Showing posts with label BLOG. Show all posts
Showing posts with label BLOG. Show all posts

Wednesday, December 05, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 21

Photo

அட்ராசக்க சி.பி. செந்தில்குமார் - சிறப்பு பேட்டி


வணக்கம் தமிழே....

  தமிழ் ப்பதிவுலகில் தனிமுத்திரையுடன் விளங்கிவரும் பதிவுலகின் நட்சத்திர பதிவர் சி.பி. செந்தில்குமார் அவர்களின் பேட்டி....இவரை பற்றி நா என்ன சொல்ல....

1. நகைச்சுவை
ஜோக் 1 -அஜித், விஜய் வெச்சு ஆமை , முயல் கதை எடுத்தா அஜித் வாக்கிங்க் போயே விஜயை ஜெயிச்சுடுவாரு # கி கி 


ஜோக் 2- நீங்க எப்ப ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பீங்க? 


 சம்சாரம் ஊர்ல இல்லாதப்போ 


2. உங்கள் நகைச்சுவைகளுக்கு மிக சிறப்பான விமர்சகர் யார் ? ஏன்?


கிருஷ்ணகிரியை சேர்ந்த வி விஷ்ணுகுமார் , அம்பை தேவா . இருவரும் நீண்ட கால நன்பர்கள் . ஜோக் நல்லாருந்தா நல்லாருக்குன்னும் , மொக்கையா இருந்தா செம மொக்கைன்னும் ஓப்பனா சொல்லிடுவாங்க.. 

3. நீங்கள் எழுதிய முதல் நகைச்சுவை பற்றி?

சூப்பர் நாவல் எஸ் பி ராமு  நடத்திய சூப்பர் நியூஸ் எனும் மாதம் இரு முறை இதழில் ஜோக் போட்டி வெச்சிருந்தாங்க . அதில் எழுதிய  ஜோக்
 இவ்ளவ் பெரிய மீசை வெச்சிருக்கறவங்க எல்லாம் ஆஃபீஸ் ஹால்ல வெயிட் பண்றாங்களே, எதுக்கு?
 அரசுத்தூதர்க்கான இண்ட்டர்வ்யூ  ( நக்கீரன் கோபால் வீரப்பன் பீரியட்) 


ஆனந்த விகடன்ல வந்த முதல் ஜோக்தான் என்னை பலர்க்கும் அறிமுகம் செஞ்சதுஜட்ஜ் - மணிபர்சை நீ பிக்பாக்கெட் அடிச்சியா? 

 கேடி - நோ யுவர் ஆனர், மணி பர்சை பாலு எடுத்தான், கந்த சாமி பர்சைத்தான் நான் அடிச்சேன் 


இனிய காலை வணக்கம் நண்பர்களே.....

4. நகைச்சுவையால் நோயால் உள்ளவரை சிரிக்க வைத்த அனுபவம்?

அந்த அளவுக்கு இன்னும் போகலைங்க.. என் ஜோக்ஸ் படிச்சுட்டு தலைவலி வந்தவங்க , வயித்தால போனவங்க , முகத்துல அடி பட்டவங்க வேணா இருக்காங்க ( விழுந்து விழுந்து சிரிச்சதால ) 

5.தமிழ் இணையத்தில் வளர்கிறதா?


 தமிழ் இணையத்தில் வளருது என்பதை விட தகவல்கள் வளருதுன்னு சொல்லலாம் .இன்னும் நிறைய பேருக்கு தமிழ் ஃபாண்ட் இருப்பதே தெரியாம இருக்கு 6. சில இடங்களில் இரட்டை அர்த்தம் ஏன்?

டபுள் மீனிங் சங்க காலத்துல இருந்தே இருக்கு . அதையும் ரசிக்கறாங்க. கே பாக்யராஜின் பிரபலத்துக்கு மிக முக்கிய காரணம் பெண்களும் ரசிக்கும்படி டபுள் மீனிங் காமெடி செஞ்சதால


.நான் மிகவும் ரசிச்சது ஆராரோ ஆரிராரோ படத்துல மன நலம் குன்றிய பானுப்ரியாவை உப்பு மூட்டை தூக்கி விளையாடும்போது அவர் முதுகுல கிளு கிளுப்பா மெத் தேகம் பட்டதும் தர்ம சங்கடம் ஆகி ( தர்ம சந்தோஷம் !!)  மூட்டையை திருப்பிப்போட்டுக்கறேன்பாரு. ஒரே கிளாப்ஸ். அந்த டைம்ல தான் கதை வசனம் - கே பாக்யராஜ்னு போடுவாரு. அந்த அளவுக்கு வர முடியலைன்னாலும் குரு சென்ற பாதையில்.. 


விரைவில் உங்கள் வடிவில் புதிய முந்தானை முடிச்சு எதிர்பார்க்கலாமா ....!
Photo


7. புதிய தலைமுறையில் கூறியிருந்திர்கள் ஜோக் பற்றி சிந்திப்பதால் வீட்டில் திட்டு வாங்குகிறேன் என.. அந்த வகையில் வாங்கிய மிக பெரிய பல்பு


சமையல் பண்றப்போ சம்சாரம் காய்கறி நறுக்க சொல்ல கூப்பிட்டா ஜோக் எழுதனும்னு உக்காருவேன். ஜோக் எழுதி அறுக்கறதுக்கு காய்கறி அறுத்தாலாவது யூஸ்ம்பாங்க 


 என் பாப்பா  8 வயசுலயே போஸ்ட் கார்டு எடுத்து வெச்சுக்கிட்டு நானும் அப்பா மாதிரி ஜோக் எழுதறேன் அப்டிங்கும், அப்போ மச்சினி  அதாவது பாப்பாவோட சித்தி “ நீயாவது சிரிப்பு வர்ற மாதிரி ஜோக் எழுது , அப்பா மாதிரி மொக்கை போடாதேம்பாங்க.. 

8. முதல் பதிவு பதிவிட்ட அனுபவம்


முதல் பதிவு  நல்ல நேரம் பிளாக்ல நண்பர் சதீஷ் வழி காட்டுதலில்  ராவணன் பட விமர்சனம் எழுதுனேன். டைட்டில்லயே அட்டர் ஃபிளாப் என் தைரியமாக  கேப்சர் பண்ற மாதிரிஅவர் பிரமோட் பண்ணாரு. நல்ல ஹிட் ஆச்சு. அப்போதான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது ,  படம் ஃபிளாப் ஆனாலும் நாம எழுதும் பட விமர்சனம் ஹிட் ஆகனும்


9. பதிவுலகில் தாங்கள் பெற்ற முதல் நட்பு

 நல்ல நேரம் கே சதீஷ் குமார் சித்தோடு , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் சென்னை dei:: Jimpalakkadi Bambaaaa.... Apricaaa UNCLE :-)

10. இனையத்தால் நீங்கள் பெற்ற நன்மைகள் தீமைகள் என்ன?


 நன்மை  - உலகம் பூரா பலரது அறிமுகம் , பாராட்டுக்கள் வாழ்த்துகள். ஒரு கல்யாணத்துக்கோ ஆஃபீஸ் வேலையா எந்த ஊருக்குப்போனாலும் அங்கே ட்விட்டர் நண்பர்களை சந்திப்பது 


 தீமைகள் - உறவினர்களுக்கு அதிக நேரம் செலுத்துவதில்லை என குடும்பத்தார் குறை 11. ஆரம்ப காலங்களில் உங்கள் பதிவை பிரபலபடுத்த உழைத்த அனுபவம்

அப்படி ஏதும் பெருசா உழைக்கலை.  சாதாரணமாத்தான் போஸ்ட் போடுவேன். இப்போதான் அதுக்காக மெனக்கெடறேன் 

12. உங்கள் ஜோக்கால் சிரிக்க வைக்க முடியாத நபர்

 தாலி கட்டிய என் சொந்த சம்சாரம் . படு சீரியஸ் பார்ட்டி 


படிக்கமாட்டங்களா தைரியமா சொல்லிட்டீங்க
13. கணக்கில் நீங்கள் புலியா? புளியா?

 பாடத்துல புலி  10, + 2 ல செண்ட்டம்


, வீட்டில் சமையல் அறையில்  புளி

14. புதிய பதிவர்களுக்கு

 பழைய பதிவர்களை பார்த்து நல்லதை கத்துக்குங்க. உங்க தனித்தன்மையை விட்டுடாதீங்க . எல்லார் பிளஸ்ஸையும் ஃபாலோ பண்ணூங்க. யாருடைய மைனசையும் ஃபாலோ பண்ணிடாதீங்க 

நன்றி - தினப்பதிவுthir Rath shared Anjaana Anjaani's photo.இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html


 இதன் 20 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/11/20.html
Sunday, December 02, 2012

கபில் சிபல் வலைத்தளத்தை ஹேக் செய்த மர்ம நபர்கள்

கபில் சிபல் வலைத்தளத்தில் ‘ஹேக்கர்’கள் அட்டகாசம்!
Posted Date : 18:25 (30/11/2012)Last updated : 18:29 (30/11/2012)
- சரா

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.

இணையத்தில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுவதைக் கண்டிக்கும் வகையிலேயே கபில் சிபலின் வலைத்தளத்தைத் தாக்கிச் சென்றதாக ‘அனானிமஸ்’ பெயரிலான ஹேக்கர்கள் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சர் கபில் சிபலின் வலைத்தளத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றவர்களுக்கு அதிர்ச்சி... கபில் சிபலைக் கிண்டல் செய்யும் ஓர் அம்சம் அதில் இருந்தது.

http://kapilsibalmp.com/ என்ற அவரது தளம் ஹேக் செய்யப்பட்ட விவரம் தெரிந்து, உடனடியாக தளம் மீட்கப்பட்டு, ஹேக்கர்களின் அட்டகாசங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

கபில் சிபல் தளத்தில் அவர் ‘கோன் பனேகா குரோர் பதி’ போட்டியில் பங்கேற்பது போலவும், அதில் ஒரு கேள்விக்கான நான்கு ஆப்ஷனில் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்துச் சொல்வது போலவும் படம் வெளியிடப்பட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் தீமை விளைவிப்பது எது?’ என்பதே அந்தக் கேள்வி. ‘நான்’, ‘சுதந்திரம்’, ’நான்’ மற்றும் ‘நான்’ என்பதே ஆப்ஷன்கள். அதில், கபில் சிபல் தேர்வு செய்தது ‘சுதந்திரம்’ என்ற ஆப்ஷனை எனக் குறிக்கும் விதமாக அந்த புகைப்படம் இருந்தது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66ஏ-வில் உள்ள சில அம்சங்களை விமர்சிக்கும் வகையில், இணைய சுதந்திரத்தை மீட்க வலியுறுத்தும் வகையிலுமே கபில் சிபலனின் வலைத்தளத்தை ஹேக் செய்ததாக அனானிமஸ் க்ரூப் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் தகவல் சொல்லியிருக்கிறது.

மேலும், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கே பாதுகாப்பு இல்லை என்பதை ஹேக்கர்கள் குறிப்பால் சொல்லியிருக்கிறார்கள்.

அத்துடன், நவம்பர் 30-ம் தேதியான இன்று கணினி பாதுகாப்பு தினம் என்பதும், கணினியை வைரஸ் மற்றும் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி - விகடன்

Monday, November 19, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 20இனிய காலை வணக்கம் நண்பர்களே..


2012/10/22 சசி மோகன் குமார்

1.திரைப்படம் இயக்கும் எண்ணம் உண்டா ?  அட்லீஸ்ட் ஒரு குறும்படமாவது 


கண்டிப்பா. ஆனா அதுக்கான முன் அனுபவம் இல்லை. எந்த இயக்குநரிடமாவது உதவி இயக்குநரா பணி ஆற்றி தொழில் கத்துக்க குடும்ப சூழல் இடம் தர்லை. குறும்படம் இயக்குவது உறுதி. ஆனாலும் எப்பவும் என் கண் , மூளை எல்லாம் சினிமாப்படம் பற்றிய தாகத்தில் இருக்கும். வாய்ப்பு வரட்டும் ஐ ஆம் வெயிட்டிங்க் ;-)) 2.உங்கள் வாசிப்பு பழக்கம் எப்போது இருந்து ஆரம்பித்தது ? யாருடைய எழுத்துகளுக்கு நீங்கள் ரசிகன் 


நான் அஞ்சாங்கிளாஸ் படிச்சப்பவே காமிக்ஸ் புக்ஸ் படிக்க ஆரம்பிச்சுட்டேன். லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , ராணி காமிக்ஸ் அப்டினு. அம்புலிமாமா , பாலமித்ரா, பூந்தளிர் முதல் கொண்டு சரோஜா தேவி , சினிமித்ரன், இந்து நேசன் வரை எல்லா வகை புக்ஸும் படிச்சேன்.

 சுஜாதா ,கு அழகிரிசாமி , புதுமைப்பித்தன், பி கேபி , சுபா , ராஜேஷ் குமார்ல இருந்து எல்லா எழுத்தும் ரசிச்சு படிச்சாலும் ஆல் டைம் ஃபேவரைட் அமரர் சுஜாதா 3.கேபிள் சங்கரை போல்  புத்தகம் போடும் எண்ணம் இருக்கிறதா ?
கண்டிப்பா , என் முதல் திரைப்பட முயற்சி “ கோவை ப்ரீதி கொலை வழக்கு” , சின்மயி சைபர் க்ரைம் கேஸ்  ஆகிய 2 புத்தகங்கள் போடும்  ஐடியா உண்டு. டாப் டென் சினிமா விமர்சனங்கள் , பெஸ்ட் திரைக்கதை , ஆகிய தலைப்பில் மேட்டர் ரெடி . ஆனா அதுக்காக பணம் செலவளிக்கும் எண்ணம் இல்லை. ஏதாவது பதிப்பகம் என் எழுத்தின் மேல் நம்பிக்கை வைத்து  வாய்ப்பு கொடுத்தால் புக் வெளியிடத்தயார்4.உங்கள் மனதை மிகவும் மனதை பாதித்த விஷயம் ஒன்று
என் அப்பாவின் மரணம் தான். அப்போது எங்க வீட்டில் தொலை பேசி , அலைபேசி வசதி இல்லை. அம்மா, அப்பா சென்னிமலையில். நான் ஈரோட்டில். என்னிடம் அலை பேசி வசதி இருந்தது. அப்பாவுக்கு திடீர் என ஹார்ட் அட்டாக் ஏற்பட்டபோது அம்மா தகவல் தொடர்புக்கு மிகவும் சிரமப்பட்டார்கள்..


 என் நண்பர்கள் 2 பேர் சென்னிமலையில் டாக்டர்களாக, மெடிக்கல் ஷாப் ஓனர்களாக இருக்காங்க.. அம்மாவுக்கு ஒரு செல் ஃபோன் வாங்கிக்கொடுத்திருந்தா , அவசரத்துக்கு இவங்க ஃபோன் நெம்பர்  வெச்சுக்கோன்னு குடுத்திருந்தா ஒரு வேளை அப்பாவின் மரணத்தை தள்ளிப்போட்டிருக்கலாம். இது என் மனதில் ரொம்ப நாளாக குற்ற உணர்ச்சியாக தங்கி இருக்கு.


என் வாழ்வின் படிப்பினை - அனைவரும் அவரவர் பெற்றோருக்கு செல் ஃபோன் வாங்கிக்குடுத்து அதை உபயோகிக்கும் முறை கற்றுக்கொடுப்பது அவசியம் ;(((
..?சந்தோஷமான விஷயம் ஒன்று ? கூறவும்


2000 ஆம் ஆண்டின் டாப் டென் ஜோக் ரைட்டர்ஸ் செலக்‌ஷனில் குமுதம் வார இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது, மீண்டும் 2012 ஆம் ஆண்டின் தீபாவளி டைமில் அதே ரேங்க்கில் செலக்ட் ஆனது 


5.சந்திக்க விரும்பும் பிரபலம் யார் ?
யாரும் இல்லை. என் வாழ்வில் நடந்த பல கசப்பான அனுபவங்கள் அறிவுறுத்தும் விஷயம் 1 தான் . பிரபலங்களை தூர நின்று ரசி . அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டால் நம் மனதில் அவர்கள் பற்றிய பிம்பம் கலைந்து விடும்

 
6.அரசியல் பிடிக்குமா ? ஏன் அரசியல்  பதிவுகளை போடுவதில்லை அரசியல்வாதிகளை விமர்சிப்பது இல்லை   பயமா? அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்களாக இருக்காங்க. கக்கன் , காமராஜர் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு. எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அரசியல்வாதிகளை தாக்கி பல பதிவுகள் , ட்வீட்கள் போட்ட்டுட்டுதான் இருக்கேன் 
7.நெகிழவைத்த திரைப்படம் எது, பிடித்த நடிகர், நடிகை  இயக்குனர் யார் ? உதிரிப்பூக்கள். நான் பார்த்த செயற்கைத்தனமே இல்லாத படம் .


ரஜினி, கமல் , அஜித், விஜய்  உட்பட எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ராமராஜன் , பவர் ஸ்டார் பிடிக்காம இருந்தது. விஜய் டி வி சர்ச்சையில் அவர் அணுகுமுறை என்னை மாற்றி விட்டது

 நடிகைகள் 18 டூ 25 எல்லாரையும் பிடிக்கும். யாரையும் ரிஜக்ட் பண்ற பழக்கம் எனக்கு இல்லை

 இயக்குநர் மணி ரத்னம்8.ஒரு நாள் முழுக்க உங்களால் மொபைல் , கம்ப்யூட்டர் , புத்தகம் , இல்லாமல் இருக்க முடியுமா ?


 பல நாள் இருந்திருக்கேனே? பதிவுகள் போடுவது பெரும்பாலும் என் நண்பர்கள்தான். சனி, ஞாயிறு மட்டும் ஒரு வாரத்துக்கான பதிவுகள் தயாராக வைத்துக்கொள்வேன். பணி நாட்களில் அவங்க தான் போஸ்ட் போடுவாங்க. என் பிளாக் பாஸ்வோர்டு 32 பேர்ட்ட இருக்கு 
9.ஜோக்ஸ் , எழுதுவது போல் ஏன் உங்களால் பத்திரிக்கைகளுக்கு  கட்டுரைகள் எழுத முடிவதில்லை ?


 சோம்பேறித்தனம் தான். ஜோக் ஜஸ்ட் எ செகண்ட்ல எழுதிடலாம். கட்டுரை, கதை எழுத 1 மணி நேரம் ஆகுது. இனி முயற்சிக்கனும். 2013ல ட்ரை பண்றேன்
10.சினிமாத்துறையில் இருந்து அழைப்புகள் ஏதும் வந்ததா ? வசனம் எழுத சொல்லி .....பல வருடங்களுக்கு  முன் உன்னை நினைத்து எடுத்த பட க்ரூப் சகியே சகியே படம் பண்ண காமெடி டிராக்  எழுத அழைத்தார்கள். விவேக்கிற்கான காமெடி ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதி குடுத்தேன் அட்வான்ஸ் ரூ 5000 குடுத்தாங்க. சம்பளம் ரூ 25,000 பேச்சு அப்புறம் என்னாச்சுன்னு  தெரியலை. அட்ரஸ் காணோம்/./11.எப்போ கல்யாணம் நடந்தது ? கல்யாண கலாட்டா ஏதும் இருந்த கூறவும் (பர்சனல் என்று தவிர்க்க வேண்டாம் )
2002 ஆம் வருடம் டிசம்பர் 9 ஆம்  தேதி ஈரோட்டில் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது.மேரேஜ்க்கு காலேஜ் ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க. எனக்கான கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட்டத்தைப்பார்த்து பெண் வீட்டில் அரண்டுட்டாங்க.. மாப்ளை ஏகப்ப்ட்ட லேடீஸ் சகவாசம் உள்ளவன் போல என./..


 மேரேஜ் ஆனதும் ஹோம் மினிஸ்டரிடம் வந்த முதல் உத்தரவு கட் ஆல் கேர்ள் ஃபிரண்ட்ஸ் 

12. ஒருவரை விமர்சித்து விட்டு வருந்தியதுண்டா ?


 பொதுவா அப்படி யாரையும் விமர்சித்ததில்லை. ஆனா ட்விட்டர்களை கலாட்டா பண்ணி போட்ட 2 பதிவுகளில்  ஒரு பதிவு சம்பந்தப்பட பெண் ட்வீட்டரை மனம் வருந்தச்செய்ததை அறிந்தேன். பதிவு போட்டு ஒரு வாரம் கழித்து பர்சனல் மெயிலில் அவர் தொடர்பு கொண்டு அந்தப்பதிவை நீக்கசொன்னார். உடனே வருத்தம் தெரிவித்து நீக்கி விட்டேன் .

 பின் சென்னை ட்வீட்டப் பற்றிய பதிவில் பெண் ட்வீடர்களை கிண்டல் பண்ணி எழுதப்பட்ட சில வரிகள் பின் நீக்கி விட்டேன்.


 பொதுவா நான் எதுக்கும் வருந்துவதில்லை. ஆனா அதே சமயம் யாராவது மனம் வருத்தப்பட்டா, அதுக்குக்காரணமா என் பதிவு இருந்தா அதை நீக்க என்றும் தயங்கியதில்லை.


 மத்தவங்களை சந்தோஷப்படுத்தவே எழுதறோம். எதுக்கு மன வருத்தம் ?

13.வேலையில் எப்படி புலியா ? பூனையா ?


 வேலையில் ரொம்பவே ஷார்ப் . கட் அடிச்சுட்டு படம் பார்த்துட்டு இருந்தாக்கூட லேப்டாப்பில் ஆஃபீஸ் ஒர்க் பண்ணிட்டு தான் இருப்பேன். பொதுவா எல்லாப்படமும் (பெரும்பாலும்) இடைவேளை வரைதான் பார்ப்பேன். போர் அடிச்சா ஆஃபீஸ் வேலை பார்ப்பேன்

14.ஒரு நாள் மட்டும் இன்னாராக நீங்கள் மாறலாம் என்று வாய்ப்பு கிடைத்தால் யாராக மாறுவீர்கள் ?
ஹாலிவுட் பட  இன்வி”சிபி”ள் மேன் - காரணம் - ஹி ஹி ஹி


 
15. நமீதாவுக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டால் ?.ரஜினிக்கு அப்பாவாக நடிக்க கூப்பிட்டால் ? இரண்டில் எதை  தேர்வு செய்வீர்கள் ?
இதுல என்ன சந்தேகம் ? ஆறடி உயர ஆல்ஹஹால் நமீதாவுக்குத்தான் ஜோடி. இதுதான் சாக்குன்னு டச் பண்ணி பார்த்துக்கலாம். ஐ மீன் ஜஸ்ட் டச்சிங்க் ஒன்லி..16.டிவி காம்பியரிங் செய்ய வாய்ப்பு வந்தால் ?


 முயற்சித்துக்கொண்டு இருக்கேன், வாய்ப்பு கிடைத்தால் பயன் படுத்திக்கொள்வேன் . என் குரல் கொஞ்சம் கர கரப்ரியா. அதனாலதான் யோசிக்கறேன். ஆனா  சினிமா விமர்சனம் செய்யும் வாய்ப்புக்கு சிலரை அணுகி இருக்கேன். விரைவில் வெற்றிச்செய்தி வரும் // 

 அப்படி வாய்ப்பு வந்தால் சினிமா விமர்சனத்தில் ஒரு புதுமையான பாணியை புகுத்திய ஆள் என பெயர் பெறுவேன் என்ற நம்பிக்கை உண்டுஇதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

இதன் 19 ஆம் பாகம் படிக்காதவர்கள்   http://www.adrasaka.com/2012/10/19.html

Monday, October 29, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 19ட்விட்டர் நண்பர் கலைவசந்த் கேள்விகள்....,


1.பார்க்க ஹேண்ட்சம்மா இருக்கீங்க.(தூ கண்ணு தெரியாத கபோதி போல) உங்களுக்கு சினிமா, டி.வில நடிக்க இதுவரை எந்த சான்சும் கிடைக்கலியா?!காலம் போன காலத்துல இதெல்லாம் தேவையா?ன்னு எல்லாரும் கேட்கப்போறாங்க. யோவ். நான் குடும்பத்துப்பையன்யா, எனக்கு எதுக்கு சினிமா , டி வி எல்லாம், கடைசி வரைக்கும் கற்போட இருக்க ஆசைப்படறேன். ( அப்போ சினிமா , டி வி ல இருக்கற மத்தவங்க எல்லாம்?னு கேட்டு சர்ச்சை ஆக்க நினைக்காதிங்க யாரும் .. இது சும்மா ஜோக்;-)) )2.  ட்விட், பிளக்குல கலக்குறீங்க. ஆனா, கார்க்கி, தோட்டா ராஜனைவிட உங்களுக்கு ஃபாலோயர்ஸ் குறைவா இருக்காங்க. இத பார்த்த உங்களுக்கு என்ன தோனும்?


அடடடா , இந்த கம்பேரிசனை தமிழன் விடவே மாட்டானா? சின்ன வயசுல இருந்து பக்கத்து வீட்டுப்பொண்ணை பாரு, எப்படி படிக்கறா? நீயும் தான் இருக்கியே? அப்டின்னு அப்பா திட்டுனதால ப வீ பொண்ணை பார்க்க ஆரம்பிச்சு அப்படியே   எல்லா பொண்ணுங்களையும் பார்க்க ஆரம்பிச்சதுதான் மிச்சம். அவங்கவங்க திறமைக்குத்தக்கபடி ஃபாலோயர்ஸ் இருக்கும்.


 தோட்டா நெம்பர் ஒன் ட்வீட்டர். என்னை விட பல மடங்கு திறமையானவர். கார்க்கி ட்வீட் உலகின் கிரேசி மோகன். அவங்க திறமை என்னை விட அதிகம், அப்போ ஃபாலோயர்ஸும் அதிகமா இருக்கறதுல என்ன அதிசயம்? வேணா அவங்க கிட்டே கொஞ்சம்  ஃபாலோயர்ஸ் கடன் கேட்டுப்பார்க்கிறேன் ;-))3. பி.எஸ்,சிக்கு மேல படிக்கலைன்னு நீங்க எப்பவாவது வருத்தப்பட்டதுண்டா? (படிக்க வெச்சிருந்தா ஈரோடு மாவட்ட காலேஜ்லாம் வெளங்கியிருக்கும்.)ஹிந்தில எம் ஏ முடிச்சிருக்கேன்,பிஜிடிசிஏ பண்ணி இருக்கேன் , அதை எல்லாம் புரொஃபைல்ல போட்டா படம் காட்டற மாதிரி ஆகிடும் .அதுவும் இல்லாம ஹோம் மினிஸ்டர் ஒரு டிகிரி ஹோல்டர் என்பதால் மேரேஜ் இன்விடேஷன்லயே ஒரு டிகிரி மட்டும் தான் போடனும்னு சீரியஸ் கட்டளை. தமிழன் அம்மா பேச்சை கேட்காம இருந்தாலும் பொண்டாட்டி பேச்சை கேட்டே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் கி கி 
இனிய காலை வணக்கம்.
உடல் பலகீனமானவன் எப்படி பொறுமையாகப் பயிற்சி செய்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ,அதுபோல பலகீனமான எண்ணங்களை உடைய மனிதன் சரியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன் வாழ்விற்கு வலிமை ஊட்ட முடியும்.
இனிய காலை வணக்கம்.4. நான் டிவிட்டர்ல கொஞ்ச நேரம் உக்காந்தாலே என் மனைவி என்னை கடிஞ்சுக்குறாங்க. நீங்க பிளாக், டிவிட்டர்ல பொழுதன்னைக்கும் இருக்குறதை பார்த்து உங்க மனைவி உங்க மேல கோபப்படுறது இல்லியா?


 அங்கே தான் நீங்க தப்பு பண்றீங்க , எங்க வீட்ல நெட் கனெக்‌ஷனே இல்லை, எல்லாம் ஆஃபீஸ் டைம்ல தான். சனி , ஞாயிறு லீவ்ல வீட்ல லேப்டாப்ல மற்ற 5 நாட்களுக்குத்தேவையான பதிவை டைப் பண்ணிக்குவேன். நோக்கியா 1100 ஃபோன் தான் ரொம்ப நாள் வெச்சிருந்தேன், இப்போ சமீபத்துலதான் மொபைல்ல கேலக்‌ஷி ஆண்ட்ராய்டு  ஃபோன் வாங்கி இருக்கேன். என் ஆஃபீஸ் பணி எப்பவும் ட்ராவலிங்க்லயே இருப்பேன் என்பதால் அந்த டைம்ல மொபைல் ட்வீட்ஸ்.. 

ஞாயிறு என்பது என்னைப்பொறுத்தவரை ஓய்வு நாள் அல்ல,மற்ற 6 நாட்களுக்கான பதிவுகளை தயார் செய்யும் நாள் 

வெள்ளி, சனி பார்த்த 4 படங்கள் விமர்சனம் ஞாயிறு டைப் பண்ணி திங்கள் டூ வியாழன் தினசரி 1 பதிவு


 நான் வீட்ல இருக்கும்போது டைப் பண்ண வேண்டி தேவை வந்தா நைஸா என் பாப்பாவை தூண்டி விட்டு 2 பேரையும் மாமியார்  வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடுவேன்.1 கி மீ தூரம் தான் எங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும்.அடிக்கடி கோவிச்சுட்டு போக ஈசியா இருக்கும்னு அப்படி ஏற்பாடு, நாமளும் சள்ளை ( தொந்தரவு) விட்டுதுன்னு நிம்மதியா டைப்பலாம்5. உங்களை ஃபாலோ பண்ற புது ட்விட்டரை கூட நீங்க ஃபால்லோ பண்றீங்க. எல்லா மென்ஷனுக்கும் பதில் சொல்றீங்க. இந்த நல்ல பண்பு உங்களுக்கு எப்படி வந்தது? (அப்போதானே கடலை போட முடியும்)


ட்விட்டருக்கு வந்த புதுசுல எனக்கு மென்ஷன் பார்க்கவோ, டி எம் பார்க்கவோ தெரியாது. அப்புறம் 6 மாசம் கழிச்சு பலர் ஏன் மென்ஷனுக்கு பதில் சொல்லலை? மனசுக்குள்ளே புரட்சித்தலைவின்னு நினைப்பா? ஏன்  யாரையும்  மதிப்பதே இல்லை?னு கேட்டாங்க.. நான் பதறிட்டேன்.

 ஏன்னா வீட்ல என்னை மதிக்காத என் சம்சாரத்தையே  ரொம்ப மதிக்கறவன் நான், ஃபாலோயர்சை மதிக்காம இருப்பேனா? அதனால மென்ஷன் பார்த்து பதில் சொல்ல பழகிட்டேன். ஆனா பெரும்பாலும் ஸ்மைலிதான் ;-)) 


 ஏன்னா நாம ஏதாவது காமெடியா சொல்லப்போய் அதை அண்ணன் மாயவரத்தான்  மாதிரி யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம்மை மாட்ட வெச்சுட்டா? 6. ஈரோடுல இருக்குற எல்லா தியேட்டர் ஓனர் , மேனேஜர், அங்கு வேலை செய்யுறவங்களுக்கு உங்க முகம் நிச்சயம் பரிச்சயம் ஆகியிருக்கும். அடிக்கடி நீங்க தியேட்டர்ல படம் பார்க்க வரும்போது உங்களை அவங்க பார்க்கும்போது அவங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?


 படு கேவலமா பார்ப்பாங்க . எந்த குப்பை போட்டாலும் வந்துடறானே, நமக்கு வருமானமதானே அப்டினு நினைக்க மாட்டாங்க.. கன்செஷன் பாஸ் மாதிரி ஏதாவது கொடுப்பாங்கனு பார்த்தேன். ஒரு பய கண்டுக்கலை.. பைக் பாஸ் போடும்போது  ரகசியமா பாஸ் வாலா எச்சரிப்பாரு - சார், இந்த படம் மொக்கைதான் அப்டினு, நான் எதுவும் சொல்லாம தெரியும்னு மனசுக்குள்ளே நினைச்சுக்குவேன். அவன் அதை விட கேவலமா பார்ப்பான். அவ்வ்வ்வ் 
எவ்வளவுதான் தீய பழக்கங்கள் (பொதுவுக்கு தெரியாமல்)இருந்தாலும் நம்முடன் பழகும்போது ,மிகவும் நல்லவனாக நமக்கு ஆறுதலாக ,நல்ல மொட்டிவேட்டராக ,அனைத்துக்கும் மேலாக பண்பான சொற்கள் ,பணிவான செயல் என்று இருப்பவருடன் நட்பாக இருப்பது சிறப்பா ??7. நீங்க டைரக்டர் ஆனா ஓகே ஓகே எம்.ராஜேஷுக்கு போட்டியா வருவீங்க எனபது என் தனிப்பட்ட கருத்து. இதற்கு உங்கள் பதில் என்ன?


நல்ல வேளை அவர் ட்விட்டர்ல இல்லை, என் பிளாக்கும் படிப்பது இல்லை. இல்லைன்னா வாழ்க்கையே விரக்தி அடைஞ்சிருப்பார்.

 எனக்கு டைரக்‌ஷன் துறைல ஆர்வம் உண்டு, ஆனா அதில் அனுபவம் இல்லை. மணிரத்னம் மாதிரி அனுபவம் இல்லாம இறங்கும்  துணிச்சலோ, எண்ணமோ  இதுவரை இல்லை.. 

 சினிமா விமர்சனம் எழுதும்போது படத்தில் காணப்படும் குறைகளை  துல்லியமாக கணிப்பவர்கள் எல்லாம் நல்ல சினிமா எடுத்து விட முடியாது. படைப்பாளிக்கும் , விமர்சனம் செய்பவருக்கும் ஒரு கோடு உண்டு . ஒரு படைப்பாளி சுலபமாக விமர்சகர் ஆகி விட முடியும் , ஆனா ஒரு விமர்சகர் நல்ல படைப்பாளி ஆகி விட முடியாது, ரொம்ப கஷ்டம் 8. அட்ரா சக்கல வெட்டாபீஸ் வெங்கிடுசாமில படங்கள் முன்னோட்டம் போடரீங்க.அத்தனை படத் தகவல் உங்களுக்கு எப்படி கிடைக்குது? (அதான் கடலை போட்டு அங்கங்க ஆள் வெச்சிருக்கானே)


இதை நக்கல் கேள்வியா எடுப்பதா? சீரியஸா எடுப்பதா? தெர்ல


 கூகுள் சர்ச்ல போய் பட டைட்டிலை டைப் பண்ணி க்ளிக் பண்ணா அந்தப்படத்தை பற்றி ஏதாவது நியூஸ் நாளிதழ் செய்தியா வந்திருக்கும். அதுல 4 செய்தியை படிச்சுப்பார்த்து அதுல ஒண்னை செலக்ட் பண்ணி கட் காப்பி பேஸ்ட் பண்ணிக்குவேன், நோகாம நோம்பி கும்பிடறதா பலர் சொன்னாலும் அதுக்கு நிறைய உழைப்பு தேவைப்படுது. 

  நான் சொந்தமா டைப் பண்ணி போடும் சாதா பதிவுக்கு ஒரு மணி நேரம், சினிமா விமர்சனத்துக்கு ஒன்றரை மணி நேரம் ஆகுதுன்னா  வெள்ளிக்கிழமை ராம சாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி போஸ்ட்க்கு 3 மணி நேரம் ஆகும், ஏன்னா மினிமம் 7 டூ 10 படங்கள் வாராவாரம்  ரிலீஸ் ஆகுது. 7 * 4 = 28 பதிவுகள் படிச்சு அதுல இருந்து 7 செலக்ட் பண்ணனும். அப்புறம் கிளாமரான ஸ்டில்ஸ் தேடனும் , உஷ் அப்பா எவ்ளவ் வேலை  
9. சின்மயி சர்ச்சை பற்றி எல்லா பதிவும் கட் காபி போஸ்ட்டா போடறீங்க.. உங்க நிலைப்பாடு என்ன? 

ராணி வார இதழில் சின்மயி வழக்கு பற்றிய ஆதியோடு அந்தமாய் உண்மை விளக்கும் தொடர் எழுத பேச்சு வார்த்தை நடந்து வருது 

தேவி வார இதழில் கண்டெண்ட்டை பார்த்து மிரண்ட்டுட்டாங்க. குமுதம் ரிப்போர்ட்டர்ல நோ ரிப்ளை. கடைசி முயற்சி ராணி


ஆல்ரெடி 7 அத்தியாயம் 7 வாரம் வரும் அளவு எழுதி ராணி வார இதழுக்கு அனுப்பியாச்சு, அங்கே போட்டதும் இங்கே போடுவேன்.இரு தரப்பிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறுகள் இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டிய தவறு யாருடையது என்பதை காலமும்,கோர்ட்டும் சொல்லும்

கோர்ட்டில் ஒரு கேஸ் கொடுத்த பிறகு அது பற்றி சம்பந்தப்படவர்கள் பொது வெளியில் விவாதிப்பது தவறு.பின்னடைவுதான்

சின்மயி வழக்கில் வாதாட சட்டம் படிச்ச வக்கீலை விட ட்விட்டரில் இருக்கும் ஒரு நபர் வாதிட்டால் பிரமாதமாக இருக்கும்


 சின்மயி தரப்பில் வாதாட மாயவரத்தான் ,ராஜன் தரப்பில் ஜாக்கி சேகர் வாதாடினா கோர்ட் களை கடடும்.்

கடைசில கோர்ட்ல ஜட்ஜ் ராஜன் கிட்டே “ உங்க ட்வீட்ஸ், பிளாக் எல்லாம் படிச்சிருக்கேனே? ஃபாலோயர்னு சொல்லிடனும், செம காமடியா இருக்கும்

அட அதுக்கு நாமே பெட்டர்போல?

இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html


 இதன் 18 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/18.html

அனைவருக்கும் மனதை மயக்கும் மழை வணக்கம்,,,,Monday, October 22, 2012

அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 18


நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 


சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலீஸ் ரிமாண்டில் இப்போது. எனவே டைம் லைனில் ஜாலி ட்வீட்ஸ் போடுபவர்கள் கவனம் 


பிரச்சனையின் தீவிரம் புரியாமல் யாரும் இந்த சென்சேஷனல் மேட்டர் பற்றி டைம் லைனில் விவாதிக்க வேண்டாம் # பொது நலன் கருதி

நம்ம "கேளுங்க" தளம் சார்பாக கடந்த வாரம் ஆரம்பித்த சூடான மெயில் காணலின் தொடர்ச்சியாக இந்தவாரம்..


சி.பி.இடம் இனி ராபிட் பயர் கேள்விகள் 

1. வலையுலகில் இந்த வலைபூக்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்த 2 தளங்கள்  ?
 • தமிழ்காமக்கதைகள்
 • பூனம்பாண்டே ஓப்பன் யுனிவர்சிட்டி
2. வலையுலகில் நமக்கு நேரடி போட்டி இவம் தாம்யா என்று உங்கள் மனதில் நினைத்த பதிவர்?
 • கேபிள் சங்கர்
 • ஜாக்கிசேகர்
 • உண்மைத்தமிழன்
 • சவுக்கு
3.  ஜாக்கி, கேபிள் இருவரும் தேர்தலில் நின்றால் உங்கள் ஓட்டு யாருக்கு?
 • கேபிளுக்கே என் ஓட்டு
 • ஏன்னா அவர் படம் ரிலீஸ் ஆகும் முன்னே ப்ரிவ்யூ ஷோ பார்த்து விமர்சனம் போட்டுடறாரு. அவரை ஜெயிக்க வெச்சு எம் எல் ஏ ஆக்கிட்டம்னா அவர் பாட்டுக்கு அவர் உண்டு ரேப், ஊழல் உண்டுன்னு இருப்பார்.
4. ரஜினி இந்த ஆங்கில பட ரீமேக்கில் நடித்தால் செமையாக இருக்கும் என்று நினைத்த 3 படங்கள்?
 • த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே
 • கமாண்டோ
 • செல்லுலார்
5. ஹாய் மதன், ஏன்? எதற்கு? எப்படி? சுஜாதா யார் பெஸ்ட்?
 • சந்தேகமே இல்லாம சுஜாதா தான் பெஸ்ட்
 • ஹாய் மதன் ஜஸ்ட் ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மட்டுமே
 • சுஜாதா அங்கங்கே தன் டச் சோட குடுப்பாரு
 • சுவராஸ்யம் ஜாஸ்தி  
6. ஒரு லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் நீங்க பார்த்த ஒரு படம்?

 •  மகேந்திரனின் உதிரிப்பூக்கள்
 • பாரதிராஜாவின் முதல் மரியாதை ( லாஜிக் மிஸ்டேக்ஸ் கம்மி )

7.  இதெல்லாம் புத்தகமாயா என்று விளாசி எறிந்த புத்தகம்?

 • சாரு நிவேதிதாவின் எக்சைல்
 • ஜீரோ டிகிரி

8. திரையில் நம்பர் வன் ஜோடி?

 • ஸ்ரீகாந்த்  சினேகா ( ஏப்ரல் மாதத்தில் )
9. ஆண், பெண் ஒரு வரியில் கதை ஒன்று சொல்லுங்க?
 • சாரி, பெண் என்றால் எனக்கு அலர்ஜி ஹி ஹி
10. இந்த கண்ணாடிய கழட்ட மாட்டிங்களா ஆபிசர்?

இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html
 •