முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வின் மகள் தான் படத்தின் நாயகி இமயா. தமிழச்சி தங்க பாண்டியன் இவருக்கு அத்தை முறை.கார் என்ற பிரம்மாண்ட ஹிட் படத்துக்கு இசை அமைத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்துக்கு இசை இந்த இரண்டு அம்சங்களும் படம் பார்க்கத்தூண்டுபவை.அது போக படத்தின் ரன்னிங்க் டைம் 2 மணி நேரம் தான் என்பதால் ஒரு குயிக் வாட்ச் ஆகவே இந்தப்படத்தைப்பார்த்து விடலாம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு ஹோட்டல் ஓனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தான் கதை நடக்கும் களம்.நாயகன் எப்போதும் இதயத்தைத்திருடாதே நாகார்ஜூன் மாதிரி உம்மென்று இருக்கிறார்.யாருடனும் கலகலப்பாகப்பேசுவதில்லை.சிரிப்
நாயகி ஐடி டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றும் ஊழியர்.பொதுவாக ஐ டி ஊழியர்கள் சமைப்பதில்லை .ஹோட்டலில் தான் சாப்பிடுவார்கள்.அப்படி ஹோட்டலுக்கு அடிக்கடி வந்ததில் நாயகிக்கு நாயகன் மேல் லவ்.ஆனால் லவ் பிரப்போசலை நாயகன் ஏற்றுக்கொள்ளவில்லை.காரணம் நாயகனுக்கு ஒரு முன் காதல் கதை இருக்கிறது.
ஊட்டியில் வில்லி ,நாயகன் இருவரும் காதலிக்கின்றனர்.வில்லி நாயகனை ஏமாற்றி பிரேக்கப் செய்து விட நாயகன் மனதளவில் உடைந்து போகிறார்.
இந்தக்காரணத்தால் நாயகனுக்கு இன்னொரு காதல் என்றாலே பயம்.நாயகி நாயகனுக்கு தைரியம் சொல்லி எல்லாப்பெண்களும் அப்படி இல்லை என்று புரிய வைத்து காதலுக்கு சம்மதம் வாங்குகிறார்.
இப்போது நாயகன் ,நாயகி இருவரும் காதலிக்கிறார்கள்.இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தமிழகம் வருகிறார்கள். அப்போது நாயகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டு ,தலையில் அடிபட்டு சில நினைவுகளை மட்டும் மறக்கிறார்.
அதாவது நாயகியுடன் கொண்ட காதலை மறக்கிறார்.வில்லியுடன் கொண்டகாதல் ,பிரேக்கப் மட்டும் நினைவு இருக்கிறது.
நாயகன் வில்லியைத்தேடி ஊட்டி போகிறார்.கூடவே நாயகியும் போகிறார்
இதற்குப்பின் நடக்கும் சம்பவங்களும் ,யாருடன் நாயகன் இணைந்தார்?என்பதும் தான் மீதித்திரைக்கதை.
நாயகனாக சனந்த் அளவாக நடித்திருக்கிறார்.இதுவரை சின்னச்சின்ன ரோல்களில் நடித்தவர் முதன்முதலாக ஹீரோ ஆகி இருக்கிறார்.சுமாரான நடிப்பு.மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட ஆகிய படங்களில் சின்ன ரோலில் நடித்தவர்.
நாயகியாக இமயா அருமையான நடிப்பு.நிஜத்தில் ஒரு முன்னாள் அமைச்சரின் மகளாக இருந்தும் பக்கத்து வீட்டுப்பெண் போன்ற எளிமையான தோற்றம் க்யூட்டான முக பாவனைகள்,இளமைப்பொலிவு என ரசிக்க வைக்கிறார்.
வில்லியாக மடோனா செபாஸ்டியன் அழகாக வந்து போகிறார்.கல்லூரித்தோழியாக,கா
காமெடியனாக வாட்சப் மணி நாயகனுடன் கலகலப்பாக வந்து போகிறார்.இன்னமும் அவருக்கு அதிகக்காட்சிகள் வைத்திருக்கலாம்.
நாயகனின் அம்மாவாக பிரகதி நல்ல குணச்சித்திர நடிப்பு.உமா பத்மநாபன்,மேத்யூ வர்கீஸ்(அஜித் சாயலில் இருப்பார்) என அனைவர் நடிப்பும் கச்சிதம்.
இசை ராஜேஷ் முருகேசன்.பாடல்களுக்கான இசை தரத்துக்கு இணையாக பின்னணி இசை தரம் இல்லை.முகேஷின் ஒளிப்பதிவு கலக்கல் ரகம்.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் கிஷோர் குமார்.
சபாஷ் டைரக்டர்
1 படத்தில் வரும் அனைத்துபெண் கதாபாத்திரஙகளின் முக அமைப்பு ஓவல் ஷேப்பில் அமைந்தது தற்செயலானதா?திட்டமிட்டதா?தெரி
2 ஒளிப்பதிவு பிரமாதம்.ஊட்டி ,ஜெய்ப்பூர் அழகுகளைக்கண் முன் நிறுத்தியது.லாங் ஷாட் ,க்ளோசப் ஷாட்ஸ் என அனைத்தும் அழகு.
3 ஒரு மெலோடி ஷாங் ,ஒரு ஸ்பீடு சாங்க் என கலந்து கட்டி ஹிட் அடித்த விதம்
4 நாயகன் ,நாயகி,வில்லி,காமெடியன் என நான்கே கேரக்டர்கள் தான் முக்கியக்கதாப்பாத்திரங்கள் என்பதால் குழப்பம் இல்லாத திரைக்கதை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனை வில்லி எதற்காக பிரேக்கப் செய்கிறார்?என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. நாயகி நாயகனை ஏன் அவ்வளவு சின்சியராக லவ் பண்ணுகிறார்?என்பதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை.
2 க்ளைமாக்சில் வில்லியின் போர்சன் பூர்த்தி ஆகாமல் அம்போவென அந்தரத்தில் நிற்கிறது
3. நாயகி ,வில்லி என நாயகனுக்கு இரு காதலிகள் இருந்தும் ரொமாண்டிக்கான காட்சிகளே படத்தில் இல்லை.
4 முக்கோணக்காதல் கதை,மறதி நோய் இவை எல்லாம் 1990 களில் பல படங்களில் வந்ததுதான்.புதுமை இல்லை.
5 வில்லியுடனான காதலில் இருந்த உயிர்ப்பு நாயகியுடனான காதலில் இல்லை.அதனால் க்ளைமாக்சில் நாயகன் வில்லியுடன் சேர்ந்தால் தேவலை என நினைக்க வைக்கிறது திரைக்கதை அமைப்பு
,6 நாயகி சாதனா நடிக்கும்போது தேவை இல்லாமல் மேடைப்பேச்சாளர் போல கையை ஆட்டி ஆட்டிப்பேசுவது செயற்கை
7 பின் பாதியில் நாயகி ,வில்லி இருவரின் கேரக்டர் டிசைன் மாறுவது எப்படி?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள் ,தம்பதிகள் ,ஜென் சி கிட்ஸ் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5.ரொமாண்டிக் காமெடி மூவி என்று பிரமோஷன் செய்த படத்தில் காமெடியைத்தேட வேண்டி இருக்கிறது.
