Monday, October 01, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 16

மனைவி கமலா அம்மையார் ,
மகன்கள் ராம்குமார் - பிரபு ,
மகள்கள் சாந்தி - தேன்மொழி
ஆகியோருடன் நடிகர் திலகம் !
 விவசாயி டாட் காம் விவாஜி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து


1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===
2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===
3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை







5) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.



Shruti Hassan was tagged in Kites Entertainment's photo.



===00oo00===
6) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்

===00oo00===


7) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது
===00oo00===
8, ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((
==00oo00===
9) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்
==00oo00===
10) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.





 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   



 
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   



 
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    



 
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    


 
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  

 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html  


 டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html  


 டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html



 டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  



டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html  


 டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html



 டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html


 டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html



 டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html



டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
 diski 17 -



இதன் 15 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/07/15.html


thanx to -http://vivasaayi.blogspot.in/2012/09/24365-1.html

குட்டிஸ் இன் பர்த்டே பார்ட்டி..!
நன்றி -கட்டதுர