Tuesday, July 05, 2011

களவாணியே .. கலைவாணியே..அலைவாய் நீயே..

A duck splattering water....
duck-wallpapers.jpg

1 . நடிக்கத் தெரியாமலா 15 விருது வாங்கியிருக்கேன்-சீறும் ஹன்ஸிகா#ஆமாங்க மேடம்,நடிக்கறப்ப உங்க திறமை நல்லா தெரிஞ்சுது,அதுக்குத்தான் விருது

-------------------

2. உடலோ,மனதோ பாதிப்புக்குள்ளாகும்போது நட்பு வட்டங்களும்,உறவுகளும் காட்டும் அன்பை பார்க்கையில் அடிக்கடி இப்படி பாதிப்பு வரட்டுமேனு தோணுது

-------------------

3. ”தன்னார்வத்தொண்டரா நீங்க?


“ நோ, நோ, பெண்ணார்வ கிண்டலர்”

----------------------

4. ”உங்க பையன் சின்ன வயசுலயே களவாணியா போயிடுவானோன்னு பயப்படறீங்களா?”

“நோ,எதிர் வீட்டு கலைவாணி கூட போயிடுவானோன்னு பயம்”------------------

5. நம்மைத்தூக்கிவிட கைகள் கிடைத்தால் அடையும் சந்தோஷத்தை விட நம் கண்ணீரைத்துடைக்க வரும் கைகளால் ஏற்படும் நிம்மதியே அதிகம்

---------------6. அபிமான ஹீரோவுக்கு திருமணம் எனில் பெண் வருத்தப்படுகிறாள்,அபிமான ஹீரோயினுக்கு திருமணம் எனில்ஆண் தனது லிஸ்ட்டில் அடுத்த ஹீரோயினை தேடுகிறான்------------
7. அன்பை விட பெரிய வன்முறை  ஏதும் இல்லை#வயலன்ஸ் லவ்


------------------------
8. கண்ணியமான சிநேகிதிகளின்  நட்பினால் நாம் சில கோடுகளைத்தாண்ட முடியாமல் தவித்து நம் படைப்புகள் ஒரு சட்டத்துக்குள் சிக்கிக்கொள்கின்றன


---------------

9. ”எனக்கு சேலை அழகா?சுடிதார் அழகா?”

ஸாரி,உன் முகத்தை தாண்டி என் ரசனை இன்னும் அடுத்த கட்டத்துக்கு போகவே இல்லையே?”#காதல் கடலை


-------

10. நீ ஊடல் கொண்டு என்னுடன் பேசுவதை தவிர்க்கிறாய்,நான் காதல் கொண்டு உன் நினைவுகளுடன் தவிக்கிறேன்.


-------------


11. சாதாரணமானவர்கள் சொல்லும் நல்ல கருத்துக்கள் சாதாரணமாகவே போய்விடுகின்றன,பிரபலமானவர்கள் சொல்லும் சாதாரண கருத்துக்கள் கூட பிரபலமாகிவிடுகின்றன


------------------------
12. ”உன் வெட்கம் செம அழகு,எங்கே எனக்காக ஒரு முறை வெட்கப்பட்டு காட்டு?”


  “ச்சீய்.. நான் மாட்டேன்பா.. “

  “ஹைய்யா.. தோத்துட்டே. ஹா ஹா “


-------------------

13. டியர்.. அளவுக்கதிகமா என் மீது அன்பு செலுத்த வேணாம்..”

ஏன்?

”ஏன்னா நான் டயட்ல இருக்கேன்” #ஆரோக்கிய மேரியின் ஹெல்த் ஓரியண்ட்டட் லவ்

-------------------------

14. ”அடிக்கடி என்னுடன் ஊடல் கொள்ளச்சொல்கிறீர்களே ஏன்?”

“சமாதானப்படுத்தும் சாக்கில் உன்னிடம் கொஞ்சிக்கொண்டிருக்கலாமே?”#பொழுது போகாத பொம்மு

----------------

15. ”முதன்முதலாக நான் ஐ லவ் யூ சொன்ன தருணம் உங்கள் நினைவில் இருக்கிறதா?”

“இல்லை,நீ காதலை சொன்னதுமே எனக்கு நினைவு தப்பி விட்டதே?” #எஸ்கேப்பிசம்

------------------------


16. பெண்களில் பல வகை உண்டு,ஆண்களில் ரெண்டே வகை தான். 1. பெண்ணின் அன்புக்காக ஏங்குபவர்கள் 2 ஏங்காதவர் போல் காட்டிக்கொள்பவர்கள்

--------------------------

17. என் காதலியும் கேரளத்து பத்மநாபா கோயில் மாதிரிதான்,இன்னும் கணக்கில் வராத பல புதையல்களை தன்னகத்தே வைத்திருக்கிறாள்

----------------------

18.  ” நான் தான் லவ்வுக்கு ஓக்கே சொல்லிட்டனே?ஏன் டென்ஷனா இருக்கீங்க?

“ “ எதிர்பாராத விதமா ஓக்கே சொன்ன நீ எதிர்பாராத விதமா நோ சொல்லிட்டா?”

--------------------

19. ”டியர்.. உன் கூட பழகவே பயமா இருக்கு..” 

“ ஏன் டார்லிங்க்?” 

“ உன் கூட அன்பு செலுத்தி செலுத்தி எனக்கு அடிப்படையா கோப உணர்வே மறந்துட்டா?

-----------------------

20. ”நீ என்னை காதலிக்க ஓக்கே சொன்னதை நம் காதல் கதையின் பாகம் 1 எனவும்,நாம் காதலித்ததை பாகம் 2 எனவும் பிரிக்கலாமா?”

வேணாம், கதையாகக்கூட பிரிவு........

---------------------------


26 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

திருநெல்வேலி அல்வாடா... மதுரை மணக்கும் மல்லிடா...

தமிழ்வாசி பிரகாஷ் said...

பெண்ணார்வ கிண்டலர் சி பி தானுங்கோ....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

7um 8 um I like it
தமிழ்வாசி, உங்க profile லையே மதுரை மல்லி மணக்குதே.

Unknown said...

அண்ணே ரொம்ப சாக்கிரதையா இருக்குறீங்க போல ஹிஹி!

குரங்குபெடல் said...

"”நீ என்னை காதலிக்க ஓக்கே சொன்னதை நம் காதல் கதையின் பாகம் 1 எனவும்,நாம் காதலித்ததை பாகம் 2 எனவும் பிரிக்கலாமா?”

வேணாம், கதையாகக்கூட பிரிவு........"


அய்யோயய்யோ முடியல சாமி
நன்றி

கூடல் பாலா said...

யாரந்த பெண்ணார்வ கிண்டலர்?

சக்தி கல்வி மையம் said...

விக்கியுலகம் said...

அண்ணே ரொம்ப சாக்கிரதையா இருக்குறீங்க போல ஹிஹி!// repeatttuuuuuuuuuuuuu

செங்கோவி said...

காமெடி, சீரியஸ் ரெண்டையும் ஒன்னாப் போட்டு குழப்பாதீங்க பாஸ்..தனித்தனி பதிவாப் போடுங்க.

rajamelaiyur said...

8 matter super . .

சசிகுமார் said...

கலக்குறீங்க பாஸ். ஹன்சிகா ஜோக் செம

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

கலக்குறீங்க...

அருமையான படங்கள்.

Unknown said...

அடடா

கொஞ்சம் காதல்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் கெஞ்சல்
கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் உள்குத்து

எல்லாம் கலந்த சாலட்

உணவு உலகம் said...

சே, புள்ள என்னமா திருந்திட்டார்பா!

உணவு உலகம் said...

கண்ணைக் கவரும் படங்கள். கண்டு ரசித்தேன்.

ராஜி said...

பெண்களில் பல வகை உண்டு,ஆண்களில் ரெண்டே வகை தான். 1. பெண்ணின் அன்புக்காக ஏங்குபவர்கள் 2 ஏங்காதவர் போல் காட்டிக்கொள்பவர்கள்
>>>
ம் ம் ம் அப்பிடியா?!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே சிபி அண்ணே டேய்......

ராஜி said...

அன்பை விட பெரிய வன்முறை ஏதும் இல்லை#வயலன்ஸ் லவ்
>>>
Love toture?

MANO நாஞ்சில் மனோ said...

காதல் காதல் காதல்...

ஆர்வா said...

17 வது மேட்டர் கலக்கலோ கலக்கல்..

MANO நாஞ்சில் மனோ said...

டேய் மக்கா அடங்குலேய் நாயே....

ஆர்வா said...

அப்பப்போ எடுத்துவிடும் இந்த தத்துவங்களை புக்கா வெளியிட்டா என்ன?

கவி அழகன் said...

6 வது யாருக்கு மைந்தனுக்கும் ஓட்டைவடைக்குமா

சென்னை பித்தன் said...

அழகான படங்கள்.காதல்(காதலர்) பற்றிச் சுவையான சிந்தனைகள்!

Unknown said...

மேட்டருங்க கலக்கல் தல .நானும் எடுத்து விட போறான் என் காதலிக்கு (யாருக்கு எத சொல்லுறது என்றுதான் பிரச்சனை )

Unknown said...

மூன்றாவது பாய்ண்ட் தடாலடி சிரிப்பு.யப்பா..எப்படி think பண்ணுகிறிர்கள்.நீங்கள் சரியான கிண்டல்(kind)ler!!!!!