Tuesday, July 19, 2011

சென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம் (பெண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவு) 
ஜாக்கிரதை உணர்வு என்பதற்கும் ,உள்ளுணர்வு என்பதற்கும் பெண்ணைப்போல மறு பெயர் வேறு இல்லை.. ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாகவே உள்ளுணர்வு ஜாஸ்தி.. ஒருவனைப்பார்க்கும்போதே, அல்லது பழகிய கொஞ்ச நாளிலேயே அவனைப்பற்றி எடை போட்டு விடுவாள். ஆனால் 5 வருடங்கள் பழகியும்  தன் கணவனின் நண்பனே எதிரியாகப்போன ஒரு பெண் பதிவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது..

சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் டீம் லீடராகப்பணி ஆற்றும் அந்தப்பெண் பதிவர் பெயர் மாளவிகா ( உண்மைப்பெயர் அல்ல,மாற்றப்பட்டுள்ளது).வளசரவாக்கத்தில் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார்.. சொந்த வீடுதான். அவர் வீட்டுக்கு அருகில் முபாரக் என்பவனும் குடி இருக்கிறான்.மாளவிகாவின் கணவனின் நண்பன் அவன் என்பதால் 5 வருடங்களாக சாதாரணமாக,சிநேகமாகப்பழகி இருக்கிறார். மாளவிகாவின் கணவன் பெயர் சாந்தனு

முபாரக் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்பவன்.வசதி படைத்தவன்.மாளவிகா லேட்டாக ஆஃபீஸ் கிளம்பும்போது, ஷாப்பிங் போகும்போது தனது பைக்கில் மாளவிகாவை டிராப் செய்வான். சகஜமாக பழகி வருவான்.

மாளவிகா இப்போது 2 மாத கர்ப்பம்.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு .பையன் வயது 8.இப்போது கர்ப்பமாக இருக்கும் மாளவிகாவைப்பார்க்க அவரது பள்ளித்தோழி அறிவுமதி திருத்தணியிலிருந்து வருகிறார்,சம்பவம் நடந்த அன்று தேதி 27.5.2011


அறிவுமதி வந்ததும் அவரை வரவேற்ற மாளவிகா கொஞ்ச நேரம் பேசி விட்டு குளிக்க செல்கிறார்.மாளவிகாவின் கணவர் ஊரில் இல்லை. அவர் ஆஃபீஸ் விஷயமாக 3 நாள் டூர் சென்றுள்ளார்.அறிவு மதி சமையல்கட்டில் போய் டீ போடுகிறார்.

அப்போது காலிங்க் பெல் அடிக்கிறது. கதவைத்திறந்தால் முபாரக்.அறிவுமதி முபாரக்கிடம் நீங்க யாரு? என கேட்க அவன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான்.அவன் பெயரை சொன்னதும் ஏற்கனவே அவனைப்பற்றி நல்ல விதமாக தோழி கூறி இருந்தபடியால் அவனை உள்ளே வரச்சொல்லி  சோபாவில் அமரச்சொல்லி இருக்கிறார் அறிவு மதி.

அவனுக்கும் டீ போட சமையல்கட்டுக்குள் போனார். அவன் பின்னாலேயே சமையல்கட்டுக்கு வந்து அவருடன் பேச்சுக்குடுத்திருக்கிறான்..

நீங்க எந்த ஊரு?என்ன பண்றீங்க? இப்படி ..

டீயைக்கொடுத்து விட்டு அறிவுமதி சமையல் வேலையை பார்க்கிறாள்.முபாரக்கின் பார்வை சரி இல்லை என்பதையும் அவன் டபுள் மீனிங்கில் பேசுகிறான் என்பதையும் சட் என அறிவுமதி உணர்கிறார்.


சாம்ப்பிள்ஸ் ஆஃப் ஹிஸ் ஜொள் டயலாக்ஸ்


நீங்க போட்டுகுடுத்த டீ பிரமாதம். உங்க கையால விருந்து கிடச்சா இன்னும் நல்லாருக்கும், இதுக்காகவே உங்க ஊருக்கு வரனும் போல இருக்கு. உங்க கையால சமையல் சாப்பிட கொடுத்து வெச்சிருக்கனும். .


இதற்குள் குளிக்கப்போன மாளவிகா வெளியே வருகிறார்.. தீம் பார்க் டிக்கெட்ஸ்ஸை ரிசர்வ்டு செய்ததை முபாரக் இருவரின் டிக்கெட்ஸையும் தந்து விட்டு வெளியேறுகிறான்.

இப்போது அறிவுமதியின் மனதில் போராட்டம்.முபாரக் பற்றி தோழியிடம் சொல்லலாமா? வேணாமா? என .. 5 வருட நட்பை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என எதுவும் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

இப்போது இருவரும் தீம்ஸ்பார்க் போறாங்க. காலையிலிருந்து மதியம் வரை பல விளையாட்டுக்கள் விளையாடறாங்க.முபாரக்கும் அங்கே வர்றான். 

தண்ணீர் விளையாட்டுக்கள் விளையாடப்போறாங்க.. கடல் அலை வருமே அந்த விளையாட்டு. இங்கே அறிவுமதி மற்றும் மாளவிகாவின் கல்லூரித்தோழர்கள்  கண்ணன் மற்றும் அவர் மனைவி, வீணா மற்றும் அவர் கணவர் என  4 பேர். 

மாளவிகா தண்ணீரில் நீச்சல் அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.அறிவுமதிக்கு நீச்சல் தெரியாது. அந்த மேட்டர் கண்ணன் மனைவிக்கு தெரியாது. அவர் விளையாட்டாக அறிவுமதியை தண்ணீரில் பிடித்து இழுத்திருக்கிறார் .அறிவுமதி தடுமாறி தண்ணீரில் விழுந்திருக்கிறார்.


காலையிலிருந்து  இது போன்ற ஒரு சந்தர்ப்பத்துக்குக்காத்திருந்த முபாரக் அறிவிமதியை காப்பாற்றும் போர்வையில் தொடக்கூடாத இடங்களில் தொட்டுத்தூக்கி இருக்கிறார்..அறிவுமதியின் முகமாற்றத்தைக்கண்ட கண்ணன் முபாரக்கை ஒரு முறை முறைத்து அவர் பிடியில் இருந்து அறிவுமதியை விடுவித்து காப்பாற்றி கரையில் அனுப்பி விட்டார்..

இந்த சம்பவம் எதுவும் மாளவிகாவுக்கு தெரியாது..வீடு திரும்பியதும் அறிவுமதி மூடு அவுட்டாக இருப்பதைப்பார்த்து மாளவிகா காரணம் கேட்டிருக்கிறார்.

பல முறை வற்புறுத்தலுக்குப்பிறகு அறிவுமதி காலையில் இருந்து நடந்த முபாரக்கின் டபுள் மினிங்க் பேச்சு ,பேடு டச் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்.அதிர்ச்சி அடைந்த மாளவிகா “சரி என் கணவர் வந்ததும் இது பற்றி பேசுகிறேன் “ என அறிவு மதியை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அடுத்த நாள் காலை அறிவுமதி தன் ஊருக்கு கிளம்பி விட்டார்.

1.6.2011 அன்று மாளவிகாவின் கணவர் டூர் முடிந்து ஊருக்கு வர்றார். அவரிடம் மேட்டரை சொல்றார் மாளவிகா.சாந்தனுக்கு செம கோபம். முபாரக்கை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் வாங்கி இருக்கிறார்.. 

முபாரக் தான் மாட்டி விடக்கூடாது என்பதற்காக பழியை அறிவுமதி மீது திருப்புகிறான். என் மேல எல்லாம் எந்த தப்பும் இல்ல. அவங்க தான் வேணும்னே என்னை உரசுனாங்க.. அதை கண்ணன் பார்த்துட்டதால பழியை என் மேல போடறாங்க. உன் மனைவி மட்டும் என்ன? எனக்காக பல முறை சிக்னல் கொடுத்தவ தானே?பைக்ல போறப்ப வேணும்னே என் மேல் பட்டவ தானே? என்னை குறை சொல்றே? என்று அபாண்டமாய் குற்றம் சாட்டி இருக்கிறான்.

சாந்தனு< “பைக்ல சீதையே டபுள்ஸ் வந்தாலும் மேலே படத்தான் செய்யும். கணவனின் நண்பன் என்பதற்காக உன்னிடம் சகஜமாக பழகியவளை குறை சொல்லாதே. இனி என் வீட்டுக்கு வராதே. நம்ம ஃபிரண்ட்ஷிப் இதோடு கட் என்று கூறி அவனை துரத்தி விட்டார்..

இந்த சம்பவம் முடிந்த பின் சாந்தனு அவர் ஆஃபீசுக்கு போய் விட்டார், மாளவிகா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். 

காலிங்க் பெல் அடிக்கிறது. திறந்தால் முபாரக்.

- தொடரும்

டிஸ்கி - 1 வழக்கமாக என் பதிவுகளில் காமெடி கும்மி அடிக்கும் நண்பர்கள் இதில் அடக்கி வாசிக்கவும். இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட இரண்டு பெண்களின் மனம் புண்படாதபடி கவனமாக உங்கள் கமெண்ட்ஸை போடவும்..இந்தப்பதிவின் தொடர்ச்சி நாளை மதியம் 12 மணிக்கு வரும்

டிஸ்கி 2 - இந்தப்பதிவின் நோக்கம் ஆண்கள் சகஜமாகப்பழகினாலும்,பெண்கள் எப்போதும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே..எனவே அந்த பதிவர் யார்? அவர் செல் ஃபோன் நெம்பர் என்ன? என யாரும் கேட்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் .

டிஸ்கி - 3 சக பதிவர் ராஜியின் மகளுக்கு இன்று பிறந்த நாள் ,நேரம் இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிக்க இங்கே செல்லவும் http://rajiyinkanavugal.blogspot.com/2011/07/blog-post.html

57 comments:

ம.தி.சுதா said...

சுடு சோறு கிடைக்குமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

ம.தி.சுதா said...

தொடருமாவா பொறுங்க பொறுங்க இருக்கு..

ராஜி said...

Thanks for sharing.

M.R said...

முழுதும் படித்து விட்டு விமர்சனம் செய்கிறேன் நண்பரே .

சுவரசியத்திர்காக இல்லை .என்ன நடந்தது என்று முழுதும் தெரிந்து கொண்டு கருத்து சொல்ல

முத்தரசு said...

படங்கள் சூப்பர்

Mohamed Faaique said...

ஆண்களில் ராமன் கிடையாது. பூனையில் சைவம் கிடையாது.

நல்லவன் என்பவன் இதுவரை கெட்டுப் போக சந்தர்ப்பம் கிடைக்காதவன். கெட்டவன் என்பவன் கெட்டுப் போக சந்த்தர்ப்பம் கிடைத்தவன்.

RAMA RAVI (RAMVI) said...

மனதில் சங்கடத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறேன்..

முத்தரசு said...

இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்குது சமூகத்தில், என்ன செய்ய?

Anonymous said...

((

ஆமினா said...

என்னத்த சொல்ல? பாவம் தான். இப்படிபட்ட ஆண்கள் இருக்குறதுனால தான் ஆண்பெண் நட்பை கொச்சை படுத்தி பேசப்படுகிறது :(

settaikkaran said...

தல, தலைவணங்குகிறேன்.

என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், மனசு கஷ்டப்படுகிறது.

காட்டான் said...

 ஐயா நான் காட்டான் வந்திருக்கேன்யா.. இதில வேற நீங்க கருத்த பார்த்து போடுன்னுறீங்க சரி ஐயா காட்டான் உங்களுக்கு குழ வைச்சிட்டான்யா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேதனையான விஷயம். சரியான நேரத்தில் முக்கியமான விழிப்புணர்வு விஷயத்தை தொடங்கியதற்கு பாராட்டுக்கள்!

Unknown said...

पगिर्वुक्कू नांदरी பகிர்வுக்கு நன்றி!

கடம்பவன குயில் said...

மனசுக்கே கஷ்டமாக இருக்கிறது. என்ன சொல்றதென்றே தெரியவில்லை. பெண்கள் எப்பவுமே அந்நிய ஆடவர்கள் விஷயத்தில் அது யாராக இருந்தாலும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

அம்பாளடியாள் said...

மனதிற்கு வேதனையான சம்பவம். இதன் முடிவில் இந்த சம்பவமே ஒரு கற்பனைப் பதிவாக இருக்கக்கூடாத என்று மனதில் சஞ்சலம் எழுகிறது சகோதரரே.மீண்டும்
நாளை சந்திப்போம்!...........

Shiva sky said...

உண்மைலேயே ரொம்ப திகிலா இருக்கு..ங்க்னா..

சசிகுமார் said...

என்ன சொல்வது என தெரியல நம்மள நாமே செருப்பால அடிசிக்கிற மாதிரி இருக்கு

கவி அழகன் said...

r u serious

வைகை said...

ஒரே நாளில் அந்த பெண்ணால் தெரிந்துகொண்ட விஷயத்தை இவ்வளவு நாள் பழகியும் ஏன் இந்த பெண்ணால் புரிந்துகொள்ள முடியவில்லை? எனிவே.. அடுத்த பாகம் வரட்டும் கருத்து சொல்லலாம்! முதலில் தைரியமாக சொன்னதுக்கு பாராட்டுக்கள்!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

சசியின் கருத்தை வழிமொழிகிறேன்.

முத்தான மூன்று
( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சி.பி.செந்தில்குமார் said...

@வைகை

நய வஞ்சகர்கள் தங்கள் முக மூடியை எல்லோரிடமும் திறந்து காட்டுவதில்லை..நண்பரின் மனைவி என்பதால் அடக்கி வாசித்து இருக்கிறான் முபாரக்

செங்கோவி said...

நம்ம பயபுள்ளைகளை நினைச்சு பயந்து கொண்டே படித்தேன். நல்லவேளை டிஸ்கியில் கடிவாளம் போட்டீர்கள்.

இதே மாதிரி ‘சென்னிமலைப் பதிவரின் அட்டகாசம்-விழிப்புணர்வுப் பதிவு’ போடுங்கண்ணே.

erodethangadurai said...
This comment has been removed by the author.
erodethangadurai said...

சி பி யிடம் இப்படி ஒரு பதிவா ? இருந்தாலும் முக்கியமான & தேவையான பதிவுதான் . திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் சரி.

உலக சினிமா ரசிகன் said...

சிபி...மிக அழகாக தேர்ந்த எழுத்தாளராக இச்சம்பவத்தை வெளியிட்டுள்ளீர்கள்.
மனிதன் எப்போது....யாரிடம்...மிருகமாக மாறுகிறான் என்பதை அளவிடவே முடியாது.
பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான்.
என் மகள் மூலமாக எனக்கு தெரியவரும் ஆண்களின் அக்கிரமங்கள்...அப்பப்பா...
ஒரு தந்தையாக என்னால் அவளுக்குத்தான் அறிவுரை சொல்லி கவுண்சிலிங் செய்து அவளது மன அழுத்தத்தை போக்க முடிகிறது.

ரேவா said...

ஜாக்கிரதை உணர்வு என்பதற்கும் ,உள்ளுணர்வு என்பதற்கும் பெண்ணைப்போல மறு பெயர் வேறு இல்லை.. ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாகவே உள்ளுணர்வு ஜாஸ்தி..

இதெல்லாம் உண்மை தான் சகோ..இப்படிப் பட்ட ஆண்களின் வக்கிரத்துக்கு ஆளாகி மனதளவில் பதிக்கப்பட்ட எத்தனையோ தோழியரை நானும் அறிவேன்....என்ன செய்ய? ஆனாலும் இரட்டை வேஷம் போடும் சில ஆண்கள் மத்தியில் எல்லாமே பொய்த்து போகிவிடும்...சிலர் நட்பாய் வந்து, நம் நம்பிக்கைக்கு உரியவர்களாய் நம்மில் நடித்து, இரட்டை வேடம் போடும் வேடதாரிகள் இங்கே அதிகம்...இந்த முபாரக்கும் அப்படியே...தோழி மாளவிகா, அவனை நண்பனாய் பாவித்ததால், அவனது செயல்கள் அவருக்கு சந்தேகம் தர இடம் அளிக்கவில்லை...ஆனால் அறிவுமதிக்கு, அவரது இரட்டை வேஷம், அவன் பேசும் பேச்சிலே புரிந்து போயிருக்கிறது... பொதுவாக தான் தப்பிக்க,தான் வேஷம் கலையாமல் இருக்க, பெண் மீது பலி போடும் பலரில் இவனும் ஒருவன்...பொதுவாய் ஆணாயினும் பெண்ணாயினும், ஒரு வரையறைக்குள் நட்பு இருந்தால், அனைவருக்கும் நலமே.....இது இப்போதுள்ள சமூகத்தில் பொதுவாய் நடக்கின்ற விடயமே... அனைவரும் நிகர் என்ற பார்வை, இங்கு பலருக்கு சாதகமே, பல விசயங்களில்..சகோ உங்க எழுத்தை ரசிக்க இங்கே பலர் இருக்கின்றார்கள், சோ நீங்க இந்த மாதிரி பதிவுகள் இடையிடையே அதிகம் எழுதனும்னு நான் எதிர்பார்க்கிறேன்...because ஒரு பெண்ணாய் இந்த மாதிரி ஆணை நான் சாடுவதை காட்டிலும், தன் இனம் பற்றி ஒரு ஆணே எழுதுவது ஏற்றுக்கொள்ளும் படியாய் இருக்கும்...மற்றபடி பெண்ணான நாங்கள் வாழ்வில், சில ஆண் மூலம் அனுபவிக்கும் விசயங்களை இந்த சம்பவம் தாங்கி நிற்கிறது...வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல,,, இந்த பின்னோட்டம் சிறிதேனும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...

Menaga Sathia said...

ஒன்னும் சொல்றதுகில்லை.....2 வது பதிவை படித்து கருத்து சொல்றேன்...

M.G.ரவிக்குமார்™..., said...

சாருவுக்கு சொம்பு தூக்குற மாதிரி முபாரக்குக்கும் சொம்பு தூக்க ஒருத்தன் வருவான் பாருங்களேன்!..அடுத்த பாகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்!

Pandian R said...

@வைகை

*claps*

உணவு உலகம் said...

ஹாட்ஸ் ஆஃப் டூ சிபி.தங்களின் பகிர்வு பலரைச் சறுக்கல்களிலிருந்து காப்பாற்றும்.

உணவு உலகம் said...

இரண்டாவது ஷொட்டு- தமிழ்மண நட்சத்திரப் பதிவருக்கு.

உணவு உலகம் said...

மூன்றாவது குட்டு: இன்று ரயிலில் வந்த அருவா மனோவைப் பார்க்காமல் கோட்டை விட்டதற்கு!

சக்தி கல்வி மையம் said...

புது டெம்ப்ளேட்,
புது பதிவு..
கலக்கற மாப்ள..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:(

Unknown said...

பாக்குற எல்லா பொண்ணுகளையும் பொண்டாட்டி மாதிரி (எங்கப்பா வேற மாதிரி கெட்ட வார்த்தையில சொல்லுவாரு) நெனச்சு பழகுறது சில ஆம்பளைங்க புத்தி. பார்த்த எடத்துலயே அதை வெட்டிறணும் ன்னு எங்கப்பா சொல்லுவாரு.

ராஜி said...

நான் சொல்ல வந்த கருத்துக்களையே தோழி ரேவா அவர்கள் சொல்லிவிட்டார்கள். ஆகவே அவர்கள் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

ராஜி said...

என் மகளின் பிறந்த நாளுக்கு பதிவின் லிங்க் கொடுத்ததற்கு நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தன் கண்ணை தானே குத்திக் கொள்வது போன்ற முதல் படம் பதிவுக்கு மிகப் பொருத்தம்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

good avareness post. thanks for sharing. and waiting for next part

Unknown said...

என்ன கொடுமை சார் இது???பலர் இப்பிடி இருக்காங்க...அவங்க திருந்த போறதில்லை..பெண்கள் தான் கவனமாய் இருக்கணும்!

ஆகுலன் said...

ஏதோ திகில் கதை வசிக்கிற பீலிங்... நடத்துங்க...

கூகிளுக்கு ஏன் இந்த வேலை???????????

Anonymous said...

விழிப்புணர்வு பகிர்வுக்கு பாராட்டுக்கள்...முழுதும் படித்து விட்டு விமர்சனம் செய்கிறேன்..சி பி...

Angel said...

வேதனையான சம்பவம் .அடுத்த பகுதியையும் படிச்சிட்டு எனது கருத்தை தெரிவிக்கிறேன் .

KANA VARO said...

இப்பிடியா கொண்டு போய் நிப்பாட்டுறது. அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

Anonymous said...

துள்ளியோட விரும்பும்
மானினமே... உன்னை
துவள வைக்கிறதோ
இந்த ஆணினமே?!

ILA (a) இளா said...

நல்ல ஆரம்பம். இதைப் போல பதிவு போடுங்களேன்..

movithan said...

நெகிழ்வான பதிவின் ஊடே வாசகனை அழைத்துச் செல்லும் பாங்கு அருமை.

சரியில்ல....... said...

ஒண்ணும் புரியல...

தனிமரம் said...

இப்படியான காமப்பிசாசுகள் பலர் அங்காங்கு உண்டு!

சாகம்பரி said...

முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்பது , முடியாவிட்டால் பழி போடுவது - இது சிந்துபாத் கதைபோல என்றும் தொடரும் சாகஸம்?. இன்றைய நடிப்பே மயமான சூழலில் முகத்தை பார்த்து படிக்கும் உள்ளுணர்வுகள் பயன்படுவதில்லை..

மாய உலகம் said...

ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் பழகுவதில் உண்மையும், மென்மையும் இருத்தல் வேண்டும்... எந்த சந்தர்பத்திலும் வக்கிரத்தை உள்ளே அனுமதிக்ககூடாது...... அதற்கான சந்தர்பத்தையும் கொடுத்துவிடக்கூடாது...

தனி காட்டு ராஜா said...

திருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் - சிறுகதை

சேக்காளி said...

MG ரவிகுமார் said
,"சாருவுக்கு சொம்பு தூக்குற மாதிரி முபாரக்குக்கும் சொம்பு தூக்க ஒருத்தன் வருவான் பாருங்களேன்"
வந்துட்டோம்ல.வந்து பாருங்க
http://sekkaali.blogspot.com/2011/07/blog-post_20.html

நிரூபன் said...

பெண்களின் தன்னம்பிக்கை பற்றிய ஒரு பார்வையினையும், ஆணின் இன்னோர் முகத்தினை- அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடமாக்க அமையும் வண்ணம் உண்மைச் சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறீங்க.
கதையின் நகர்வு, திருப்பு முனையுடன் கதையினை நகர்த்திச் செல்லுதல்,
கதை சொல்லும் பாங்கு என்பன இக் கிரைம் ஸ்டோரிக்கு பலம் சேர்க்கின்றது.

Menaga said...

It's 200% correct. Most of the men waiting for the chance. that's all