Monday, October 22, 2012

The Possession (I) (2012) - சினிமா விமர்சனம்

http://www.shockya.com/news/wp-content/uploads/the-possession.jpgஅவ்வை சண்முகி  கமல் மீனா மாதிரி  ஹீரோவும் ஹீரோயினும் ( தம்பதி) கருத்து வேற்றுமையால் பிரிஞ்சு வாழறாங்க.. அவங்களுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு பொண்ணு டீன் ஏஜ்ல , இன்னொன்னு டீன் ஏஜ்க்கு கிட்டே..  சீதா எப்படி வேற ஒரு டி வி டைரக்டர் கூட வாழறாங்களோ அப்படி ஹீரோயின் லிவிங்க் டுகெதரா  வேற ஒரு ஆள் கூட வாழறாங்க. ஹீரோ ஆர் பார்த்திபன் மாதிரி தனியா வாழறார். அப்பப்ப வந்து தன் குழந்தைகளை தன் அபார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டுப்போய் 2 நாள் வெச்சிருந்து விளையாடிட்டு வருவார். 


 ஒரு டைம் அப்படி தன் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ பக்கத்து வீட்ல வீடு காலி பண்றதால  தேவையற்ற பல பொருட்களை விற்கறாங்க. அதுல ஒரு பெரிய சைஸ் கல்லா பொட்டி மாதிரி ஒரு வெத்தலை பொட்டியை குழந்தை ஆசைப்பட்டு கேட்டுதுன்னு வாங்கித்தர்றார்.. அங்கே தான் வினை.. அந்த பாக்ஸ்ல ஏதோ ஒரு தீய சக்தி.. ரொம்ப நாளா அலாவுதீன் பூதம் போல் வாழ்ந்து வருது. 


 அந்த ஆவி இந்த சின்னக்குழந்தையை ஆக்ரமிக்குது.. அந்தப்பொண்ணை எப்படி ஹீரோ காப்பாத்தறார் என்பதே மிச்ச மீதிக்கதை.. பேயால் பாதிக்கப்படும் அந்த பெண் குழந்தை  நடிப்பு, பார்வை, பாடி லேங்குவேஜ் எல்லாமே பிரமாதம்.  அப்ளாஸ் அள்ளுது.. ஊஞ்சலில் ஆடிக்கொண்டே முறைத்துப்பார்ப்பது , சந்திரமுகி ரேஞ்சுக்கு கார் டிரைவரை பார்ப்பது  , அப்பாவையே எதிர்ப்பது , அம்மாவை கண்டால் பம்முவது ( பேய் கூட அம்மான்னா பம்முது பாருங்க ) எல்லாமே அபாரம். கேமரா மேனும், இயக்குநரும் இதில் முக்கிய பங்கு வகிக்கறாங்க 


 டீன் ஏஜ் பொண்ணா வர்ற  முதல் பொண்ணுக்கு வாய்ப்பு கம்மிதான். ஆனாலும் ரோஸ் கலர் முகம் . அழகுக்கவிதை .. டான்ஸ் பிராக்டீஸ் பண்றப்போ போடும் ஸ்டெப்ஸ். பேயைக்கண்டு மிரள்வது  என அங்கங்கே பளிச் டச்.. 


ஹீரோ பொறுப்பான அப்பா கேரக்டரை உணர்ந்து செஞ்சிருக்கார். மனைவியிடம் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டா? என பம்முவது, தன் கண் எதிரே தன் மனைவி இன்னொருவனுடன்  தம்பதி சகிதம்  நடந்து செல்வதைப்பார்த்து ஆற்றாமையுடன் புலம்புவது , தன் குழந்தை படும் துயரத்தைக்கண்டு அரற்றுவது என  அருமையான நடிப்பு.. ஹீரோயின் சரி இல்லை.. டப்பா மூஞ்சி.. கிழடு தட்டிய முகம்.. வேற ஆளை போட்டிருக்கலாம்.  அவர் ஏன் கணவரை வெறுத்து ஒதுக்கினார் என்பதற்கான காரணம் தெளிவாக சொல்லப்படாததால் கிட்டத்தட்ட வில்லி மாதிரி தான் அவரை நினைக்க வேண்டி இருக்கு.. 


http://www.apnatimepass.com/the-possession-movie-poster-24.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. அந்த மர்மப்பெட்டியை குழந்தை திறந்து பார்க்கும்போது அதில் உள்ள கண்ணாடியில் அவர் முகம் அலங்கோலமாய்த்தெரிவது கண்டு ஹீரோ அதிர்ச்சி அடைந்து கிட்டே போய் பார்ப்பது பின்னணி இசை அபாரம் அந்த சீனில்.. 


2. போஸ்டர் டிசைன் அட்டகாசம்.. குறிப்பா ஒரு பெண்ணின் வாயில் இருந்து வெளி வரும் கை அந்தப்பெண்ணின் முகத்தையே வளைப்பது போல் இருக்கும் ஸ்டில் இதுவரை வராத புதிய கோணம்.. ஆனால் அந்த சீன் படத்தில் இல்லை.. அதுக்கான லீடு மட்டும் இருக்கு.. ஒரு வேளை சென்சாரில் கட் ஆகி இருக்கலாம்.. 3. மட்டன் , சிக்கனே பிடிக்காத குழந்தை திடீர் என மாங்கு மாங்கு என மட்டன்  சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஹீரோயின்  தடுக்கப்போகும்போது நடக்கும் காட்சிகள் .. 4. பேய் பிடித்த குழந்தையின் அருகே அமர்ந்து பைபிளை வாசிக்கும் ஹீரோவை  சூறாவளிக்காற்று தாக்குதல் நடத்துவது கிரஃபிக்ஸ் கலக்கல் 


5. பேய் பிடித்த குழந்தையின் ரூமில் லட்சக்கணக்கான பூச்சிகள் இருந்தும் அவள் சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பது உறைய வைக்கும் காட்சி.. 


6. பேய் பிடித்த குழந்தை உடம்பில் இருந்து அது வெளியேறி ஹீரோவின் உடம்பில் புகுவது , ஒரு கை மட்டும் அவர் வாயில் இருந்து வரும் சீன் க்ளைமாக்ஸ் பதட்டம்.. 


7. பனி படர்ந்த லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் , ஒளிப்பதிவு  அருமை// 


http://www.apnatimepass.com/the-possession-movie-poster-27.jpgமனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்ம குடும்பத்துல  இருக்கற உறுப்பினர்களை ஒருவரை ஒருவர் நாம அடிச்சு சாப்பிடுவோமா?  அதே மாதிரி தான் அசைவம் சாப்பிடுவதும். எல்லா உயிர் இனங்களும் ஒரே குடும்பம் தான்.. நான் அசைவத்துக்கு மாறறாம இருக்க அதுதான் காரணம்..


2. அவனை உனக்கு பிடிச்சிருக்கா? 


 யா.. அவர் உங்களை விட என் கிட்டே அன்பா இருந்துக்கறார். 

http://boxofficebuz.com/content/movies/1740/videos/the-possession-2012-movie-poster-2.jpeg
இயக்குநரிடம் சில கேள்விகள்1. இந்த மாதிரி பேய்ப்படங்கள்ல  பேய் ஏன் அந்த நபரை பிடிச்சிருக்கு? என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படனும், அல்லது அந்த பேய்க்கு ஒரு ஃபிளாஸ் பேக் வைக்கனும்./ மொட்டை சாத்தான் குட்டைல விழுந்த கதையா ஏதோ ஒரு பேய் எதுக்காகவோ குழந்தையை பிடிக்குது. அதுவா போயிடுச்சு என்பதெல்லாம் ஏத்துக்கவே முடியலை.;.  2. பேயோட பேரை உச்சரிச்சு அந்த பெட்டிக்குள்ளே ரிட்டர்ன் போ அப்டின்னு சொன்னா போதும் அது பொட்டாட்ட  ( அமைதியா ) போயிடும் என மந்திரவாதி சொல்வது செம காமெடி.. பேய் என்ன ஏ டி எம் கே மினிஸ்டர்ஸா? சொன்னபடி கேட்க? 


3. பைபிள் புக்கோட ஹீரோ பேய்க்குழந்தை பக்கம் உக்காந்து படிக்கும்போது  பேய் சூறாவளிக்காத்தை அனுப்பி அந்த புக்கை பறந்து போக வைக்குது. அப்போ பேய்க்கு சாமியை விட சக்தி இருக்கா? பைபிளையே பறந்து போக வைக்க முடியுமா? 


4.  மத குருமார்கள் எல்லாரும் “ எப்போ அந்த பாக்சை திறந்தாச்சோ அப்பவே உனக்கு அழிவு காலம் நெருங்கியாச்சுன்னு அர்த்தம்.. யாராலும் உன்னை காப்பாத்த முடியாது “ன்னு சொல்றாங்க.. ஆனா அந்த மந்திரவாது “ இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் , நான் பார்த்துக்கறேன் கறாரு..  இந்த இடம் குழப்பமா இருக்கே? பேய் ஜெ மாதிரி பவர் ஃபுல்லானதா? ஓ பி எஸ் மாதிரி டம்மியா? 


5. ஹீரோ பேய் கிட்டே “ என் குழந்தையை விட்டுடு, என்னை பிடிச்சுக்கோ என்கிறார். உடனே பேய் அவர் சொன்னதை உடனே ஃபாலோ பண்ணி குழந்தையை விட்டு அவரை ஆக்ரமிக்குது.. இந்தக்காலத்துல பெத்த பசங்களே பேரண்ட்ஸ் பேச்சை கேட்பதைல்லை.. முன் பின் பழக்கம் இல்லாத பேய் ஒபீடியன்ஸ்  உள்ளதா இருக்கே? 


6. அது ஒரு பெண் பேய்.. அது எப்படி ஆண் பேய் மேல ஆக்ரமிக்க முடியும்?  இது சாத்தியம்னா அவனவன் நாட்ல பேயை தன் சம்சாரத்து மேல ஏவி விட்டுடுவானுங்க.. 


http://static.guim.co.uk/sys-images/Film/Pix/pictures/2012/5/30/1338370975710/The-Possession---1-008.jpg சி . பி கமெண்ட் - இந்தப்படம் சென்னை , கோவை , மதுரை , பெங்களூர் மாதிரி ஏ செண்ட்டர்களில் மட்டுமே எடுபடும்.. பி சி யில் சரியா போகாது..  பேய் பட ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆபாசம் ஏதும் இல்லை.. ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன்0 comments: