Sunday, July 24, 2011

ஃபேஸ் புக்கில் ஃபோர்ஜெரி செய்து மிரட்டப்பட்ட மதுரைப்பெண் பதிவர் -உண்மை சம்பவம்

snowstorm-china-yamashita_25988_600x450

ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இயங்கிகொண்டேதான் இருப்பார்கள்.ஆண் பெண்னை ஏமாற்றுவதும்,பெண் ஆணை ஏமாற்றுவதும் இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.மொத்தத்தில் மனிதம் செத்துக்கொண்டு இருக்கிறது.. 

எனது முன் தினப்பதிவுகளில் சென்னைப்பதிவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றி பதிவு போட்ட பிறகு பலர் தனி மெயிலில், ஃபோனில் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை பகிர்ந்தார்கள்.. அவற்றில் என் மனதை மிகவும் பாதித்த சம்பவங்களை உங்களுடன் வருத்தத்தோடும், கண்ணீரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

அவன் பெயர் பரத், இருப்பது மதுரை.ஒவ்வொரு மனிதனும் வாழ்வின் இறுதியில் சந்திக்கும் இடத்தின் பெயர் கொண்ட பிளாக் ,அதை நடத்தி வருவது சுந்தரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

இவர் தனது பிளாக்கில் கதை ,கவிதை,ஜோக்ஸ்,கட்டுரை என கலந்து கட்டி பதிவுகள் போடுவார்.. தனது ஃபோட்டோவை பப்ளிக்காக புரோஃபைல்லில் போட்டிருக்கிறார். ஃபேஸ் புக்கிலும் தன் ஃபோட்டோ,மெயில் ஐ டி எல்லாம் ஓப்பனாக பகிர்ந்திருக்கிறார்.

பரத் இவரது பிளாக்கில் ஆரம்பத்தில் எல்லா பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு சாதாரண வாசகனாக  அறிமுகம் ஆகி இருக்கிறான்.. 

சுந்தரி திருமணம் ஆனவர், வயது 34 . பரத் திருமணம் ஆகாதவன், வயது 29. படைப்புகளை பற்றி பாராட்டி ஆரம்பத்தில் தனி மெயிலில் பகிர்ந்திருக்கிறான்.

பாராட்டுக்கு மயங்காத படைப்பாளியும், ஊதிய உயர்வு கேட்காத உழைப்பாளியும் உலகில் இல்லை என்ற தத்துவத்திற்கு  ஏற்ப சுந்தரி நல்ல ஒரு தோழியாக பழகி இருக்கிறார். பரத் ஆரம்பத்தில் அக்கா என்றே அழைத்து வந்திருக்கிறான்.. 

பரஸ்பரம் இருவரும் செல் ஃபோன் நெம்பர், ஃபோட்டோக்கள் பகிர்ந்திருக்கிறார்கள்.4 மாதங்கள் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சாதாரணமாக இவர்கள் நட்பு வளர்ந்திருக்கிறது.. 


Highway Throgh Qidam Basin In Western China


4வது மாத முடிவில் “ அக்கா, உங்களை நேரில் சந்திக்க ஆசையாக இருக்கு, எங்கே ,எப்போ பார்க்கலாம்? என கேட்டிருக்கிறான்.

சுந்தரி தனது வீட்டு அட்ரஸ் கொடுத்து குறிப்பிட்ட தேதியில் மாலை 6 மணிக்கு வரச்சொல்லி இருக்கிறார். தனது கணவரிடமும் இப்படி ஒரு நண்பர் இருப்பதாகவும் வரப்போவதாகவும் சொல்லி விட்டார்.

இங்கே தான் பரத் தன் குயுக்தி மூளையை  பயன் படுத்தி இருக்கிறான்.சுந்தரி சொன்ன அட்ரஸ்க்கு காலையில் 9 மணிக்கே போய்ட்டான்.. வீட்டுக்கு போகாமல் தெருவோரம் நின்று வேவு பார்த்திருக்கிறான்.சுந்தரியின் கணவர் 9.30 க்கு வீட்டை விட்டு ஆஃபீஸ் கிளம்பியதை பார்த்து விட்டு எதேச்சையாகப்போவது போல் 10 மணிக்கு வீட்டுக்கு போய் இருக்கிறான்.. 

ஏன் இவன் மாலையில் வராமல் காலையில் வந்தான்? என்ற சந்தேகக்கேள்வி மனதில் தொக்கி நின்றாலும் சுந்தரி அவனை வரவேற்று ஹாலில் உட்கார வைத்தார். கிச்சன் ரூமில் போய் காபி போட்டு வருவதற்கு அவர் உள்ளே போனதும் பரத் பட பட என்று ஹால், பெட்ரூம், கிச்சன் ரூம் என ஃபோட்டோக்களாக எடுத்து தள்ளி விட்டான்.(இந்த மேட்டர் பின் போலீஸ் விசாரணையில் அவனே ஒப்புக்கொண்டு சொன்ன வாக்குமூலம்)

cormorant-palette_25982_600x450

சுந்தரி கிச்சனில் காபி போடுவதை பேக்கில்  (BACK)இருந்து அவருக்கே தெரியாமல் ஃபோட்டோ எடுத்துக்கொண்டான் பரத்.பின் ஏதும் தெரியாதவன் போல் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்.சுந்தரி ஹாலுக்கு வந்து காபி குடுத்ததும் காபி குடித்துக்கொண்டே 30 நிமிடம் பேசி இருக்கிறார்கள். பின் பாத்ரூம் போகனும் என்று அவரிடம் சொல்லி  பாத்ரூம் போய் அங்கேயும் சில ஸ்நேப்ஸ் எடுத்துக்கொண்டான் பரத். பின் சுந்தரியிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டான்.. வேறு எந்த தவறான முயற்சியோ, மோசமான பார்வையோ  காட்டாமல் நல்லவனாகவே நடந்து கொண்டான்.... 

பிறகு 10 நாட்கள் கழித்து பரத் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான்..

அக்கா என அழைப்பதை கட் பண்ணி பெயர் சொல்லி அழைத்திருக்கிறான்.. அவரது உடல் அழகை ஆபாசமாக வர்ணித்து மெயிலில் கடிதம் அனுப்பி இருக்கிறான்.. 

டேய். என்னடா இது? நல்லாதானே இருந்தே? உனக்கு என்னாச்சு? நான் கல்யாணம் ஆனவ, உன்னை விட 5 வயது  சீனியர், உனக்கு அக்கா முறை.. ஆகுது. இனியும் இது போல் பேசுவதாக இருந்தால் நம் ஃபிரண்ட்ஷிப் கட் பண்ணிக்கலாம்”

என்று வார்னிங்க் பண்ணி இருக்கிறார் சுந்தரி.. 

ஆனால் அவன் அதை சட்டை செய்யவில்லை.. தொடர்ந்து பாலியல் ரீதியில் மெயில் அனுப்பி இருக்கிறான்.. (ஒன் சைடு மட்டும்.. சுந்தரி நோ ரிப்ளை)

பொறுத்துப்பொறுத்துப்பார்த்த சுந்தரி தன் மெயிலை மெயில் ஐ டி யை மாற்றி விட்டார். தன் செல் ஃபோன் நெம்பரையும் லாக் பண்ணி புது நெம்பர் வாங்கிக்கொண்டார். 

தனது இரு வழிகளும் தடை பட்டதும் பரத்துக்கு செம டென்ஷன் ஆகி விட்டது. 

சுந்தரியின் பிளாக்கில் போய் சுந்தரியும், பரத்தும் தாம்பத்ய உறவு கொண்ட மாதிரி மிக ஆபாசமான நடையில் கதை போல ஒரு பெரிய கமெண்ட்டை அவரது 217 போஸ்ட்களிலும்  ஒரே நேரத்தில்  போட்டு விட்டான்.. கமெண்ட் மாடரேஷன் வைக்காத தளம் அது. 


swan-wyoming-blair_25989_600x450
சுந்தரிக்கு செம ஷாக்.. உடனே அவனை ஃபோனில் கூப்பிட்டு நியாயம் கேட்டிருக்கிறார்.. அவன் சினிமாப்பட வில்லன் போல அவரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறான். 

இது ஆரம்பம் தான்.. நீ என் ஆசைக்கு இணங்கலைன்னா இன்னும் பல தாக்குதல்கள் வித்தியாசமா வரும்..

 எந்த பதிலும் சொல்லாமல்  கோபமாக கட் பண்ணி விட்டார் சுந்தரி.. 

அடுத்த நாள் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது... 

அவரது ஃபேஸ் புக்கில் அவரது மேலாடை இல்லாமல் அமர்ந்திருக்கும் படம் வெளியானது.. ( ஒரிஜினல் அல்ல) அதுவும் அவரது பெட்ரூமில், பாத்ரூமில் இருப்பது போல.. 

சுந்தரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அது மார்ஃபிங்க் செய்யப்பட்டது என்று சொன்னால் யார் நம்ப போகிறார்கள்?

சாதாரணமாக அந்த ஃபோட்டோ வந்திருந்தால் பிரச்சனை இல்லை, அனைத்துப்படங்களும் அவரது வீட்டில் இருப்பது போல வந்ததால் பிரச்சனை.

கணவரிடம் சொல்லவும் வழி இல்லை, யாரிடம் பகிர்வது என்ற குழப்பத்தில் 2 நாட்கள் ஆஃபீசுக்கே போக வில்லை.ஆனால் அதற்குள் அவரது ஃபோனுக்கு ஏகப்பட்ட கால்கள்? அது நீங்களா? என கேட்டு.. 

நொந்து போன சுந்தரி அந்த ஆஃபீஸ்க்கு போவதையே தவிர்த்தார்.. வேறு ஒரு ஆஃபீஸில் ஜாயின் பண்ணிக்கொண்டார்.

உருப்படியாக அவர் செய்த ஒரே காரியம் ஒரு எஸ் ஐ அவர்களிடம் புகார் செய்ததுதான். தான் காலேஜ் டைமில் தன்னுடன் படித்த ஒரு நண்பன் போலீஸில் பணி புரிகிறார் சென்னையில் . அவரிடம் எல்லா விஷயங்களையும் சொன்னார்.. 

பரத் கொடுத்த முகவரி போலி.  செல் ஃபோன் நெம்பர் ஸ்விட்ஸ் ஆஃப்.. அந்த செல் எண்ணில் ஒரு ஃபோர்ஜரி அட்ரஸ். மெயில் ஐ டி வைத்து அவன் அட்ரஸை ட்ரேஸ் அவுட் பண்ணினார்கள்.

அவனை நையப்புடைத்ததில் அவன் பல உண்மைகளை வெளியிட்டான்.

அவனுக்குத்தொழிலே இதுதான்.. பெண்களிடம் செட் செய்வது.. இன்பம் அனுபவிப்பது, பின் பணம் கேட்டு மிரட்டுவது..

அவன் மேல் கேஸ் போடப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது. 

வழக்கு தீர்ப்பு வந்த பிறகு முபாரக் ஃபோட்டோவும் பரத் ஃபோட்டோவும் வெளியிடப்படும்.

1238

நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை1. பெண் பதிவர்கள் கண்டிப்பாக கமெண்ட் மாடரெஷன் வைத்துக்கொள்ள வேண்டும்..

2. புரோஃபைலில் அவர்கள் படம் போடுவதை தவிர்க்கலாம், மீறிப்போட்டால் அதை காப்பி பண்ண முடியாதபடி லாக் சிஸ்டம் வைக்கலாம்.

3. சேட் செய்யும் ஆண்களிடம் பர்சனல் தகவல்கள் சொல்லாமல் இருக்கலாம். கணவர் ஆஃபீஸ் போகும் டைம்,  தன் வீட்டு முகவரி இப்படி.


4.  சேட்டிங்க்கில் பழக்கமான நண்பர்களை தனிமையில் சந்திப்பதை தவிர்க்கலாம். தன் தோழிகளோடோ, ஆஃபீஸ் கொலீக்கோடோ சந்திக்கலாம். 

5.  முதல் முறை சந்திக்கும்போது எடுத்தவுடன் தன் வீட்டுக்கு வர சொல்லாமல் பொது இடத்தில் பப்ளிக் நடமாடும் இடத்தில் சந்திக்கலாம்.

6.  வீட்டுக்கு அழைக்கும் பட்சத்தில்  அவர் எந்த ஃபோட்டோவும் எடுக்காமல் கண்காணிக்கலாம்..

7. சேட்டிங்க் செய்யும் நபர் சந்திக்க ஆசைப்படும்போது தன் வீட்டுக்கு வர சொல்லாமல் அவர்கள் வீட்டுக்கு போய் பார்க்கலாம். ஒரு க்ளான்ஸ் பார்த்தால் அவர்கள் குடும்ப சூழல் தெரியும்.

8. எல்லாவற்றையும் விட பெஸ்ட் வழி ஒன்று உள்ளது. அது நோ சேட்டிங்க்.. நோ பர்சனல் சந்திப்புகள்.. இது தான் நிம்மதியான வாழ்வை தரும்..  படைப்பு நல்லாருக்கா? பப்ளிக்கா கமெண்ட் போடு. போய்ட்டே இரு.. தேவை இல்லாமல் தனி மெயிலில் நோ கடலை..

9. மீறி சேட்டிங்க் பண்ணி இது போன்ற பிரச்சனைகள்  வந்தால் மனசுக்குள்ளேயே போட்டு புழுங்கிக்கொண்டிராமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.போலீஸ்க்கோ, சைபர் க்ரைம்க்கோ உடனே புகார் கொடுங்கள்.

உங்கள் பெயர் வெளியே வராமல் குற்றவாளிகளை பிடிக்க சட்டத்தில் இடம் உள்ளது, நோ பயம். அதை விடுத்து தற்கொலை எண்ணத்திற்கோ , வேறு விபரீத முடிவுகளுக்கோ போய் விட வேண்டாம்.

10. பதிவர் சுந்தரி தன் கணவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி விட்டார். இனி சேட்டிங்க் செய்யும்போது கவனமாக இருக்கவும் என கணவராலும் ,நண்பர்களாலும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

11. ஃபேஸ்புக்கில் பர்சனல் விபரங்கள் போடும்போது கவனமாக பகிரவும்.. 

டிஸ்கி - கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறும்போது பாதிக்கப்பட்ட பெண் பதிவர் மனம் புண்படாத மாதிரி  கமெண்ட்ஸ் போடவும், மீறி ஏதாவது டவுட்ஸ் இருந்தால் என் தனி மெயிலில் மெயிலிடவும்..

55 comments:

Mohamed Faaique said...

யாரையும் ஒரு வரை முறையுடன் நம்புதலே சிறந்தது. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு..
பகிர்ந்தமைக்கு நன்றி..

நிரூபன் said...

அடுத்த, விழிப்புணர்வுடன் கூடிய எச்சரிக்கை நிறைந்த பதிவு, விரிவான பின்னூட்டங்களோடு பின்னர் வருகிறேன்.

Unknown said...

மிக அவசியமான பதிவு!

கவி அழகன் said...

கண்ண முழிக்க வச்சிட்டிங்க சாமி

settaikkaran said...

தல, உங்களது பணி தொடரட்டும். பாராட்டுகிறேன். ஆனால், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களைப்பற்றியும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். :-)

சி.பி.செந்தில்குமார் said...

@சேட்டைக்காரன்


அடுத்த பதிவு அதுதான் அண்ணே.. ஃபாரீனில் இருக்கும் ஆண் பதிவரின் மனைவி கோவையில் சோரம் போன சம்பவம் ஆதாரங்களுடன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல படிப்பினை தரும் பகிர்வு. நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைல 8-வது பாய்ண்ட்டை ஆதரிக்கிறேன்.....!

கோகுல் said...

இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் விழிப்புணர்வு தஹ்ரும் பதிவு

Mathuran said...

பரத்துக்கு சரியான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பயனுள்ள பதிவு.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை என்ற 11 பாயிண்ட்களும் வெகு அருமை.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

ஜெய்லானி said...

யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு எல்லாரையுமே சந்தேகப்பட வைக்கும் ..!!

சிந்திக்க வைக்கும் பதிவு :-)

ஆமினா said...

யாரையும் கூடிய சீக்கிரத்துல நம்பாம இருக்குறது தான் இது போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வழி. யாராக இருந்தாலும் நம்மிடம் நட்பு பாராட்ட வரும்போது சந்தேகப்பார்வையுடன் அணுகுவதே சிறந்தது...


அடிக்கடி எச்சரிக்கை கொடுத்து விழிப்புடன் இருக்க வைக்கும் பதிவுக்கு பாராட்டுக்கள்! நன்றிகள்! வாழ்த்துக்கள்!

செங்கோவி said...

உருப்படியான காரியம் செய்யும் சிபிக்கு பாராட்டுகள்.

செங்கோவி said...

தமிழ்மணத்துல மணக்க வைச்சாச்சு..அதைகூடச் செய்யாம என்னய்யா வேலை?

rajamelaiyur said...

All points are valid . . .

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பயனுள்ள பதிவு.

சேலம் தேவா said...

பெண் பதிவர்களுக்கு கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய தகவல்கள்..!!பயனுள்ள பதிவு சிபி..!!

முத்துவாப்பா.. said...

மிகவும் அருமையான பயனுள்ள பதிவு , பெண்களே உஷார் , ஆனால் .... உங்கள ஒன்னும் சொல்லல சி.பி சார் நீங்க ரொம்ப நல்லவரு ....

iyyanars said...

நான் சொல்ல நினைத்த விஷயங்களை சொல்லி இருக்கின்றீர்கள்...அருகில் இருக்கும் முகம் தெரிந்த நண்பர்களையே நேசிக்க முடியாதவர்கள் ..வலைத்தளத்தில் முகம் தெரியாத நட்ப்பைத் தேடுவது ,தேவை இல்லாத பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும்!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

ஒவ்வொரு பதிவர்களும் கவனிக்க வேண்டிய பதிவு.... பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...

மாய உலகம் said...

அப்பறம் நம்ம பக்கம் ஆளையே காணோம்... இன்னைக்கு சண்டே மாய உலகத்தையும் சுத்திப்பாக்கலாம்...

காட்டான் said...

ஐய்யா கருத்துக்களை கவணமா போடுன்னே என்னை கட்டிப்போட்டுட்டிங்க..
காட்டான் குழ போட்டான்

M.R said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் !

Yoga.s.FR said...

ஐயோ,இப்படியும் "மனிதர்"களா?நன்றி சி.பி!பெண் பதிவர்கள் மட்டுமல்ல,மூஞ்சிப் புத்தகத்தில்(பேஸ்புக்)உறவாடும் பெண்பிள்ளைகளும் கவனிக்க வேண்டிய விடயம்!

Angel said...

பாராட்டுக்கள் .அருமையான விழிப்புணர்வு பதிவு .முத்தான பதினோரு யோசனைகளுடன் அழகாக சொல்லியிருக்கீங்க .எட்டாவது யோசனை மிக மிக சிறந்தது .

Angel said...

கூடுமானவரை profile புகைப்படம் இல்லாதிருப்பது நலம் .பல குடும்பங்கள் இந்த morphing விஷயத்தால் சிதறி போயிருக்கின்றன .

ஸாதிகா said...

படிக்கும்பொழுதே நெஞ்சம் பதறுகின்றது.நல்ல விழிப்புணர்வு மிக்க,சமூக நலம் கொண்ட பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல படிப்பினை தரும் பகிர்வு.

நிகழ்வுகள் said...

என்ன கொடும பாஸ் .அக்கா என்று கூப்பிட்டுவிட்டு இப்படி எல்லாம் நடந்திருக்கான் ,இவன் மனுசனா??

நிகழ்வுகள் said...

அந்த இறுதி பதினோரு விடயங்களை நானும் ஏற்றுக்கொள்கிறேன் ,முக்கியமாக பெண்கள் பொது தளங்களில் தமது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் போது மிக அவதானமாக இருக்க வேண்டும்

Anonymous said...

நல்ல பயனுள்ள பதிவு.

nzm said...

கண்ணியம் பேணும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதையே இந்த செய்தி எடுத்துரைக்கிறது என்பதே உண்மை ...

Bibiliobibuli said...

என்னவா சீரியஸ் பதிவெல்லாம் போடுறீங்க. ம்ம்ம்ம்..... காந்தி சொன்ன பெண்களின் பாதுகாப்பு பதிவுலகம், முகநூல், சாட் எல்லாத்துக்கும் பொருந்தினால் தான் உண்மையான சுதந்திரம் போலும்.

நம்பி said...

//ஏமாறுபவர் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இயங்கிக் கொண்டே தான் இருப்பார்கள், ஆண் பெண்ணை ஏமாற்றுவதும், பெண் ஆணை ஏமாற்றுவதும் இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்று......//

ஏமாறாமால் எப்படி ஏமாற்றத்தை பற்றித் தெரிந்து கொள்ள முடியும்...?

இது ஒரு வழக்கமான உப்பு சப்பில்லாத தத்துவம்.


ஏமாற்றுபவனும் ஏமாற்றும் வித்தையை ஏமாற்றமடைந்து தான் கற்றுக்கொள்கிறான். ஆகையால் இது ஒன்றும் தனியான பிறப்பில்லை.

புத்திசாலியாக இருந்தால் ஏமாற்றுபவன் அவனை விட புத்திசாலியாக மாறி ஏமாற்றப்போகிறான்.

இந்த டயலாக் அடிக்கடி பயன்படுத்தப்படுவது " நானே ஜகஜால கில்லாடி! என்னையே ஏமாத்திப்புட்டானே! மவனே! என்னைக்காவது மாட்டாமலாப்போகப்போறான்! அப்ப நான் யாருங்கிறதை காட்டறேன்!"

பெண்ணுக்கு ஏமாற்றும் வித்தையை கற்றுக்கொடுப்பதும் ஆண் தான். எந்த பெண்ணும் தனித்து இயங்குவதில்லை! பெண் செய்யும் அத்தனை தவறுகளுக்கும் ஆண் தான் காரண கர்த்தா! எந்த குற்றச்செயலின் பின்னணியிலும் ஆண் இருப்பான்.

இந்த உலகில் ஏமாறதவர்! என்று ஒருவரும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு இடத்தில் ஏமாந்து தான் ஆகவேண்டும். அப்படி ஏமாறாதவர் என்று ஒருவன் இருந்தால் அவன் வீட்டிற்குள்ளேயே தான் இருக்கமுடியும். இல்லையென்றால் மனித நடமாட்டமில்லாத இடத்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.


ஏமாறாமல் ஏமாற்ற்த்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. ஏமாந்ததின் பாதிப்பு வேண்டுமானால் குறைவாக இருந்திருக்கும்! அவ்வளவு தான்! அதற்குள் அவன் உஷாராகிட்டிருப்பான்! அவ்வளவுதான்!


அடிபடாமல் எப்படி........? என்ன சரிதானே!

அம்பாளடியாள் said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பத்தி .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இத்தனைக்குப் பின்னும் சாட் செய்ய அனுமதிக்கும் அந்த கணவருக்காக டபுள் கவனத்துடன் இருக்க வேண்டும் பதிவர் சுந்தரி

Anonymous said...

அன்பார்ந்த ஒலக பட விமர்சர்களே ,தமிழ் பட விமர்சர்களே ..,தெய்வ திருமகள் படத்தை விமர்சிக்கும் போது தயவு செய்து ஷான் பென் - விக்ரம் நடிப்பை ஒப்பிட்டு பேசாதீர்கள் ..,ஷான் பென்னைவிட விக்ரம் நல்லா நடிச்சிருக்கார் என்று விமர்சனம் எழுதியிருப்பவர்கள் அந்த வரியை மட்டும் காபி பண்ணி ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து ,பெட்ரோல் ,டீசல் ,மண்ணெண்ணை ,குர்ட் ஆயில் ஊத்தி எரிச்சிடுங்க.

Unknown said...

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி அண்ணே

Unknown said...

இந்த பதிவுக்கு நான் கமெண்ட் போட்டா...நீங்க தர்க்கத்துக்கு ரெடியா அண்ணே!

Mohammed Arafath @ AAA said...

உண்மையிலேயே அருமையான சிறந்த விழிப்புணர்வு பதிவு.வெறும் ஹிட்ஸ்களுக்காக நித்தியானந்தா ,சாரு நிவேதா போன்ற பதிவு எழுதும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு சமூக அக்கறை உள்ள பதிவு பாராட்டுக்கு உரியது.

sulthanonline said...

நல்ல பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு.

Indy said...

@angelin

எங்க ஜாக்கி அண்ணன் போட்டோ இல்லாம போன் நம்பர் இல்லாதவாங்கல ரொம்ப திட்டுவாரு.

DR.K.S.BALASUBRAMANIAN said...

அருமையான பதிவு. இத்தகவல்களை எப்படி பெறுகிறீர்கள்?
இப்பதிவை படித்து பெண்களோ ஆண்களோ திருந்தினால் சரி

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஆண்களும் கமென்ட் மொடரேசன் வைத்திருப்பது நன்று!
எந்தப் புற்றினுள்ளும் எந்தப் பாம்பும் இருக்கலாம். எனும் மனநிலையை
உருவாக்குவதே சிறப்பு.
வீடுவரை அழைப்பது பற்றி ஆயிரம் தரம் யோசியுங்கள்.
ஆரம்பத்திலேயே இதை வீட்டாருடன் பகிரவேண்டும்.

Prabashkaran Welcomes said...

நல்ல பதிவு மகா நதி படத்தில் கமல் சொல்லும் வசனம் நான் ஏமாந்துட்டேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று சொல்ல மாட்டார் நாம்தான் ஏமாறாமல் இருக்க வேண்டும் .

கடம்பவன குயில் said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி. பெண்கள்தான் எளிதில் சென்டிமெண்ட்டுக்கு பலியாகி ஏமாறுவார்கள். பாதிப்பு பெண்களுக்கு அதிகம் என்கிறபோது ஜாக்கிரதையாய் எச்சரிக்கையுடன் ஒதுங்கியிருப்பதே உத்தமம்.

J.P Josephine Baba said...

காலத்துக்கு ஏற்ற நல்ல பயனுள்ள பதிவு. எல்லோரும் புரிந்து கொண்டால் சரி. பொதுவாக தமிழக ஆண்களுக்கு தன் வீட்டு பெண்களை தவிர்த்து மற்று எல்லா பெண்களும் ஒரு மாதிரி தான் தெரிவார்கள். பெண்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுதல் ஆண்கள் தங்கள் எண்ணங்களை வளப்படுத்துதலே சிறந்த வழி!

Jafarullah Ismail said...

முன்பின் தெரியாத ஒருவருக்கு அழைப்பு என்பது எல்லோருக்குமே ஆபத்தாகத்தான் முடியும்.
பகிர்வுக்கு நன்றி சகோதரரே!

Prabhu said...

நல்ல பயனுள்ள பதிவு...

R.Gopi said...

நல்ல பதிவு...

பெண் பதிவர்கள் அனைவரும் படித்து ஃபாலோ செய்ய வேண்டும்...

ராஜி said...

ஆகமொத்தம், வீட்டிற்கு உள்ளயும், வெளியேயும் பெண்கள் கவனத்துடன் நடந்துக் கொள்ள வேண்டியதை தங்களது சமீபத்தைய பதிவுகள் பாடம் கற்று தருகிறாது. நல்ல பதிவிற்கு நன்றி