Sunday, October 21, 2012

பி பாசிடிவ் பிளட் குரூப் ஃபிகர்களே!

1.சேர நன்னாட்டிளம் பெண்ணுடன் சேர ஆசைப்படாத ஆண்கள் இவ்வுலகில் இல்லை---------------------2. டாடி.மம்மிகிட்டே பம்முற மாதிரி எங்க ஸ்கூல் மிஸ் பார்த்தும் ஏன் பம்முறீங்க? # மகள் வினா 


 விடம்மா, மம்மின்னாலே பம்மிங்க் தான்----------------------


3. ஆதீன பதவி இழப்பால் எனக்கு பொருளாதார இழப்பு இல்லை-நித்தி.# தார இழப்பு உண்டு 
----------------------


4. நீ என்னை நான்சென்ஸ் என்று திட்டினாய்! நான் சென்ஸ் என்று நீ சொன்னதாக நினைத்துக்கொண்டேன் # பிளட் க்ரூப் பி பாசிடிவ்் 
---------------------

5. நவராத்திரி கொலு பார்க்க நீ கோயிலுக்கு சென்றால் கொலு வைக்கும் அழகிய பொம்மைகளை கண்டு ரசிக்கலாம் ---------------------6. அன்பே! நீ ஒரு பீட்சா போல.நல்லா கதை விடறே ! 
-------------------


7. ஆண்கள் உபயோகிக்க ஒரே ஒரு நிறம் .பெண்களுக்கு மட்டும் பல வண்ணமயங்கள் # குடை 
---------------------

8. மழையில் நான் நனையும்போதெல்லாம் முந்தானயால் என் தலை மூடி குடை வள்ளல் ஆகிறாய் நீ! 


-------------------


9. மழைக்காலத்தில் மலையாளக்கரையோரம் ஒதுங்கினால் கம்பளிகள் தேவைப்படாது ----------------------

10. ஷவர் பாத்தில் குளிக்க ஆசைப்பட்ட ஏழைக்குழந்தைகளுக்கு வானம் அளிக்கும் விலை இல்லா ஷவர் பாத் # மழை ---------------------

11. மழைக்காகிதங்கள் வழக்கொழிந்தன.நல்ல வேளை மழைக்காலம் இன்னும் வழக்கொழியாமல்...
--------------------

12. மண் வாசத்தையும் ,உன் நேசத்தையும் அழைத்து வந்தது மழை் -----------------------


13. அன்பே! மழையில் நனைந்து விடாதே! ஹாஸ்பிடல் செலவு எனக்குத்தான் -----------------------


14. கோலம் போட தொடர்ச்சியா புள்ளிகளை அனுப்புது வானம் பூமிக்கு # மழை -----------------------


15. டச் போன் உபயோகிப்பாளரின் விரல்கள் லாவகமான ,கூர்மையான குச்சியாய் மாறி விடுகிறது 
---------------------

16. உன் உடம்பில் ஒரு மச்சம் கூட இல்லை என்றாலும் மச்சினி இருந்தால் நீ மச்சக்காரன் என்றேஅழைக்கப்படுவாய் -------------------17. தி மு க தலைவருக்கு பிடிக்காத இடம் ஜெராக்ஸ் கடைதான் # ஜெ ராக்ஸ் 


-------------------

18. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ஓக்கே எதை சுட்டா கறுப்பு மை ஐ டெகஸ் மை தரும்? ------------------------


19. மனைவி தூங்கிட்டு இருக்கும்போது நைசா கிள்ளி வெச்சுடனும்.கட்டெறும்பு கடிச்சிருக்கும்னு கதை விடலாம் # கிள்ளி வளவன் டைரியிலிருந்து -------------------


20. இந்த சம்சாரங்க எல்லாம் புத்திசாலிங்க.புருஷன் கூட சண்டை போடும்போது குழந்தையை கேடயமா வெச்சுக்கறாங்க.நாம திருப்பி அடிக்கவே முடியறதில்லை ------------------------

21. இடியால் பாதிக்கப்பட்டவர்களை விட மனைவியின் அடியால் பாதிக்கப்பட்ட அபலை கணவர்களே அதிகம் # சர்வே 


---------------


22. சின்ன வயசுல இருந்தே பீட்ரூட் ரெகுலரா டெய்லி சாப்பிட்டா பொண்ணுங்களுக்கு நல்லா ரூட் விடலாமாம் #சென்னிமலை கில்மா சித்தர் டைரியிலிருந்து :-))


----------------------


23. புத்தகத்துக்குள் காதல் கடிதம் வைத்துக்கொடுத்தால் அது நூல் விடுதலா? 


-------------------


24. சமையல் கலை கற்றவனுக்கு சம்சாரம் ஊருக்குப்போயிருந்தாலும் மிதப்பு ----------------------

25. டீக்குடிக்கும் பழக்கம் இல்லை என்பதற்காக ஹார்லிக்ஸ் அல்லது போர்ன்விட்டா சர்ட் தேடுகிறேன் # டிசர்ட் 


------------------------


26. யாரா இருந்தாலும் நமீதா அவங்களை மச்சான்னு கூப்பிடுவாங்க.அதுக்காக மச்சான்னு கூப்பிடும் பெண்களெல்லாம் நமீதா ஆகி விட முடியுமா?------------------------


27. புத்தாடை யார் எப்போ உடுத்தினாலும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும் ----------------------

28.. உங்க ஜோக்ஸ் எல்லாம் வெரி நைஸ்னு யாராவது சொன்னா சந்தோஷப்பட்ரக்கூடாது.அரைச்ச மாவையே அரைக்கறோம்னு கிண்டலா க்கூட இருக்கும் 
-----------------------


29. THE POSSESSIONS = பேய் நிலா # சபாஷ் துபாஷ ் 


-----------------

30. பி பாசிடிவ் பிளட் குரூப் இருக்கற பொண்ணு கிட்டே லவ் லெட்டர் குடுத்தா ரீ ஆக்‌ஷன் பாசிட்டிவ்வா இருக்கும்னு நெகடிவ்வா எண்ணிவிடாதே!
--------------------------------------

2 comments:

R.Mohanbalu said...

ரொம்ப நல்லாருக்கு செந்தில். நல்லாவே யோசிக்கிறீங்க.

ம.தி.சுதா said...

எங்கள் சென்னிமலைச் செம்மலுக்கு என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்