Tuesday, October 09, 2012

DOUBLES - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9kS-pDSKSOXPTGdytPnYQp_8dAdemS2IEed7Q1N7rFnkGueTbZVo6E6pNimI7g5a10xL15vqEAvcp__8jUv_5lcKNqC6hD-r1g6LSnKWCHKZpB1c96BG73iy8RgMZHzBGZQOU5sKCfwo/s1600/Doubles.jpgமம்முட்டி -நதியா - டாப்சி டீக்கடை பன்னு நடிச்ச மலையாளப்படமான டபுள்ஸ் ஆல்ரெடி கேரளாவுல 2011 லயே ரிலீஸ் ஆனாலும் இப்போ மாற்றான் வர்றதால அதே மாதிரி ட்வின்ஸ் கதை உள்ள இந்தப்படத்தை தமிழ்ல புதுவை மாநகரம்னு டப் பண்ணி ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. 

மம்முட்டியும் ,நதியாவும்  அண்ணன் தங்கை.பெரிய பெரிய பள்ளங்களில், மலைப்பள்ளத்தாக்குகளில் விபத்துக்கு உள்ளாகும் வாகனங்களை, பயணிகளை காப்பாற்றும் கிரேன் ஓட்டுனர் கம் ஓனர்ஸ்.இவங்க வாழ்க்கைல ஒரு டைம் டாப்ஸி குறுக்கே வர்றாங்க.அதாவது ஒரு விபத்துல இவங்க மாட்டினப்போ மம்முட்டி காப்பாத்தறாரு.

பாப்பா கிட்டத்தட்ட ஒரு அநாதை.இதே ஆள் ஆம்பளையா இருந்தா ஒரு பய கண்டுக்க மாட்டான். ஆனா இது ஒரு 70 மார்க் ஃபிகரு.மின்னலை விட வெளுப்பான தேகம். நம்மாளுங்க மாநிறமா இருந்தாலே மாமாங்கம் ஆனாலும் விடாம கடலை போடுவானுங்க.வாத்து மாதிரி நிறத்துல  குட்டி கிடைச்சா அவங்க பண்ற கூத்து எப்படி இருக்கும்?


 மம்முட்டி தன் வீட்டுக்கே கூட்டிட்டி வந்துடறாரு.இது நதியாவுக்கு பிடிக்கலை. ஏன்னா ஆல்ரெடி அவர் சுரேஷை லவ் பண்ணுனப்போ அல்லது பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப அவர் ஆ ராசாவை விட மோசமான திருடன், வேணாம்னு அடக்கி வெச்ச அண்ணன் இப்போ தொபுக்கடீர்னு ஒரு பொண்ணு கால்ல விழறதை பொறுத்துக்க முடியலை .http://www.spiderkerala.net/attachments/Resources/6702-13329-mammootty-in-doubles.jpg


டாப்ஸிக்கு என்ன பிரச்சனைன்னா அவர் வந்த கார்ல வில்லனோட பணம் 50 லட்சம் எவனோ ஆட்டையை போட்டுட்டான்.வில்லன் பணம் வேணும்னு மிரட்றான்.அந்தப்பணத்தை எடுத்தது மம்முட்டி அல்லது அவர் கூட இருக்கும் நண்பர்கள் அல்லது பணியாளர்கள்தான்னு சந்தேகப்படறாங்க.. 


 யார் அந்தப்பணத்தை எடுத்தது?  யார் இந்த குப்பைக்கதையை எடுக்கத்தெரியாம சொதப்பி படத்தை மேலும் கெடுத்தது என்பதே மிச்ச மீதிக்கதை..


சி பி ஐ டைரிக்குறிப்பு , மக்கள் ஆட்சி படங்கள்ல கம்பீரமான உடைகளில் வந்து கண்ணியமா நடிச்சு கைதட்டல் வாங்குன மம்முட்டிக்கு இது சறுக்கல் படம். அவரது உடை தேர்வு மகா மட்டம். பாலி டெக்னிக் படிக்கற பையன் மாதிரி கசா முசா சட்டை.. நடிக்க வாய்ப்பு கம்மி.. ஃபிரண்ட்ஸ் பட வடிவேல் காமெடியை உல்டா பண்ணி படத்தின் முன் பாதில இவர் போடும் மொக்கைக்கு தண்டனையா  காபி வித் கலா மாஸ்டர் புரோகிராம் நடத்தி இவரை கோர்த்து விட்டுடனும்.. 


நதியா ஆள் இன்னும் இளமையாத்தான் இருக்கார். ஆனா கேரக்டருக்கு சம்பந்தமே இல்லாம அவர் வெறுப்பை கொட்டுவது ஏன்? எப்போ பாரு அவர் முகம் ஏன் கடு கடுன்னே இருக்கு? டாப்ஸியை ஷூட்டிங்க் ஸ்பாட்ல எல்லாரும் மொய்க்கும்போது இவரை யாரும் கண்டுக்கலைன்னு அங்கலாய்ப்போ என்னவோ? 


டாப்ஸி.. இவர் இதுவ்ரை நடிச்ச படத்துலயே முழுக்க முழுக்க உடம்பை கன்யாஸ்த்ரீ ரேஞ்சுக்கு மூடி இருப்பது இந்தப்படத்துலதான். இந்த இடத்துல ஒரு பஞ்ச் டய்லாக் சொல்லிக்க ஆசைப்படறேன். குணச்சித்திர நடிகைகளை கிளாமர் நடிகை ஆக்கி காட்டு காட்டுன்னு காட்ட வெச்சவங்களைக்கூட மன்னிச்சுடலாம் ( அஞ்சலி, ஓவியா @ கலகலப்பு -சுந்தர் சி), ஆனா ஆல்ரெடி செம காட்டு காட்டின நடிகையை முழுக்க போர்த்தி நடிக்க வெச்சவங்களை மன்னிக்கவே கூடாது,..  # சும்மா


இவங்க 3 பேர் போக ஆனந்த்ராஜ், ஒய் ஜி மகேந்திரானு பலர் உண்டு. அங்கங்கே தலையை காட்டிட்டு போறாங்க.. சொல்லிக்கற அளவு ஏதும் இல்லை.. 


http://www.metromatinee.com/MetromatineMoviewNews/images/tapasee%20pannu6.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும்  இடங்கள்1. இந்த படு டப்பாவான படத்தை என்னமோ ஆக்‌ஷன் த்ரில்லர் ரேஞ்சுக்கு போஸ்டர் டிசைன் ரெடி பண்ணி ,சம்பந்தமே இல்லாம புதுவை மாநகரம்னு டைட்டில் வெச்சு ,தமிழ் ஆடியன்ஸை ஏமாத்துன லாவகம். 2. ஓப்பனினிங்க் ஷாட்ல அந்த கிடு கிடு பள்ளத்தாக்குல  மம்முட்டி, நதியாவுக்கு டூப்பா போடப்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் அந்த அதல பாதாளத்துல கயிற்றில் இறங்கும் சாகச காட்சி அபாரம்


3. நதியா, டாப்ஸிக்கான உடைத்தேர்வு கன கச்சிதம்.. மனம் கவர்ந்த வசனங்கள்1. அந்த கொலைக்கேஸ்ல மாட்னவனை காப்பாத்த அந்த லாயர் 5 லட்சம் ரூபா ஃபீஸா கேட்கறார்.. 


 சார். அந்த பணத்தை என் கிட்டே கொடுங்க.. நானே அந்த கொலையை செஞ்சதா சொல்லி உள்ளே போய்க்கறேன்


2.என் சம்பளத்தை என் மனைவிக்கு அனுப்பறீங்களே, எதுக்கு என்னை வேலை வாங்கறீங்க.. அதுக்கும் அவளையே கூப்பிட்டுக்க வேண்டியதுதானே? 3. சர்வர் - சார்.. பில்


 இதை நீயே பே பண்ணிட்டு டிப்ஸும் நீயே வெச்சுடு.. 


4. போலீஸ் - டேய்.. என்னாதிது? ஃபுல் டைட்டா? ( போதையா?) 


லைட்டா.. 5. அவன் மாடில இருந்து கீழே விழுந்துட்டான்


 இப்போ எங்கே இருக்கான்?

 போஸ்ட்மார்ட்டம்ல


 எப்படியோ, ஒரு மாற்றத்தை கொண்டு வந்தா சரி.. 6. உனக்கு என்ன தாண்டா வேணும்? 


சாப்ட்டு 7 நாள் ஆகுது 


ஏன் ? பசி எடுக்கலையா?


 பசி இருக்கு. ஆனா காசு இல்லை http://southtamil.files.wordpress.com/2010/02/nadhiya-moithu-stills3.jpg?w=227இயக்குநரிடம்  கடுப்பாய் சில கேள்விகள்1. ஹீரோயின் டாப்ஸி டீகடை பன்னு அர்த்த ராத்திரில லூசு மாதிரி மம்முட்டி ரூம்ல என்னமோ தேடுது. என்னான்னு கேட்டா கார்ல மிஸ் ஆன அந்த 50 லட்சமும் இருக்கா?ன்னு பார்க்கறேன்குது. சப்போஸ் அவர் தான் பணத்தை எடுத்திருந்தாலும் உடனே பேங்க்ல தானே  போட்டு வைப்பாங்க.. பணத்தையும் தன் ரூம்ல வெச்சு அந்த பணத்துக்கு உரிமையாளரையும் பக்கத்துலயே தங்க விடுவாங்களா? 


2. தாப்ஸி அர்த்த ஜாம மோஹினி மாதிரி அலையறதுக்கு கூட ஒரு சால்ஜாப் சொல்லலாம். நதியா ஏன் கேனம் மாதிரி தூங்காம மிட் நைட்ல அங்கேயும் இங்கேயும் சுத்திட்டு இருக்கு.?3. நதியா மம்முட்டிக்கு தங்கச்சியா?டாப்சிக்கு  சக்களத்தியா? எதுக்கு எப்போ பாரு எரிஞ்சு விழறாங்க? 2 பேருக்கும் நிஜமாவே சண்டையா? ரியக்லிஸ்டிக்கா இருந்தாக்காட்டி படத்துக்கு சம்பந்தம் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு படத்துல சேர்த்துட்டீங்களா?


4. நடு ராத்திரில வில்லன் கதவை தட்றான். தனியா இருக்கும் டாப்ஸி தட்டும் நபர் யார்? என்ன? எதுக்கு இந்த டைம்ல தட்றீங்க? என எதுவுமே கேட்காம திறக்காரே? மாட்டிக்கறாரே? அது எப்படி? நிஜமாலுமே அவர் அப்டித்தானா? ( ஆமான்னா நாம போய் அவர் வீட்டுக்கதவை தட்டப்போறதில்லை சும்மா ஒரு ஜி கேவுக்காக )5. மம்முட்டி - டாப்ஸி 2 பேருக்கும் நோ லவ். நோ நட்பு, அதிகம் பேசிக்கிட்டது கூட இல்லை.. அப்டி இருக்கும்போது அவருக்காக மம்முட்டி ஏன் 50 லட்சம் செலவு பண்ணனும்? அனாமத்தா அப்டி செலவு பண்ண ஆம்பளை என்ன அடி முட்டாளா? அவனவன் சொந்த சம்சாரத்துக்கே 50 ரூபாய்க்கு அருண் ஐஸ்க்ரீம் வாங்கித்தரவே 1000 தடவை யோசிக்கறான். யார்னே தெரியாத ஒரு பொண்ணுக்கு அவளால எந்த யூசும் இல்லாதப்ப எந்த கேனயனாவது 50 லட்சம் ரூபா  செலவு பண்ணுவாங்களா? அதுவும் தன் கிட்டே இருக்கும் எல்லாத்தையும்  வித்து பணம் ரெடி பண்ணறார்.. 6. பூக்களை பறிக்காதீர்கள் பட ஜோடியான சுரேஷ் - நதியா இதிலும் ஜோடியா இருந்தாலும் 2 பேருக்கும் ஒரு டூயட் இல்லை. ஒரு காதல் ஒரு ரொமான்ஸ் எதுவும் இல்லை.. அதே போல் மம்முட்டி - டாப்ஸி ஜோடிக்கும் எதுவும் இல்லை.. இப்படி வாய்ப்பு இருந்தும் யூஸ் பண்ணிக்கலைன்னா எப்படி கதைல ஒட்டுதல் வரும்? மம்முட்டி - டாப்ஸி லவ் எப்பிசோடு 2 ரீல் காட்டி இருந்தாலாவது அவர் பண்ற செலவுக்கு அர்த்தம் உண்டு..


7. டாப்ஸி ஓப்பனிங்க் சீன்ல பர்தா போட்டுட்டு வர்ராங்க.. மெல்லத்திறந்தது கதவுல அமலா மாதிரி ..  அவங்க முகம் பார்க்கனும்னு ஒரு கோஷ்டி காமெடிங்கற பேர்ல நடு ராத்திரில ஏணி எல்லாம் வெச்சு பெட்ரூம்ல எட்டிப்பார்க்கறாங்க.. படு கேவலம்.. பகல்ல பார்க்க முடியாதா? இந்த லட்சணத்துல ஹீரோ டாப்ஸி குளிக்கும்போது பாத்ரூம்ல எட்டிப்பார்க்க ட்ரை பண்றாரு. நிஜமாவே அவர் முகத்தைத்தான் பார்க்க ஆசையா? 


8.  டாப்சியோட சம்பளம் ரூ 68 லட்சம் . புக் பண்ணிட்டு தயாரிப்பாளர்ட்ட சம்பளம் வாங்கிக்கொடுத்துட்டு படத்துல மொத்தமா  15 ரீல்ல அவர் காட்சிகள் ஜஸ்ட் 4 ரீல் தான். உங்களுக்கு மனசாட்சி உறுத்தலை?https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI6mhjydGf-e52Tekyc9e5OX0Bm7I0G-sXYmtRn2JsuozNSZ_Eye-l_6a6dv1xV8AenBsBnCN6I_EBUSuuW-kf-AqRc303msRdQEa9vZDZX_hc5hZXAMNKwQAmdkOz7caoTeIhiX68eM1o/s1600/tapsi-hot-images0217.jpgசி.பி கமென்ட் - இந்த குப்பைப்படத்தை பார்க்கறதுக்கு சுறா 1000 மடங்கு பெட்டர் . ஈரோடு அண்ணாவில் படம் பார்த்தேன்.

3 comments:

Thozhirkalam Channel said...

நல்ல விமர்சனம்... தொடருங்கள் சகோ,,,

Menaga Sathia said...

சி.பி கமெண்ட் நச்னு இருக்கு...

Arvind said...

அண்ணா தியேட்டருக்கும் உங்களுக்கும் அப்படி ஒரு சிங்க் ஆகுது