Friday, October 26, 2012

மனுஷ்ய புத்திரனின் சின்மயிக்கு எதிரான நிலைப்பாடு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic4smqbzXhbxA3xZ5pMvEq6RlmHRlKZpPVx7Fi1L2gnAR18N0M0K4RJ10q6ybCd3N5Jq_J7sYBAWk1ChB9f3_vJzzI2yn_4iGlXB0R8098efXx4060TCYHD2lb-k3DbxFjtHgOTDtqeUC9/s1600/manushya+puthiran.jpgசின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார்.


 ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.



புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.



ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?



இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.



மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?



ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?



குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.



நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?



கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?



எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?



நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

வாசகர்கள் கருத்து


1.

Kraja Raja இது அவசர உலகம். முன்பெல்லாம் சாலையில் செல்லும் போதெல்லாம் யார் மீதும் தவறாக இடித்து விட்டால் "சாரி" கேட்போம்.
இப்போது அப்படி இல்லை நம் மீது தவறு இருந்தாலும் கண்ணு தெரியலையாஃபார்த்து போ என்கிறோம்.
வேணாம் வலிக்குது இத்தோடு விட்டுறுங்க
2.
Anbarasan Vijay இந்த வெளிப்படையான பகிரங்கமான கருத்தைதான் உங்களது முந்தைய தொலைகாட்சி நேர்காணலில் எதிர்பார்த்தேன், எந்த ஒரு கருத்தையும் எதற்காகவும் தயங்காமல் முன் வைக்கும் உங்களிடம் ஏதோ பின்வாங்குதல் இருப்பதாக நினைத்தேன், இந்த பதிவை படித்த பிறகு அந்த குறை தீர்ந்தது, சின்மயியினுடைய சாதிய ரீதியிலான கருத்துக்களால் பாதிக்கப் பட்ட ஆயிரமாயிரம் பேர்களில் நானும் ஒருவன், 
சின்மயி முற்போக்கு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே அவரது புகாரின் மீது காவல்துறை அதீத அக்கறையும், அவசரமும் காட்டியுள்ளது, இந்த அக்கறை ஏன் மீனாகந்தசாமி விவகாரத்தில் காட்டப் படவில்லை?,சாதீயம் எல்லா மட்டங்களிலும் தலை தூக்கி நிற்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், உங்களது நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் உங்களோடு நானும் கைகோர்க்கத் தயார்
3.
Arul Ezhil நன்றி சார். ராஜன்லீக்ஸ், சரவணகுமார் அகியோரை யாரென்றே எனக்குத் தெரியாது. கிட்டத்தட்ட அவர்கள் கைதாகி இரண்டாம் நாள் வரை நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் அதன் பின்னர் வந்த செய்திகள் எல்லாம் இவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்த பிறகுதான் நான் எழுதினேன். உங்களைப் பொன்றோர் ஒரு தரப்பை ஆதரிக்காலம் எழுதுவது மன ஆறுதல் அளிக்கிறது.
4.
Mani Kandan ஒரு தனிப்பட்ட பகை, காழ்புணர்ச்சி, உயர் சாதி/மேட்டு குடி வளர்ப்பு முறை, சக நண்பர்கள் உசுப்பு - மொத்த உருவகம் சண்டை இட்ட இரு தரப்பினரும்.

இதில் சின்மை கை ஓங்கி இருபது அவரின் அதிகரவர்க்கத்துடன் இருக்கும் நெருக்கத்தை பட்டவர்தமாக வெளிபடுதிவிட்டார். இது சமூ
கத்துக்கு பெரிய சவால்.
இவருக்கு முன் உள்ள 19 வழக்குகள் பற்றி முச்சி விடாத ஜர்ஜ் - இவருக்கு மட்டும் வரிந்து கட்டுவதில் அப்பட்டமாக தெறிகிறது.

சின்மை அகம்பாவத்தில் பெரும் பங்கு - ஆஹா ஓகோ என்று பொய்யான தோற்றத்தை ஏற்படுத்திய காலன் போல் தோன்றி இருக்கும் வண்ணமிகு தொலைகாட்சி நிறுவனங்களை சேரும்.

பாடினால் / ஆடினால் எதோ உலகத்தில் பெரிய சாதனை புரிந்த போன்று ஒரு மாயை உருவாக்கும் தொழில்சாலையாக தொலைகாட்சி நிறுவனங்களை செயல்படுகின்றன. இவற்றின் இயங்கு தளம் சென்னை அதை சார்ந்த இடம் மட்டுமே, அதனால் தமிழகத்தின் மற்ற பகுதிகள் பற்றி புரிந்து கொள்ளும் தன்மை இவற்றில் உள்ள என்னோயோருக்கு தெரிவது இல்லை - சின்மை உட்பட.

அவர்கள் இதுதான் உலகம் என்று நம்புகிறார்கள், ஆனால் சமுகம் இதைவிட பெரியது, அதை அவ்வளவு எளிதாக நேர்கொள்ள முடியாது.இதை புரியாமல் இதற்கு முதல் பலி - சின்மை.

அதிகம் பாதிப்பு அடைவது சின்மை - அவரின் / அவரை போல் உள்ள சென்னை வாழ் மேட்டு குடி மக்களின் மறு முகம் கிழிந்து விட்டது.

இதனால் சின்மை - இனிமேல் தமிழகத்தின் செல்ல பிள்ளை இல்லை.

பெண்ணிடம் கிழ்த்தரமாக நடந்துகொண்டவன் தமிழன் இல்லை.

இதை தவிர, இந்த விசயத்தில் இரு தரப்பினர் பற்றி விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை. இருவரும் வேவ்வேறு குட்டையில் ஊறின ஒரே மாதிரி மட்டைகள்.

ஒருவேளை நீங்கள் அய்யா ராகவா ஐயங்கார் வழிமுறை இருந்தால், அவர் பெயருக்கு களங்கத்தை செய்யதிர்கள், தயவுசெய்து.

அய்யா ராகவா ஐயங்கார் அவர்களின் தமிழ் தொண்டு, பற்று கருதி - சின்மை மன்னிப்போம், மறப்போம் - அவர் பாடலை புறக்கணித்து.

நன்றி.
5. Mansoor Ali Khan சின்மாயி செய்தது தவறு என்று கூறுபவர்கள் - ராஜன் செய்ததும் தவறு என்று ஒத்துக்கொள்ளதான் செய்கிறார்கள், மேலும் இது திசை திருப்பபட்ட வழக்கு என்பது தான் அவர்களின் வாதம், ஆனால் சிம்னயின் ஆதரவாளர்கள் - அந்த பெண் கூறியது தவறு என்று ஒத்துக்கொண்டதாக தெரியவில்லை - இது ஆணவத்தின் வெளிபாடாக தான் பார்க்கமுடிகிறது
6. Prasanna Kumar ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா? - உங்களின் இந்த கட்டுரை சின்மயி விவகாரம் என்பதையும் மீறி நீங்கள் சொன்ன எந்த வாக்கியம் பொதுவானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
நன்றி - மனுஷ்ய புத்திரன் ஃபேஸ் புக்  



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html


டிஸ்கி 7 -ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 8- லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள் http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html


டிஸ்கி 9 - கோர்ட்டில் சின்மயி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் | அட்ரா சக்க-http://www.adrasaka.com/2012/10/blog-post_6680.html



9 comments:

Unknown said...

@Manushya Puththiran:இந்த விஷயத்தில் சரியாக பேசும் நீங்கள் குஷ்புவின் (தமிழ் பெண்களின் கற்பு பற்றிய) பேச்சுக்கு ஆதரவாக பேசினேன் என்று கூறுவது முரணாக உள்ளதே!!!!

Avionics - Bangalore said...

தமிழன்னை மீதும், மறைந்த தமிழ் அறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழறிஞர்கள் கொடுத்த விண்ணப்பம் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012) காவல்துறை ஆணையருக்குச் சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மீனவர்கள் மீன்களைக் கொல்வதால் மீனவர்களை சிங்களவர் கொல்கிறார்கள் என்று சின்மயி எழுதியுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் இட ஒதுக்கீடு தவறு என்றும் தொடர்ந்து கலகத்தைத் தூண்டும் நோக்குடன் எழுதினார். சின்மயி தூண்டியது வெளிவரவில்லை! அவருடைய தவறுகள் வெளிவரவில்லை. சமூக உணர்வுகளைத் தூண்டிவிட்ட சின்மயி மீதல்லவா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு வந்திருக்க வேண்டும்? ஆனால் சின்மயி திட்டமிட்டுத் தமிழர்களைத் தொடர்ந்து உணர்ச்சிவயப்பட வைத்து தான் விரித்த வலையில் விழச்செய்து பின்னர் அவர்கள் மீதே கொடுத்த புகாரால் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் புகார் கொடுக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும் (மனு எண்: E/268872 நாள்: 3-09-2012), பாவாணரைப் பற்றி நாகூசும் சொற்களால் கீழ்த்தரமாக எழுதியதற்கு என்ன நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டது ?

Avionics - Bangalore said...

ஒரு இனத்தை தமிழ் மீனவனைப் பற்றி ஏளனமாக தன் சாதித் திமிரில் சின்மயி பேசி இருக்கிறார்.நீங்கள் மீனைக் கொல்கிறீர்கள்,சிங்களன் மீனவனைக் கொல்கிறான் அவ்வளவுதானென்று.அப்புறம் ரிசர்வேசனைப் பற்றியும் பேசி இருக்கிறார்.உணர்வுள்ள எவன் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வான்.
ராஜபக்சேவை அசிங்கமாக திட்டியதில்லையா நாம்..ஏன் திட்டினோம் அவன் நம்மினத்தை அழித்தான், என்கிற உணர்வுதானே,அதுதான் சின்மயி விவகாரத்திலும் நடந்தேறி இருக்கிறது.

இப்போ கூறுங்கள் அவர்களை தூண்டியது யார்??
அதுதான் அந்த சிலரை கோபம் கொள்ள செய்திருக்கிறது,விவாதம் வரம்பு மீறவே வார்த்தை அவர்களிடத்தில் தடித்திருக்கிறது. இது இருத்தரப்பின் தவறுதானே ..அப்படி இருக்க அவர்கள் மட்டும் செய்ததாக சின்மயி கூறுவது எப்படி ஏற்புடையதாகும்.

silviamary.blogspot.in said...

எந்த பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையுடன் கருத்துச் சொன்ன மனுஷ்ய புத்திரனுக்கும் அதை தன் பதிவில் வெளியிட்ட அட்ரா சக்க பிளாக்குக்கும் நன்றி! மனுஷயபுத்திரன் கருத்துடன் முழுவதும் நான் உடன் படுகிறேன்! சின்மயி விவகாரம் சம்பந்தமான பல பதிவுகளையும் படித்ததிலிருந்து அவர் பெண் என்பதாலும் பிரபலம் என்பதாலும் ஊடகமும் காவல்துறையும் அவசரப்பட்டு தப்பான முடிவெடுத்திருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது! என்ன செய்வது? நம்முடைய அதிகார வர்க்கத்தின் முகமே அதுதானே!

neyvelivichu.blogspot.com said...

oru vishayam puriyavillai.

chinmayee solgirar meen patri ezhuthiyathu veru idaththil meenavar patri ezhuthiyathu veridathil endru.

ingu manushya puthiran solgirar, meengalai kolvathum meenavargalaikk kolvathaiyum avar samamaga kattukiraar endru.

ethu unmai.. naan twitter il illai..ippothu than ithaip patri therinthu kolkiren..

anbulla CP ithur kurithu thaangal konjam velicham pottu kattinal thevalai.

mele ezhuthi irukkum karuthuthukkalaipparkkumpothu, meen meenavar pirachinaiyai vida chinmayee uyarntha saathiyai sernthavar enpathil than pirachinai pola therigirathu..

anbudan

சுதா SJ said...

மிக சரியான நடு நிலையான கருத்து....

சுதா SJ said...

எல்லாம் சரிதான்
ஆனா...
இது பற்றி சாரு இனி என்ன சொல்லப்போறாரோ...?????????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புத்தக பிரியன் said...

Charu va? Avar solla aarambithal padikira namake kaadhu kan vaai ena aimbulangalum koosume.

மங்கை said...

http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=1
http://www.use.com/4e7dc4e89a8177d49ad2?p=2#photo=4