Friday, July 08, 2011

டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?

TWOO33-snowwhite1.jpg1. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சித்தால் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக அமையும்#பணம் தேடும் உலகு கண்டு மனம் வாடும்  மனிதன்

----------------------------

2. திறமை உங்களை உயர்ந்த நிலைமைக்கு கொண்டு செல்லும்,ஆனால் நன்னடத்தை தான் உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்து நிலை நிறுத்தும்

-------------------------

3. எதிர் வீட்டு டல் திவ்யா இப்போ தூள் திவ்யா ஆகிட்டாளே ,ஏன்?

ஏன்னா என் சம்சாரம் ஊருக்கு போயிருக்கா

-------------------------

4. சம்சாரம்,செல்ஃபோன் என்ன வித்தியாசம்?

சம்சாரத்தை மியூட் பண்ண முடியாது,செல்ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கலாம்,மாடல் பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்

------------------------

5. நான் கண்ணீர் மாதிரி,நீ சந்தோஷமாக இருக்கும்போது உன் கூட இருக்க மாட்டேன்,உன் கஷ்டத்தில் மட்டும் உடன் இருப்பேன்

--------------------------6. கடவுள்பாதி மிருகம்பாதி படத்தில் ஆர்யா,நரேன்,ஆதி மூவரும் ஒப்பந்தம்#இதுல ஆதி தான் மிருகம் போல் நடிக்கனும்னு நிர்ப்பந்தம் பண்ணி இருப்பாங்களே

------------------------


7.போஸ்ட் பாக்ஸ்கள் விமான நிலையங்களில் மட்டும் நீல நிறங்களில் இருப்பது போல் மனிதன் மனம் தனிமையில் மட்டும் கறுப்பு நினைவுகளில் வாழ்கிறான்

--------------------------

8. டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?

நான் சேலையை ஏத்திக்கட்டறவ இல்ல.. இறக்கிக்கட்டறவ.

அது.(எது?) #திருப்பதி தல ரசிகை (மொட்டை அடிக்கப்போறா)

-------------------


9. தலைவரே,உங்க பொண்ணை லவ் பண்றேன்.

அப்படியா?யாராவது பெரிய மனுஷன் கிட்டே இருந்து ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வா#ஹூம்,இவனெல்லாம் மனுஷனா?

-----------------------------


10. அந்த நடிகை கூட எனக்கு லவ் இருக்குன்னு சொல்றது புரளி,என் வேலையை கவனிக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு.

உங்க வேலையே நடிகையைலவ்வறதுதானாமே?

------------------------------


snow_white_and_the_seven_dwarfs-2560x1600.jpg

 

11. பாசிட்டிவ் ரிசல்ட்டை விரும்பாத ஒரே இடம் ஹெச் ஐ வி டெஸ்ட் ரிப்போர்ட்டில் மட்டுமே#ஜி ஹெச்

----------------------
12. தன்னை யாரும் கவனித்து விடக்கூடாது என ஒவ்வொரு பால்வினை நோயாளியும் தன் முகத்தை மறைத்துக்கொள்ளும் சோகத்தை ஜி ஹெச்சில் பார்க்கலாம்

---------------------

13. பால்வினை நோயாளிகள் பிரிவில் ஒரு ரவுண்ட் அடித்துப்பார்த்து விட்டு வந்தால் ஜென்மத்துக்கும் பெண் ஆசையே மனிதனுக்கு வராது#ஜி ஹெச் உலா

---------------------
14.  நான் ஆஸ்கார் வாங்கவேண்டிய இசைமைப்பாளர்-டி.ஆர் #மக்கள் உயிரை வாங்கறவங்களுக்கெல்லாம் ஆஸ்கார் தர மாட்டாங்களே சார்..

-

-------------------------------

15. நாம் இருவரும் பேசாமல் இருக்கும் விரதம் இருப்போம். யார் ஜெயிக்கிறார்கள் பார்ப்போமா? உன் கண்கள் இருக்கும் வரை ஜென்மத்துக்கும் ஜெயிக்கமாட்டாய்

-------------------------


16. சுடி,மிடி ,ஜீன்ஸ் டீ சர்ட்டில் கலக்கும் பெண்களை எந்த அளவு ரசிக்கிறோமோ 3 மடங்கு அதிகமாக சேலை அணிந்த ஃபிகரை ரசிக்கிறோம்#தமிழண்டா

----------------------

17. விஜயகாந்த் மகன்  +2 தேர்வில் 1200க்கு 585 மார்க்#ஒரு நாட்டின் வருங்கால சி எம் மகனே எந்த ஊழலும் செய்யாம நியாயமான மார்க் போதும்னு பெருந்தன்மை

-----------------------

18. ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு  அப்துல்கலாம் பதில்# எல்லாரும் தொடங்கறாங்க. ஆனா கடைசி வரை நடத்தறதில்லை, அதான் பிரச்சனை

---------------------
19. ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி : மரத்தில் மோதியது அரசு பஸ்: 30 பேர் காயம்#பஸ்ல பொன்னர் சங்கர் ஓடிட்டு இருந்திருக்குமோ?

--------------------

20. அன்புமணி: அதிமுக கூட்டணியில் தேமுதிக., தான் குறைவாக, 44 சதவீத ஓட்டு பெற்றுள்ளது.#அண்ணே,ஜெயிச்சவங்களைப்பற்றி தோத்தவங்க நக்கல் அடிக்கலாமா?

-------------------------

21. இலங்கை பிரச்னையில் அரசின் நிலை என்ன? இந்திய கம்யூ., கேள்வி # அஸ்யூசுவல் கையாலாகாத நிலைதான், இதென்ன கேள்வி?

----------------------

22. ரிசர்வ் வங்கி கவர்னர் -வங்கிகள் உபயோகமான செயல்பாடுகளுக்கு மட்டுமே கடன் அளிக்க வேண்டும்.#அப்போ கட்சி தொடங்கனும்னா லோன் கிடையாதா?

--------------------------

23. அன்புமணி -தமிழக சட்டசபை தேர்தலில் திமுக.,வினரால் தான், பாமக.தோற்றது.#உன்னால நான் கெட்டேன்,என்னால நான் கெட்டேன்,நம்மால நாடே கெட்டுது

--------------------------

24. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது: கதறும் தங்கர் பச்சான்!#இந்த டயலாக்கை கனிமொழிகிட்டே இருந்து காப்பி அடிச்சீங்களா?

------------------

25. தண்ணியடிக்க வயசு எதற்கு...? சர்ச்சையில் ஸ்ரேயா! #மூன்றெழுத்து நடிகைக்கு நான்கெழுத்தில் ஆர்வம் -சரக்கு

---------------------

35 comments:

Unknown said...

என்னன்னே மூணு பதிவுக்குண்டான விஷயத்த ஒன்னுலையே போட்டுட்டேங்க...திகார் ஞாபகம் வந்துடுச்சா ஹிஹி!

உணவு உலகம் said...

அடப்பார்யா, முதல்ல நம்ம தல வந்துட்டாரு!

உணவு உலகம் said...

இண்ட்லிலயாவது, இரண்டாவது ஓட்டு போட்டாச்சு!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிபி நிச்சயம் மாறிக் கொண்டு இருக்கிறார் பார்க்கவும் 2

rajamelaiyur said...

கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....கலக்கல் ....

கூட்டான்சோறு...

Mathuran said...

காமடிகளும், இடைக்கிடை வரும் தத்துவங்களும் அருமை

கோகுல் said...

பட்டாய கிளப்புது

கவி அழகன் said...

படைப்பும் படைகளும் கண்ணை கட்டுது
எப்படி இப்படி எல்லாம்

ராஜி said...

நான் கண்ணீர் மாதிரி,நீ சந்தோஷமாக இருக்கும்போது உன் கூட இருக்க மாட்டேன்,உன் கஷ்டத்தில் மட்டும் உடன் இருப்பே
>>>
சந்தோஷத்துலயும் கண்ணீர் வரும் சிபி சார்.அதுப்போல்தான் உறாவுகளும் சந்தோஷம், துக்கம் ரெண்டுத்தலயும் வேணும்.

ராஜி said...

கலக்கல் ட்வீட்டுகள்.

ராஜி said...

சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சித்தால் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக அமையும்#பணம் தேடும் உலகு கண்டு மனம் வாடும் மனிதன்

>>
எத்தனைப் பேர் அப்படி நினக்குறாங்க. ஒரு மனிதன் ஜெயித்தானா இல்லையானு அவனோட பேங்க அக்கவுண்ட், வீடு, வாசல், தோட்டம் துரவு, கார், நகை தானே தீர்மானிக்குது. நிம்மதியா இருக்கீங்களானு எப்பவாவது, யாரவது, கேட்டிருப்போமா?

சக்தி கல்வி மையம் said...

haa..haa...ha,..

நிரூபன் said...

வணக்கம் சகோ.

எப்படி இருக்கிறீங்க.

நிரூபன் said...

டியர்,ஏன் லோஹிப் சேலை கட்டி இருக்கே?//

24 மணி நேரமும் ப்ளாக்குடன் இருப்பதை ஸ்டாப் பண்ணி,

எப்போவாச்சும் ஒரு நிமிசம் அவங்களைக் கண்டுப்பீங்க என்று தான் லோஹிப் கட்டியிருப்பாங்க என்று நினைக்கிறேன்;-0000
ஹா...ஹ...

நிரூபன் said...

1. சந்தோஷமாக வாழ முயற்சி செய்வதை விட நிம்மதியாக வாழ முயற்சித்தால் வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக அமையும்#பணம் தேடும் உலகு கண்டு மனம் வாடும் மனிதன..

வெள்ளிக் கிழமைக்கேற்ற கலக்கலான தத்துவம், ஏன் நேற்று கனவில் ஆன்மிகக் குருஜி வந்திருப்பாரோ;-))

கூடல் பாலா said...

திடீர்ன்னு ஓஷோ வா ஆகுறீங்க .......நித்யானந்தாவாகவும் ஆகுறீங்க ...

HajasreeN said...

ஐயையோ இண்டைகாவது நல்லபிள்ளையா கார்டூன் போடுறார் எண்டு பாத்தா நடுவுல வேளைய காட்டுறாரு

Niroo said...

// தலைவரே,உங்க பொண்ணை லவ் பண்றேன்.

அப்படியா?யாராவது பெரிய மனுஷன் கிட்டே இருந்து ரெக்கமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வா#ஹூம்,இவனெல்லாம் மனுஷனா?//

கலக்கல்

நிரூபன் said...

சம்சாரம்,செல்ஃபோன் என்ன வித்தியாசம்?

சம்சாரத்தை மியூட் பண்ண முடியாது,செல்ஃபோனை சைலண்ட் மோடுல வைக்கலாம்,மாடல் பிடிக்கலைன்னா மாத்திக்கலாம்//

பாஸ், சம்சாரம் மாடலும் பிடிக்கலைன்னா மாத்தலாம், ஆனால் நம்ம கலாச்சார காவலர்களும், சம்சாரமும் தான் நம்மளைப் போட்டுத் தள்ள ஓடோடி வருவாங்க.

நிரூபன் said...

நான் கண்ணீர் மாதிரி,நீ சந்தோஷமாக இருக்கும்போது உன் கூட இருக்க மாட்டேன்,உன் கஷ்டத்தில் மட்டும் உடன் இருப்பேன்//

ஆஹா....
அவங்க கொடுத்து வைச்சவங்க போல இருக்கே.

நிரூபன் said...

நத்தார் தாத்தா படம் கலக்கல்...

பதிவிற்கு ஏற்றாற் போல,

துணுக்குகளை மெருகேற்றும் வண்ணம் படங்களும் அமைந்துள்ளன.

இனிய காலை வேளைக்கேற்ற இதமான தத்துவம், காதல், செண்டி மெண்ட் கலந்த துணுக்குகளைப் பகிரிந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Shiva sky said...

எப்படி இருந்த மனிதனை இப்படி மாத்திட்டாங்களே...நெல்லை சந்திப்பு பிறகு..

Shiva sky said...

சிபி அண்ணா அவங்க மனைவி சொல்லும் போது கூட மாறீ இருக்கமா இருந்து.... இப்ப நண்பர்..நண்பி க்காக மாறிட்டார்.............@ இது என்னா நு யாரவது சொல்லுங்க பா....?

சசிகுமார் said...

நல்லா இருக்கு நண்பா

சென்னை பித்தன் said...

அப்ப்ப்பா!ஒரே பதிவில் இத்தனையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர் டிவிட்ஸ்....

Unknown said...

//லோஹிப் சேலை//
நல்லவேளை
கட்டரவங்க காலை ஒடிச்
சீங்க தப்பிச்சாங்க
எல்லாமே அருமை
புலவர் சா இராமாநுசம்

Unknown said...

இன்னைக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் இருந்தாலும் நாங்க எவ்வளவு வேணுமினாலும் தாங்குவோம்.

கலக்குங்க

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

மாப்ள அது என்ன ஒரு வேன்ல போகவேண்டிய கூட்டம் பைக்ல போது

Angel said...

First tweet is cho chweet. Chinese fishing netபடம் அழகா இருக்கு

செங்கோவி said...

பதிவர் சந்திப்புக்குப் போனதுல இருந்தே அண்ணன் ஒரு மாதிரி ஆயிட்டாரே..ஓவரா கும்மிட்டாங்களோ.

சுதா SJ said...

ஹி ஹி
இந்த மாதிரி துணுக்கெல்லாம் எங்குதான் தேடி புடிக்குறீன்களோ..
அசத்தல் பாஸ்

Muruganandan M.K. said...

நாமெல்லாம் திருந்த மாட்டோம் என்று நினைத்து இவ்வளவு அட்வைஸ்களா?
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள். நன்றி

Admin said...

viththiyaaasamaana kaamedi