Saturday, July 23, 2011

டியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது காதலர்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 

 1. தலைவரே, நில மோசடி வழக்குல கைது ஆனீங்களாமே? ஏன்?


.குறிஞ்சியை மருத நிலம்னு தப்பா ஒரு தடவை புவியியல் டீச்சர்ட்ட சொன்னது உண்மைதான்,ஆனா இதுக்குக்கூட நில மோசடி வழக்கு என் மீது பாய்ஞ்சா எப்டி?

---------------------

2. தலைவரே,பத்மநாபா கோயில்சொத்துக்களை அபகரிக்க நினைக்கறீங்களே,ஏன்?

கோயில் சொத்து குலநாசம்னு சொல்வாங்க,கோயில்ல இருக்கும் குலம் நாசம் ஆகவேணாம்,பாவத்தை நான் ஏத்துக்கறேன். ஹி ஹி

----------------------------

3. நம்நாட்டின் தேசியவிளையாட்டு எது?கபடியா?ஹாக்கியா?கிரிக்கெட்டா?

மூணும் இல்லை,உண்ணாவிரதம்தான்.அதை வெச்சுத்தான் நாட்ல ஆளாளுக்கு விளையாடறாங்க?

------------------------

4. மன்னா!ஏழைகளின் எண்ணிக்கை நம் ஆட்சியில் குறைஞ்சிருச்சே,எப்டி?

ஹி ஹி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஏழைகளை நாடு கடத்தி விட்டேன்.

--------------
5. என் சம்சாரமும் ஒரு மீடியா மாதிரிதான்னு தலைவர் சொல்றாரே?

அவரோட சம்சாரம் நினைச்சா அவரோட பேரைக்கெடுத்து அவருக்கு கெட்ட பேர் வாங்கித்தர முடியுமாம்..

-------------6. தலைவரே,ஆட்சிக்கு 6 மாசம் கழிச்சு மார்க் போடறதா சொல்றீங்களே?

எவ்ளவ் போடுவீங்க? அவங்க ஆட்சில பங்கு குடுத்தா 100க்கு 100 ,பங்கு ,குடுக்கலைன்னா 0

-----------------------

7. தலைவரே,தீவின் பெயரை மாத்துனா உங்களுக்கு நல்ல பேரு கிடைக்குமா? எப்டி?

லட்சத்தீவை கோடித்தீவுன்னு மாத்துனா?பண வீக்கம் குறைஞ்சிட்டதாத்தானே அர்த்தம்?

-----------------------

8. ஆந்திராவுக்கு ஒரு திருப்பதி,கேரளாவுக்கு ஒரு பத்மநாபா போல தமிழ்நாட்டுக்கும் ஒரு பணக்காரப்புதையல் கோயில் உருவாக்கும் வரை ஓயமாட்டேன்-தலைவர்

-----------------

9. ஜெ எதுக்காக ஆடும்,மாடும் இலவசமா தர்றாங்க?

அதானே அம்மான்னு பாசமா கூப்பிடுது?

--------------------

10.  காதலனோட ஊரை விட்டு ஓடிப்போனப்பவே உனக்கு தண்ணி தெளிச்சு விட்டுட்டேன்,ஏன் இப்போ வந்தே?

சாரி டாடி,என் செல்ஃபோன் சார்ஜர் எடுக்க மறந்துட்டேன்

--------------11. நடிகர் விஜய், தெய்வத்திருமகள் டைரக்டர் விஜய் என்ன வித்தியசம்?


நடிகர் விஜய் ரீமேக் படத்துல ஏ டூ இஜட் காப்பி அடிப்பார்,டைரக்டர் விஜய் ரீமேக் படத்துல சொந்த சரக்கு கொஞ்சம் சேர்ப்பார்#ஃபீல் த டிஃப்ரன்ஸ


-----------------

12,  ரேபான்கூலிங்க் கிளாஸ் போட்ட ஃபிகர் எல்லாம் ஹை க்ளாஸ் ஃபிகர் அல்ல.பொது நலன் கருதி வெளியிடுவோர் ஏமாந்தோர் சங்கம் C/O ஏர்வாடி


-----------------


13. லேடி டாக்டரை லவ் பண்றேன்,புரோப்போஸ் பண்ணுனா  24 மணி நேரம் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்னு சொல்லிடுவாங்களோ? டவுட்


-----------------


14. தலைவரே,சீரணின்னா என்ன?

நாம அணி மாறும்போது அந்த கட்சிக்கு சீரா குடுப்பமே அது தான் சீரணி#டாக்டர் ராம்தாஸ் ஸ்பெஷல்


--------------------


15. பொதுவா பெண்ணுக்கு மன வலிமை ஜாஸ்தி ,ஆணுக்கு அது கம்மி.அதைத்தான் நம்ம முன்னோர்கள் சொன்னாங்க, பில்டிங்க் ஸ்ட்ராங்க்,பேஸ்மட்டம் வீக்.


-----------------16. மிஸ் ,உங்க பேர் என்ன?

“எல்லாரும் என்னை அக்கான்னு கூப்பிடுவாங்க”,

என்ன ஒத்துமை பார்த்தீங்களா? என்னை எல்லாரும் மச்சான்னு தான் கூப்பிடுவாங்க


------------


 

 17. அரசியலில் பழங்குடியினர் பங்கேற்க வேண்டும் : ராகுல் அழைப்பு#மொடாக்குடியினர்க்கெல்லாம் அனுமதி இல்லையா?

-------------------------------

18..  தேர்தலில் வெற்றி பெற்றால் யானை காணிக்கை-நடிகை ஜெயப்பிரதா வேண்டுதல்#அட!!உங்கம்மாவை தானம் பண்ணிட்டா உங்கப்பா கோவிச்சுக்க மாட்டாரா மேடம்?

-----------------------------

19.  குருவாயூர் சென்று பிரபுதேவா சாமி கும்பிட்ட போது நயன் தாரா காரிலேயே இருந்தார்,கோயிலுக்குள் செல்லவில்லை#வெளில இருந்து ஆதரவு தெரிவிச்சாரா?

-----------

20. டாக்டர்,உங்களை லவ் பண்றேன்,நல்லபதிலசொல்லுங்க”

என்னாலான முயற்சி செய்யறேன் உங்களை கடவுள் தான் காப்பத்தனும்

---------------------
21.ரீசார்ஜ் செய்து புகைக்கலாம் : வந்தாச்சு இ-சிகரெட் இனி, வராது கேன்சர்!#அப்போ இனி புண்பட்ட மனதை இ-புகை விட்டு ஆற்றுவாங்களா?


-------------------

22. எல்லா சப்ஜெக்ட்லயும் உங்க பையன் ஒரே மாதிரி 40 மார்க்தான் வாங்கி இருக்கானே?


சமச்சீர்க்கல்வித்திட்டத்துல படிச்சவன் ஆச்சே?

----------------

23. சார்..உங்க சம்சாரத்தை நீங்க எதிர்க்கறதே இல்லையே ?

ஆமா,எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தி,நாய் எதிர்ப்பு சக்தி கம்மிடர் ஒயிஃப்

----------------------

24. சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்#வீடியோவை நல்லா பார்த்தாச்சே,செஸ்ட்டே தெரிலயே?

-------------------------

25.ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?பிரதமர்#போபார்ஸ் ஊழல் புகார் வந்த அடுத்த நொடியே ராஜீவ் ராஜினாமா பண்ணினாரா?

-----------------------


26. கிருஷ்ணவம்சி படக்கதையே என்னிடம் சொல்லப்படவில்லை- த்ரிஷா#கதை இருந்தா நாங்க சொல்லி இருக்க மாட்டோமா?வெச்சுக்கிட்டாவஞ்சனை?-ரம்யாகிருஷ்ணன்

-----------------------

27. மேனேஜர் சார்,நான் 4 மாசம் முழுகாம இருக்கேன்,எனக்கு லீவ் வேணும்.

அட ஏம்மா?கம்ப்பெனியே 7 மாசமா நஷ்டத்துல முழுகற மாதிரி இருக்கு!லீவ் வேறயா?

-----------------------

28. என்னது?தமிழுக்காக ஜெயிலுக்கு போனீங்களா?

ஆமா,என் மாமா பொண்ணு தமிழ்ச்செல்வியோட  மேரேஜ்ல கல்யாணமண்டபத்துல கலாட்டா பண்ணி மாட்டிக்கிட்டேன்

------------------------

29. கேள்வி - பிரமதர் ஆக தகுதி என்ன?


ஒரு புத்திசாலியின பதில் - நேரு குடும்பமாக இருக்கனும்,வயசு 41 ஆகி இருந்தா போதும்

-----------------------------

30.மேடம்,மாசம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கறீங்க,உங்க கணவர் வெறும் ரூ 30,000 தான் சம்பளம் வாங்கறார்,பிராப்ளம் வர்லை?

சம்பளம் சேர்த்துக்கேட்டாரு,சீனியாரிட்டி பிரகாரம்தான்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லீட்டேன்

----------------
Image

31. பெண்பார்க்கும்படலம் நடக்கறப்பவே மாப்ளை ஒரு சந்தேகப்பிராணின்னு எப்படி கண்டு பிடிச்சாங்க?

பொண்ணோட செல்ஃபோனை வாங்கி இன்பாக்ஸ் மெசேஜ் செக் பண்ணாராம்

---------------------

32.பருத்தி வீரன் கார்த்திக்கு மேரேஜ் ஆனதுல நம்ம தலைவருக்கு என்ன சந்தோஷம்?இனி தமனா ஃபிரீ,இவரு நூல் விடலாமே?

---------------------

33. கவர்ச்சி நடிகையை மேரேஜ் பண்ணீக்கிட்டீங்களே?ஏன்?

அவ புடவையே கட்ட மாட்டா,புடவை துவைக்கற வேலை மிச்சம்,அயர்ன் பண்ணவும் தேவை இல்லையே?

---------------------------
34. தலைவரோட குடும்பம் ஒரு கோவில் மாதிரி...

நிஜமாவா?ஆனா அவர் நாத்திகர் ஆச்சே?

அட நீ வேற சொத்து மதிப்புல கேரளா பத்மநாபா கோயில் மாதிரி

------------


35. டியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க.

. எதுக்கு இது?உன் பிறந்த நாளா?

இல்லை.நீங்க என்னோட 100வது காதலர்#பெண்கள் முன்னேற்றம் வாழ்க


37 comments:

Unknown said...

ஸ்வீட் கொடுங்க...நான் முதல் கமெண்டர்.

ஆகுலன் said...

கொஞ்சத்துக்க வடைஐ மிஸ் பண்ணிடன்....
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

ஆகுலன் said...

என்னண்டு பாஸ் உங்களால இப்டி யோசிக்க முடியுது....
நல்லா இருக்கு,,,, தொடருங்கள்..

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

கோகுல் said...

"செஸ்"டே தெரியல \\
ஜஸ்ட் மிஸ்

Unknown said...

தலைவரோட காமடிகள்...ஹிஹி மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றன அண்ணே!

கூடல் பாலா said...

சூப்பர் ஹிட்ஸ்...

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
முதல் பட ரோஜா கொள்ளை அழகு..//
அப்ப பதிவு?

rajamelaiyur said...

First joke super

rajamelaiyur said...

Vazhakam pola kalakkal boss

Alivetamil said...
This comment has been removed by the author.
Alivetamil said...

www.alivetamil.blogspot.com

M.R said...

படம் 1 ஒரு வெள்ளை ரோஜாவிற்கு இரண்டு ஆரஞ்சு ரோஜா ரூட் போடுது

படம் 2 யாருக்காக காத்திருக்க ,சிபி நண்பருக்காகவா ,அவரு ப்ளாக் எழுதுறதுல பிசியா இருக்காரு .வரமாட்டாரு .
(ஹி ஹி நான் பிரியா தான் இருக்கேன் )

படம் 3 உங்கள் பாதம் பின்தொடர்வேன் மணாளா

படம் 4 சாயம் தெருவிலிருந்து உன் ஆடைக்கா இல்லை உன் ஆடை இலிருந்து தெருவிர்க்கா

படம் 5 பதிவெழுத படித்தேன் படித்தேன் படித்துகொண்டே இருந்தேன்

படம் 6 நண்பேண்டா

படம் 7 சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்.
அங்க உட்கார்ந்து எழுதிட்டாலும் ..

படம் 8 மேல என்னபா எழுதியிருக்கு
படிக்கிறவங்க எல்லாம் சிரிச்சிட்டு போறாங்க

சக்தி கல்வி மையம் said...

raittu..

ஆமினா said...

உண்ணாவிரதம் பத்தி சொன்னது ரொம்ப அருமை :)

vidivelli said...

supper...
congratulation,,

சசிகுமார் said...

பதிவுலகின் நாகேஷ் ஹி ஹி

Anonymous said...

மூன்றாவது - எனக்கு அதே டவுட்டு தான்

Anonymous said...

ஒன்பதாவது - ஹஹஹா சூப்பர் ,ஜெயா மேடம் எப்பிடி உங்களால மட்டும் முடியுது.

சரி அப்ப கலைஞர் எண்ணத்தை கொடுப்பாரு))

செங்கோவி said...

ஹைய்யா..தமிழ்மணம் ஒர்க் ஆகிடுச்சு.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!
நில மோசடியில ஈடுபட்டவங்க இங்க மொத்தமா கோவையில கூடுறாங்க..
இவர்களில் தங்கள் ஜோக்கில் குறிப்பிடப்படுபவர் யார்?

Unknown said...

கடைசி ஜோக் பெண்களை அவர்கள் முன்னேற்றத்தை இழிவு படுத்திற மாதிரி தோணுதா பாஸ்?
அதுக்காக யாரும் மைனஸ் வோட்டு போட்டுறாதீங்கப்பா!! hi hi :-)

தனிமரம் said...

இப்படி குருவாயூரானை காக்க வைக்கலாமா நயன் தாரா செமகடி பதிவுகள்!

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

எல்லாம் அருமை

கவி அழகன் said...

வழமை போல் கல்க்குதுங்கோ

காட்டான் said...

என்னையா இஞ்ச நடக்குது நானும் வேட்டைக்கு போவோம்னு கொக்குத்தடிய தூக்கினா எனக்கு முன்னமே .. இந்த சின்னபிள்ள..  வேட்டையாடிக்கொண்டு போறான்யா.. 

எல்லேரும் போய் A+ இல் குத்தீட்டு வாங்கையா கருத்துக்கள..
அப்பதான்யா என்னய பிள்ள பிடிக்க விடுவாய்யா இந்த சின்னபையன்..!

காட்டான் குழ போட்டான்..

காட்டான் said...

ஜீ சொல்லிக் கொடய்யா ... 

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர்ப் காமெடிஸ்......... வாழ்த்துக்கள் சிபி!

Napoo Sounthar said...

சூப்பர்..

மாதேவி said...

:))

பறவை படம் நன்றாக இருக்கிறது.

நிரூபன் said...

டியர்,ஸ்வீட் எடுத்துக்குங்க, நீங்க என்னோட 100வது காதலர்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நிஜமாவா...அவா உடனே செருப்பைத் தூக்கியிருப்பாவே((((;

நிரூபன் said...

தலைவரே, நில மோசடி வழக்குல கைது ஆனீங்களாமே? ஏன்?


.குறிஞ்சியை மருத நிலம்னு தப்பா ஒரு தடவை புவியியல் டீச்சர்ட்ட சொன்னது உண்மைதான்,ஆனா இதுக்குக்கூட நில மோசடி வழக்கு என் மீது பாய்ஞ்சா எப்டி?//

வாத்தியாருக்கேற்ற சிட்டுவேசன் கடி.

நிரூபன் said...

மிஸ் ,உங்க பேர் என்ன?

“எல்லாரும் என்னை அக்கான்னு கூப்பிடுவாங்க”,

என்ன ஒத்துமை பார்த்தீங்களா? என்னை எல்லாரும் மச்சான்னு தான் கூப்பிடுவாங்க//

சிபியின் ஆப்பீஸ் இல் உள்ள எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கோ.

நிரூபன் said...

அருமையான டுவிட்ஸ் பாஸ்,
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

RAMA RAVI (RAMVI) said...

உங்க பதிவில இயற்கை காட்சி படங்கள் மிகவும் அழகாக இருக்கு.

ஹேமா said...

படங்கள் அழகு !

மாய உலகம் said...

உங்க காட்டுல பதிவுகள் மழை... கலக்குங்க... ஆடும் மாடும் ஏன் இலவசமா கொடுக்குறாங்க அதானே அம்மான்னு சொல்லும் ... அருமை