Thursday, August 23, 2012

ரஜினி, கமல் இணையும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ வி எம் படம்

ஒண்ணா ஒரு படம்!"


ஆசைப்பட்ட ரஜினி... ஆல்ரைட் சொன்ன கமல்

எம்.குணா



'சகலகலா வல்லவன்’, 'ஜெமினி’ என்று அவ்வப்போது கோலிவுட் டிரெண்டைப் புரட்டிப் போடும் ஏவி.எம்மின் இப்போதைய அஸ்திரம்... 3D! ரஜினியின் 'சிவாஜி’க்கு '3D’ டச் வேலை நடக்கிறது பிரசாத் ஸ்டுடியோவில். பிரசாத் லேப்புடன் இணைந்து செயல்படும் ஏவி.எம். இந்த '3D புராஜெக்ட்டுக்கு என ஒதுக்கிஇருக்கும் பட்ஜெட்... 16 கோடி. ஏவி.எம். சரவணனிடம் பேசினால் பல ஆச்சர்யத் தகவல்களைக் கொட்டுகிறார்.



சி.பி - 3 டி படம் பெரிசா ஏதும் சாதிக்கப்போவதில்லை.. இது ஒரு வியாபார தந்திரமே, சிவாஜி ரிலீஸ் பண்றப்பவே ஏன் அப்டி 3டில ரிலீஸ் பண்ணலை? இதுக்கெல்லாம் ஏமாந்து ரசிகர்கள் தங்கள் பணத்தை வேஸ்ட் பண்ணுவாங்கன்னு தோணலை, ஒரு வேளை ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம்.

''இது திடீர்னு எடுத்த முடிவு இல்லை. கடந்த ஒரு வருஷமா 400 பேர் கொண்ட டீம் மூணு ஷிப்ஃட்டா வேலை பார்த்துட்டு இருக்காங்க. இது சம்பந்தமா பேசணுமேனு 'உங்களைப் பார்க்கணும். எப்போ வரட்டும்’னு ரஜினி சார்கிட்ட கேட்டேன். எப்பவும்போல, 'நானே வர்றேன்’னு கிளம்பி வந்துட்டார். அப்போ அவருக்கு '3D’-யில் படத்தின் டிரெய்லரையும் 'பூம்பாவாய்’ பாட்டையும் ப்ளே பண்ணிக் காட்டினோம். சின்ன குழந்தை மாதிரி கைதட்டி ரசிச்சுப் பார்த்தார். 


சி.பி - ம்க்கும், அவரு கலைஞரின் இளைஞன் படத்தையே நல்லாருக்குன்னு சொன்னவர் ஆச்சே?

http://www.bolegaindia.com/images/gossips/rajnikanth_kamal_hasan_post_1343022276.jpg



'தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுங்க சார்’னு ஐடியா கொடுத்தார். 'நான் சிவாஜி, கமல் மாதிரி நடிகன் கிடையாது. என்கிட்ட ஸ்பீடு இருக்கிறவரைக்கும் நடிப்பேன். இப்போ இந்த டெக்னாலஜி மூலமா நான் நடிச்ச நிறையப் படங்களைத் திரும்பப் பார்க்கலாம்’னு பேசிட்டே இருந்தார்.'' 



''ஆனா, 'சிவாஜி’ படம் வெளியானபோதே அதனால நஷ்டம்னு செய்திகள் வந்துச்சே?''


சி.பி - நஷ்டம் தியேட்டர்காரங்களுக்குத்தான், ஏ வி எம் நல்ல விலைக்கு வித்துட்டாங்க



''ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கங்க. 'சிவாஜி’ படத்தை நாங்க முழுக்கவே வெள்ளைப் பணத்தில் தான் தயாரிச்சோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் மூணு கட்டமா கடன் வாங்கிப் படத்தைத் தயாரிச்சோம். வரவு - செலவுக் கணக்குகள் எல்லாமே சுத்தமா இருக்கும். பாதி கறுப்பு, பாதி வெள்ளை தர்றதா சொல்லி 'சிவாஜி’ படத்துக்குப் பேரம் பேசினவங்ககூட உண்டு. 'வேண்டாம்’னு மறுத்துட்டோம். 'சிவாஜி’ படத்தை அப்போ வாங்கி வெளியிட்ட எல்லோருமே நஷ்டமாகாமல் சம்பாதிச்சாங்க அதுதான் உண்மை. அப்படி யாராவது நஷ்டம் அடைஞ்சோம்னு சொன்னாங் கன்னா, அவங்க தப்புக் கணக்கு காட்டுறாங்கன்னு அர்த்தம்!''



''ரஜினி, கமல் இருவருமே ஏவி.எம். நிறுவனத்தின் செல்லப் பிள்ளைகள். நீங்க ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து நடிக்கவெச்சு ஒரு படம் எடுக்கக் கூடாது?''


http://www.bestofvizag.com/images/movies/rajini-bala-kamal.jpg

''இதையேதான் அவங்களும் சொன்னாங்க. ஒரு நாள் ரஜினி சார் என்னைச் சந்திக்க வந்தார். என் அறையில் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார். அப்போ திடீர்னு கமல் சாரும் என்னைப் பார்க்க வந்துட்டார். அது ரொம்ப யதேச்சையா அமைஞ்ச சந்திப்பு. 'என் கேரியர்ல தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜினு எத்தனையோ பேர்கிட்ட பழகி இருக்கேன். ஆனா, அவங்ககிட்டலாம்  இல்லாத ஒரு பண்பு உங்க ரெண்டு பேர்கிட்டயும் இருக்கு. உங்ககிட்ட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கொஞ்சம்கூட இல்லை. இது ரொம்ப ஆச்சர்யம்’னு சொன்னேன். 



சி.பி - பொறாமை இல்லைன்னு சொல்ல முடியாது, இல்லாம இருந்தா நல்லதுன்னு வேணா சொல்லலாம், நல்லவனுக்கு நல்லவன் - எனக்குள் ஒருவன் , தளபதி - குணா  ரிலீஸ் காலகட்டத்துல எப்படி எல்லாம் பரஸ்பரம் புகைஞ்சாங்க என்பது நாடறிந்த ரகசியம்



அதுக்கு கமல், 'ஒரு வேளை நானும் ரஜினியும் பாலசந்தர் ஸ்கூல்ல இருந்து வந்ததால இருக்கலாம்’னு சொன்னார். அப்போ ரஜினி, 'நான் சினிமாவுக்கு வந்தப்போ கமல் பெரிய ஹீரோ. 'நினைத்தாலே இனிக்கும்’ ஷூட்டிங்ல அவர்தான் ஸ்டார். சிங்கப்பூர்ல வாரக் கணக்கா ஷூட்டிங் நடந்தப்போ பல சமயம் பஸ்ல போயிட்டு இருப்போம். அப்போலாம் கமல் பக்கத்துல உக்காந்து இருக்குற நான், அவர் தோள்ல சாய்ஞ்சு அப்படியே தூங்கிடுவேன்.


அவரும் என்னைத் தட்டிக் கொடுத்து என் தூக்கம் கலையாமப் பார்த்துக்கிட்டார். நான் அவரை நண்பனா நினைக்கிறதுக்கு முன்னாடியே அவர் என்னை நண்பனா ஏத்துக்கிட்டார்’னு பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். அப்படியே பல விஷயங்கள் பேசிட்டு இருந்தப்ப திடீர்னு ரஜினி சார், 'கமல்... ஒண்ணா ஒரு படம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருக்கு’னு சொல்லிட்டு கமலையே பார்த்தார். கமல் கொஞ்சம்கூட யோசிக்கலை. 'தாராளமா நடிக்கலாமே... அப்படி நாம சேர்ந்து நடிக்கிற படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்’னு சொல்லிட்டார்.



ஒருத்தர் உலக நாயகன்... இன்னொருத்தர் சூப்பர் ஸ்டார். ரெண்டு பேருக்குமே என்னைவிட நிறைய சினிமா தெரியும். ரெண்டு பேருக்கும் சம்பளமும் ரொம்பப் பெருசு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 'உங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சு வேலை வாங்குற திறமை பாலசந்தர் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு’னு சொன்னேன். ரெண்டு பேருமே சிரிச்சாங்க. அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. இனி, நாங்க தான் மெனக்கெடணும். பார்ப் போம்'' என்று வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வழியனுப்புகிறார் சரவணன்.


சி.பி - எதிர்பார்ப்பு எகிறிக்கும். அதுக்கு தகுந்தபடி ஸ்க்ரிப்ட் பக்காவா இருக்கனும்.. இல்லைன்னா ஓவர் எக்ஸ்பெக்டேஷனே படத்துக்கு வில்லனா அமைஞ்சுடும்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற வாழ்த்துகள் 
http://newzstreet.com/uploads/news-files/rajini_and_kamal_work_together_haihoi_189.jpg


நன்றி - விகடன்

3 comments:

Unknown said...

:)

JR Benedict II said...

அட

Yoga.S. said...

நடிப்பாங்களா,நடப்பாங்களான்னு பாத்துடலாம்,ஹி!ஹி!ஹி!