Tuesday, July 26, 2011

ஆர்ட்ஸ் காலேஜா? ஹார்ட்ஸ் காலேஜா?அடங்கோ

House Between Rocks Is Reflected In Brittany, France
1.நம்ம காலேஜ்க்கு அழகான விளம்பர வாசகம் ஒண்ணு சொல்லு.. “

சிங்கிளா வாங்க ,டபுளா போங்க #ஆர்ட்ஸ் காலேஜா? ஹார்ட்ஸ் காலேஜா?அடங்கோ

-------------------------

2. GABRIEL BALOBIOUS - இவரை தெரியாதவங்களே இருக்க முடியாது, இருக்கக்கூடாது,

”அப்டி என்ன பெரிய கண்டத்தை கண்டுபிடிச்சாரு?

“ நோ நோ காண்டத்தை”

-----------------------

3. ஸ்பெயின் நாட்டில் துணியால் செய்தித்தாள்கள் வெளியிடப்படுகிறது #துணிவுள்ள செய்திகள் துணி யில் உள்ள செய்திகளா?

------------------

4. உலகின் மிகச்சிறந்த பலசாலி கூட  உலகின் மிகச்சிறந்த மகிழ்ச்சியான மனிதன் முன் பலவீனமாகவே கருதப்படுவான்


----------------

5. தவறுகள் நிகழும்போது வலி நிறைந்தவையாக இருக்கும், அதுவே( வலிகளின் தொகுப்பு ) எதிர்காலத்தில் அனுபவம் ஆகி விடும்

-------------------

Arizona dust storm


6. லைஃப் ஏன் மெக்கானிக்கல் லைஃபா ஆகிட்டு வருது?

தெரில ,ஒரு வேளை மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க் படிச்சதாலோ என்னவோ?

---------------------

7. எங்க குடும்பத்துல மொத்தம் 46 பேர் இருக்கோம்.

யோவ், கூட்டுக்குடும்பமா? அது கூட்ஸ் குடும்பமா?

-------------------

8. அத்தான்,நான் செத்துப்போய்ட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா?

ஆமான்னு சொன்னா நீ கோவிச்சுக்குவே,நோ சொன்னா உன் தங்கை கோவிச்சுக்குவா.

--------------

9. லவ் ஃபெயிலியர்ங்கறது ஒரு சிங்கிள் பேப்பர்,லைஃப்ங்கறது டைரி.சிங்கிள் பேப்பர் மிஸ் ஆகிடுச்சுன்னு ஏன் டைரியை வேஸ்ட் பண்ணனும்?

-----------------

10. ஒரு பெண்ணை வசீகரிக்க அவள் சொல்லும் மைல் கணக்கான ஆசைகளை நிறைவேற்றனும். ஒரு ஆணை பெண் வசீகரிக்க ஜஸ்ட் ஒரு ஸ்’மைல்’ போதும்

-------------------11..மார்க்கெட்ல மல்லிகைப்பூ வாங்கிட்டுப்போனா அவனுகு மேரேஜ் ஆகி 2 மாசத்துக்குள்ளேதான் இருக்கும்,கொத்துமல்லி வாங்கிட்டுப்போனா 2 வருஷம் இருக்கும்

----------------------------

12. ஸ்டாலினுக்கு தலைமைப் பதவி கிடையாது தி.மு.க., முடிவு#அழகிரி கனவோட காத்திருக்கப்போறாரு!யாருக்கும் கிடையாதுன்னு அடிச்சு விடுங்க தலைவரே

------------------

13. தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி#அப்போ தலைமைப்பொறுப்பை துறக்கப்போறீங்களா? தலைவரே?

-----------------

14. ஊழலுக்கு எதிராக பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது.-இ.கம்யூ., தேசிய செயலர் ராஜா #ஒரு ஆக்டிங்கையே உருப்படியா பண்ணத்தெரியாது அதுக்கு

-----------------------

15. திமுக,அதிமுக., எல்லாம் ஒரே கட்சி தான்; மது விற்கும் பணத்தில், இலவசங்களை வழங்கி வருகின்றனர்.-அன்புமணி #அப்போ ஏன் கூட்டணி வைக்கறீங்க ?

-------------------

16. கச்சத்தீவை மீட்க வேண்டும்-திமுக பொதுக்குழு தீர்மானம்#தலைவரே!முதல்ல கட்சியோட முக்கிய தலைகளை சிறையிலிருந்து மீட்கப்பாருங்க

-----------------------

17. ஏதாவது செய்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதை விட எதுவுமே செய்யாமல் நம்மை மகிழ்ச்சிப்படுத்துவது  காதலி மட்டுமே

------------------

18. அவள் பிறப்பிடம் வேறு, படிப்பிடம் வேறு, ஆனால் என்றும் அவள் இருப்பிடம் என் இதயம்

-------------------

19. ’திமுகவை வலுப்படுத்த 7 பேர் கொண்ட குழு-கலைஞர் #தலைவரே,கட்சி வலுவாத்தான் இருக்கு,தலைமைதான் வலு இல்லாம கிடக்கு

------------------

20. வாழ்வதற்குப்பொருள் இருக்க வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் இருக்க வேண்டும்

---------------------


http://4.bp.blogspot.com/_XNw2BMO6-7I/S35NVd6SQLI/AAAAAAAACjc/996S0h0yLZw/s400/Indian-Girls-Playing-Holi-Photos-19.jpg

21.வருடத்திற்கு 12 முறையாவது சேலை கேட்டு மனைவி  நச்சரிக்கிறாள்,ஒரு முறை நம் அம்மாவுக்கு வாங்கினால் போதும் போதும் என எச்சரிக்கிறாள்

--------------------

22. நம் பெற்றோருக்கு புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு இல்லை,நம் வாரிசுகளுக்கு வாய்ப்பு இருந்தும் படிக்க விருப்பம் இல்லை#அநாதையாக இலக்கியங்கள்

---------------------

23. பழைய சோறு+நீச்சத்தண்ணீர் கரைத்துக்கொடுத்த அம்மாவின் அன்புக்கு முன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சர்வர் காட்டும் போலியான பணிவு எடுபடவில்லை


---------------------
24. திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம்#காஜல் அகர்வாலே படத்துல ஐஸ்க்ரீம் மாதிரிதான்

------------------------------

25. சினிமாக்காரர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்! ஜெ., கண்டிப்பு!!#ஆமாங்க மேடம்,இந்த சினிமாக்காரங்களால தமிழ்நாட்டுக்கே அவப்பெயர் தான் ஹி ஹி 


------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlNWYo8jP_RbsYtozjKkLJHt8IydzfStoSf5DdHeArI3a8gob3BK9Yr1GjBPsIZQPKdSguA3nYPgmwDiMCGnqYuAxPMPtGt4CUJwKsymoP1p8D_ZpUTy71CuM8QvTiZQkCpiNzjFQnXnL8/s400/desi-indian-girls.jpg

26.  சினிமாவாகிறது பாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில்-செய்தி#டைட்டில் என்ன? போலீஸ்வாலா சுடிதார் லே ஜாயேங்கே வா?

---------------------

27. பாபா ராம்தேவ் வேடத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.அவர் தான் பொருத்தமாக தெரிகிறார்#ஆனா படத்துல ஜோடி இல்லைன்னு அவர் வருத்தமா தெரிகிறார்

----------------

28. உலகின் கவர்ச்சியான பெண் காத்ரீனா கைப்!-ஆன்லைனில் தேர்வானார்#கவர்ச்சியான ஆண் போட்டி வெச்சிருந்தா எங்க அண்ணன் ராம் தேவ் செலக்டாகி இருப்பாரு

-------------------------

29. பெண்ணின் பலம் எது? என எல்லா ஆண்களுக்கும் தெரியும்,ஆணின் பலஹீனம் எது என எல்லா பெண்களுக்கும் தெரியும்

---------------------

30 . கவர்ச்சி நடிகை சோனா 100 பேருக்கு உடை வழங்கி தன் பிறந்த நாளை கொண்டாடினார்#அங்கே கூட கவர்ச்சி காட்டிட்டே தான் கொண்டாடனுமா மேடம்?சகிக்கல

-------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXX94XqbCdbR69VoQraxhJDRJzguV5Jputv-QpvMFmVr1gxFz2BaqwcZRVtk_O4wlUfSxGtKamaBRkKt4Pe40OVzS5h12f0PGOngteEjTTo7F5PNA8LJA7LQVDfbGCCcnw4XslJDjZilq_/s1600/indian-girls-520x693.jpg

41 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஆஹா! Me First !!
9 உம் 11 உம் ரசித்தேன் !

உலக சினிமா ரசிகன் said...

வெள்ளை உடை தேவதைகள் சூப்பர்..

ஆகுலன் said...

வழமை போல..கலக்குங்க பாஸ்.....

ஆகுலன் said...

உலக சினிமா ரசிகன் said...
வெள்ளை உடை தேவதைகள் சூப்பர்.

ஆமா எங்க பாஸ் புடிச்சீங்க.....

Anonymous said...

29 குறிப்பா மனைவிகளுக்கு தெரியும்...

படங்கள் அருமை...சி பி குறள்களும்...அருமை....

rajamelaiyur said...

11 th one is very true

Unknown said...

16 வது,திடுக்கிட வைக்கும்,தடாலடி கிண்டல் ட்வீட்!!எல்லாமே ரசித்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...

பொண்ணுங்க படம் போடமாட்டேன்னு கால் சுண்டு விரல் பிடிச்சி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுட்டு ராஸ்கல் பொண்ணுங்க படம் மறுபடியும் போட்டு நாறி நாறி போறியே மூதேவி ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே ஹி ஹி.......

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பதிவுக்கு இதுவரை நான் மட்டும்தான் ஓட்டு போட்டுருக்கேன் ஹி ஹி....[[தமிழ்மணம்]]

சசிகுமார் said...

மனோ சார் என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்த்து கொள்ளுங்க நானும் ஓட்டு போட்டுட்டேன். ஆனா பதிவ படிச்சியான்னு மட்டும் கேட்க கூடாது ஹீ ஹீ

சக்தி கல்வி மையம் said...

PRESENT SIR.,

'பரிவை' சே.குமார் said...

கலக்குங்க...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அட்டகாசம்! பாஸ்... போட்டோஸ் எல்லாம் எப்டி கெடைக்குது ?

கூடல் பாலா said...

அடங்கோ .....

Unknown said...

நண்பர்கள் உண்மைகளா சொல்லிட்டு வாராங்க...அதாவது பதிவ படிக்கறது இல்லன்னு...ஏன்யா காப்பியத்தான் படிக்கறது இல்ல...பாவம் இந்தாளு சொந்தமா யோசிச்சி போடுற பதிவாவது படிங்கய்யா...சிபி உண்மைலேயே சூப்பரா இருக்குய்யா!

காட்டான் said...

உண்மைதான் விக்கி சிபி பாவமையா எவ்வளவு கஸ்ரப்பட்டு சொந்தமா  எழுதிபோட்டு.. மாப்பிள கருத்த கொஞ்சம் கவனமா பார்த்து போடுங்கன்னுறார்... அப்பிடி சொல்கிறவர் இதிலே கருத்த குத்துங்கையா.... குத்தென்னு சொல்லியிருக்கோனும் ...  காட்டான் குத்துவதற்குத்தானே கொக்குத்தடிய வைச்சிருக்கான்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல்...

தொடர்ந்து இது போன்ற நவரசஙகளை தாருங்கள்..

பருக நான் ரெடி...

Yoga.s.FR said...

நல்லாருக்கு!!!என்னவா?பிகருங்க தான்!கமெண்டை யார் பாப்பா?????????

Yoga.s.FR said...

ஆகுலன் said...
உலக சினிமா ரசிகன் said...
வெள்ளை உடை தேவதைகள் சூப்பர்.
ஆமா எங்க பாஸ் புடிச்சீங்க...////ஆங்?தம்பி இது சரியில்ல!பெரியவங்க கிட்ட இப்படியெல்லாம் கேட்கக் கூடாது!

Yoga.s.FR said...

சசிகுமார் said...

மனோ சார் என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்த்து கொள்ளுங்க நானும் ஓட்டு போட்டுட்டேன். ஆனா பதிவ படிச்சியான்னு மட்டும் கேட்க கூடாது ஹீ!ஹீ!!///"முழுசா" பாத்துட்டீங்க இல்ல?அது போதும்!

தனிமரம் said...

கலக்கல் பதிவு அதுவும் நம் முன்னோருக்கு வாசிக்க வாய்ப்பூ இல்லை இப்போது நம்பிள்ளைகளுக்கு வாசிக்க ஆர்வம் இல்லை சரியான கணிப்பு!

VELU.G said...

எல்லாம் நல்லாத்தான் இருக்குது

அந்த பிகருங்க போட்டோ எங்க எடுத்தது

Anonymous said...

நகைச்சுவை உணர்வு உங்களுக்கு அருவியாய் கொட்டுது பாஸ் ,,,

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு...

Geetha6 said...

சும்மா அதிருது இல்லே !

உணவு உலகம் said...

டுவிட்ஸ் எல்லாம் யோசிச்சுதான் போடுறீங்க, ஆன அந்த பொம்பளைங்க படம் மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காம போடறீங்களே!

உணவு உலகம் said...

டுவிட்ஸ் எல்லாம் யோசிச்சுதான் போடுறீங்க, ஆன அந்த பொம்பளைங்க படம் மட்டும் கொஞ்சம் கூட யோசிக்காம போடறீங்களே!

Unknown said...

பாகிஸ்தான் பியூட்டீஸ் எல்லாம் படத்துல போட்டுருக்கீங்க.ம்.. ம்.. கலக்குங்க...

Shiva sky said...

என்ன.. bro காலெஜ் பொண்னுங்க புகைப்படம் இனி போடமாட்டிங்கனு சொல்லிட்டு.....இன்னைக்கு...இப்படி?

Lali said...

//மார்க்கெட்ல மல்லிகை பூ வாங்கிட்டு போன அவனுக்கு மேரேஜ் ஆகி ரெண்டு மாசம் இருக்கும், அதுவே கொத்தமல்லி வாங்கிட்டு போனா மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் ஆகி இருக்கும் // தாங்க முடியல உங்க சர்வே :) தினமும் கொத்தமல்லி வாங்கிட்டு போறீங்களா வீட்டுக்கு?!!!
http://karadipommai.blogspot.com/

உணவு உலகம் said...

////மார்க்கெட்ல மல்லிகை பூ வாங்கிட்டு போன அவனுக்கு மேரேஜ் ஆகி ரெண்டு மாசம் இருக்கும், அதுவே கொத்தமல்லி வாங்கிட்டு போனா மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் ஆகி இருக்கும் //
இருபது வருஷம் ஆனதினாலதான், நீங்க கொடமிளகா வாங்கிட்டு போறீகளோ!

நெல்லி. மூர்த்தி said...

எனக்கென்னமோ 21ம் நம்பரை மட்டும் சொன்னா எங்க சிக்கலாகிவிடுமோன்னு கலவையா நகைச்சுவைகளுக்கு நடுவில அந்த சங்கதிய புதைச்சு வச்ச மாதிரி தோணுது. ஹி..ஹி..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Menaga Sathia said...

எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு,புகைப்படமும் அழகா இருக்கு..

ராஜி said...

ட்வீட்டுலாம் அருமை. 1,9,11, 20, 23,29 அருமை

நிரூபன் said...

நம்ம காலேஜ்க்கு அழகான விளம்பர வாசகம் ஒண்ணு சொல்லு.. “

சிங்கிளா வாங்க ,டபுளா போங்க #ஆர்ட்ஸ் காலேஜா? ஹார்ட்ஸ் காலேஜா?அடங்கோ//

எம்மையெல்லாம் மீண்டும் காலேஜ் வாழ்விற்கு அழைத்துச் செல்லும் தெய்வமே, நீங்கள் வாழ்க!

நிரூபன் said...

திமுக,அதிமுக., எல்லாம் ஒரே கட்சி தான்; மது விற்கும் பணத்தில், இலவசங்களை வழங்கி வருகின்றனர்.-அன்புமணி #அப்போ ஏன் கூட்டணி வைக்கறீங்க ?//

ஆட்டோ வந்திடும் பாஸ், ஜாக்கிரதை,

நிரூபன் said...

கச்சத்தீவை மீட்க வேண்டும்-திமுக பொதுக்குழு தீர்மானம்#தலைவரே!முதல்ல கட்சியோட முக்கிய தலைகளை சிறையிலிருந்து மீட்கப்பாருங்க//

டைம்மிங் ஜோக் செம சூப்பர்,

நிரூபன் said...

சினிமாக்காரர்களால் ஆட்சிக்கு அவப்பெயர்! ஜெ., கண்டிப்பு!!#ஆமாங்க மேடம்,இந்த சினிமாக்காரங்களால தமிழ்நாட்டுக்கே அவப்பெயர் தான் ஹி ஹி//

அடடா, ஜெயலலிதா தன் ப்ளாஷ் பேக்கை மறந்து சொல்லிட்டா போலிருக்கே.

நிரூபன் said...

அரசியல், காதல், நையாண்டி எனப் பல டுவிட்ஸ்களை அள்ளி வழங்கியிருக்கிறீங்க. எல்லாமே வழமை போல கலக்கல்.

இன்னும் கொஞ்சம் வெரைட்டி காட்டலாம், என ஒரு வேண்டுகோளினை முன் வைக்கின்றேன்,
அதாவது, சிறிய சிறிய உரையாடல் நகைச்சுவைகள் இரண்டு அல்லது மூன்றினைத் தந்து விட்டு, அதன் கீழே டுவிட்ஸ்களைத் தந்தால் சலிப்பின்றித் தொடர்ந்தும் வித்தியாசமான படைப்பினை ரசிக்கக் கூடிய மாதிரி இருக்கும் பாஸ்.