Wednesday, July 13, 2011

டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா?

 
 
1. : கோவை வாலிபர் கைது -12 நாட்களில் 160 பேருக்கு "டார்ச்சர்'#லாக்கப்ல டார் டாரா கிழிச்சிருப்பாங்களே?

-----------------------

2. எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை

-----------------------

3.சரக்கு உடம்புக்கு கெடுதலாம்.டி வி ல சொன்னாங்க..அதனால.

ஓ சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டீங்களா?

ம்ஹூம், டிவில அந்த புரோக்ராம்  நிறுத்திட்டேன்

---------------------

4. ”ஹாய் 143 “

“சாரி ,420” “....

.” “ ஏன் கோபம்?நான் என்னை சொன்னேன்..”

  “ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே?”#காதல் ஊடல்

-----------------------

5. ”டியர்.. மத்தவங்க முன்னால உங்களை செம மாத்து மாத்துனேனே?மனசுக்கு கஷ்டமா இல்லை?”

“ ம்ஹூம் எப்டி மாத்துனாலும் உன்னை மாத்தும் எண்ணம் இல்லை”

--------------------------

 
 
 

6. ”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா?”

  “ம் ம் லேசா”  

“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா?” #பல்பு ஃப்ரம் ஜில்பு

-----------------------

7.  சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலை!நமக்கேன்ன போச்சு?

--------------------------

8. ஆண்கள் யாராவது பெண்ணிடம் மாட்டிக்கொண்டால்,நம் மேல் தவறே இல்லை என்றாலும் இன உணர்வின் காரணமாகவோ என்னவோ ஒரு குற்ற உணர்வு பிறக்கிறது

-----------------------

9. ஆப்பிளில் மட்டும் 7500 வகைகள் உண்டாம்..உன் கன்னங்கள் அதில் கணக்கு சேர்க்கப்படவில்லை

-----------------------

10. தலைவரே,ஃபேக் ஐ டி ல தொந்தரவு தர்றீங்களாமே? நிஜமா?

கன்னி வாசம் மட்டுமே எனக்குத்தெரியும்,கணினி வாசமே தெரியாதவன்யா நானு

----------------------


11. ரூபி தீப்பெட்டியில் போலி வருகிறது,வாங்கும்போது உஷார். சைடு பாக்ஸில் சீல் லேபிள் இல்லாமல் வருகிறது பார்த்து வாங்கவும்.90% குச்சிகள் வேஸ்ட்

---------------------

12. டியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா? 

ச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜாலியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை

----------------------

13. உடல் நனையும் சந்தோஷம் மழைக்கொண்டாட்டம்,உள்ளம் நனையும் சந்தோஷம் மழலைக்கொண்டாட்டம்

-------------------------

14. டியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க! 

அடிப்பாவி,குண்டைத்தூக்கிப்போட்டுட்டு கூல்டிரிங்க் தர்றியா:?

----------------------

15.  டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா? 

ச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி?#ஜெ

-------------------

 
 
 

16.  பாலத்துக்காக விஜய் திருமண மண்டபம் இடிக்கப்பட வாய்ப்பு- செய்தி#அய்யய்யோ,இவரும் கட்சி ஆரம்பிச்சு 8% ஓட்டு வாங்கிடுவாரோ?காப்பாத்து ஆண்டவா

---------------------------------

17. காதல் என்பது காய்ச்சல் மாதிரி ,வரும்,போகும்,ஆனா நட்புங்கறது எய்ட்ஸ் மாதிரி,வந்தா கன்ஃபர்மா போகாது,இப்போசொல்லுங்க ,உங்களுக்கு எய்ட்ஸ் உண்டா?

-----------

18. கனவு பெரிதாக இருக்கும்போது உழைப்பு அதை விட பெரிதாக இருக்க வேண்டும்

-----------------------------

19. ”எல்லா மிஸ்டேக்ஸ்ஸையும் கரெக்ட் பண்ணீட்டியா?

சாரி சார், மிஸ்ஸை கரெக்ட் பண்ணிட்டு இதை கோட்டை விட்டுட்டேன்..

--------------------------

20. டியர்,நான் கலைஞர் மாதிரி ,கட்டுமரமாய் உனை சுமப்பேன்”

அடப்பாவி, மேரேஜ்க்கு முன்னேயே என்னை சுமைதாங்கி ஆக்கிட்டு பேச்சை பாரு ராஸ்கல்.

------------------------------

26 comments:

சக்தி கல்வி மையம் said...

வடையா ?

சக்தி கல்வி மையம் said...

சீக்கிரம் திரட்டில இனைன்கப்பா..
ஆணி இருக்குல்ல..

கோவை நேரம் said...

படங்கள் அத்தனையும் அருமை ..அதைவிட உங்கள் சரக்கு....

Jey said...

படங்களெல்லாம் சூப்பர். எங்க சிபி சுட்டே?

சசிகுமார் said...

பதிவு எழுதுற நேரத்தை விட படங்களை தேட தான் அதிக நேரம் எடுக்கும் போல அனைத்து படங்களும் அருமை

குரங்குபெடல் said...

"சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலை!நமக்கேன்ன போச்சு?"


அதென்ன தம்பி நமக்கென்ன . . .

எனக்கென்னன்னு மாத்துய்யா . . .

நன்றி

கடம்பவன குயில் said...

என்ன முழுக்க முழுக்க அழகழகான அருவியில் நனைய வச்சுட்டீங்க. பன்டாஸ்டிக் அருவிகள் துணுக்குகள்.

கடம்பவன குயில் said...

என்ன முழுக்க முழுக்க அழகழகான அருவியில் நனைய வச்சுட்டீங்க. பன்டாஸ்டிக் அருவிகள் துணுக்குகள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

படங்கள் அத்தனையும் கண்ணுக்கு குளுமை.
11 -ரூபியில் போலியா? இருக்காதே.

mohana said...

உங்களுடைய புகைப்படங்களும் அழகாக இருக்கின்றன!

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

செங்கோவி said...

ரூபித் தீப்பெட்டியிலயும் போலியா..என்னமோ போங்க.

ராஜி said...

”ஹாய் 143 “

“சாரி ,420” “....

.” “ ஏன் கோபம்?நான் என்னை சொன்னேன்..”

“ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே?”#காதல் ஊடல்
>>>>
பார்த்து சிபி சார் அப்புறம் நான் சாப்பிட்டால் நீங்க சாப்பிட்ட மாதிரினு உங்க வீட்டம்மா பட்டினி போட்டுடப் போறாங்க.

ராஜி said...

படங்கள் அத்தனையும் இன்று செம தூள்

ராஜி said...

”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா?”

“ம் ம் லேசா”

“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா?” #பல்பு ஃப்ரம் ஜில்பு
>>>
செம பல்ப் வாங்கியிருக்கீங்க போல சிபி சார்.

ராஜி said...

டியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா?

ச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜாலியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை
>>>
கண்ணடிப்பீங்களா? யாரைப் பார்த்துனு தெளிவா சொல்லுங்க ?

ராஜி said...

டியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க!

அடிப்பாவி,குண்டைத்தூக்கிப்போட்டுட்டு கூல்டிரிங்க் தர்றியா:?
>>>
அடடா என்னா காம்பினேஷன் உங்களால மட்டும் எப்பிடி இப்படிலாம் யோசிக்க முடியுது?

ராஜி said...

டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா?

ச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி?#ஜெ
>>
காதல், அரசியல் ரெண்டையும் கலந்து ஒரு ட்வீட்டா?

ராஜி said...

எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை
>>>
தத்துவம் எண் 16589

M.R said...

படங்கள் அருமை .கண்கள் விலகவில்லை படத்தை விட்டு .

சிபி நண்பரே , கடந்து செல்பவர்களையும் ஒரு நிமிடம் நிற்க வைக்கிற படம் .

உங்கள் தளம் விட்டு செல்லவே மனமில்லை

அருமை

thulithuliyaai.blogspot.com

சத்யா said...

படங்களும் அதற்கேற்ற வார்த்தைகளும் சரியாய் பொருந்தி கண்களுக்கு குழுமையை அளிக்கிறது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவும் அருமை..படங்களும் அருமை.

Unknown said...

அண்ணே படங்கள் அருமை...அதை வைத்து உங்க பதிவு இன்னும் சூப்பர்!

Ramesh.K.S said...

படங்கள் அருமை சி.பி சார்

ADMIN said...

படங்கள் நல்லாருக்கு..! ஆனா நீங்க பன்னிண சேஷ்டை நல்லா இல்லை.. !

உம்ம.. என்னப் பண்ணப்பேறேன்னு எனக்குத் தெரியல...

நற.நற..!

ADMIN said...

புதுசா ஒரு பதிவு போட்டிருக்கேன்.. என்னன்னுதான் வந்து பார்த்துட்டுப் போங்களேன்..!

தலைப்பு: ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை

இணைப்பு: http://thangampalani.blogspot.com/2011/07/blog-post_4968.html