Showing posts with label ஃபேஸ்புக். Show all posts
Showing posts with label ஃபேஸ்புக். Show all posts

Saturday, November 28, 2015

மதரசாவின் 'கசப்பு அனுபவங்களை' பகிர்ந்த கேரள பெண் நிருபரின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்

மதரசாக்களை விமர்சித்து பதிவிட்ட பெண் பத்திரிகையாளர் வி.பி.ரஜீனாவின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.


கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் வி.பி.ரஜீனா இளமைப் பருவத்தில் மதரசாவில் தான் பயின்றது குறித்தும் அங்கிருந்த பயிற்றுனர்கள் சிலரின் நெறி தவறிய நடவடிக்கை குறித்தும் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்.


இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது ஃபேஸ்புக் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து நிறைய பேர் புகார் அளித்ததையடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.


இருப்பினும் சிறிய போராட்டத்துக்குப் பின்னர் ரெஜீனா அவரது ஃபேஸ்புக் பக்கத்தை மீட்டெடுத்தார். ஆனால் மீண்டும் அவர் மீது புகார் வைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஃபேஸ்புக் அவரது பக்கத்தை முடக்கியுள்ளது.


இது குறித்து ரஜீனா கூறும்போது, "மதரசாக்கள் குறித்து நான் பதிவு செய்த கருத்துக்காக என் மீது அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மதரசாக்கள் மீது நான் குற்றம்சாட்ட பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பினர். சிலர் இது மதத்தின் மீதான தாக்குதல் என கண்டித்தனர்.


நான் அந்த பதிவில் எனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே பகிர்ந்திருந்தேன், பொதுவாக எந்தக் கருத்தும் கூறவில்லை. இருந்தபோதும், சிலர் என் கருத்தை ஆமோதித்தனர். அவர்களும் இத்தகைய அனுபவங்களைப் பெற்றதாகக் கூறினர்" என்றார்.


மேலும் அவர் கூறும்போது, "இந்த கருத்தை நான் இப்போது பதிவு செய்ய காரணம் பரூக் கல்லூரி விவகாரமே. கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் 67 வருட பாரம்பரியத்தைக் கொண்டது பாரூக் கல்லூரி. இந்த கல்லூரியில், மாணவர்களும், மாணவிகளும் ஒரே இருக்கையில் ஒன்றாக அமர்ந்திருந்ததற்காக 9 பேர் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.



பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்திருந்த அந்த 9 மாணவர்களை (4 மாணவிகள், 5 மாணவர்கள்) கண்டித்த அந்த கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களை அழைத்து வரும் வரை கல்லூரிக்குள் நுழைய தடை விதித்தது. இந்த சம்பவம் முஸ்லிம் பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு அநீதிகளில் ஒன்று.



தாங்கள் அனுபவிக்கும் துயரங்களை தங்கள் சமூகத்தினர் மத்தியில்கூட எழுப்பும் உரிமை இல்லாத சூழலிலேயே முஸ்லிம் பெண்கள் இன்னமும் வாழ்கின்றனர். இதன் காரணமாகவே நான் எனது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன். இத்தனை ஆண்டு காலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த கோபம் அந்தப் பதிவில் வெளியானது இயல்பானதே" எனக் கூறியுள்ளார்.



"நான் பெண் என்பதாலேயே என் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாமல் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் குரல் மேலோங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. விமர்சனங்களை விடுத்து தங்கள் சமுதாய பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் வழி காண வேண்டும்" என ரஜீனா அறிவுறுத்தியுள்ளார்.

-தஹிந்து

Friday, November 13, 2015

இளைஞர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சொன்ன யோசனைகளில் 5

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!
யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
திராளியைக் கலாய்க்கிறதுன்னா நமக்கு அவ்ளோ ஜாலி, சந்தோஷம்! ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும்தான் பார்க்கிறோமேஞ் எத்தனை ஸ்டேட்டஸு, எத்தனை மீம்ஸு, எத்தனை ஜிஃப் இமேஜஸு! எல்லாம் எதிராளியை நக்கல், நையாண்டி பண்றதாவே இருக்கு! 
ஒருத்தர் பண்ற தப்புகளை காமெடி கலந்து சொல்றது ஒண்ணும் தப்பில்லை. அதே நேரம், நமக்கு நாமே விமர்சனம் பண்ணிக்கத் தெரிஞ்சிருக்கணும். நம்ம தப்பை உணரவும் ஒப்புக்கவும் ஒரு மனசிருக் கணும். தப்பு பண்றவன் மனுஷன்; தப்பு பண்ணதை ஒப்புக்குறவன் பெரிய மனுஷன்.
படகுல பிரயாணம் பண்ணின ஒரு பெரிய படிப்பாளி, படகோட்டிகிட்ட, 'உனக்கு வேதாந்தம் தெரியுமா, தத்துவ ஞானம் தெரியுமா, இலக்கியம் தெரியுமா?'ன்னு கேட்டுக்கிட்டே போனார். அவன் ஒவ்வொண்ணுக்கும் தெரியாது, தெரியாதுன்னு சொல்லவும், 'அடடா! நீ உன் வாழ்க்கையில கால்வாசியை வீணடிச்சுட்டியே, அரைவாசியை வீணடிச்சுட்டியே, போச்சு, உன்னோட முக்கால்வாசி வாழ்க்கை வீணா போச்சு!'ன்னு நக்கலடிச்சுக்கிட்டே வந்தாராம்.
கடைசியா அவன், 'சரி சாமி, உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'ன்னு கேட்டானாம். 'தெரியாதேப்பா’ன் னாராம். உடனே அவன், 'நான் முக்கால்வாசி வாழ்க்கையை வீணடிச்சது இருக்கட்டும் சாமி, படகுல ஓட்டை விழுந்துடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல மூழ்கப்போகுது. இப்ப உங்க வாழ்க்கை முழுக்கவே வீணா போகப் போகுதே, என்ன பண்ணப் போறீங்க?'ன்னானாம்.
உங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாது; எனக்குத் தெரிஞ்சது உங்களுக்குத் தெரியாது. ஒவ்வொருத்தர்ட்டயும் ஒரு டேலன்ட் இருக்கு, தலைவா!
1998, 99வாக்குல நடந்த ஒரு சின்ன சம்பவம்.
அப்போ நான் கம்ப்யூட்டர்களை அஸெம்பிள் பண்ணி விக்கிற ஒரு கடையில டெக்னீஷியனா வேலை செய்துட்டிருந்தேன். எங்ககிட்ட ஒரு மேடம் போன் பண்ணி, தன் கம்பெனிக்கு ஒரு கம்ப்யூட்டர் ஆர்டர் கொடுத்திருந்தாங்க. அது ரெடியானதும், அதை அவங்களுக்கு இன்ஸ்டால் பண்ணிக் கொடுக் கிறதுக்காக நான் போயிருந்தேன். இப்போ மாதிரி பிராட்பேண்ட் கனெக்‌ஷன் எல்லாம் அப்போ கிடையாது. டயல்அப் முறையில் தான் இன்டர்நெட் கனெக்ட் ஆகும். வணிக நிறுவனங்களுக்குள் கம்ப்யூட்டரின் பயன்பாடு அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மூக்கை நுழைச்சிட்டிருந்துது. மேடம் நான் வேலை செய்யறதைப் பக்கத்துல இருந்து பார்த்தபடியே, அது என்ன, இது என்னன்னு கேட்டுட்டிருந்தாங்க.
'ஓ.எஸ். இன்ஸ்டால் பண்ணியிருக்கேன் மேடம்! இது வொர்க் பண்றதுக்கு ஒரு டிரைவ் இப்ப போடணும்ஞ்'னேன். உடனே அவங்க, 'என்கிட்டேயே ரெண்டு டிரைவர்கள் இருக்காங் கப்பா. புதுசால்லாம் நீ டிரைவர் போடவேணாம்' னாங்க. எனக்கு பக்குனு சிரிப்பு வந்துடுச்சு. 'இல்லீங்க மேடம், இந்த சாஃப்ட்வேர் வொர்க் பண்றதுக்கான டூல்தான் டிரைவர்ங்கிறது. அதைத்தான் சொன்னேன்'னேன்.
அதோடு முடியலை. 'உங்க ஃபைல்ஸை இங்கே ஸேவ் பண்ணிக்கலாம்'னு விளக்கினேன். 'இல்லப்பா, ஃபைல்ஸையெல்லாம் நான் பீரோவிலேயே வெச்சுக்குவேன்'னாங்க எனக்கு மண்டையைப் பிச்சுக்கலாம்போல இருந்தது. 'அப்ளிகேஷன்ஸ்’
பத்திச் சொல்லும்போதும் தப்பா புரிஞ்சுக்கிட்டு, 'என்ன அப்ளிகேஷன்? யார் அனுப்பியிருக் காங்க?'னு ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்கஞ் நான் அப்படியே ஷாக்காயிட்டேன். 'என்ன மேடம், நீங்க நிஜமா கேக்கறீங்களா, இல்ல காமெடி பண்றீங்களான்னு எனக்குப் புரியலை'ன்னு சொல்லிட்டு, வேர்டு, டாகுமென்ட், புரொகிராம் பத்தியெல்லாம் கடகடன்னு சொல் லிட்டுக் கிளம்பத் தயாரானேன்.
கம்ப்யூட்டருக்கான தொகைக்கு செக் கொடுத்தாங்க. அதுக்கு ரிசீப்ட் எழுதும்போது, அவங்க கம்பெனி பேரைக் கேட்டேன். டக்குனு ஏதோ சொன்னாங்க. புரியலை. 'பார்டன்ஞ் மறுபடி சொல்லுங்க, மேடம்'னேன். மறுபடியும் சொன்னாங்க. அப்பவும் புரியலை. 'ஸாரி மேடம், புரியலை! ஸ்பெல்லிங்கோட சொல்லுங்க, ப்ளீஸ்!'னேன். ஸ்பெல்லிங் கோடு கம்பெனி பேரைச் சொன்னாங்க. அப்பவும் எனக்குத் தெளிவா புரியலை. தலையைச் சொறிஞ்சேன்.

'பாருப்பா, Benevolent Human Resources Private Limited - ங்கிற பேரை எவ்வளவு நிறுத்தி நிதானமா சொல்லியும், ஒரு நாலு வார்த்தை, அதை உன்னால சரியா உள்வாங்கிக்க முடியலை. கம்ப்யூட்டர் கம்பெனியில வொர்க் பண்றதால, அதன் டெக்னிக்கல் வேர்ட்ஸ் உனக்கு வேணா பழகியிருக்கலாம். ஆனா, கம்ப்யூட்டர்ங்கிறது எனக்குப் புதுசு. இப்பத்தான் அதுல முதன்முறையா பழகவே போறேன். அப்படி யிருக்கிறப்போ, அது பத்தி எனக்குத் தெளிவா விளக்காம, ஏனோதானோன்னு சொல்லிட்டு அவசரமா கிளம்பறே! இதெல்லாம்கூட இந்தம்மாவுக்குத் தெரியலையேன்னு உன் மனசுக்குள்ள ஒரு நக்கல் வேற! கஸ்டமர்கிட்ட இப்படி நடந்துக்கச் சொல்லித்தான் உங்க கம்பெனியில உனக்குச் சொல்லிக் கொடுத்தாங்களா?'ன்னு அவங்க நிறுத்தி நிதானமா கேட்டப்போ, செருப்பால அடிச்ச மாதிரி இருந்துது எனக்கு.
என் தப்பு எனக்குப் புரிஞ்சுது. புரிஞ்சுதுங்கிறதைவிட உறைச்சுதுன்னு சொல்லலாம். இன்னிக்கு 'விண்டோஸ்’னா, அது கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் குறிக்கிற வார்த்தைன்னு ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். ஆனா, இருபது வருஷத்துக்கு முன்னால, விண்டோஸ்னா அது ஜன்னலைத்தான் குறிக்கும், இல்லையா?
அதனால, 'ஸாரி மேடம், ரொம்ப ஸாரி!'ன்னு நூறு ஸாரி கேட்டுக்கிட்டு, ஒவ்வொண்ணைப் பத்தியும் அவங்களுக்குத் தெளிவா, விளக்கமா எடுத்துச் சொன்னேன். அது மட்டுமில்லாம, என்னோட கம்பெனி இன்டர்காம் நம்பரை அவங்ககிட்ட கொடுத்து, 'கம்ப்யூட்டர் சம்பந்தமா வேற ஏதாவது சந்தேகம், உதவி தேவைன்னாலும் தயங்காம கூப்பிடுங்க மேடம், உடனே வந்து எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லித்தரேன்'னு பவ்வியமா சொல்லிட்டுக் கிளம்பினேன்.
சரிதானே ப்ரோ, நான் செஞ்சது?
 - இன்னும் பேசலாம்

பரிசு யாருக்கு?
சென்ற இதழில் கேட்டிருந்த புதிர்க் கேள்விக்கான சரியான விடை: ஏ.எம்.ரவிவர்மா. இந்தப் பெயரின் சிறப்பம்சத்தை மிகச் சரியாகச் சொன்னவர்களில் சென்னை, கோபாலபுரத்தைச் சேர்ந்த உமா நடராஜன் என்ற வாசகிக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய 'மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.
சரி, அந்தப் பெயரில் அப்படி என்ன சிறப்பம்சம்? ஆங்கிலத்தில் (AMRAVIVARMA)  வலமிருந்து இடமாகப் படித்தாலும் அதே பெயர் வரும்படியான (palindrome) பெயர் அது.

இளைஞர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர்
மார்க் சக்கர்பெர்க் சொன்ன யோசனைகளில்
ஒரு ஐந்து மட்டும் இங்கே
** தடைகளை உடனே தகர்த் தெறியுங்கள். இல்லையெனில், உங்க ளால் வேகமாகச் செயல்படமுடியாது!
**  நாம் தோற்றுப்போவதற்கான ஒரே காரணம், ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான்!
**  உண்மையில் நம் எல்லோரிடமுமே போதுமான புத்திசாலித்தனமும் திறமையும் இருக்கின்றன. ஆனால், நாமே அதை நம்பவில்லையென்றால், நாம் கடினமாக உழைக்கப்போவது இல்லை. பின்பு வெற்றி மட்டும் எங்கிருந்து வரும்?
**  உங்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுபவர்களோடு சேர்ந்திருங்கள். இது கொஞ்சம் குரூரமான யோசனையாகத் தோன்றினாலும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் சென்று சாதித்து, அவர்களை அசத்த வேண்டும் என்கிற உத்வேகத்தை இது தரும்.  
**  'என்னால் செய்யமுடியும் மிக முக்கியமான ஒரு விஷயத்தைதான் இப்போது செய்துகொண்டி ருக்கிறேனா?' என்று தினமுமே ஒரு முறை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

சவால்!

புத்திசாலி நண்பர்கள் மூன்று பேர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தார்கள். அவர்கள் மூவருமே இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களை இன்டர்வியூ செய்த அதிகாரி, அவர்களிடம் நான்கு தொப்பிகளைக் காண்பித்தார். அவற்றில் இரண்டு வெள்ளை நிறம்; இரண்டு கறுப்பு!
அவர் அவர்களை ஒரே திசையில் பார்க்கும்படியாக, ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு வரிசையாக நிற்கவைத்தார்.
'உங்களிடம் காண்பித்த நான்கு தொப்பிகளில் ஒன்றை உங்களுக்குத் தெரியாமல் நான் எடுத்து வைத்துக்கொண்டுவிட்டேன். மற்ற மூன்று தொப்பிகளையும் ஆளுக்கொன்றாக உங்கள் மூவரின் தலைகளிலும் வைத்திருக்கிறேன். யார் மிகச் சரியாக தன் தலையில் வைக்கப்பட்டுள்ள தொப்பி என்ன நிறம் என்று சொல்கிறாரோ, அவரே இந்த வேலைக்குத் தகுதியானவர்' என்றார். கூடவே, 'நினைவிருக்கட்டும்ஞ் உங்கள் மூவரில் எவர் ஒருவர் தவறான விடை சொன்னாலும், நீங்கள் மூவருமே தகுதி இழந்தவர்கள் ஆவீர்கள்' என்றும் சொன்னார்.
சரி, நீங்கள் சொல்லுங்கள்ஞ் வரிசையாக நிற்கும் இந்த மூவரில் யாரால் சரியான விடையைச் சொல்ல முடியும்? ஏன்? எப்படி?  
04466802923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, 'ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாமே?!

- thanx- vikatan

Wednesday, August 12, 2015

எச்சரிக்கை: ஃபேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை தந்திருக்கிறீர்களா? ஆபத்து - ஒரு உஷார் ரிப்போர்ட்

படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்
ஃபேஸ்புக்கின் தேடுதல் பட்டியில் மொபைல் எண்ணைக் கொடுத்தாலே போதும். யார் வேண்டுமானாலும் உங்களின் முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும்.
உங்களின் ஃபேஸ்புக் புரொஃபைலில் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் அந்த எண்ணை, ஃபேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே, உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும்.
டெய்லி மெயிலின் அறிக்கையின்படி, சால்ட் ஏஜென்சி என்னும் தனியார் நிறுவனமொன்றின் தொழில்நுட்பத் தலைவரான ரெசா மொயாண்டின் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், சாத்தியமான எண்கூட்டை அமைக்க ஒரு நிரல் எழுதினார். அதில் கிடைத்த எண்களை அனைத்தையும், ஃபேஸ்புக் நிரலி உருவாக்க மென்பொருளுக்கு அனுப்பினார். உடனே ஆயிரக்கணக்கான தனிநபர்களின் சுய விவரங்கள் தடையில்லாமல் வந்து குவிந்திருக்கின்றன.
இது குறித்து மொயாண்டின் மேலும் கூறியதாவது
இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கூட, பொதுவெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றியிருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களைத் திருடமுடியும்; பின்னர் அதையே மற்ற நிறுவனங்களுக்கு விற்கவும் முடியும்.
கடந்த ஏப்ரலில் ஃபேஸ்புக்கிடம் இப்பாதுகாப்புப் பிரச்சனை குறித்துத் தெரிவித்த பின்னரும், அந்த ஓட்டைகள் அடைக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதன் மூலம் கிட்டத்தட்ட 15 லட்ச ஃபேஸ்புக் பயனாளிகள், தங்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர், என்று கூறினார்.
சென்ற வருடத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, ராண்ட் கார்ப்பரேஷனின் தேசிய பாதுகாப்பு பிரிவு சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தனிநபர்களின் புகைப்படங்கள், பெயர்கள், தொலைபேசி எண்கள், கல்வித் தகவல் மற்றும் வசிக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் சமூகவலைதளங்களில் இருக்கும் சட்டவிரோதமான வணிக தளங்களால் திருடப்படுகின்றன.
ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகள், திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் அதிகம் உபயோகமானவை என்கிறது ராண்ட் நிறுவன ஆய்வு.

  • தமிழ் இந்து நாளிதலுக்கு என்னுடைய கடந்த 08/08/2015 4 நாட்களுக்கு முன் நடந்த அனுபவத்தினை பகிர்கிறேன். நான் அதிகமாக fb la அதிகமான காமென்டுகள் ஈட்டுள்ளேன்.தமிழ் ஆங்கில நாளேடுகளின் fb பேஜ்ல். என்னுடைய fb la என்னுடைய சவுதி அரேபியா மொபல் இலக்கம் மேலும் என்னுடை முழுதகவல்களையும் fb la போட்டுளேன். நான் இட்ட கமெண்ட்ல ஒரு திருட்டு கும்பல் எனக்கு புது டெல்லில் இருந்து தொடர்புகொண்டு உங்களுடைய நண்பர் அப்துல்லா என்பவர் கிரிடிட் கார்டுக்கு பணம் செலுத்தவில்லை அவருடைய மொபல் எண் ஆப் செய்துள்ளார் ஆல்டர் நண்பர் உங்களுடைய எண்ணை கொடுத்துள்ளார் என்று டெல்லியில் இருந்து பேசும் நபர் விவரத்தினை ஸ்மார்ட்டாக கூறுகிறார்.எந்த அப்துல்லா என்று எனக்கு தெரியவில்லை.நீங்கள் உங்களது கிரிடிட் கார்ட் ச்வ்ச் எண்ணை தாருங்கள் என்று அமைதியாக கூறுகிறார்.உங்கள் நண்பருக்கு நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் நீங்கள் இந்தியா வந்தால் போலீசார் கைதுசெய்வார்கள் என்று கூறினார். நான் பின்வரும் 011‍ 43088226 டெல்லி எண்ணை கூகிலில் சர்ச் செய்தேன்.கீழ்காணும் ஒரு தகவல் பதியப்பட்டுள்தினை அறிந்து நீங்கள் சொல்லும் அந்த அப்துல்லா மொபல் இலக்கத்த
    about 8 hours ago
     (0) ·  (0)
     
    • S
      Siva  
      IT துறை யின் பெரிய சாபக்கேடு இந்த தனி நபர் விவரங்களை திருடும் கும்பல்கள்..இதை வாங்குவோர் நிறைய உள்ளனர்..திருட்டு பொருள் வாங்குவது தவறு என்று தெரிந்தும்..
      Points
      4225
      about 10 hours ago
       (0) ·  (0)
       
      • S
        பொது மக்கள் பயன் அடைய ஹிந்து தமிழ் பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி.
        about 11 hours ago
         (1) ·  (0)
         
        SSethu Up Voted
        • M
          Mumbai  
          கிரிமினல் வேலை படிச்சவனும் செய்யுறான்.
          Points
          9700
          about 11 hours ago
           (1) ·  (0)
           
          SSethu Up Voted
          • Swaminathan Murugaiyan Sr. Program Manager at Servion Global Solutions 
            கிரிமினல் வேலைகளை, இந்த காலத்தில் படிச்சவன் மட்டும்தான் செய்கிறான்.
            about 7 hours ago
             (1) ·  (0)
             
          • A
            Anand  
            இதில் மட்டுமில்லை.. android மொபைல் இல் accept கொடுக்கும் போது எல்லா சாப்ட்வேர் களும் நம் தகவல்களை திருடுகின்றன... இது எத்தனை பேருக்கு தெரியும்...
            about 13 hours ago
             (2) ·  (0)
             
            • SI
              This news very correct.
              about 14 hours ago
               (0) ·  (0)
               
              • V
                பேரன்புல்டையீர் வணக்கம், முன்னவர் செய்ததை பின்னவர் செய்கிறார். நன்றி.
                Points
                325
                about 15 hours ago
                 (0) ·  (0)
                 
                • V
                  பேரன்புடையீர் வணக்கம், தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. பொது மக்கள் பயன் அடைய ஹிந்து தமிழ் பிரசுரம் செய்தமைக்கு மிக்க நன்றி.
                  Points
                  325
                  about 15 hours ago
                   (0) ·  (0)
                   
                  • S
                    SSethu  
                    சைபர் கிரைம் வளர்ச்சி ஆபத்தின் அறிகுறி
                    Points
                    1570
                    about 15 hours ago
                     (0) ·  (0)
                     
                    • சிந்திக்க வேண்டியதாகவும், சிக்கல் மிக்கதாகவும் , சீர்செய்ய வேண்டியதாகவும் தெரிகிறது .
                      Points
                      150
                      a day ago
                       (0) ·  (0)
                       
                      • முகநூல் கணக்குகள் எப்படி திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளைக்காட்டிலும் அதிகமாக ஆபத்தானது என்பதை சிறிது விளக்கியிருக்கலாம் !

                      நன்றி - த இந்து