Tuesday, May 24, 2011

சாந்தனு கே பாக்யராஜ் -ன் கண்டேன் - சந்தானம் காமெடிக்காக... - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj45BcpNxS8CNwv8NyTH0fYkYGgUCF33bE5tu6mHeFsLRuc_Wbf0A32Sw41frmf8xGAZUvjDvxPnahLNAbfgLWOeh2DQvZ7-3ouEyWAJTwvrAS5L2foXSN1x-VFo5dQZ7YmVD9kpOxkW0yJ/s1600/kaa.PNG

சக்கரக்கட்டி,சித்து பிளஸ் 2 என தொடர் தோல்விக்குப்பின் கண்டேன் படம் தந்ததன் மூலம் திறமையும்,நடன லாவகமும் கொண்ட இளம் ஹீரோ தொடர்ந்து 3 தோல்விப்படங்கள் கொடுத்த முதல் ஹாட்ரிக் தோல்வி ஹீரோ என்ற  பெயர் பெறும் சாந்தனு பாக்யராஜ் சந்தானத்துடன் கை கோர்த்த ஆஃப்பாயில் காமெடி படம்.( கே பி சார் என்னை மன்னிச்சு..)

காதலுக்காக தனக்கு கண் தெரிலைன்னு பொய் சொல்லி காதலிக்கும் ஹீரோ உண்மை வெளில வந்ததும் வெறுக்கும் ஹீரோயினை தாஜா பண்ணி லவ்வும்போது நிஜமாவே  ஒரு விபத்தில் தற்காலிகமா கண் பார்வை பறிபோகிறது. அதை காதலிக்கு தெரியாம எப்படி சமாளிக்கிறார் என்பதே காமெடி கலந்த திரைக்கதை.. ( தாஜா என்பது தமிழா? #டவுட்டு)

என்னதான் செகண்ட் ஆஃப் செம காமெடி கடியா இருந்தாலும் படத்தோட பேசிக் நாட் ( BASIC KNOT  )ஏத்துக்கற மாதிரி இல்லாததால இந்த படம் தேறாதுன்னு 2  வது ரீல்லயே முடிவு பண்ணிட்டாங்க ஜனங்க.. 

அதாவது காதல் என்பது தானா வரனும், பரிதாபத்தின் மூலமா வரக்கூடாது.. ஹீரோயின் கண் பார்வை தெரியாதவங்களுக்கு ரோட்டை கிராஸ் பண்ண உதவி பண்றா.. உடனே ஹீரோவும் கண் தெரியாத மாதிரி ஆக்ட் குடுத்து அனுதாப ஓட்டு வாங்கறான். என்ன கேனத்தனமான கான்செப்ட் இது?(இதே கரு ஆங்கிலத்துல ஹாலிவுட்ல  வந்தா கை தட்டுவே..)





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXnS6ukKrsmbshxfQ_3ApojVye9iG3auFPsXJIDWcJbtMgvcUxWw0bOrsVys0UelZFX1VWHQ1q57qFm02rAm0rbJOI3n_eUM7k6wUBbHGIIBYM03akbdM807HjGCXCQL3VNZWkbsGN5yHh/s1600/Kandaen_hitting+screens_review.jpg
ஹீரோயின் எப்பவாவது நான் கண் பார்வை இல்லாதவனைத்தான் கட்டிக்குவேன்னு சபதம் போட்ட மாதிரியும், அதை ஹீரோ ஒளிஞ்சிருந்து பார்த்த மாதிரியும் கதை எழுதுனா கோபம் வராதா?( சரி சரி .. விட்றா.. )

சாந்தனுவோட நடிப்பு ஓக்கே.. நடனமும் டபுள் ஓக்கே.. ஆனா ஃபைட் சீன்ல வர் பண்றது ரொம்ப ஓவர்.. ஹா ஹா ( அப்பா டான்ஸ்ல வீக்.. மகன் ஃபைட்ல வீக் )

ஹீரோயின் ரொம்ப சுமார்.. 35 மார்க் தான்.. ( பார்டர்ல பாஸ்.. அப்போ பார்டர்ல ஃபெயில் ஆகனும்னா 34 மார்க்கா? )

சந்தானம் காமெடியில் களை கட்டிய காமெடி வசனங்கள்

1.  சந்தானம் - மேடம்.. டெயிலி இங்கிலீஷ் நாவல் படிக்கிறீங்களே? ஏன்?

ஏன்னா தமிழ் பேப்பரை விட இங்கிலீஷ் பேப்பர் தான் செம டேஸ்ட் சாப்பிட.. ( அடங்கோ.. லூசா நீ? )

2.  என்னை நீங்க லூஸூன்னா நினைக்கறீங்க..? 

சந்தானம் -சிம்ப்டம்ப்ஸ் பார்த்தா அப்படி தெரில.. ஆனாலும் நீங்க லூஸ்தான் ஹி ஹி

3. சந்தானம் -அடிபட்டு வந்தவனுக்கு ஆல்ஹஹால்வரலைன்னு ஒரு ஃபுல் ரெடி பண்ண ட்ரை பண்ணுணியே நீ தாண்டா என்  சாதா ஃபிரண்ட் இல்லடா.. ஃபுல் ஃபிரண்டு...


4. மச்சான்.. நீ தான் என் கூடவே இருந்து...... 

சந்தானம் -உனக்கு மாமா வேலை பார்க்கனும்கறியா?

ம்ஹூம்.. என் காதலுக்கு உதவனும்.. 

சந்தானம் -ரெண்டும் ஒண்ணுதான்... 

5. எனக்கு வந்த ஃபோன் அப்பா கிட்டே இருந்துன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

சந்தானம் -பொதுவா பொண்ணுங்க வீட்ல இருக்கறப்ப ஃபோன் வந்தா அது பாய் ஃபிரண்ட் கால். வெளில இருக்கறப்ப ஃபோன் வந்தா அது அப்பா வோட கால்.. 

6.  சந்தானம் -டேய் நாயே.. நீ ஸ்டார்ட் பண்ணி விட்டுட்டு போயிடு.. நான் இங்கே  செத்து சுண்ணாம்பு ஆகறேன்..

7. (விண்ணைத்தாண்டி வருகிறாயா படத்தின் ரயில் கிஸ் சீன் ஓடுது தியேட்டர்ல - படத்துக்குள்ள படம் )

ஹீரோ - முடிச்சுட்டானா?

ஹீரோயின் - என்னது?

ஹீரோ - தியேட்டர்ல எல்லாரும் சைலண்ட்டா இருக்காங்களே.. படத்தை முடிச்சுட்டாங்களா?ன்னு கேட்டேன்..

8.  உன்னை இண்ட்டெலிஜெண்ட் கேர்ள்னு நினைச்சேன்.. இப்படி இடியட்டா இருக்கியே.. ப்ளைண்ட் பாய்னா  ( BLIND BOY) அவனுக்கு ஹெல்ப் பண்ணுனா ஓக்கே.. லவ் பண்ணுனா?

9.மனசுக்குப்பிடிச்சவங்களை சந்தோஷப்படுத்துறதுதான் காதலோட வேலை.. சங்கடப்படுத்தறது இல்லை..
10.  சந்தானம் -விடுடா.. அரேஞ்ஜ்டு மேரேஜ்க்கே  1000 பொய் சொல்றப்ப லவ் மேரேஜ்க்கு லட்சம் பொய் சொல்லலாம்..

11. ஏமாத்தறவங்களை விட ஏமாந்து போறவங்க மேல தான் தப்பு ஜாஸ்தி..
12.. இந்த மோதிரத்தை அவ கைல போடு.. 

சாரி.. கைல போட முடியாது.. விரல்ல தான் போட முடியும்..

13. சந்தானம் -அவனவன் காசுல சாப்பிட்டா தக்காளி ஊறுகாய் தான் ஆர்டர் பண்ணூவானுங்க.. அடுத்தவன் காசுல  சாப்பிட்டா ஆமைக்குஞ்சு ஆர்டர் பண்ணூவானுங்க.. 

14. வில்லனுக்கு பயந்து  கார்க்கு பக்கத்துல ஒளிந்து இருக்கும் சந்தானத்திடம்..

தம்பி.. கொஞ்சம் எந்திரி வாமிட் எடுக்கனும்..

சந்தானம் -டேய் நாயே.. இங்கே இவ்வளவு இடம் இருக்கே? அங்கே எல்லாம் போகாம...

15. அந்த லேடி டாக்டர் ரொம்ப நல்லவங்கடா..

சந்தானம் -ஆமாமா.. செமயா இருக்காங்க.. 

16.  சந்தானம் -ஆஹா.. சக்கரக்கட்டி இன்னைக்கு கரைஞ்சிடுவான்..  

17. என்ன சாப்பிடறீங்க?

ஒண்ணும் சாப்பிடலையே.. ஆ.. வாயை நல்லா பார்த்துக்குங்க..

அய்யோ கடிக்காதீங்க இப்போ என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டேன்.

18.சந்தானம் - அடேய்.. ஃபிரண்ட்ஷிப்னா தமிழ்ல பலி ஆடுன்னு அர்த்தமாடா? இப்படி வெட்றீங்களே?

19.  ஏண்டா.. போலீஸ் கிட்டேயே பொய் சொல்றியா?

சந்தானம் -வக்கீல் கிட்டேயும், டாக்டர் கிட்டேயும் தான் பொய் சொல்ல வேணாம்பாங்க.. ( செம க்ளாப்ஸ் வாங்குன சீன் )

20. சந்தானம் -டேய்.. ரூ 200 குடு.. 2 ஜட்டி வாங்கனும்..

ஆல்ரெடி நாம 2 பேரும் அதை போட்டிருக்கோமேடா..

சந்தானம் -அதைத்தான் இப்போ உன் மாமனார் வந்து கழட்டி விடப்போறாரே?

21. பொண்ணுங்க ரொம்ப சாஃப்ட்..

சந்தானம் -அட நீ வேற.. விட்டா நம்மளை சாப்பிட்ருவாளுங்க.. லவ் பண்றதுக்கு ஓக்கே.. ஆனா மேரேஜ்னா உஷார் ஆகிடுவாளுங்க..

22. பொய் சொன்னா சாமி கண்ணை குத்தும். ஆனா கண் விஷயத்துலயே பொய் சொன்னா?

23. சந்தானம் -அடேய்.. நீ கண் தெரியாதவனா நடி வேணாம்கலே.. அதுக்காக செல் ஃபோன் ரிங்க் டோன் கூட கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால் வைக்கனுமா? கண் டாக்டர் கூட அப்படி வைச்சு நான் பார்க்கலை..

24. கண் தெரியறப்ப கண் தெரியாத மாதிரி நடிக்கறது ஈசி.. ஆனா கண் தெரியாதப்ப கண் தெரியற மாதிரி நடிக்கிறது ரொம்ப கஷ்டம்

25. சந்தானம் - எனக்கு ஜூரம்..

சரி.. அதுக்கு ஏன் கை நடுங்குது?

சந்தானம் -ஹி ஹி குளிர் ஜூரம்

26. சந்தானம் -அடேய்.. உனக்குன்னு ஒரு ஹீரோயின் .. உனக்குன்னு டூயட் எல்லாம் இருக்குல்ல? ஏன் என் லைன்ல  கிராஸ் பண்றே?



https://sites.google.com/site/blogposterimages/KandaenTamilMovieSongsFreeDownload.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.இந்தியன் படத்தில் ஸ்லோ மோஷனில் கமல் ஒரு ஷாட்டில் டான்ஸ் மூவ்மெண்ட்ட்டில் அந்தரத்தில் தனது வலது காலை இடது காலால் தொடுவார்.மிக ரிஸ்கியான அந்த ஷாட் போல் சாந்தனுவும் ட்ரை பண்ணி இருந்தது செம...

2.  ஒரு பிச்சை காரருக்கு ஹீரோயின் 10 ரூபாய் தானம் செய்ய முயலும்போது ஹீரோ 100 ரூபாய் தானம் செய்வதை பார்த்து ஹீரோயின் வெட்கமும்,குற்ற உணர்வும்,கலந்து ஹீரோ மேல் மரியாதை வைக்கும் சீன் செம டச்சிங்க்

3. உன்னைக்கண்டேனே பாடல் காட்சியில் டான்ஸ் மூவ்மெண்ட்ஸில் பல இடங்களில் நளினம்...

4. படத்தின் பின் பாதியில் நான் ஸ்டாப் காமெடியாக சர வெடி வெடித்தது..


http://www.kerals.com/kerala/wp-content/uploads/2011/01/Kandaen.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோயின் கண்ணை கட்டிகொண்டு சூடான சாப்பாட்டை சாப்பிடும் சீனில் தெரியாமல் சுடுசோறை சாப்பிட்டு ஆ என பதறும் காட்சி செம செயற்கை.. கை விரலால் சாப்பாட்டை தொடும்போதே தெரிந்திருக்காதா? சூடா இருக்குன்னு ? ஏன் வாய்ல வைக்கனும்?

2. விஜயகுமார் சமந்தப்பட்ட காட்சிகள் பலவற்றில் நாடகத்தன்மை

3.யாவருக்கும் தலைவன் பாடல் செம மெலோடியாக இருந்தாலும்  டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே செயற்கை..

4. வெளி நாடு பயணம் செய்ய திடீர் முடிவு எடுக்கும் ஹீரோ ரிசர்வேஷன் பண்ணாமலேயே  ரிசர்வ்டு சீட்டில்பயணம் செய்வது எப்படி?

5. விஜயகுமார் சொல்லும் கணக்குப்படி அவருக்கு 1600 ஏக்கர் நிலம் இருப்பதாக சம்பந்தியிடம் சொல்றார். ஆனா அவர் இருக்கற ஊரே 50ஏக்கரா அளவு தான் இருக்கு.. ஹா ஹா

படம் ரொம்ப மொக்கை எல்லாம் கிடையாது. குடும்பத்தோட பார்க்கற மாதிரி ஜாலியாத்தான் இருக்கு. என் யோசனை படத்தின் பின் பாதியை முன் பாதியா மாத்தி முன் பாதியை ஃபிளாஸ்பேக் சீனா பின் பாதியா மாத்துனா இன்னும் பத்து நாட்கள் சேர்த்தி ஓடலாம். அப்போ இப்போ இருக்கும் திரைக்கதைக்கு எத்தனை நாட்கள் ஓடும்? ஆல் செண்ட்டர் 15 நாட்கள் . ஹி ஹி

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணா வில் படம் ஓடுது..

20 comments:

சக்தி கல்வி மையம் said...

வடையா?

சக்தி கல்வி மையம் said...

சந்தானம் கலக்கறார் போல...

செங்கோவி said...

ரைட்டு!

ராஜி said...

சண்டே ஷாப்பிங் போகும்போது எங்க ஊர் தியேட்டர்ல இந்த படம் ஓடுறதா போஸ்டர்ல பார்த்தேன். இன்னும் சிபிசார் பிளாக்ல விமர்சனம் பார்க்கலையே இது புதுப்படமா இல்ல பழைய படமா னு ரெண்டு நாளா குழப்பம். இப்போ குழப்பம் தீர்ந்தது. குழப்பத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி சிபி சார்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! கலக்குறிங்க....விமர்சனதுல.

Unknown said...

சந்தானம் ராக்ஸ்!!

Unknown said...

ஒவ்வொரு இயக்குனருக்கும் பல்ப்பு குடுக்குறாப்ளே..
பல்ப்பு கடை வைச்சிருப்பாரோ??

காங்கேயம் P.நந்தகுமார் said...

சாந்தனுவாது தொடர்ந்து 3 படம்தான் தோல்வி. அவர் புதுமுகம்தானே? விஜய் தொடர்ந்து 6 படம் தோல்வி கொடுத்திருக்கிறான். வளரும் புதுமுகத்தை வரவேற்க கண்டேன் படம் பார்க்கபோறேன். விமர்ச்சனம் அருமை காமெடியும் நல்லாதான் இருக்கும் போல் தெரியுது! நன்றி சி.பி வர்ணனையாளர்.

sathishsangkavi.blogspot.com said...

ரைட்டு...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சக்கரக்கட்டி,சித்து பிளஸ் 2 என தொடர் தோல்விக்குப்பின் கண்டேன் படம் தந்ததன் மூலம் திறமையும்,நடன லாவகமும் கொண்ட இளம் ஹீரோ தொடர்ந்து 3 தோல்விப்படங்கள் கொடுத்த முதல் ஹாட்ரிக் தோல்வி ஹீரோ என்ற பெயர் பெறும் சாந்தனு பாக்யராஜ் சந்தானத்துடன் கை கோர்த்த ஆஃப்பாயில் காமெடி படம்.( கே பி சார் என்னை மன்னிச்சு..)


யோவ்... பாக்கியராஜ் சார் உன்னில கோபிக்கப்போறார்!

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.... அதான் அப்பவே அங்கேயே மன்னிப்பு கேட்டுடறேனே? இப்பல்லாம் நான் டெயிலி 4 தடவை யார் கிட்டயாவது மன்னிப்பு கேட்கரேன் ஹா ஹா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அதை காதலிக்கு தெரியாம எப்படி சமாளிக்கிறார் என்பதே காமெடி கலந்த திரைக்கதை.. ( தாஜா என்பது தமிழா? #டவுட்டு)///


நோ தாஜா என்பது தமிழ் அல்ல! தாஜா நல்ல செகப்பா, ஒல்லியா இருப்பாள், முடி வேறு சுருட்டை முடி! ஆனால் தமிழ் அப்படியல்ல! அவ்வளவாக உயரம் இல்லை! முடி நல்ல நீளமா கம்பி மாதிரி இருக்கும்! எப்பவுமே டி ஷர்ட்டும் ஜீன்சும் தான் போடுவாள்!




ஆமா நீங்க என்ன கேட்டீங்க?

கடம்பவன குயில் said...

திரைகரையில் கோட்டைவிட்டுட்டாங்க என்று சொன்னார்களே.

சந்தானம் படத்துக்கு படம் பயங்கர முன்னேற்றம். சந்தானம் காமெடி இருந்தால்தான் இனி படமே ஓடும் என்கிற அளவு வளர்வார் என்று நினைக்கிறேன். டைமிங் காமெடியில் கலக்குகிறார் சந்தானம்.

சசிகுமார் said...

அப்போ பார்க்க வேண்டியதில்லை

NKS.ஹாஜா மைதீன் said...

அப்பா டான்சுல வீக்கு..மகன் சண்டைல வீக்கு...ஹி ஹி...அப்ப ரெண்டு பெரும் எதுல ஸ்ட்ராங்?

Jana said...

விஜயகுமார் சொல்லும் கணக்குப்படி அவருக்கு 1600 ஏக்கர் நிலம் இருப்பதாக சம்பந்தியிடம் சொல்றார். ஆனா அவர் இருக்கற ஊரே 50ஏக்கரா அளவு தான் இருக்கு.. ஹா ஹா

ரொம்ப உன்னிப்பாக கால்குலேட் எல்லாம் பண்ணுறீங்கப்பா :)

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே வணக்கம் சிபி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

அப்போ சாந்தனு ஃபீல்ட் அவுட்டா...???

காங்கேயம் P.நந்தகுமார் said...

வரவர நம்ம சி.பி அண்ணன் ரிப்ளை போடுவதே குறைந்து விட்டது. ஒரு வேளை அதற்கு மின்தடைதான் காரணம் என்று நம்புகிறேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே பாக்யராஜுகிட்ட வத்தி வைச்சு உங்க ஜோக்குக்கு பாக்யால தடை போடச்சொல்றேன்.