Friday, November 06, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 06/11// 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை


கிரிங் கிரிங் (திகில்)
உயிர் வரை இனித்தாய் (காதல்)
இனிய உளவாக (பேமிலி) #6/11/2015 ரிலீஸ்


1/கிரிங் கிரிங் (திகில்)
kumar
எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ளக்ரைம் திரில்லர் படம் ‘கிரிங் கிரிங்’.செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன்அதிலிருந்து மீளப்போராடுகிறான்.அதிலிருந்து வெளியே வர அவன்தவிக்கிற தவிப்பும்  பதைபதைக்கிற பதற்றமும் .
போராட்டமும்தான்கதை. இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர். இது ஒரே இரவில் நடக்கும் கதை. நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர்ஏற்கெனவேசிலபடங்களில் தோன்றியவர். நாயகியாக காவ்யா நடித்துள்ளார். படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் ராகுல். இவர் வின்சென்ட்செல்வாவின் மாணவர். படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலானநடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். படத்தின் பரபரப்புக்கு வேகத்தடையாக இருக்குமென்று பாடல்கள்படத்தில் இடம் பெறவில்லை.

IMG_3081
சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில்படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குநர் ராகுல். படத்துக்கு ஒளிப்பதிவு துவாரகேஷ், இசை ஜூடு, படத்தொகுப்புசிவதர்மா. நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கஉதவியாக இருப்பது மொபைல் போன்தான். படத்தில் மொபைல்போனின் ‘கிரிங் கிரிங்’ ஒலி பெரிய திருப்பங்களுக்கு வழி வகுப்பதால் படத்துக்கு இப்பெயர் வைக்கப் பட்டுள்ளது.
எட்டே நாளில் ஒரு படமா? அவசரக் கோலமாக இருந்து விடாதாஎன்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது ” நன்றாகத் திட்டமிட்டால்எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை.அதனால் எட்டே நாட்களில் எடுத்து முடித்தோம். இதன் பின்னால்சரியான திட்ட மிடலும் பலரது உழைப்பும் இருந்தது. இது அவசரமாகஎடுக்கப்பட்ட படமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை.இருக்கும்.எனவே பரபரப்புக்குப்  பஞ்சமிருக்காது.
இன்று 2 கோடி 10 கோடி பணம் இல்லாமல் படம் எடுக்க முடியாதுஎன்று பேசுகிறார்கள்.. ஆனால் படத்தின் தயாரிப்பு ச் செலவைக் காட்டிவியாபாரம் செய்ய முடியாது. படத்தில் புதுமை, இருக்க வேண்டும்.கதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும். அப்படிஎடுக்கப் படுகிற படத்துக்கு வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம்நடக்கும்.” என்கிற இயக்குநர், தனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத்திறமையும் இருப்பதால் ‘ஆர்பி எம் சினிமாஸ் ‘சார்பில் படத்தைத்துணிந்து தயாரித்ததாகக் கூறுகிறார்2/உயிர் வரை இனித்தாய்
u
கடந்த ஞாயிறு (27/07/2014) மாலை பாரிஸ் மாநகரில் உயிர் வரை இனித்தாய் அலைமோதும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிரமாண்டமாக வெளியானது, இளைஞர்கள் தொடங்கி பெண்கள் வரை திரளாக வருகை தந்ததை காண கூடியதாக இருந்தது.
மாலை 6h30 மணியளவில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் பிரான்ஸ் வாழ் கலைஞர்களை ஒன்றுதிரட்டி கௌரவிக்க பட்டது அத்துடன் மதிய விருந்து உபசாரமும் சிறப்பாக நடைபெற்றது
இச் சிறப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார் டென்மார்க்கிலிருந்தும் இத் திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் அனைவரும் பங்கு பற்றினார்கள்
உயிர் வரை இனித்தாய் திரைப்பட உருவாக்கத்திற்கு பக்க பலமாக இருந்த கலைஞர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். பல கலைஞர்களை மேடையேற்றி கௌரவித்து, படத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.பின்பு மாலை 300 க்கும் மேற்பட்ட மக்களின் அலை மோதும் கூட்டம் அரங்கை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தார்கள் 6h40 மணியளவில் உயிர் வரை இனித்தாய் திரைப்படம் திரையிடப்பட்டது.
அங்கு வருகை தந்த மக்களின் கருத்துக்களை தமிழிதழ் நேரடியாக வீடியோ பதிவு செய்த காணொளியை இவ் இணைப்பில் பார்வையிடலாம்.
மேலும் திரைப்பட விமர்சனம் விரைவில் தமிழிதழில் பிரசுரிக்கப்படும்.
எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் திரைக்கு வருகிறது. பார்க்க தவற விட்டவர்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறார்கள் பட குழுவினர்கள்.
திரைப்பட கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் மென்மேலும் வெற்றிப் படிகளைத் தொட வாழ்த்துக்கள்.


3/இனிய உளவாக


-

0 comments: