Wednesday, December 02, 2015

தெறி ஸ்பெஷலிஸ்ட் @ இன்ட்டர்வ்யூ

1/என்னோட 60 வது படம் த்ரில்லர் மூவியா இருக்கும்


ஓஹோ, படம் சொன்ன டேட்க்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதுன்னு ஒரே த்ரில்லிங்கா இருக்குமா?


==============

2/டாக்டர்..7 நாளா ஒரே இருமல், காய்ச்சல்,


ஏம்மா.நல்லா எண்ணிப்பார்த்தீங்களா? ஒரு வாரமா ஒரே ஒரு இருமல்தானா?


===============

3/ஹூம்.் நம்ம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்கும்:-)


அப்போ தெய்வம் என்ன நினைக்குதோ அதையே நீங்களும் நினைங்களேன்


===============

4/ஜட்ஜ் = இந்த நாடு பிடிக்கலைன்னு உங்க சம்சாரம் சொல்லுச்சா?


ஹீரோ = எனக்கு அவளைப்பிடிக்கலை..எப்டி சிக்க வெச்சேன் பாத்தீங்களா?


=============

5/அமீர்கான் = நீங்க சொன்னதைத்தான் நான் சொன்னேன்.என் கிட்டே மட்டும் சண்டைக்கு வர்றாங்க?


கமல் =,நான் சொன்னது(வழக்கம்போல்)புரிஞ்சிருக்காது


===========

6/செந்தில் = அண்ணே! நான் இந்த நாட்டை விட்டே போகப்போறேன்


க.மணி = கப்ளிங் மண்டையா.நீ பக்கத்து ஊருக்குப்போகவே 10 பேர்ட்ட காசு கேட்பே.============

7/நயன்தாரா டாண் வேடத்தில் நடிச்சா்


நான் தனியாள் இல்லை.எனக்குப்பின்னால ஒரு கூட்டமே இருக்கு.அது!
எது? சிம்பு,பிரபுதேவா,ஆர்யா ,விக்னேஷ் சிவன் ?


==============

8/உடன் பிறப்பே! நானும் இந்த நாட்டை விட்டுப்போறேன்


தலைவா! நாட்டை வித்துட்டுப்போறீங்களா? நாட்டை விட்டுட்டுப்போறீங்களா?நல்லா யோசிச்சுச்சொல்லுங்க

===============


மோடி = நான் இந்த நாட்டை விட்டு ஜப்பான் போறேன்
ராகுல் =,நீங்க நம்ம நாட்ல இருந்தாத்தான் அது ஷாக்கிங் நியூஸ்

==============

10/சார்.உங்க படத்துக்கு ஏன் நரி ன்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


தெறி ன்னு எல்லாம் வைக்கறாங்க.நரி ன்னு வெச்சா என்ன?


==============

11/காந்தி நமக்குச்சொன்ன 3 குரங்கு பொம்மை நீதியைத்தான் படத்துல சொல்லி இருக்கேன்.

ஓஹோ.அதான் காந்தி சொல்லிட்டாரே? நீங்க புதுசா எதுனா சொல்றது?


================


12/ ஹீரோ ,ஹீரோயின் ,வில்லன் எல்லாருக்கும் ப்ளூ பேண்ட் ப்ளூ சர்ட் தான்

ஓஹோ இது என்ன ப்ளூ பிலிமா?ன்னு கேட்டுடப்போறாங்க


-=================13 சார்.இந்தப்படத்துல உங்களுக்கு 3 கெட்டப்.

அய்யோ.நான் என்ன கமலா?விக்ரம்மா?எதுக்கு இந்த விஷப்பரீட்சை?


=================


14 சார்.இந்தப்படத்துல போலீஸ் ஆபீசரா நடிக்கறீங்க.

அய்யோ.ஒரே டைம்ல 2 கஷ்டமான வேலை தர்றீங்களே!?


====================


15 நார்மல் முகம் ,கூலிங் கிளாஸ் போட்ட முகம் ,சாதா கிளாஸ் போட்ட முகம் னு 3 ஸ்டில் எடுத்தாச்.

பிரமாதம்.ஜனங்க இதை 3 கெட்டப்னு நம்பிடுவாங்க


================


16 சார்.அண்ணன் ,தம்பி ,2பேரு பத்தின கதைன்னுதானே சொன்னீங்க?

அதாவது அண்ணன் (1),தம்பி 2 பேரு மொத்தம் 3 கேரக்டர்


============


17 கவர்மெண்ட் வேலை செய்யறவங்க 3,லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வெச்சிருக்கக்கூடாது.ஏன் 5 லட்சம் கடன்?

வேலை செய்யறவங்களுக்குத்தானே அந்தக்கண்டிஷன்?


========


18 இன்ட்டர்வ்யூவில்

எதைக்கேட்டாலும் தெறியாது தெறியாதுன்னு சொல்றீங்களே.உங்களுக்கு தமிழ் சரியாத்தெரியாதா?
தெறி ஸ்பெஷலிஸ்ட் ஆளுங்க நான்

==================

19 டாக்டர்!இப்பொழுதெல்லாம் என் இதயம் இருமடங்காக துடிக்கிறது, லவ்வர் ஹார்ட் உள்ளே இருக்குமோ?

 அட போம்மா, பி பி எகிறி இருக்கும்


===================20 திருமணமான புதிதில், யார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் அதிகாலையிலேயே எழுந்துடுவோம்


 ஓஹோ, நாங்க எல்லாம் அப்போதான் தூங்கவே ஆரம்பிச்சோம்


===============================

0 comments: