பிரபல இயக்குநரான ஜேம்ஸ்கன் ஒரு காலத்தில் விக்ரம் லோகேஷ் கனஜராஜ் மாதிரி ஹிட் கொடுத்தவர் தான்,இந்தப்படம் பார்த்தால் கூலி லோகேஷ் கனகராஜ் மாதிரி ஆகி விட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது.
நம்ம ஊரில் ரஜினி - கமல் மாதிரி. அஜித் -விஜய் மாதிரி ஹாலிவுட்டில் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மார்வெல் ,டிசி தயாரிப்புகள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்ய டி சி கம்பெனி தயாரிப்பான சூப்பர் மேன் படத்தின் தொடர்ச்சியாக சூப்பர் கேர்ள் வந்திருக்கிறது.
186 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரிலீஸ் ஆன இரு நாட்களிலேயே 29 மில்லியன் டாலர் வசூலித்திருக்கும் படம்.டி சி காமிக்ஸ் த எபோனிமஸ் கேரக்டர் என்ற புத்தகத்தைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.டிசி உலகின் இரண்டாவது படமாக இது வெளியாகியுள்ளது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சூப்பர் கேர்ள்.அவளின் பெற்றோருடன் வேறு ஒரு கிரகத்தில் வசிக்கிறாள்.அங்கே ஏற்பட்ட ஒரு நியூக்ளியர் விபத்தால் நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம்
நம்ம பொண்ணாவது உயிருடன் இருக்கட்டும் என நாயகியை எப்பாடுபட்டோ அவளது செல்ல நாய்க்குட்டியுடன் பூமிக்கு அனுப்பி விடுகிறார்கள்.நாயகியை நாயகனின் கசின் பிரதரான சூப்பர்மேன் பார்த்துக்கொள்கிறார்.இவரது கண்காணிப்பில் தான் நாயகி வளர்கிறார்.
நாயகி 23 வது பிறந்த நாள் கொண்டாடுகிறாள்.அப்போது ஒரு சிறுமி நாயகியிடம் உதவி கேட்கிறாள்.என் அம்மா ,அப்பாவைக்கொலை செய்தவனை நான் பழி வாங்க வேண்டும்,அதற்கு உன் உதவி வேண்டும் எனக்கேட்கிறாள்.அப்போது நாயகி உனக்கு வில்லன் எனக்கும் வில்லன் தான்.என் பெற்றோர் பலியாகக்காரணமும் அவன் தான்.நானும் அவனைப்பழி வாங்க வேண்டியிருக்கு என்கிறாள்.நாம் இருவரும் சேர்ந்தே அவனைப்பழி வாங்குவோம் என்கிறாள்.இதற்குப்பின் நாயகின் எண்ணம் ஈடேறியதா?இல்லையா?என்பது தான் மீதித்திரைக்கதை.
நாயகியாக மில்லி ஆல்காக் பிரமாதமாக நடித்திருக்கிறார்.முகத்தில் நல்ல தெளிவு.துடுக்குத்தனம்,சுட்டித்
நாயகிடம் உதவி கேட்கும் பெண்ணாக ஈவ் ரிட்லி நடித்திருக்கிறார்.கச்சிதமான நடிப்பு.
வில்லனாக மேத்தியாஸ் சியாநெர்ட்ஸ் நேர்த்தியாக வில்லன் ரோலை செய்திருக்கிறார்.
சூப்பர் மேனாக டேவிட் க்ரம்ஹோல்ட்ஸ் கெஸ்ட் ரோலில் வருகிறார்.
இந்த முக்கிதமான நான்கு கேரக்டர்கள் போல சின்னச்சின்ன கேரக்டர்களில் வரும் அனைவரும் அவரவர் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு,பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கச்சிதம்.
இயக்கம் கிரெய்க் கில்லஸ்பி
சபாஷ் டைரக்டர்
1 ஓப்பனிங்க் சீனில் ஸ்பேசில் நடக்கும் ஒரு அதிரடி சீக்வன்ஸ் அருமை.
2 நாயகியின் நாய்க்குட்டி குழந்தைகளைக்கவரும்
3 சூப்பர் மேன் என்பதற்கு பெண் பால் சூப்பர் விமன் தானே?ஏன் சூப்பர் கேர்ள் என்று சொல்கிறோம் என்பதற்கான விளக்கம் அருமை.
4 பிளைட் சீக்வண்சில் நாயகியின் ஆக்சன் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆக்சன் மூவிகளில் முக்கியமான அம்சமே க்ளைமாக்ஸ் தான்.ஆனால் இதில் சொதப்பி விட்டார்கள்.சிஜி ஒர்க்ஸ் பிசிறடிக்கிறது.வாவ் மொமெண்ட்ஸ் மிஸ்சிங்க்
2 த்ரீடி (3டி ) வெர்சன் எடுபடவில்லை
3 நாயகிக்கும்,நாயகியின் குடும்பத்துக்குமான எமோஷனல்பாண்டிங்க்,நாயகியிடம் உதவி கேட்கும் பெண்ணுக்கும் ,அவரது குடும்பத்துக்குமான எமோஷனல் கனெக்ட்,நாயகிக்கும்,அந்த உதவி கேட்கும் பெண்ணுக்குமான நட்பு இந்த மூன்று விஷயங்களையுமே பிராப்பராக படமாக்கவில்லை.திரைக்கதையில் எழுதப்படவில்லை.
4 வில்லன் கேரக்டர் பலவீனமான வடிவமைப்பு.
5 வில்லன் அழிய வேண்டும் ,நாயகி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வரவில்லை.ஏதோ செத்தவன் கையில் வெத்தலை பாக்குக்கொடுத்த கதையாக தேமே என்று படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு தான் வந்தது.
6 முழுக்கதையாக இல்லாமல் கேரக்ட்டர் இண்ட் ரோ மாதிரியே முழுப்படமும் இருந்தது
7 நாயகியை சரக்கு அடிப்பவராக,போதைப்பொருள் உபயோகிப்பவராக எதற்குக்காட்ட வேண்டும்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - எதிர்பார்த்த அளவுக்கு பிரமாதமான காட்சிகளோ ,கலக்கலான ஆக்சன் சீக்வன்சோ இல்லாத ஏமாற்றத்தைத்தந்திருக்கும் ஒரு சாதா படம்.ரேட்டிங்க் 2/5.இது சூப்பர் கேர்ள் இல்லை.சுமார் கேர்ள்
| Supergirl | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Craig Gillespie |
| Written by | Ana Nogueira |
| Based on | Characters from DC |
| Produced by | |
| Starring | |
| Cinematography | Rob Hardy |
| Edited by | |
| Music by | Claudia Sarne |
Production companies |
|
| Distributed by | Warner Bros. Pictures |
Release dates |
|
Running time | 108 minutes[1][2] |
| Country | United States |
| Language | English |
| Budget | $170–186 million[3][4] |
| Box office | $29.1 million[5][6] |
