Wednesday, July 06, 2011

ஹலோ,மொக்கை ஃபிகர் மோஹனாவா? ஒரு டவுட்!!!!!


1. ”சரியான கஞ்சன் வீட்டுக்குடும்படி நீ!எது கேட்டாலும் தர மறுக்கும் மனசு உன்னுது,கேட்காமலேயே வாரி  வழங்கும் உதடு என்னுது#கர்ணபரம்பரைக்காதலன்

-----------------------

2. ”டியர்,ஏன் கனகாம்பரப்பூ வாங்கித்தர்றீங்க?”

“ அதான் வெயிட்லெஸ்,உன் கூந்தல் தாங்கும் அளவு லைட் வெயிட் கண்ணே!”

(அதுவும் இல்லாம அதுதான்  டெட் சீப் ஹி ஹி - மைண்ட் வாய்ஸ்)

---------------------

3.  ”ராஸ்கல்னு உங்களைத்திட்டறேனே,கோபம் வர்லை?”

“ம்ஹூம், ரோஸ் கலர்-னு சொல்றியோன்னு நினைச்சேன்”#சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

----------------------

4.  ”டியர்,மருதாணி இலை போலே உன் நிலை.”

“ எப்டி?”

“ நான் உன் மேலே லேசா பட்டாலே சிவந்துடறியே?”#சிகப்பியுடன் காதல் கடலை

---------------------

5. ”டியர்,கார்த்தி-ரஞ்சனி மேரேஜ் மாதிரி நம்ம மேரேஜ்ஜையும் கோவைல நடத்திடலாமா?”

“ வெயிட் ஒன் மினிட்,இந்த சீன்ல தமனா யாரு?” சந்தேகப்பிராணி சசி


----------------
6. ”டியர்,நீங்க சைவம்,நான் அசைவம்.. , காதல் சரிப்பட்டு வருமா?”

“ காதல் விஷயத்தில் நான் அசைவம், நீ சைவம், தானிக்கு தீனி சரியாப்போச்சு”

----------------

7. ”மேரேஜ்க்குப்பிறகு உங்க பேரை இனிஷியலா போடவா? எங்க அப்பா பேரையா?”

 “உன் இஷ்டம் போல கண்ணே!”

( முதல்ல மேரேஜ் நடக்குதான்னு பார்ப்போம்)

----------------------

8. ”என் அளவு உங்களுக்கு ஜெனரல்நாலெட்ஜ் பத்தாது”

“ஆமா,அதனால் என்ன லவ் நாலெட்ஜ் எனக்கு ஜாஸ்தி “ #G.K   VS   L.K

----------------
9. ஹலோ,மொக்கை ஃபிகர் மோஹனாவா.நேத்து நாம 2 பேரும் சினிமாவுக்கு போனோமே? என்ன படம் அது?”

“ விளையாடறீங்களா? எங்கே படம் பார்க்க விட்டீங்க?"

-----------------------

10. 'என் பிறந்த நாள் எது?ன்னு சொல்லுங்க பார்ப்போம்?”

“அதை உங்கம்மாகிட்டே தான் கேட்கனும்,நம்ம காதல் பிறந்த நாள் தான் எனக்கு தெரியும்.”

---------------------------

Photographer Ewa Adriana Szumowska

11. ”டியர், என் ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு? “ 

“ஹேர் இருக்கு, ஸ்டைலா? அது எங்கே இருக்கு?”

----------------------

12.உன் நினைவுகள் எனக்கு உற்சாகம்,நீ நேரில் என்னருகே இருந்தால் அதுவே எனக்கு உற்சவம்

----------------------

13.”காதலுக்கு ஒரு இலக்கணமாய் நாம் இருப்போம்,ஓக்கே?”

“ தேவை இல்லை,ஜஸ்ட் காதலோடு இருந்தாலே போதும் கடைசி வரை மாறா அன்போடு”

------------------
14. ”டியர்.. உங்களுக்கு கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா?”

“2 பேரையும் அல்ல,கமாலினிமுகர்ஜினி மாதிரி இருக்கும் உன்னைத்தான் பிடிக்கும்”

-------------------

15.”நான் உங்க கெஸ்ட் மாதிரியா?”

அய்யய்யோ,விருந்தும்,மருந்தும் 3 நாளுக்குத்தான்னு சொல்வாங்க,அப்போ மீதி 27 நாளுக்கும் நான் என்ன செய்ய?”

-----------------------------

16.உங்களைப்பிடிக்கலைன்னு யாராலயும் சொல்லவே முடியாதுங்க,நீங்க அவ்ளவ் அழகு-ஆண்களால் மட்டுமே சொல்லப்படும் வாசகம்

--------------------17. பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷம்: பாதுகாப்பது எப்படி என எழுந்தது புது பிரச்னை#கோபாலபுரம் கொண்டுவரவும்,எல்லாம் எங்கய்யா பார்த்துக்குவார்

----------------------------

18. கல்விக் கடன் பெற்றவர்கள் திரும்பச் செலுத்துவதில் அதிக ஆர்வம் இல்லை #லோன் வாங்குனா ,கட்டக்கூடாது என்பதுதான் அவங்க படிச்ச முதல் பாடம்போல. 

--------------------------------

19 அழகான கதாநாயகிக்காக பஸ்ஸ்டாண்ட்-ல் அலைந்தோம்-பாரதிராஜா#எல்லா ஹீரோயின்களூக்கும் R  ல பேர் வெச்சதால  ரயில்வேஸ்டேஷன்லபிடிச்சீங்களோனுநெனச்சோம் சார்.

------------------------

20 அமைச்சர் ராமலிங்கம்: தமிழகத்தில், 235 மணல் குவாரிகள் செயல்படுகின்றன. #அண்ணே,அதுல எம்புட்டுண்ணே மேல் வருமானம் வருது?

-------------------------

21 சினிமா அதிபரிடம் ரூ.82 லட்சம் மோசடி : சன் "டிவி' நிர்வாக அதிகாரி கைது#தொகை ரொம்ப கம்மியா இருக்கே?ஆள் மாறாட்டமோ?

-------------------

22.  திமுக.எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை என்பது தான் வேதனை-ஸ்டாலின்#அதுகுடப்பரவாயில்லைண்ணே,கேப்டன் உங்களை ஓவர்டேக்கிட்டாரே?

-------------------------------

23.. இரண்டாம் முறையாக அமைச்சர்கள்மாற்றம்: சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்#அட விடுங்கப்பா,ரெட்டை இலைன்னாலே ரெட்டைமனசுன்னுதானே அர்த்தம்?

----------------------------

24 பேசுறதெல்லாம் செய்தியாயிடுச்சே. கவுதம் மேனன் கவலை!!-அண்ணே,நீங்க ஹீரோயின் கிட்டேயே பேசிட்டு இருக்கீங்களாம்,அதுவும் கேரெவன் வேனுக்குள்ள!

---------------------------

25. கொரியா அழைத்துச் சென்று ஏமாற்றிய தயாரிப்பாளர்! லக்ஷா கண்ணீர் #ஏம்மா,ஃபாரீன் ஏரியா,தனியா என் கூட வர்றியா, கொரியான்னு கூப்பிட்டப்பவே தோணல?

------------------------

26. ரேணுகா மேணன் நடித்த தாரம்,ரதி நிர்வேதம் இரண்டு படங்களில் எது ”டாப்”?சன் டி வியில் விரைவில் பட்டி மன்றம்#இமேஜினேஷன்

---------------
25 comments:

Unknown said...

சன் டிவி இருக்குமா இருக்காதா லேட்டஸ்ட் பட்டி மன்றம் ஹிஹி!

உணவு உலகம் said...

ரைட்டு.நடத்துங்கண்ணே நாடகத்தை!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மொக்கை திலகம்னு உறுதி செய்யப்பட்டது இன்று காலை

rajamelaiyur said...

Mind voice a or reall mind a ?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

வணக்கம் பாஸ்...யாருங்க அது மோகனா ..?ரொம்ப நாளா ஒரு டவுட் ...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! உங்கள மிஞ்ச யாராலயும் முடியாது?!

Unknown said...

அந்த மோகனா கேரக்டர் அடிக்கடி வருது! :-)

Unknown said...

முதலாவது படம் சூப்பர்! கிராபிக்ஸ் மாதிரி இருக்கே!

சக்தி கல்வி மையம் said...

maapla eppadi maapla ippadi yellaam..

சக்தி கல்வி மையம் said...

kanakkara chandru..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் ரசிக்கும் படி இருந்தது...

படங்கள் எங்க பிடிக்கிறீங்க....

இப்பத்தான் உங்க பிளாக்க அழகாயிருக்கிறது...
வாழ்த்துக்கள்..

RAMA RAVI (RAMVI) said...

எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கு செந்தில்குமார்.பதிவுகளில் நீங்கள் இணைக்கும் இயற்கை காட்சி படங்கள் வெகுஅழகாக இருக்கிறது...

காங்கேயம் P.நந்தகுமார் said...

பத்மநாப சுவாமி கோவில் சொத்துக்களை பாதுகாக்க போயஸ் கார்டன் சிறந்த இடம் என சிபி அவர்களுக்கு தெரியாதது ஏன்?

'பரிவை' சே.குமார் said...

ரைட்... ரைட்...
நடத்துங்க... நடத்துங்கண்ணே.

Balaganesan said...

Usual mokkai ...

சசிகுமார் said...

அடப்பாவி கனகாம்பரம் உனக்கு டேட் சீப்பா!!!!!!! முன்ன பின்ன பூ வாங்கினியா இல்லையா ஹி ஹி

சசிகுமார் said...

//ரோஸ்கலர்னு என்ன சொல்றயோ //

இது டாப்பு நான்பா

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே யாரடா அந்த மோகனா...???

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
சன் டிவி இருக்குமா இருக்காதா லேட்டஸ்ட் பட்டி மன்றம் ஹிஹி!//

அடப்பாவிகளா உருப்படியா எதுவும் பெசமாட்டேன்களாடா ராஸ்கல்....

கவி அழகன் said...

என்ன வென்று சொல்ல்வதம்மா சி பி யின் படைப்பாற்றலை

பாவா ஷரீப் said...

//17. பத்மநாப சுவாமி கோவிலில் பொக்கிஷம்: பாதுகாப்பது எப்படி என எழுந்தது புது பிரச்னை#கோபாலபுரம் கொண்டுவரவும்,எல்லாம் எங்கய்யா பார்த்துக்குவார்//

கோவில் சொத்து குல நாசம்

கருணா குடும்பத்தை அடியோடு அழிக்க நினைக்கும்
சிபியை வன்மையாக கண்டிக்கிறோம்
அவ்வ்வ்வவ்வ்வ்வ்

முத்தரசு said...

17 கன கச்சிதம்

ராஜி said...

'என் பிறந்த நாள் எது?ன்னு சொல்லுங்க பார்ப்போம்?”

“அதை உங்கம்மாகிட்டே தான் கேட்கனும்,நம்ம காதல் பிறந்த நாள் தான் எனக்கு தெரியும்.”


>>>
அவங்க பிறந்த நாள் தெரிஞ்சுக்கிட்டா கிஃப்ட் குடுக்கனும், அதனாலதான் இப்படி சமாளிக்குறீங்களா?

Saravanan Trichy said...

kalakkal!!!!!