Friday, October 12, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpDjl6f40hGZPHKPdTi9s1sDrvmq8lI15fyePXbnhQZm10lKCn45lKwglrQB_yyInG4Gf0Ty3uDYqbF7Dpv63dpRWDGlQobrODRO4p0RLyLLY2rwazrDLoSalEkUIT62xF-uGiMqom-gk/s1600/Maatran+Audio+cover+Stills+(2).jpg

ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுனார்ன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 


இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 


 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில  அது மிஸ்சிங்க்... 


ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 


ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  ”துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு”  பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.


2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.


3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது


4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது


5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.


6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


8. ஆர்மர் ஆஃப் காட் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை நினைவு படுத்தும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சபாஷ் .அந்த மரக்கிளை சீன் ஓக்கே.

 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் பார்க்குமே?2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 


3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 


4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மார்க்  விக்ரம் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 


6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? அதே போல் கம்பெனி மேனேஜரிடம் அந்த ஃபாரீன் லேடி பற்றி எச்சரிக்கவே இல்லையே?


7. ஃபார்முலா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 

8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்ன சூர்யா  அடம் பிடிச்சாரா?


9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 


10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 


11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 


12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 


13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 


14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 


15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 


16. ஹீரோ அந்த மெடல் லேடி கிட்டே லேப் டாப் வெச்சு விளக்கிட்டு இருக்காரு. தத்தி வில்லன் மேனேஜர் விளக்கு பிடிச்ச மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு. மேலிடம் சொல்லித்தான் எதுவும் செய்வாரா? அவருக்குன்னு மூளை இல்லையா? அட்லீஸ்ட் அந்த ஆதாரத்தை லேப்டாப்பை பிடுங்கி இருக்கலாமே? 


17.தன் அப்பா தான் வில்லன்கற மேட்டர் தெரிஞ்சதும் சூர்யா ஏன் காஜல் கிட்டே அந்த மேட்டரை சொல்லலை?  ஆதாரம் அவ கிட்டே இருக்கு, அவ தன் அப்பா கிட்டேயே போய் குடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்க மாட்டாரா? ( அப்டித்தான் நடக்குது )

 


மனம் கவர்ந்த வசனங்கள் ( ரைட்டர் சுரேஷ் பாலா -சுபா)

1.காதலிச்ச யாராலும் கவிதை எழுதாம இருக்க முடியாது .கலீல் ஜிப்ரான் கவிதை படிச்சவங்க யாரும் காதலிக்காம இருக்க முடியாது2.  உங்க 2 பேருக்கும் கனவு ஒண்ணாதான் வருமா? இதயம் மட்டும்தான் ஒண்ணு ,மத்த ஆல் பார்ட்ஸ் தனித்தனி கி கி3. போட்டின்னு வந்துட்டா டீல் பண்ணனும் ,பீல் பண்ணக்கூடாது4. எனக்கு இதயம் இல்லாம இருக்கலாம் ,ஆனா மனசுல ஈரம் இல்லாம இல்ல


5. நீ அரியர்ஸ் வெச்சிருந்தியே , என்னாச்சு? என்ன கண்டிஷன்ல இருக்கு?


 கஜினிங்கறதை  இதுல காட்றான்6. லேடி - 8 வயசுல இவன் என்ன பண்ணான் தெரியுமா?

 ஆண்ட்டி.இதெல்லாமா சொல்வாங்க?


7. காஜல் - நான் இப்போ மப்புல இருக்கறதால  எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது போல//


 நோ நோ. உங்களுக்கு நாலு நாலா தெரிஞ்சா தான் தப்பு


8. எனக்கு டயபடிஸ் இருக்கு.. நானும் பாத்ரூம் போகனும் எனக்கு லெக் பீஸ்
9. பாரதியார் யார்னு தெரியுமா?


 ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு  பாடுனவர் தானே?


 அது கண்ண தாசன்
10. ஏம்மா? நீ போஸ்ட் பெயிடா? ப்ரீ பெய்டா?


-------


 அய்யோ அம்மா.. விடும்மா என்னை மன்னிச்சுடு


 இப்போ உன் கனெக்‌ஷன் ஆஃப் பண்ணிட்டா பார்த்தியா?
11. இவன் தான் உன் லவ்வரா? எங்கே பிடிச்சே? 1 வாங்குனா 1 ஃப்ரி மாதிரி..12. இது நீ கட்டிக்கப்போற பொண்ணா? ஆமா, எப்டி தெரியும்?
 கண்ல பார்த்தாலே அது தெரிஞ்சுடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBd9rtjAch64_OPY7r3dxTmp4wvjCh1oVF3Eol1O2_gtK6IGI-TnomfDwuiEn-MP-qbjcajHBjMY3LNKb0-NROjsk-DzPEhHia7zxdmg-f_5dNaGnvRtlSlSDCHX9Sg-KuaauuTDd68TBU/s1600/kajal-agarwall19.jpgசி.பி கமென்ட் - முன் பாதி வேகம் பின்பாதில இல்லைன்னாலும் இது கவனிக்கத்தக்க படமே. பெண்கள், சூர்யா ரசிகர்கள் என எல்லா தரப்பையும் கவரும். ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


இந்தபடத்தில் பணி ஆற்றிய இயக்குநர், ஹீரோ , ஹீரோயின் பேட்டி மற்றும் பாடல் வரிகள் விபரமாய் படிக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_9785.htmlhttp://searchandhra.com/english/wp-content/uploads/2009/08/Kajal-Agarwal-Photo-Gallery-Latest-hot-7.jpg

16 comments:

குரங்குபெடல் said...

அளவான விமர்சனம்

நன்றி

Unknown said...

இவ்வளவு தானா?ஏதோ சமூக அக்கறையுள்ள படம் என்று மாறி மாறி சூர்யாவும்,k.v.ஆனந்தும் பேட்டியில் கூறினார்கள். போங்கடா நீங்களும் உங்க படமும்..

Senthil said...

Average?

Thanks
Senthil, Doha

சென்னை பித்தன் said...

மின்னல் வேகந்தான் விமரிசனம்!

மயில் றெக்க said...

படம் அப்படிலாம் ஒன்னும் நல்லா இல்லை சார்
படு மொக்கை

பாட்டு ரசிகன் said...

Rightu...

shankar said...

Hi sibi,

Your review of mattran is copied by this site : http://www.saaddai.com/2012/10/blog-post_1105.html

shankar said...

This site also has copied your review and put them in their site without giving credits to you.

http://www.pagejaffna.com/?p=10042

ஆர்வா said...

பார்க்கலாம்ன்னு நினைக்குறேன்... உங்க விமர்சனமும் அதையேதான் சொல்லுது... அதுவும் சுபா’வை நம்பினோர் கைவிடப்படார்’ன்னு சொன்னது நச்...

Unknown said...

Sir itha padichathe paathi padatha paatha maathi iruku sir ur gr8 sir

ராஜி said...

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின படம்ன்னு எல்லாரும் பேசிக்குறாங்களே! படம் ஓடுமா?

ஆர்.சி.ஜெயந்தன் said...

என்ன நண்பரே சிங்கபூர்ல படம்பார்த்த ரசிகர்கிட்ட கேட்டு விமர்சனம் எழுதியிருக்கிறது அப்பட்டமா தெரியுது! சோவியத் ரஷ்யா உங்களுக்கு அமெரிக்காவா?

KANA VARO said...

US or Ukraine????????

Unknown said...

hey....too many fotos of kajalagarwal..r u infatuated with her...too bad...

Nanpan said...

காதலன் படத்தில் ஆரம்ப காட்சியில் ரகுவரன் Out என்பார்,
சிவாஜி படத்தில் ஆரம்ப காட்சியில் ரஜனியை கருப்பு துணி போட்டு . .
அது எல்லாம் அந்த காலம் boss, இப்ப இப்படி பார்க்காதீங்க (சூர்யா தடுக்கி விழுவதை . .)
மொத்தத்தில்
கனாகண்டேன் + அயன் = மாற்றான்

THIYAGARAJAN said...

உங்கள் விமர்சனத்தை அடுத்துதான் படம் பார்க்கவே சென்றேன் ..பல காட்சிகள் பல படங்களில் இருந்து சுடப்பட்டது குறிப்பாக கந்தசாமி , நீ வருவாய் என etc...