Monday, May 09, 2011

நாட்டு நடப்பும் நையாண்டிச்சிரிப்பும்

1. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கல்பாக்கத்தில், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக அணு உலை மின்சாரம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக்கூடும்.

அதான் இலங்கைல மொத்தமா உலை வெச்சுட்டாங்களே.. இனி என்ன மிச்சம் இருக்கு இழக்க நமக்கு.. ?

----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: "ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக வாதாட அரசு தரப்பில் ஏற்கனவே, மூத்த வக்கீல் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சுப்பிரமணியசாமியை அரசு தரப்பு வக்கீலாக நியமிப்பது ஏற்புடையதல்ல' என, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேலும் வாதாட இருப்பதாக சுப்பிரமணியசாமி கோரினார். வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரியஸா டிராமா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு காமெடி? காமெடியன் ரோல்?னு நினைச்சிருப்பாங்களோ?

-------------------------------

3. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் எட்டு குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரியும், காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.



காஞ்சிபுரம் காய்ஞ்சிபுரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே.. இனி மாய்ஞ்சி மாய்ஞ்சி போராடி என்ன பண்ணப்போறீங்க.. விடுங்க.. 

----------------------------------------------




4. பத்திரிகைச் செய்தி: மாமல்லபுரம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள, 296 மதுபானக் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டன.


பேச்சுவார்த்தை பார்ல சுமூகமா கமுக்கமா நடந்ததா? 

-----------------------------------------

5. தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம்
தாழ்த்தப்பட்டோர் பிரிவில், 15 லட்சத்து, 41 ஆயிரம், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 14 லட்சத்து, 40 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 28 லட்சத்து, 93 ஆயிரம், இதர பிரிவினரில், ஐந்து லட்சத்து, 56 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மே 13 க்குப்பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

-----------------------------------------

6. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப்பகுதியில் இலங்கை அரசு, அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை, கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே, அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அண்ணே.. நல்லாதான் கூவுறீங்க.. இதையே தானைத்தலைவர்ட்ட போய் கூவுங்களேன் பார்ப்போம்..?

---------------------------------------

7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி :சோனியா உண்மையான இந்தியரே அல்ல; அவரின் குறி, இந்தியாவைச் சுரண்டி உலக நாடுகளில் சொத்துகள் சேர்க்க வேண்டும் என்பதே. இவற்றை விரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்.

சீக்கிரம்.. மே 13க்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு...அப்புறம் காங்கிரஸ் இருக்கற இடமே தெரியாம போயிடும்.. அதுக்குள்ள அம்பலப்படுத்திடுங்க.. 

-----------------------

8. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பா.ஜ., ஓட்டு வங்கி இந்தத் தேர்தலில் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில், பா.ஜ., தமிழக மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அதன் ஓட்டு வங்கி இருக்கும்.

ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க? மீறி மீறிப்போனா 2 % ஓட்டு வாங்குவீங்களா? எதுக்கு இந்த அலப்பறை.. 

------------------------------

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நிலை.

அதான் எங்க தானைத்தலைவரும் சொல்றாரு..இது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டும் அல்ல. 3 குடும்பங்களின் கூட்டுக்குடும்ப ஆதிக்கம்னு.. நீங்க தான் புரிஞ்சுக்கலை.. 

-------------------------------


10. பா.ஜ., பொதுச் செயலர் ஜகத் பிரகாஷ் நட்டா பேட்டி: ஊழல் பிரச்னைகளில், தி.மு.க.,வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரசின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி, தி.மு.க., ஊழல் நடவடிக்கைகளை துவங்கியது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஊழலில் தான் கூட்டணி அமைத்திருக்கின்றனர். ஊழல் என்ற பிரச்னை வரும்போது அவர்கள் சமரசமாகி விடுவர்.


கூட்டணி ஆட்சின்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா கூட்டு ஊழல்னா ஒத்துக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது..?

---------------------------------

23 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத கமென்ட்

ஜோதிஜி said...

ஊருக்கே முதல் மழை பெய்யும் மனிதருக்கு என் முதல் செய்தி.

ஜோதிஜி said...

அயயோ தமிழ்வாசி முந்திக்கிட்டாரு போல?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ... நாட்டு நடப்புங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எங்க எல்லாத் தொழிலும் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கும் போது...

அரசியலில் இருந்தால் மட்டும் ஏங்க இந்த கொலை வெறி...

ஏதோ குடும்பமா வேலை செஞ்ச ஏதோ அவங்க குடும்பம் கஷ்டம் இல்லாம போதும்..


பாருங்க கலைஞர் இன்னும் சொந்தமா கார் கூட இல்லாம இருக்கார்...

சக்தி கல்வி மையம் said...

நான் உங்க மேல கோபமா இருக்கேன் ..
உங்க பேச்சு கா ...

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அடங்குய்யா....

செங்கோவி said...

சு.சாமி அழும்பு தாங்கலியே...

MANO நாஞ்சில் மனோ said...

சுடசுட செய்தி வாசிப்பது, ஹி ஹி ஹி ஹி நம்ம சிபி....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் உங்க மேல கோபமா இருக்கேன் ..
உங்க பேச்சு கா ...///

என்னய்யா வெளி ஊர்ல இருந்துகிட்டு "கா" சொல்லுதீரு...?

Unknown said...

செய்திகளை நல்லாவே அலசியிருக்கிறீர்கள்...

Unknown said...

எலேய் உன்னாலே என் ப்ளோக எந்த நாதாரி பயலோ ஹாக் பண்ணிபுட்டான்!

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
எலேய் உன்னாலே என் ப்ளோக எந்த நாதாரி பயலோ ஹாக் பண்ணிபுட்டான்!//

நல்லது செஞ்ச அந்த பன்னாடைய வாழ்த்த வார்த்தையே இல்லை....

rajamelaiyur said...

Good analysis . . Keep it up

NKS.ஹாஜா மைதீன் said...

இந்த பதிவுக்கு நடிகைகளின் படத்தை போடாத அண்ணனை வன்மையாக கண்டிக்கிறோம்.....ஹி ஹி ...

டக்கால்டி said...

எலேய் உன்னாலே என் ப்ளோக எந்த நாதாரி பயலோ ஹாக் பண்ணிபுட்டான்!

May 9, 2011 7:41 PM//

He He...

டக்கால்டி said...

@Vikki-
I tried your blog today morning...i thought you deleted the blog due to the opposition...he he...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே மே 13 க்கு அப்பால மேற்கிந்திய தீவுகள் அணிக்கேப்டன் தோல்விக்கு பொறுப்பேற்று மொட்டை அடிப்பாரா?

உணவு உலகம் said...

நானூம் வந்திட்டேன். நல்ல பகிர்வு.

goma said...

மாஞ்சு மாஞ்சு நாஞ்சில் எழுதினாலும் எதுவும் மாறப்போவதில்லை...நாடு உருப்படப் போறதில்லை...

ம.தி.சுதா said...

வீரமணிக்கு சொன்ன விசயம் ரொம்ப நல்லாயிருக்கு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

ம.தி.சுதா said...

வைகோவுக்கு இந்த புளொக் இருப்பது தெரியுமா ? ஹ.ஹ..ஹ..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.