆனால், இன்று ஒரு சதுர அடி மட்டுமே ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிட்டது என்கிறார் இ.பி. காலனியில் குடியிருக்கும் சுகுமாரன்.


இதே நிலைதான் புது ஹவுசிங் யூனிட் ஏரியா, காவேரி நகர் பகுதியிலும். மாதாகோட்டை ரோடு இடதுபக்கம் சதுர அடி 500-லிருந்து 800 ரூபாய்வரையும், வலதுபக்கம்  700-லிருந்து 800 ரூபாய்வரையும் விலை போவதாகச் சொல்கிறார்கள். இதுவே இ.பி.காலனி உள்ளேயும், காவேரி நகர் விரிவு உள்ளேயும் 600 ரூபாய்க்கு விலை போகிறது.

 விளார் ரோடு, புதுவன்சாவடி பகுதிகளில் புதிதுபுதிதாக லே அவுட்களைப்  பார்க்க முடிகிறது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி சாலையில் பஞ்சுமில் பகுதிக்கு அடுத்து ஆர்வம் காட்டாதவர்கள் இப்போது மளமளவென வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

 பாரத் காலேஜ் பின்புறம், ரகுமான் நகர் போன்ற நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் இப்போது ஹாட் ஸ்பாட். இதுவே மேல வஸ்தா சாவடி, ஆர்.டி.ஓ. ஆபீஸ், பிள்ளையார்பட்டி ஆகிய இடங்களில் ஆவரேஜ் ஆகப் போய்க்கொண்டிருக்கிறது. பைபாஸ் சாலை வந்ததிலிருந்து வல்லம் பகுதியும் இப்போது விலை எகிறுவதாகச் சொல்கிறார்கள்.

அப்படியே விளார் ரோடு வழியாக பைபாஸை ரவுண்டு கட்டினோம். புதுவன்சாவடியில் 120-130, விளார் ரோடு 120, பட்டுக் கோட்டை பைபாஸில் 300, கீழ வஸ்தாசாவடி பகுதிகளில் 200-250-300 எனவும், கும்பகோணம், திருவையாறு பைபாஸ், பள்ளியக்ர ஹாரம் பகுதிகளில் பூஞ்சோலை நகர், ராஜீ நகர், ராகவேந்திரா நகர், விவேகானந்தா நகர் என பல லே அவுட்கள் 250-350 என கை மாறுகின்றன.திருச்சி சாலையோடு திருவை யாறு சாலையை இணைக்கும் வட்டச் சாலைக்காக ஐடியல் ஓட்டல் தாண்டி அருகே ஜம்பு காவிரி வடகரை பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளதால் ராஜேந்திரன் ஆற்காடு, வடகால், வெண்ணலோடை, சர்க்கரை சாமந்தம் கிராமங்களில் ரியல் எஸ்டேட்காரர்கள்  இடங் களை மொத்தமாக வாங்கி வருவதாகச் சொல்கிறார்கள்

. இன்னும் சில ஆண்டுகளில் இந்த பகுதிகளின் பிளாட் மதிப்பு உயர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த பகுதிகளில் நிலத்தை வைத்திருப்பவர்கள் விற்பதற்கு அவசரம் காட்டவேண்டாம். இதை ஒட்டிய அம்மன்பேட்டை பகுதியில் ஒரு சதுர அடி 200 வரை எகிறுகிறது.


பொதுவாக தஞ்சையில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்துவரும் நிலையி லுள்ளதால், பெரிய அளவில் மோசடிகள் நடப்பதில்லை என்கிறார்கள். ஆனாலும், தஞ்சையின் நான்கு பக்கங்களிலும் பெரிய பெரிய லே அவுட்களைப் போட்டு வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலங்களை உரிமையாளர்களிட மிருந்து வாங்குவதில் ஏற்படும் குளறுபடிகளோடே விற்பனை செய்கிறார்களாம். இதனால் கூடுதல் கவனம் தேவை. 

நகராட்சி பகுதிக்குள் இடம் வாங்கி வீடுகட்டுவதைவிட, கொஞ்சம் அரை பர்லாங் தள்ளி ஊராட்சி பகுதிக்குள் வாங்கும் போது வீடுகட்ட அனுமதி வாங்கும் நடைமுறைகள் சுலபமாக இருப்பதாகவும், அதேபோல மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு போன்றவற்றுக்கான அலைச்சல்கள் குறைவதாகவும் சொல்கிறார்கள்.

அடுக்குமாடிக் குடி யிருப்புகள் வளரவில்லை என்றாலும், சமீபகாலமாக அங்கொன்றும் இங்கொன்று மாக சில பில்டர்கள் கட்டி வருகிறார்கள். ''தனி வீடு கட்டுவதற்குரிய இடங்கள் தாராளமாகக் கிடைப்பதால், மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளை விரும்புவ தில்லை'' என்கிறார் கட்டடகான்ட்ராக்டர் த.அண்ணாதுரை.  ''கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும், குழந்தைகளின் படிப்புக்காக நகரத்துக் குள்ளேயே ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டிவிட்டேன்'' என்கிறார் பள்ளியக்ரஹாரம் ஏ.கருணாகரன்.

http://www.indiamike.com/photopost/data/501/Th_Periya_Kovil.JPG
இதுபோன்ற காரணங்கள் பல இருந்தாலும், தஞ்சையிலிருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாமென்பதும், பேருந்து, ரயில் வசதி அடிக்கடி இருப்பதால் திருச்சியில் இடம் வாங்க முடியாதவர்களும் தஞ்சையில் மனை வாங்கிப் போடுவது சர்வசாதாரணமாக இருக்கிறது. சமீபகாலமாக மேன்சன் மாதிரிகட்டி வாடகைக்கு விடுவதும் சக்கைபோடு போடுகிறது.


-மகேந்த்.

படங்கள்: கே.குணசீலன்.
டிப்ஸ்
புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உடனே வீடு கட்டி குடிபோக வேண்டுமென்றால் பஞ்சுமில் பகுதி, திருவேங்கடம் நகர்,  நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி.காலனி, எழில் நகர், ராஜப்பா நகர், மாதாகோட்டை ஊராட்சி, நீலகிரி ஊராட்சிகளில் மனைகள் கிடைக்கிறது. டி.பி.எஸ்.நகர், கண்ணன் நகர் இடங்களிலும் மனைகள் உள்ளன. இவையல்லாமல் கரந்தை, ரெட்டிபாளையம் பகுதிகளிலும் தோதான இடங்கள் உள்ளன. இடத்தை வாங்கிப்போட்டு பணத்தை இரட்டிப்பாக்க நினைப்பவர்கள் திருச்சி சாலை, வல்லம் பகுதி, மாரியம்மன் கோவில், அம்மன்பேட்டை பகுதிகளில் வாங்கிப்போடலாம். மெயின் சாலையிலிருந்து உள்ளே போகப்போக விலை குறையக்கூடும். உங்கள் தோதுபடி தூரத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம்.

புரோக்கர்கள், பவர் வாங்கியவர்கள், கை மாற்றிவிடுபவர்கள் என சகட்டு மேனிக்கு ஆட்கள் தஞ்சைக்குள் வலம் வருகிறார்கள். உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டுமே அணுகுங்கள். ஹவுசிங் யூனிட் ஏரியா, அருளானந்தம் நகர், யாகப்பா நகர் போன்ற இடங்களில் இடமோ, வீடோ கைமாறுவது வெளி உலகுக்கு வருவதில்லை, அரசியல் புள்ளிகளின் ஆசீர்வாதத்தில் உள்ள பகுதியானதால் இங்கு இடம் பார்ப்பது சாமான்யமில்லை.

20 comments:

Unknown said...

எப்பிடி??

Unknown said...

அது தான் எப்பிடி??

Unknown said...

சண்டே....சிபியின் மண்டைக்கு ஹாலிடே!!

Unknown said...

யோவ்...என்னய்யா பதிவை கூட காப்பி பண்ண முடியவில்லை..
ஆபுரம் எப்பிடி சுட்டி காட்டுறதாம்!!

Unknown said...

ஆட்டோமேட்டிக் ரிலீசா??

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஆட்டோக்காரரை காணவில்லை??

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு

MANO நாஞ்சில் மனோ said...

அடேய் சிபி, வாத்தியை ரெண்டு போடு போடுய்யா போற இடமெல்லாம் ரைட்டு லேப்ட்டுன்னு கமெண்ட்ஸ் போடுறான் ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

தஞ்சாவூர் ஆளுங்களுக்கு வசதியா போச்சு, ம்ஹும் அப்பிடியே நாகர்கோவில் பக்கமும் வாடே மக்கா...

தினேஷ்குமார் said...

ஹைய்யோ கண்ணக்கட்டுதே .... என்ன பாஸ் ஆச்சு உங்களுக்கு புது பட விமர்சனம் போடுவீங்கன்னு பார்த்தா உங்க ட்ரண்டையே மாத்திட்டீங்களே ஏன் பாஸ் ஏன் .... நான் இல்லாதப்பா யாராவது கலாட்டா பண்ணாங்களா சொல்லுங்க பாஸ் .... சொல்லுங்க

கவி அழகன் said...

என்ன ஒரு அலசல்
நீங்க ரியல் எஸ்டேட் செய்கிறீர்களா

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கார்த்தி said...

ஐயோ இது எனக்கு விளங்காத டொப்பிக்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி நான் நேற்றும் கேட்டிருந்தேன், உங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் என்னாச்சு? ஏன் பதிவுகள் சப்மிட் ஆகுதில்லை? அவர்களுடன் பேசினீர்களா? என்ன நடந்தது? தயவு செய்து பதில் சொல்லுங்கள்! உங்களது அடுத்த பதிவை நான் தமிழ்மணத்தில் காணவேண்டும்!! ஆவன செய்யுங்கள்!!!

Jana said...

ரியல் எஸ்டேட் :))

உணவு உலகம் said...

Present Sir

குணசேகரன்... said...

Usefull.keep it up...

நிரூபன் said...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரியஸ் எஸ்டேட் பற்றிய விளக்கங்கள், அருமை.

...αηαη∂.... said...

15 வருடங்களுக்கு முன்பு கிட்டதட்ட 5 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த தஞ்சை இப்போது 20 கிமீட்டர் சுற்றள்வு கொண்ட நகரமாக மாறியுள்ளது.., அதே போல் தஞ்சை நகரில் அரசு பணியில் இருப்பவர்கள் அதிகம் அவர்கள் பிள்ளைகள் இப்போது பெரும்பாலும் கணிப்பொறி துறையில் வேலை பார்ப்பதும் விலையேற்றத்துக்கு காரணம் ஆகும்...,