Sunday, May 22, 2011

கோயில்களில் மண்டல பூஜை எதற்காக? ஆன்மீக கேள்வி-பதில்கள் -சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

http://2.bp.blogspot.com/_f0nRbfd5SW4/TOvIBxexHTI/AAAAAAAAALg/wW6VEqjYfzQ/s1600/IMG_4643.JPG 

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


1. கோயில்களில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துகிறார்களே... இதற்கான தாத்பரியம் என்ன?


- கார்த்திக்குமார், இடையபாளையம்

பொங்கல் விழா முடிந்த பிறகு கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் விழா நீளும். திருமணத்திலும் பூணூல் கல்யாணத்திலும் முகூர்த்தம் முடிந்த பிறகு நான்கு நாட்கள் விழா இருக்கும். திருமணம் முடிந்த பிறகும் வரவேற்பு நிகழ்வு என்ற பெயரில் விழா தொடரும். 

தேன்நிலவு என்பதும் அதில் இணையும். ஆலயங்களில் உற்ஸவ நாள் முடிந்த பிறகும் விடையாற்றி உற்ஸவம் என்ற பெயரில் அது தொடரும். காசி - ராமேஸ்வரம் தீர்த்தாடனம் முடிந்தபிறகு, வீட்டில் காலபைரவ ப்ரீதி, கங்கை பூஜை, ஸமாராதனை என்று விழா தொடரும்.
மருந்து சாத்தி இறையுருவத்தை நிலைநிறுத்தி கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் 48 நாட்கள் பூஜை தொடரும். இறைவன் சாந்நித்யம் நிலைத்திருக்க, கும்பாபிஷேகத்தின் அங்கமாகவே அது செயல்படுகிறது. தவிர, நித்திய பூஜைகளில் பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்களின் தாக்கத்தால் மருந்து கலையாமல் நிலைத்திருக்க, குறிப்பிட்ட அபிஷேகப் பொருள்களோடு மருந்தை ஸ்திரப்படுத்தவும் பயன்படுகிறது. 
 
48 நாட்களில் அதன் ஸ்திரத்தன்மைக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.பிணியில் இருந்து விடுபடுவதற்கு கடும் பத்தியத்துடன் சிகிச்சை நடைபெறும். அதன்பிறகு 'மறு பத்தியம்’ என்ற பெயரில் மருந்தில்லாமல் பத்தியம் தொடரும். இது, சிகிச்சை முடிந்த பிறகு 40 நாட்கள் தொடரும். வேலையில் அமர்ந்தவன், பணியில் இணைந்த அன்றே நிரந்தரமாவதில்லை. ஒரு வருஷம் வேலையில் இருந்த பிறகே நிரந்தரமாகிறான். அதுபோலத்தான் இதுவும்.
 
கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 12-வது வருஷத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். அதுவரைக்கும், சாத்திய மருந்து உருக்குலையாமல் இருக்க, வரையறையுடன் நிகழ்த்தப்படும் மண்டலாபிஷேகம் பாதுகாப்பாகவும் இருக்கும்.

------------------------------------------------

2. ஆலயங்களில், எந்தத் திசையை நோக்கி தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும்?

- வி.ரவிச்சந்திரன், சென்னை-18

கிழக்கு, வடக்கு திசைகளை நோக்கி தீபம் இருப்பது சிறப்பு. இடநெருக்கடி காரணமாகவோ அல்லது கிழக்கு-வடக்கு திசைகளை நோக்கி தீபமேற்ற இயலாத சூழலிலோ மேற்கு திசை நோக்கியும் தீபம் இருக்கலாம். ஆனால், தெற்கு தவிர்க்கப்பட வேண்டும்.
 
இரண்டுமுகமாக ஏற்றி வைக்கும் தீபம், கிழக்கு- மேற்காக இருக்கலாம். ஐந்து முகமானால், திசைகளைப் பற்றிக் கவலைப் படாமல் தீபம் ஏற்றலாம். அலங்கார தீபமும், பஞ்சமுக தீபமும் எல்லாத் திசைகளை நோக்கியும் இருக்கும்.

இது ஆலயங்களுக்கு மட்டுமான விதி இல்லை; வீடுகளிலும் தெற்கு திசையைத் தவிர்க்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்த்த சந்நிதிகளைக் கொண்ட கருவறை தீபங்களுக்கு, திசையைப் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. வடக்கும் தெற்குமாக தொங்கு விளக்கு வரிசைகள் இருக்கும். ஐந்து முகம் வரும் இடங்களில் எல்லாம் திசைகளைப் பார்க்க வேண்டாம்.

ஈசனுக்கு எந்த திக்கிலும் விளக்கு இருக்கலாம். இந்த நியமங்கள் அத்தனையும் நமக்காக ஏற்பட்டவை. ஒளிமயமானவனுக்கு திசை ஏது? திசை என்பது நமது கற்பனை.

தீப ஒளி நான்கு திசைகளையும் நோக்கியே இருக்கிறது; நான்கு திசையிலும் ஒளிப்பிழம்பு இருக்கும். ஒளியின் பரவல் எல்லாத் திசைகளிலும் இருக்கும். திரியையும் தீபத்தையும் வைத்தே திசையை நிர்ணயம் செய்கிறோம்; ஒளியை வைத்து நிர்ணயம் செய்ய இயலாது.

-------------------------------------------

3. வீட்டில் வழிபடும்போது சாம்பிராணி புகை போடுவது போல், குங்கிலிய தூபம் இட்டும் வழிபடலாமா?
 
- ஆர்.கோபாலகிருஷ்ணன், சென்னை-42

தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன் படுத்தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.
 
'அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருந்தார்கள். இவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர் வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் 'பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள்.

அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய வடிவில் தென்பட்டது. அது நெருப்போடு இணைந்ததும் உருகி புகையை வெளியிட்டது; அக்னி பகவான், தன்னுடைய சகோதரரின் சேர்க்கையில் மகிழ்வதாக எடுத்துக்கொள்ளப் பட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆகையால் தூபத்துக்கு குங்குலியம் பயன்படுத்துவது சரிதான். கடவுள் வழிபாட்டில், 16 உபசாரங்களில் 'தூப’ உபசாரமும் ஒன்று. அதற்கு, 'தைவிகஸம்பந்தம்’ இருப்பதும் சிறப்புதான்.

 -------------------------------------------
4. முதல் நாள் மாலை ஸ்வாமிக்குச் செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தை எப்போது களையலாம்? மறுநாள் அலங்காரத்தைக் கலைத்து, நித்திய அபிஷேகம் செய்யலாமா? அல்லது அதற்கும் அடுத்த நாள் காலையில்தான் களைய வேண்டுமா?

- ஆர்.சேதுராமன், திருவூர்

முதல்நாள் சாத்தப்படும் சந்தனக்காப்பை, மறுநாள் காலையில் கலைத்து நித்யாபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று கலைக்காமல் இருந்துவிட்டு, அதற்கும் மறுநாள் கலைப்பது என்பது சரியல்ல. ஸ்வாமிக்கு ஒருநாள் நித்யாபிஷேகம் தடைப்பட்டுவிடும். 
 
தினமும் காலையில் அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும் என்பதால்... அலங்காரத்தில் இருக்கும் அழகை கலைக்க விருப்பம் இல்லாமல் ஒருநாள் தள்ளிப்போடுவது, நித்ய பூஜையை தடை செய்வதாகும். இரவு தாண்டிவிட்டால் அலங்காரம் பழசாகிவிடும். எனவே, மறுநாள் காலையில் களைவதில் தவறில்லை.
 
பூஜை விதிக்கு உடன்படாத நமது விருப்பத்தை செயல்படுத்தக் கூடாது. அலங்காரத்துடன் இரவில் உறங்கச் செல்லும் நாம், மறுநாள் நீராடி புது அலங்காரத்தை ஏற்போம். ஸ்வாமிக்கும் நித்ய பூஜைக்கு குந்தகம் இல்லாமல் செயல்படுவது சிறப்பு.

---------------------

5. 'தீதுறு நக்ஷத்திரங்கள்’ எனும் ஒரு பாடலை, பஞ்சாங்கத்தில் பார்க்க முடிகிறது. அதுபற்றி விளக்குங்களேன்?

- ஜி.ராமதாஸ், ஆடுதுறை

தென்படும் பொருள்களில் நல்லது, கெட்டது இரண்டும் இணைந்து இருப்பது நியதி. அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு, ஏற்கவோ துறக்கவோ வேண்டும். சிலர் 8, 13 ஆகிய எண்ணிக்கையை கெட்டதாகப் பார்ப்பது உண்டு. உயர்வை அளிக்கும் விஷயத்தில், ஒத்துழைக்காதவற்றை ஒதுக்கிவிடுவது உண்டு.
 
கரும்பில் கணுவையும், பலாவில் தோலையும், நெல்லில் உமியையும் களைவோம். இப்படிக் களைய வேண்டியதைக் களைந்து, ஏற்க வேண்டியதை ஏற்பது உண்டு. விண்வெளியில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் தரத்தில் ஒன்றானாலும், பயனில் இருக்கும் மாறுபாட்டை கருத்தில்கொண்டு, உயர்வுக்கு ஒத்துழைக்காதவற்றை ஒதுக்குவது உண்டு.
 
பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம் பூரட்டாதி, விசாகம், கேட்டை - இவற்றை விலக்கவேண்டும்; இவற்றில் முகூர்த்தமோ, பயணமோ கூடாது என்கிறது சாஸ்திரம் (யமருத்ரஹி...). சுவாதி, சித்திரை, மகம் - இந்த மூன்றும்கூட, குறிப்பிட்ட முகூர்த்தத்தில் விலக்களிக்கப்பட்டிருக்கிறது. இப்படி, விலக்கவேண்டியவை பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றுக்கு  தீதுறு நக்ஷத்திரங்கள் என்று பெயர்.

---------------------------------------------
6. என் பேரன் பிறந்தது 2006 ஜனவரியில். எனில், அவனுக்கு எப்போது பூணூல் கல்யாணம் பண்ணிவைக்கலாம்? இந்த வைபவத்தை 8-வது வயதின் துவக்கத்தில் செய்யவேண்டுமா அல்லது 8 வயது பூர்த்தியானதும் செய்யவேண்டுமா?

- ராதா, சேலம்

ஏழு வயது நிரம்பினால் 8-வது வயது ஆரம்பமாகும். அது முடிவதற்குள் செய்ய வேண்டும். வயதைக் கணக்கிடும்போது, கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 6 வயது நிரம்பி 2 மாதங்கள் ஆன நிலையில், கர்ப்பத்தில் இருக்கும் 10 மாதங்களையும் சேர்த்தால், 7 வயது பூரணமாகும். அதாவது 8-வது வயதில் ஆரம்பம். அதுமுதல் 8-வது வயது முடியும் வரையிலான காலகட்டத்தில் பூணூல் கல்யாணம் செய்யவேண்டும்.

2012 மார்ச் முடிந்தால் தங்கள் பேரனுக்கு 7 வயது நிரம்பிவிடும் (கர்ப்பகால 10 மாதங்களையும் சேர்த்து). 2013 மார்ச் மாதத்துக்குள், பூணூல் கல்யாணத்தை நடைமுறைப்படுத்தலாம். அதிலும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை, தடங்கல்கள் ஏதேனும் ஏற்பட்டால், 2014 மார்ச் வரை நடைமுறைப் படுத்தலாம்.

நன்றி - விகடன்

15 comments:

நிரூபன் said...

இனிய இரவு வணக்கங்கள்! ஆன்மீக அண்ணலே!

நிரூபன் said...

தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன் படுத்தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.//

அவ்....
ஏன் பெற்றோலும் பயன்படுத்தலாம் தானே.
ஓ இது காமெடிப் பதிவல்ல், ஆன்மீகப் பதுவு.
சீ..மறந்தே போயிட்டேன்.

நிரூபன் said...

என் பேரன் பிறந்தது 2006 ஜனவரியில். எனில், அவனுக்கு எப்போது பூணூல் கல்யாணம் பண்ணிவைக்கலாம்? இந்த வைபவத்தை 8-வது வயதின் துவக்கத்தில் செய்யவேண்டுமா அல்லது 8 வயது பூர்த்தியானதும் செய்யவேண்டுமா?//

இந்தக் கேள்வியைக் கேட்டவர் யாரு?
சிபி ராதா சென்னிமலையில் இருந்தா.

ஐயோ, ஐயோ. ஐயோ!
சிபிக்கு பேரன் வேறு இருக்கா. சொல்லவேயில்லை.

நிரூபன் said...

ஞாயிறன்று ஆன்மீக மழை பொழியும் அண்ணலே!
பதிவுலக வள்ளலே!
சென்னிமலை செல்வமே!
மண்ணுலகின் நம்பர் ஒன்
நதியே!
நீ வாழி!

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபனுக்கு ஒரு மைனஸ் ஓட்டு போடலாமா?ன்னு யோசிக்கிறேன் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

இன்ட்லியும் புட்டுகிச்சா....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் ஒரு நாளைக்கு எத்தனை பதிவு போடுவே...??/

ஆன்மீக பதிவுன்றதாலே திட்டாம போறேன் ஜாக்குரதை...

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல உனக்கு ஒரு பரிகாரம் பண்ணனும் அப்போதான் நீ சரிப்படுவே...

கவி அழகன் said...

எங்க ஐயா இந்த தகவல் எல்லாம் எடுக்கிறியள்
எல்லாம் தெரிந்த ஆன்மீக அண்ணலே
வணக்கம்

கவி அழகன் said...

அரோகரா அரோகரா அரோகரா

Unknown said...

விடுகதையா இந்த வாழ்கை......விடைதருவார் யாரோ....உனது தமிழ்மணம் அடித்ததுவோ...!

Anonymous said...

யோவ் என்ன திருந்திட்டீரா?
கண்டேன் விமர்சனம் எங்கே?
அதுல வர்ர சந்தானம் டயலாக்ஸ் எல்லாத்தையும் தொகுத்து இன்னும் 24 மனித்தியாலதுக்குள்ள விமர்சனம் போடவும், இல்லனா நடக்குறதே வேற... நாமளும் எவ்வளவு நாள்தான் வெயிட் பண்றது?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு!
சேஷாத்ரி நாதன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த சோதிடரும் ஆவார்!