Thursday, October 18, 2012

சின்மயி பிரபல ட்விட்டர்கள் மீது போலீசில் புகார்

http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg 

சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக  சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார்  அளித்துள்ளார்.

சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள்  பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப்  பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி  இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.

முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை  கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட  பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம்  தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும்  என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை  காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து  புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து  இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும்  இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்”என்று கூறியுள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில்  அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும்  மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும்  தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு  ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க  வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல்  கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும்  என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம்  மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற  விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார்  கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே  இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க  வேண்டும்”என்றார். 
நன்றி - விகடன்


டிஸ்கி - 1 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.htmlடிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html2 comments:

நம்பள்கி said...

இண்டர்வல் வரைக்கும் படம் பார்த்தா மாதிரி இருக்கு; யார் அந்த அறுவர்?

Unknown said...
This comment has been removed by the author.